1084 passages · ~332 min read
Tap any verse to open it — original, meaning & audio.
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந் துயர் இடும்பையில் பிறந்து கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு அவர் தரும் கலவியே கருதி ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் - நாராயணா என்னும் நாமம் (1)
I was born with sorrow. I withered and suffered in life. When I was young my only wish was to love women and be with …
ஆவியே அமுதே என நினைந்து உருகி அவர் அவர் பணை முலை துணையாப் பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதுபோய் ஒழிந்தன நாள்கள் தூவி சேர் அன்னம் துணையொடு புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என் நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் - நாராயணா என்னும் நாமம் (2)
I thought of the round breasts of women and melted to embrace them. I told women, “You are my life. You are my nectar…
சேமமே வேண்டி தீவினை பெருக்கி தெரிவைமார் உருவமே மருவி ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய் ஒழிந்தன கழிந்த அந் நாள்கள் காமனார் தாதை நம்முடை அடிகள் தம் அடைந்தார் மனத்து இருப்பார் நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன் - நாராயணா என்னும் நாமம் (3)
I desired only a happy life and gained bad karma. I thought only of the beauty of women. I was like a dumb person and…
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேல்கணார் கலவியே கருதி நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும் பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் - நாராயணா என்னும் நாமம் (4)
I wanted to be successful in everything. I desired to have much wealth that would never be lost. I thought only of be…
கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் கண்டவா திரிதந்தேனேலும் தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் சிக்கெனத் திருவருள் பெற்றேன் உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன் - நாராயணா என்னும் நாமம் (5)
I have been a thief and done many wrong things. I wandered around as I wanted but now my mind has found the truth. Wh…
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் - நாராயணா என்னும் நாமம் (6)
My dear father is my kin, my king and my life, frightened the Rakshasas and killed them with his arrows. O devotees, …
இல்-பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் கற்பகம் புலவர் களைகண் என்று உலகில் கண்டவா தொண்டரைப் பாடும் சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின் சூழ் புனல் குடந்தையே தொழுமின் நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின் - நாராயணா என்னும் நாமம் (7)
O learned ones! You praise the people in the world as you want, saying, “This one is from a reputable family. This on…
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம் செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன் செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன் - நாராயணா என்னும் நாமம் (8)
I have not learned what is good for me. I have thought only of the desires that my five senses bring. Innocent, I hav…
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம் நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும் வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் - நாராயணா என்னும் நாமம் (9)
The name “Nārāyaṇa” will give a good family to his devotees and remove all their troubles. It will give them the high…
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை இவை கொண்டு சிக்கென தொண்டீர் துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின் துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் நஞ்சு-தான் கண்டீர் நம்முடை வினைக்கு - நாராயணா என்னும் நாமம் (10) ------------- 2. திருப்பிரிதி
O devotees, when you are in trouble or at the end of your life, think of Thirumangai surrounded by ponds with abundan…
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற இருந்த நல் இமயத்துள் ஆலி மா முகில் அதிர்தர அரு வரை அகடு உற முகடு ஏறி பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப் பிரிதி சென்று அடை நெஞ்சே (1)
The god of Thirumāvallam who bent his bow and killed the Rākshasas in Lanka stays in Thirupprithi in the Himalayas fi…
கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய அரு வரை அணை கட்டி இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள்-தாம் இருந்த நல் இமயத்து விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர்கூர பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே (2)
The lord who, as Rama, built a bridge with the help of the monkeys with large stones over the roaring ocean and went …
துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று இளங்கொடிதிறத்து ஆயர் இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன் இருந்த நல் இமயத்து கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி அறைமிசை வேழம் பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே (3)
Kaṇṇan, who wished to marry vine-like Nappinnai with a thin waist, curly hair and shining teeth, and killed seven ang…
மறம் கொள் ஆள்-அரி உரு என வெருவர ஒருவனது அகல் மார்வம் திறந்து வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்துள் இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக் கிடந்து அருகு எரி வீசும் பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே (4)
The lord who took the form of an angry man-lion and split open the broad chest of Hiraṇyan as the gods saw him and wo…
கரை செய் மாக் கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த அரை செய் மேகலை அலர்மகள்-அவளொடும் அமர்ந்த நல் இமயத்து வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்துப் பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே (5)
