45 passages · ~13 min read
Tap any verse to open it — original, meaning & audio.
காவலிற் புலனை வைத்து கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து நாவலிட்டு உழிதர்கின்றோம் நமன்-தமர் தலைகள் மீதே மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற ஆவலிப்பு உடைமை கண்டாய் அரங்க மா நகருளானே (1)
You, the ancient one, swallowed the three worlds and spit them out. We do not like the feeling that come from the enj…
Your body is like a beautiful green hill, your lotus eyes are handsome and your mouth is red as coral. O father, bull…
வேத நூற் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும் பாதியும் உறங்கிப் போகும் நின்றதிற் பதினையாண்டு பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்புத் துன்பம் ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகருளானே (3)
Even if a man lives for hundred years, half of those years he spends resting. Many he spends as an innocent child and…
மொய்த்த வல்வினையுள் நின்று மூன்று எழுத்து உடைய பேரால் கத்திரபந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான் இத்தனை அடியர் ஆனார்க்கு இரங்கும் நம் அரங்கன் ஆய பித்தனைப் பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே (4)
When Kstrabandu suffered from bad karma, he worshipped the god, recited the three syllables of the word “Govinda” and…
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியது ஓர் இடும்பை பூண்டு உண்டு இராக் கிடக்கும் அப்போது உடலுக்கே கரைந்து நைந்து தண் துழாய்-மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி ஆடி தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர்சோறு உகக்குமாறே (5)
If people enjoy the pleasures of women they will fall into many troubles. They will get sick and suffer, unable to ea…
மறம் சுவர் மதில் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர் அறம் சுவர் ஆகி நின்ற அரங்கனார்க்கு ஆட் செய்யாதே புறஞ் சுவர்க் கோலஞ் செய்து புள் கௌவக் கிடக்கின்றீரே (6)
You build tall walls for your palaces that have long porches and enjoy living in them and you do not think at all of …
புலை-அறம் ஆகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் கலை அறக் கற்ற மாந்தர் காண்பரோ? கேட்பரோ தாம்? தலை அறுப்பு உண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் (7)
If people learn the good religious books, how can they hear, see and learn about the dharma of the mean religions, Bu…
வெறுப்பொடு சமணர் முண்டர் விதி இல் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பு அரியனகள் பேசில் போவதே நோயது ஆகி குறிப்பு எனக்கு அடையும் ஆகில் கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய் அரங்க மா நகருளானே (8)
O god of Srirangam, the bald-headed Jains, Buddhists and the Sakyas hate our religion and say terrible things about y…
மற்றும் ஓர் தெய்வம் உண்டே? மதி இலா மானிடங்காள் உற்றபோது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர் அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே (9)
O ignorant men! Is there any other god? You will not understand that he is the only god unless you are in trouble. Yo…
நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லது ஓர் அருள்தன்னாலே காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம் கேட்டிரே நம்பிமீர்காள் கெருடவா கனனும் நிற்கச் சேட்டைதன் மடியகத்துச் செல்வம் பார்த்து இருக்கின்றீரே (10)
He created all the gods by his good grace and showed Srirangam as the path to those wishing to be released from their…
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச் செருவிலே அரக்கர்கோனைச் செற்ற நம் சேவகனார் மருவிய பெரிய கோயில் மதில்-திருவரங்கம் என்னா கருவிலே திரு இலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே (11)
Our god, the protector of the world, built a bridge on the large ocean, shooting one arrow, and he fought with the ki…
நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க நரகமே சுவர்க்கம் ஆகும் நாமங்கள் உடையன் நம்பி அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவல்கின்றேனே (12)
Once some people heard Yama and Muthkalan talking together in hell and thought that hell is heaven. They forgot that …
எறியும் நீர் வெறிகொள் வேலை மாநிலத்து உயிர்கள் எல்லாம் வெறிகொள் பூந்துளவ மாலை விண்ணவர்கோனை ஏத்த அறிவு இலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில் பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே (13)
All the creatures of this wide earth surrounded by oceans with rolling waves worship the king of the gods in the sky …
வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை அண்டர்கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா மிண்டர்பாய்ந்து உண்ணும்சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே (14)
Beautiful Srirangam is surrounded with groves where bunches of bees swarm around flowers, peacocks dance, clouds floa…
மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதி இலா என்னைப் போலப் பொய்யர்க்கே பொய்யன் ஆகும் புட்கொடி உடைய கோமான் உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னை ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகன் ஊர் அரங்கம் அன்றே (15)
The king of the gods with an eagle flag is true for people if they think he is true and he is false if they think he …
சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம் மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனைப் போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தன்பால் ஆதரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே (16)
I was a gambler and a thief. I consorted with bad people and was caught in the love-nets of fish-eyed women. But the …
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை இரும்புபோல் வலிய நெஞ்சம் இறை-இறை உருகும் வண்ணம் சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட கரும்பினைக் கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே (17)
I don’t know how to praise you with my tongue and I don’t have the good luck of knowing how to love you or a good min…
இனி திரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே தனி கிடந்து அரசு செய்யும் தாமரைக்கண்ணன் எம்மான் கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள் பனி-அரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே? (18)
My lotus-eyed god rules the world, resting on the ocean where waves break on the banks and spray drops of water with …
குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கிக் கடல்-நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே? (19)
My father, the blue ocean-colored lord, rests on the snake bed, and as he rests his head is on the west side, his fee…
பாயும் நீர் அரங்கந் தன்னுள் பாம்பு-அணைப் பள்ளிகொண்ட மாயனார் திரு நன் மார்வும் மரகத-உருவும் தோளும் தூய தாமரைக் கண்களும் துவர்-இதழ்ப் பவள-வாயும் ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலல் ஆமே? (20)
The Māyanār who rests on a snake bed in Srirangam where the water of the Kaviri flows over its banks, has a beautiful…
பணிவினால் மனமது ஒன்றிப் பவள-வாய் அரங்கனார்க்குத் துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே நீ சொல்லாய் அணியின் ஆர் செம்பொன் ஆய அருவரை அனைய கோயில் மணி அனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கல் ஆமே? (21)
O heart, you are humble and you want me to make my mind one with Rangan, whose mouth is red as coral. You are strong …
பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்று உணரல் ஆகாது ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவானும் அல்லன் மாசற்றார் மனத்துளானை வணங்கி நாம் இருப்பது அல்லால் பேசத்தான் ஆவது உண்டோ? பேதை நெஞ்சே நீ சொல்லாய் (22)
O heart, you may speak of him but you cannot really know his greatness. No one can know him unless they are faultless…
கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டுப் பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள் எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும் எங்ஙனம் மறந்து வாழ்கேன்? ஏழையேன் ஏழையேனே (23)
Srirangam is in the middle of the Kaveri river which is purer than the Ganges. and its water rises and spreads throug…
வெள்ள-நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கந் தன்னுள் கள்வனார் கிடந்தவாறும் கமல நன் முகமும் கண்டும் உள்ளமே வலியை போலும் ஒருவன் என்று உணர மாட்டாய் கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே (24)
I see his beautiful lotus face and I see how that thief who stole my heart rests on the Kaveri in Srirangam surrounde…
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை ஒளித்திட்டேன் என்கண் இல்லை நின்கணும் பத்தன் அல்லேன் களிப்பது என் கொண்டு? நம்பீ கடல்வண்ணா கதறுகின்றேன் அளித்து எனக்கு அருள்செய் கண்டாய் அரங்க மா நகருளானே (25)
I have not lived the life of an orthodox Vediyan bathing and making sacrifices with three fires. I do not understand …
போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன் தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன் காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே? (26)
I don’t worship your golden feet, decorating them constantly with flowers. Even though I have much time, I don’t prai…
குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித் தரங்க நீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலும் போலேன் மரங்கள் போல் வலிய நெஞ்ச வஞ்சனேன் நெஞ்சு தன்னால் அரங்கனார்க்கு ஆட் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே (27)
I am like the innocent squirrel that went to Rāma for refuge after rolling and immersing itself in the wave-filled wa…
உம்பரால் அறியல் ஆகா ஒளியுளார் ஆனைக்கு ஆகிச் செம் புலால் உண்டு வாழும் முதலைமேல் சீறி வந்தார் நம் பரம் ஆயது உண்டே? நாய்களோம் சிறுமை ஓரா எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே (28)
Even the gods in the sky do not understand the radiant lord who came to protect the elephant Gajendra and grew angry …
ஊர் இலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன் ஆர் உளர் களைகண்? அம்மா அரங்க மா நகருளானே (29)
I don’t belong to a village or own any land. I have no relatives. I worship the feet of you, the highest one, on this…
மனத்தில் ஓர் தூய்மை இல்லை வாயில் ஓர் இன்சொல் இல்லை சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா புனத்துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா எனக்கு இனிக் கதி என் சொல்லாய்? என்னை ஆளுடைய கோவே (30)
I don’t have a pure mind and no good words come from my mouth. I get very angry, shout and say bad things. You are ad…