The lord who rests on the milky ocean with Lakshmi ornamented with a mekalai around her waist as the gods in the sky …
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு-அணைப் பள்ளிகொள் பரமா என்று இணங்கி வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்து மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற நிமிர்ந்து அவை முகில் பற்றிப் பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே (6)
The lord who rests on Ādisesha, the thousand-headed snake, as the gods in the sky worship him bowing their heads ador…
கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய கறி வளர் கொடி துன்னிப் போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள் ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள் பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே (7)
He stays in Thirupprithi in the Himalayas where fighting tigers wander and vengai trees on the hills touch the clouds…
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும் பசி-அது கூர அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய அருவரை இமயத்து பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள் பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப் பிரிதி சென்று அடை நெஞ்சே (8)
The lord whom Nānmuhan and the gods in the sky worshipped, saying, “You are the ancient one of the world. You have th…
ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல் ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல் இமயத்து தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே (9)
The lord who gives his grace to his devotees protects them and removes their karma if they recite his thousand names …
Kaliyan, the chief of Thirumangai surrounded with flourishing groves where bees with lined wings swarm, composed a mu…
கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு பிரிதி எம் பெருமானை வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர் கலியனது ஒலி மாலை அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு அரு வினை அடையாவே (10) -------- 3. திருவதரி
When you become old, you will need to walk holding a stick. Your legs will be so weak you can only walk very slowly, …
முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன் ஒரு கோல் ஊன்றி விதிர் விதிர்த்து கண் சுழன்று மேல் கிளைகொண்டு இருமி இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசாமுன் மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே (2)
When you become old, your back will be bent and you will need a stick to walk. You will tremble. You won’t be able to…
உறிகள் போல் மெய்ந் நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று நடுங்காமுன் அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய் ஆயிரம் நாமம் சொலி வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே (3)
When you become old. your nerves will become like hanging strings. Your muscles will be weak. Your mind won’t be able…
பீளை சோரக் கண் இடுங்கி பித்து எழ மூத்து இருமி தாள்கள் நோவத் தம்மில் முட்டி தள்ளி நடவாமுன் காளை ஆகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான வாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே (4)
When you become old, your eyes will have discharge and shrink. You will have bile and cough continuously. Your feet w…
பண்டு காமர் ஆன ஆறும் பாவையர் வாய் அமுதம் உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி தண்டு காலா ஊன்றி ஊன்றி தள்ளி நடவாமுன் வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே (5)
When you were young you loved young women. You drank the nectar of their mouths, enjoyed them and lived a rich life. …
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம் பித்தர் போலச் சித்தம் வேறாய்ப் பேசி அயராமுன் அத்தன் எந்தை ஆதி மூர்த்தி ஆழ் கடலைக் கடைந்த மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே (6)
When you become old, you will have trouble speaking. Your chest will be filled with phlegm and your body will be weak…
பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பது சீத் திரளை ஒப்ப ஐக்கள் போத உந்த உன் தமர் காண்மின் என்று செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியாத முன்னம் வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான் வதரி வணங்குதுமே (7)
Young girls with breasts like small boxes will mock you when you are old and say, “Look at him, the pappar appar, it’…
ஈசி போமின் ஈங்கு இரேல்மின் இருமி இளைத்தீர் உள்ளம் கூசி இட்டீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர்பால் நாசம் ஆன பாசம் விட்டு நல் நெறி நோக்கல் உறில் வாசம் மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே (8)
When you are old the young women with eyes like kuvalai blossom who loved you before will say now, “Chi, chi, go away…
புலன்கள் நைய மெய்யில் மூத்து போந்து இருந்து உள்ளம் எள்கி கலங்க ஐக்கள் போத உந்தி கண்ட பிதற்றாமுன் அலங்கல் ஆய தண் துழாய்கொண்டு ஆயிரம் நாமம் சொலி வலங்கொள் தொண்டர் பாடி ஆடும் வதரி வணங்குதுமே (9)
When you become old, your five senses will grow weak and you will be lonely and unable to move around. Your heart wil…
வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடு மாலைக் கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை கொண்டு தொண்டர் பாடி ஆடக் கூடிடில் நீள் விசும்பில் அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே (10) --------- 4. திருவதரி ஆச்சிரமம்
Kaliyan, the chief of Thirumangai, surrounded with fences of screw pine flowers, composed ten pāsurams about Neḍumāl …
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று இணை-அடி இமையவர் வணங்க தானவன் ஆகம் தரணியில் புரளத் தடஞ் சிலை குனித்த என் தலைவன்- தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே (1)
The lord who took the form of a boar, split open the earth and brought the earth goddess from the underworld, went to…
கானிடை உருவை சுடு சரம் துரந்து கண்டு முன் கொடுந் தொழில் உரவோன் ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன்- தேன் உடைக் கமலத்து அயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு வானிடை முது நீர்க் கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே (2)
The matchless lord who shot his cruel arrows, killed the strong Rakshasas and pierced the chest of strong Vāli in the…
இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன்-கொழுஞ் சுடர் சுழன்ற விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில் வெண் துகில் கொடி என விரிந்து வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே (3)
Our heroic lord who fought a cruel war and took Lanka and the oceans destroying the clan of the Rakshasas stays in Va…
துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள்- தமக்குப் பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான்- அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர் மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே (4)
O heart, don’t worry. Our generous lord who helped the gods in the sky and his devotees and removed their troubles an…
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள்-தன் பெரு முலை சுவைத்திட பெற்ற தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன்- சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த செம்பொன் செய் விலங்கலில் இலங்கு வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே (5)
The lord who drank Putanā’s poisonous milk and was afraid to sleep on his mother Yashoda’s lap stays in Vadariyāchira…
தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த பனி முகில் வண்ணன் எம் பெருமான்- காரணம்- தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிளவு எழக் குத்தி வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே (6)
The dark cloud-colored god who fought with seven humped bulls and killed them to marry Nappinnai with beautiful fish …
வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும் விண்ணொடு விண்ணவர்க்கு அரசும் இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான்- அந்தரத்து அமரர் அடி-இணை வணங்க ஆயிரம் முகத்தினால் அருளி மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே (7)
Our father who gave Indra the strong heroic elephant Airavadam, the nectar from the milky ocean and the kingdom of th…
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன் நிறத்து உரவோன் ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனைத் தான் முனிந்து இட்ட வெம் திறல் சாபம் தவிர்த்தவன்-தவம்புரிந்து உயர்ந்த மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே (8)
Our lord who became angry, bent his curved bow and killed the Rākshasa Marisan when he came as a golden deer, went to…
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க் குரை கடல் உலகு உடன் அனைத்தும் உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான்- அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனியாள் அலமரப் பெருகும் மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே (9)
The shining god of the sky and of the eon who swallowed the clouds, the wind, the mountains, the roaring oceans with …
வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானை கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணி கலியன் வாய் ஒலிசெய்த பனுவல் வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகு உடன் மருவி இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் இமையவர் ஆகுவர் தாமே (10) -------- 5. திருச்சாளக்கிராமம்
The poet Kaliyan composed ten pāsurams on the dark ocean-colored lord of Thiruvadariyāchiramam on the banks of the Ga…
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்துபோய் சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து மலை கொண்டு அலை நீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே (1)
O heart! With only his bow and arrows as his help, he crossed the forests where deer, elephants and horses wandered, …
கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாத் தேரும் காலாளும் உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடி வாய்ச் சரம் துரந்தான்- இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும் தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே (2)
The lord who came to the earth, went to Lanka that was encircled by forts and guarded by Rakshasas with an army of ru…
உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா எண் திக்கும் நிலவும் சுடரும் இருளும் ஆய் நின்றான் வென்றி விறல் ஆழி வலவன் வானோர்-தம் பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன்-சலம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே (3)
The lord of the gods in the sky with a mighty discus that conquers all his enemies is the rolling waves, the ancient …
ஊரான் குடந்தை உத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளையத் தேரா அரக்கர் தேர்-வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ் பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்-தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே (4)
The faultless god of Kuḍandai who bent his bow and conquered the Rakshasas when they came like a flood to fight in th…