தவத்துளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன் உவர்த்த நீர் போல என்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன் துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கு அறத் துரிசன் ஆனேன் அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மா நகருளானே (31)
O lord of Srirangam, I have not done tapas like the sages, I am not wealthy, and I am as useless as salty water for m…
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திரு அரங்கந் தன்னுள் கார்த் திரள் அனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணு மார்க்கம் ஒன்று அறியமாட்டா மனிசரில் துரிசனாய மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே (32)
O Kaṇṇan with a body as dark as a thick cloud, lord of beautiful Srirangam where bees sing and swarm in the groves, I…
மெய் எல்லாம் போக விட்டு விரிகுழலாரிற் பட்டுப் பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்க்கனேன் வந்து நின்றேன் ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே (33)
I stopped telling the truth and fell into the passion of women with long hair. I told only lies and now I have no ref…
உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக் கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவு அறச் சிரித்திட்டேனே (34)
உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக் கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு உள்ளுவார் உ…
தாவி அன்று உலகம் எல்லாம் தலைவிளாக்கொண்ட எந்தாய் சேவியேன் உன்னை அல்லால் சிக்கெனச் செங்கண் மாலே ஆவியே அமுதே என்தன் ஆருயிர் அனைய எந்தாய் பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே (35)
O my father who measured all the world with your feet, I, a sinner, will not worship anyone but you, the lovely-eyed …
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுர ஆறே உழைக் கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே உன்னை யன்றே அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி அரங்கமா நகருளானே (36)
When you were young you carried Govardhana mountain to stop the storming rain, O you who are like a sweet river. I su…
தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும் ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவார்? எளியது ஓர் அருளும் அன்றே என் திறத்து? எம்பிரானார் அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே (37)
The bright lord is my father and mother, the god of Srirangam surrounded by the clear water of the Kaviri. I am a poo…
மேம் பொருள் போக விட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து ஆம் பரிசு அறிந்துகொண்டு ஐம்புலன் அகத்து அடக்கிக் காம்பு அறத் தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே (38)
You, lord of Srirangam surrounded by water, are happy with devotees if they abandon their wealth, understand divine t…
அடிமையிற் குடிமை இல்லா அயல் சதுப்பேதிமாரிற் குடிமையிற் கடைமை பட்ட குக்கரில் பிறப்பரேலும் முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும் அடியரை உகத்தி போலும் அரங்க மா நகருளானே 39
O lord of Srirangam whose hair is decorated with a thulasi garland, no one has to be born in a good family to become …
திருமறுமார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து மருவிய மனத்தர் ஆகில் மா நிலத்து உயிர்கள் எல்லாம் வெருவு உறக் கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினையரேலும் அருவினைப் பயன துய்யார் அரங்க மா நகருளானே (40)
O lord of Srirangam with beautiful Lakshmi on your chest, even if hunters kill animals cruelly, burn and eat them, if…
வானுளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில் தேனுலாம் துளப மாலைச் சென்னியாய் என்பர் ஆகில் ஊனம் ஆயினகள் செய்யும் ஊனகாரகர்களேலும் போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே (41)
Even bad people who do evil things and make others do evil deeds, if they praise you saying, “You are the god of the …
பழுது இலா ஒழுகல்-ஆற்றுப் பல சதுப்பேதிமார்கள் இழிகுலத்தவர்களேலும் எம் அடியார்கள் ஆகில் தொழுமின் நீர் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும் ஒக்க வழிபட அருளினாய் போல் மதில்-திருவரங்கத்தானே (42)
Lord of Srirangam surrounded with walls, you give your grace to all who worship you, and you tell them, “Even if you …
அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித் தமர்களிற் தலைவராய சாதி-அந்தணர்களேலும் நுமர்களைப் பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே அவர்கள்தாம் புலையர் போலும் அரங்க மா நகருளானே (43)
O lord of beautiful Srirangam, if even Vediyars of the highest caste who recite the six divine Upanishads and the fou…
பெண் உலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண் இலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப விண் உளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறா உன்னை என்னோ? களைகணாக் கருதுமாறே (44)
Shiva with the Ganges in his matted hair and Nanmuhan who did tapas for countless ages could not see you and felt ash…
வள எழும் தவள மாட மதுரை மா நகரந் தன்னுள் கவள மால் யானை கொன்ற கண்ணனை அரங்க-மாலைத் துளவத் தொண்டு ஆய தொல் சீர்த் தொண்டரடிப் பொடி சொல் இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே (45) ------------ 7. தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளி எழுச்சி (917- 926)
Thoṇḍaraḍippoḍi, the pious devotee praised Kaṇṇan, Thirumāl, the god of Srirangam who killed the strong well-fed elep…