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார்முன் கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையைக் கல் ஒன்று ஏந்தி இன நிரைக்காத் தடுத்தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே (5)
The lord of the gods of the sky with a shining discus who cut off the screaming Surpanaha’s nose and ears with his sh…
தாய் ஆய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட வாயான் தூய வரி உருவின் குறளாய்ச் சென்று மாவலியை ஏயான் இரப்ப மூவடி மண் இன்றே தா என்று உலகு ஏழும் தாயான் காயா மலர் வண்ணன்- சாளக்கிராமம் அடை நெஞ்சே (6)
The lord dark as a kāyām flower drank the poisonous milk of Putanā when she came as a mother and killed her, stole yo…
ஏனோர் அஞ்ச வெம் சமத்துள் அரி ஆய் பரிய இரணியனை ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த ஒருவன் தானே இரு சுடர் ஆய் வான் ஆய் தீ ஆய் மாருதம் ஆய் மலை ஆய் அலை நீர் உலகு அனைத்தும் தான் ஆய் தானும் ஆனான்-தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே (7)
Our matchless lord who is the sky, fire, wind, the mountains, the oceans with waves and all the worlds, and who took …
வெந்தார் என்பும் சுடு நீறும் மெய்யில் பூசி கையகத்து ஓர் சந்து ஆர் தலைகொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன்-தான் சென்று என் எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கு அமுது நீர் திருமார்வில் தந்தான்-சந்து ஆர் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே (8)
When Shiva, adorned with a garland of skulls and smeared with ashes on his body wandered all over the world as a begg…
தொண்டு ஆம் இனமும் இமையோரும் துணை நூல் மார்வின் அந்தணரும் அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகு எல்லாம் வண்டு ஆர் பொழிலின் பழனத்து வயலின் அயலே கயல் பாயத் தண் தாமரைகள் முகம் அலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே (9)
O heart, let us go to the temple in Sāḷakkirāmam surrounded with flourishing fields where fish frolic, groves swarm w…
தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை கார் ஆர் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலிசெய் தமிழ்மாலை ஆர் ஆர் உலகத்து அறிவு உடையார் அமரர் நல் நாட்டு அரசு ஆளப் பேர் ஆயிரமும் ஓதுமின்கள் அன்றி இவையே பிதற்றுமினே (10) -------- 6. நைமிசாரணியம்
Kaliyan, the chief of Thirumangai, composed a musical garland of ten Tamil pāsurams on the god of Sālakkirāmam surrou…
வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள் மாதரார் வன முலைப் பயனே பேணினேன் அதனைப் பிழை எனக் கருதி பேதையேன் பிறவி நோய் அறுப்பான் ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை நாணினேன் வந்து உன் திருவடி அடைந்தேன்- நைமிசாரணியத்துள் எந்தாய் (1)
Before in my life, I wanted only to enjoy the small foreheads, round arms, beautiful breasts and shining moon-like sm…
சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்- திறத்தனாய் அறத்தையே மறந்து புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி போக்கினேன் பொழுதினை வாளா அலம் புரி தடக்கை ஆயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்- நைமிசாரணியத்துள் எந்தாய் (2)
I have always enjoyed women with long dark eyes, beautiful figures and feet ornamented with anklets. I forgot dharma,…
சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து சுரி குழல் மடந்தையர்திறத்துக் காதலே மிகுத்து கண்டவா திரிந்த தொண்டனேன் நமன்-தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை அலமரக் கடைந்த நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன்- நைமிசாரணியத்துள் எந்தாய் (3)
I gambled and stole things from others. I loved beautiful curly-headed women. I wandered all over wherever I wished a…
வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை நம்பினார் இறந்தால் நமன்-தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையை பாவீ தழுவு என மொழிவதற்கு அஞ்சி நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன்- நைமிசாரணியத்துள் எந்தாய் (4)
Someone may leave his wife with fragrant hair swarming with bees and love someone else’s wife and wealth and believe …
இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால் படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்- நைமிசாரணியத்துள் எந்தாய் (5)
When people suffering in poverty came to me and asked me, “Please give me a little bit of food,” I was unkind and tol…
கொடிய மனத்தால் சினத் தொழில் புரிந்து திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் நமனார் பாடியைப் பெரிதும் பரிசு அழித்திட்டேன் பரமனே பாற்கடல் கிடந்தாய் நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் -நைமிசாரணியத்துள் எந்தாய் (6)
With a crooked mind I did evil things. I wandered around, associated with people like dogs, became weak, ran about an…
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி அல்லாதன செய்தும் துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய் வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவா தானவர்க்கு என்றும் நஞ்சனே வந்து உன் திருவடி அடைந்தேன்- நைமிசாரணியத்துள் எந்தாய் (7)
In my mind I thought only of unjust deeds and did them without any fear, speaking bad words. When I listened to the t…
ஏவினார் கலியார் நலிக என்று என்மேல்- எங்ஙனே வாழும் ஆறு?-ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடுங் கடல் வண்ணா பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன் -நைமிசாரணியத்துள் எந்தாய் (8)
Kali, the god of time, told the five senses to come to me and make me surrender to the pleasures they offered . Now I…
ஊன் இடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்- தான் உடைக் குரம்பை பிரியும்போது உன்-தன் சரணமே சரணம் என்று இருந்தேன் தேன் உடைக் கமலத் திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடுங் கடல் கிடந்தாய் நான் உடைத் தவத்தால் திருவடி அடைந்தேன்- நைமிசாரணியத்துள் எந்தாய் (9)
This body is made of bones, covered with flesh, skin and hair that are like walls. It has nine openings and it is lik…
ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று இமையோர்- நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து எந்தையைச் சிந்தையுள் வைத்து காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய் மாலை-தான் கற்று வல்லார்கள் ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ் உம்பரும் ஆகுவர் தாமே (10) ---------- 7. சிங்கவேழ்குன்றம்
Kaliyan loved, worshiped and composed these pāsurams praising the god of Naimeesāraṇyam where Indra the king of the g…
அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்- பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு பத்திமையால் அடிக்கீழ் செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேழ்குன்றமே (1)
Our god who became angry at Hiraṇyan, went to him as a man-lion and with his sharp claws split open the chest of the …
அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த கூர் உகிராளன் இடம்- மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வன் துடி வாய் கடுப்ப சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத சிங்கவேழ்குன்றமே (2)
Our father who took the form of a man-lion with a huge mouth and sharp teeth, went to Hiraṇyan and with his sharp cla…
ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன் வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் - ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால் தேய்ந்த வேயும் அல்லது இல்லாச் சிங்கவேழ்குன்றமே (3)
Our dear father who took the form of a man-lion with a huge mouth and sharp teeth, went to the Asuran Hiranyan and sp…
எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன் ஏதலன் இன் உயிரை வவ்வி ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம்- கவ்வும் நாயும் கழுகும் உச்சிப்போதொடு கால் சுழன்று தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்கவேழ்குன்றமே (4)
Our dear father who took the form of a man-lion, went to the Asuran Hiraṇyan whose conquering spear was swift and spl…
மென்ற பேழ்வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன் பொன்ற ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்- நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு இரிய சென்று காண்டற்கு-அரிய கோயில் சிங்கவேழ்குன்றமே (5)
The faultless lord who took the form of a man-lion with a huge mouth and sharp teeth and went to the Asuran Hiraṇyan …
எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எவ் உரு என்று இரிந்து வானோர் கலங்கி ஓட இருந்த அம்மானது இடம்- நெரிந்த வேயின் முழையுள் நின்று நீள் நெறிவாய் உழுழை திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும் சிங்கவேழ்குன்றமே (6)
Our father who took the form of a man-lion with a huge mouth, sharp teeth and eyes like burning fire and angrily went…
முனைத்த சீற்றம் விண் சுடப் போய் மூவுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய் இருந்த அம்மானது இடம்- கனைத்த தீயும் கல்லும் அல்லா வில் உடை வேடரும் ஆய் தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்கவேழ்குன்றமே (7)
Our father who went as a man-lion to Hiraṇyan and split open his chest as his anger rose to the sky and spread over a…
நாத் தழும்ப நாஅன்முகனும் ஈசனும் ஆய் முறையால் ஏத்த அங்கு ஓர் ஆள் அரி ஆய் இருந்த அம்மானது இடம்- காய்த்த வாகை நெற்று ஒலிப்ப கல் அதர் வேய்ங்கழை போய்த் தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்கவேழ்குன்றமே (8)
The place where the four-faced Nānmuhan and Shiva with trembling tongues worshiped the lord when he came in the form …
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான் அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரந் தோளன் இடம்- நெல்லி மல்கி கல் உடைப்ப புல் இலை ஆர்த்து அதர்வாய் சில்லி சில் என்று ஒல் அறாத சிங்கவேழ்குன்றமே (9)
Our thousand-armed god, the beloved of Lakshmi, stays in Singavelkundram where nelli trees grow abundantly and their …
செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிஙக்வேழ்குன்று உடைய எங்கள் ஈசன் எம் பிரானை இருந் தமிழ் நூல்-புலவன் மங்கை ஆளன் மன்னு தொல் சீர் வண்டு அரை தார்க் கலியன் செங்கையாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீது இலரே (10) ------ 8. திருவேங்கடம் - 1
Kaliyan the poet, the generous chief of Thirumangai adorned with a garland swarming with bees composed a beautiful ga…
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த கோவலன் எம் பிரான் சங்கு தங்கு தடங் கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினன் பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர்-தம் இடம்-பொங்கு நீர் செங் கயல் திளைக்கும் சுனைத் திரு- வேங்கடம் அடை நெஞ்சமே (1)
Our ancient, lotus-eyed god who rests on the wide conch-filled ocean, who broke the Kurundam trees blooming with flow…
பள்ளி ஆவது பாற்கடல் அரங் கம் இரங்க வன் பேய் முலை பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான்-அவன் பெருகும் இடம்- வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத் திரு வேங்கடம் அடை நெஞ்சமே (2)
Our lord who rests on the milky ocean in Srirangam, who drank the poisonous milk from the breasts of the devil Putanā…
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் என்றும் வானவர் கைதொழும் இணைத் தாமரை அடி எம் பிரான் கன்றி மாரி பொழிந்திட கடிது ஆ-நிரைக்கு இடர் நீக்குவான் சென்று குன்றம் எடுத்தவன் திரு வேங்கடம் அடை நெஞ்சமே (3)
Our faultless lord with a discus went between the marudam trees and broke them as the gods in the sky folded their ha…
பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய் திட்டு வென்ற பரஞ்சுடர் கோத்து அங்கு ஆயர்-தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன் ஏத்துவார்-தம் மனத்து உள்ளான் இட- வெந்தை மேவிய எம் பிரான் தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ் திரு வேங்கடம் அடை நெஞ்சமே (4)
The lord of Thiruviḍavendai, the highest light, who drove the chariot for Arjuna, fighting in the Bharatha war and co…
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான் எண் கையான் இமயத்து உள்ளான் இருஞ்சோலை மேவிய எம் பிரான் திண் கை மா துயர் தீர்த்தவன் திரு வேங்கடம் அடை நெஞ்சமே (5)
The eight-armed god of the Himalayas took the form of a bachelor, went to the sacrifice of generous Mahabali, the kin…
எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன் பால் மதிக்கு இடர் தீர்த்தவன் ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு திண் திறல் அரியாயவன் திரு வேங்கடம் அடை நெஞ்சமே (6)
The lord who swallowed all the eight directions and the seven worlds at the end of the eon, kept them in his golden s…
பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினான் பேரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகும் இடம்- காரும் வார் பனி நீள் விசும்பிடைச் சோரும் மா முகில் தோய்தர சேரும் வார் பொழில் சூழ் எழில் திரு வேங்கடம் அடை நெஞ்சமே (7)
The thousand-named god who has no birth and is the earth, water, fire, wind and sky stays in the beautiful Thiruvenka…
அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற அமரர்-கோன் வம்பு உலாம் மலர்மேல் மலி மட மங்கை-தன் கொழுநன்-அவன் கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர் நீள் இதணம்தொறும் செம் புனம்-அவை காவல் கொள் திரு வேங்கடம் அடை நெஞ்சமே 8
The king of the gods who is sky, fire, wind, earth and water and the beloved of beautiful Lakshmi seated on a fragran…
பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும் சொலி நின்று பின்னரும் பேசுவார்-தமை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம்- வாச மா மலர் நாறு வார் பொழில் சூழ் தரும் உலகுக்கு எலாம் தேசமாய்த் திகழும் மலைத் திரு வேங்கடம் அடை நெஞ்சமே (9)
Our highest lord who will remove their future births for his devotees if they recite his divine name with the mantra …
செங் கயல் திளைக்கும் சுனைத் திரு வேங்கடத்து உறை செல்வனை மங்கையர் தலைவன் கலிகன்றி வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள் சங்கை இன்றித் தரித்து உரைக்கவல் லார்கள் தஞ்சமதாகவே வங்க மா கடல் வையம் காவலர் ஆகி வான்-உலகு ஆள்வரே (10) ----- 9. திருவேங்கடம்-2
Kaliyan, the chief of Thirumangai, composed a divine garland of ten Tamil pāsurams with fine words on the precious go…
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்- வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரை ஆர் திருவேங்கடவா!- நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே (1)
I thought that my mother, father, wife and relatives were important. I suffered, became your slave, and like a dog I …
மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு மா நிலத்து நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்- தேன் ஏய் பூம் பொழில் சூழ் திருவேங்கட மா மலை என் ஆனாய்!-வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (2)
Intoxicated, I fell in love with beautiful women with lovely doe-like eyes and I have committed many sins in this lar…
கொன்றேன் பல் உயிரை குறிக்கோள் ஒன்று இலாமையினால் என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன்- குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (3)
O lord of the Venkaṭam hills, I had no purpose in my life and killed many lives. I never said kind words to those who…
குலம்-தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன் நலம்-தான் ஒன்றும் இலேன் நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்- நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா!- அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (4)
I was born in many communities in many births and died and was born again and again and I am very tired of being born…
எப் பாவம் பலவும் இவையே செய்து இளைத்தொழிந்தேன் துப்பா நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்- செப்பு ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என் அப்பா!-வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (5)
I have committed many kinds of sin and I have suffered and I am tired. You are omnipotent and I do not even have the …
மண் ஆய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம் புண் ஆர் ஆக்கை-தன்னுள் புலம்பித் தளர்ந்து எய்த்தொழிந்தேன்- விண் ஆர் நீள் சிகர விரைஆர் திருவேங்கடவா!- அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (6)
I am caught in this wounded body that is made of earth, water, fire, wind and the sky where clouds float and I have s…
தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன் பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்- கரி சேர் பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா!- அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (7)
When I was young, I did not know anything and did many wrong things. After I became older, I worked hard for others a…
நோற்றேன் பல் பிறவி நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால் ஏற்றேன் இப் பிறப்பே இடர் உற்றனன்-எம் பெருமான் கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (8)
I did tapas in many births because I longed to see you. O lord, I have worshiped you in this birth always, yet I stil…
பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன் மற்றேல் ஒன்று அறியேன்-மாயனே எங்கள் மாதவனே கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமலச் சுனை வேங்கடவா!- அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட் கொண்டருளே (9)
I have no one to depend on. Committing only sins I became a sinner— I don’t know how to do anything else. Māyan, you …
கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய எம் கார் வண்ணனை விண்ணோர்-தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்-கோன் கலியன் பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே (10) ------- 9. திருவேங்கடம்- 3
Kaliyan, the chief of Thirumangai surrounded with strong beautiful palaces composed ten musical pāsurams praising the…
கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன்-தன் திண் ஆகம் பிளக்கச் சரம் செல உய்த்தாய் விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய அண்ணா அடியேன் இடரைக் களையாயே (1)
O lord, you who crossed the ocean and fought and killed the king of Lanka surrounded by oceans stay in the majestic T…
இலங்கைப் பதிக்கு அன்று இறை ஆய அரக்கர் குலம் கெட்டு அவர் மாள கொடிப் புள் திரித்தாய் விலங்கல் குடுமித் திருவேங்கடம் மேய அலங்கல் துளப முடியாய் அருளாயே (2)
O lord, you who are adorned with a thulasi garland, fought and destroyed the clan of Rakshasas and the king of Lanka …
நீர் ஆர் கடலும் நிலனும் முழுது உண்டு ஏர் ஆலம் இளந் தளிர்மேல் துயில் எந்தாய் சீர் ஆர் திருவேங்கட மா மலை மேய ஆரா அமுதே அடியேற்கு அருளாயே (3)
You are sweet nectar. You, my father, who swallowed the whole world and the ocean with its abundant water and rested …
உண்டாய்-உறிமேல் நறு நெய் அமுது ஆக கொண்டாய்-குறள் ஆய் நிலம் ஈர் அடியாலே விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே (4)
You, the god of the gods who stole the fragrant butter from the uri and ate it as if it were nectar, and took the for…
தூண் ஆய் அதனூடு அரியாய் வந்து தோன்றி பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய் சேண் ஆர் திருவேங்கட மா மலை மேய கோள் நாகணையாய் குறிக்கொள் எனை நீயே (5)
You, the god of the tall majestic Thiruvenkaṭam hills, took the form of a pillar, split it open, emerged from it in t…
மன்னா இம் மனிசப் பிறவியை நீக்கி தன் ஆக்கி தன் இன் அருள் செய்யும் தலைவன் மின் ஆர் முகில் சேர் திருவேங்கடம் மேய என் ஆனை என் அப்பன் என் நெஞ்சில் உளானே (6)
The matchless god, my king who himself is me, saved me from never-ending births on the earth and gives me his sweet g…
மான் ஏய் மட நோக்கிதிறத்து எதிர் வந்த ஆன் ஏழ் விடை செற்ற அணி வரைத் தோளா தேனே திருவேங்கட மா மலை மேய கோனே என் மனம் குடிகொண்டு இருந்தாயே (7)
You are as sweet as honey and you have hands strong as mountains. You who killed the seven bulls opposing them to mar…
சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற மாயன் மணி வாள் ஒளி வெண் தரளங்கள் வேய் விண்டு உதிர் வேங்கட மா மலை மேய ஆயன் அடி அல்லது மற்று அறியேனே (8)
Our lord is far and near and he, the Māyan stays in my heart. I know nothing except the feet of the cowherd who stays…
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்- நந்தாத கொழுஞ் சுடரே எங்கள் நம்பீ சிந்தாமணியே திருவேங்கடம் மேய எந்தாய்!-இனி யான் உனை என்றும் விடேனே (9)
You, our father, our Nambi, our cintamani, are a bright light that never diminishes. You came to me, entered my heart…
வில்லார் மலி வேங்கட மா மலை மேய மல் ஆர் திரள் தோள் மணி வண்ணன் அம்மானைக் கல் ஆர் திரள் தோள் கலியன் சொன்ன மாலை வல்லார்-அவர் வானவர் ஆகுவர் தாமே (10) ------- 11. திருவேங்கடம்-4
Kaliyan, the poet with strong mountain-like arms composed a garland of pāsurams praising the dear sapphire-colored go…
வானவர்-தங்கள் சிந்தை போல என் நெஞ்சமே இனிது உவந்து மா தவ மானவர்-தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை கானவர் இடு கார் அகில்-புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குறள் ஆன அந்தணற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே (1)
O heart, our father, worshiped by the sages in their hearts, who took the form of a bachelor dwarf, went to Mahabali’…
உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன் உகந்தவர்-தம்மை மண்மிசைப் பிறவியே கெடுப்பான் அது கண்டு என் நெஞ்சம் என்பாய் குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து அறவன் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே (2)
O heart, the god of dharma who has no relatives or family and who destroys the future births of his devotees on this …
இண்டை ஆயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடைக் கொண்டு போய் இடவும் அது கண்டு என் நெஞ்சம் என்பாய் வண்டு வாழ் வட வேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை- அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே (3)
O heart, the lord, the ruler of the earth and the sky who will give moksha to his devotees if they take flower garlan…
பாவியாது செய்தாய் என் நெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண்மிசை மேவி ஆட்கொண்டு போய் விசும்பு ஏற வைக்கும் எந்தை கோவி நாயகன் கொண்டல் உந்து உயர் வேங்கட மலை ஆண்டு வானவர் ஆவியாய் இருப்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே (4)
O heart, what are you doing without worshiping him, our father, the soul of the gods and the beloved of the cowherd w…
பொங்கு போதியும் பிண்டியும் உடைப் புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை தங்கள் தேவரும் தாங்களுமே ஆக என் நெஞ்சம் என்பாய் எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்று அருள் அம் கண் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே (5)
O heart, the Buddhists fast and worship their god who stays under a bodhi tree and the Jains remain in their Paḷḷi an…
துவரி ஆடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும் தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சம் என்பாய் கவரி மாக் கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை அமர நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே (6)
O heart, the Jains wear orange clothes and are bald, and with their people they eat together until they become fat. O…
தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை நெருக்குவார் அலக்கண்-அது கண்டு என் நெஞ்சம் என்பாய் மருள்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும் வானிடை அருக்கன் மேவிநிற்பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே (7)
O heart, the Jains are proud and argue about different religions, wanting to prove theirs is the best and they eat la…
சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேசக் கேட்டிருந்- தே என் நெஞ்சம் என்பாய் எனக்கு ஒன்று சொல்லாதே வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய ஆயர் நாயகற்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே (8)
O heart, you have heard that people say, “He is far. He is near. He is short. He is tall.” I do not think like that. …
கூடி ஆடி உரைத்ததே உரைத் தாய் என் நெஞ்சம் என்பாய் துணிந்து கேள் பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்திக் காண்கிலார் ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர்-கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து ஆடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே (9)
O heart, you say the same things that others get together and say about him. Listen to this carefully. Many people si…
மின்னு மா முகில் மேவு தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய அன்னம் ஆய் நிகழ்ந்த அமரர் பெருமானைக் கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இம் மன்னு பாடல் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே (10) ---- 12. திரு எவ்வுளூர்
Kaliyan, the chief of Thirumangai surrounded with beautiful strong walls composed ten sweet Tamil pāsurams on the god…
காசை ஆடை மூடி ஓடிக் காதல் செய் தானவன் ஊர் நாசம் ஆக நம்ப வல்ல நம்பி நம் பெருமான் வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் உண்டான் இவன் என்று ஏச நின்ற எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (1)
When the Rākshasa king of Lanka came as a sage in orange clothes and took Sita the wife of Rama to Lanka, our Nambi w…
தையலாள்மேல் காதல் செய்த தானவன் வாள் அரக்கன் பொய் இலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று செய்த வெம் போர்-தன்னில் அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள எய்த எந்தை எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (2)
When the Rākshasa king loved Rama's beautiful wife Sita and took her to Lanka, our father, our dear lord went to Lank…
முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன் மன் ஊர்-தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே பின் ஓர் தூது ஆதி-மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார் இன்னார் தூதன் என நின்றான்-எவ்வுள் கிடந்தானே (3)
When Rama sent Hanuman to Lanka as a messenger and Rāvaṇa did not send Sita back, he became enraged at the Raksaksas …
பந்து அணைந்த மெல் விரலாள் பாவை-தன் காரணத்தால் வெந் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர் நந்தன் மைந்தன் ஆக ஆகும் நம்பி நம் பெருமான் எந்தை தந்தை தம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (4)
Our Nambi, our father, who was raised as a son by the famous Nandan and fought with seven strong bulls, defeating the…
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஆல் இலைமேல் சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரைக் கண்ணன் எண்ணில் நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் நெய்தல் அம் தண் கழனி ஏலம் நாறும் பைம் புறவின்-எவ்வுள் கிடந்தானே (5)
The lotus-eyed Kaṇṇan, who swallowed all the seven worlds at the end of the eon and lay as a baby on a banyan leaf fo…
சோத்தம் நம்பி என்று தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும் ஆத்தன் நம்பி செங்கண் நம்பி ஆகிலும் தேவர்க்கு எல்லாம் மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது ஏத்தும் நம்பி எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (6)
The lord whom devotees and sages joined together and praised saying, “O Nambi, we worship you. You are our ancient on…
திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி திசைமுகனார் தங்கள் அப்பன் சாமி அப்பன் பாகத்து இருந்த வண்டு உண் தொங்கல் அப்பு நீள் முடியான் சூழ் கழல் சூடநின்ற எங்கள் அப்பன் எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (7)
Our father, creator of Nānmuhan on the lotus on his navel, is the moon, water, sky, fire and wind, and is praised by …
முனிவன் மூர்த்தி மூவர் ஆகி வேதம் விரித்து உரைத்த புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்-கோன் தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும் தன் அடியார்க்கு இனியன் எந்தை எம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (8)
The highest matchless king of the gods is all the three gods, pure, virtuous, a sage, unique, remote and colored like…
பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள் வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன் அந்தரத்தில் வாழும் வானோர்-நாயகன் ஆய் அமைந்த இந்திரற்கும் தம் பெருமான்-எவ்வுள் கிடந்தானே (9)
The dark-colored god, shining like a diamond, who embraces on his chest the beautiful Lakshmi who has soft fingers an…
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை வண்டு பாடும் பைம் புறவின் மங்கையர்-கோன் கலியன் கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈர் ஐந்தும் வல்லார் அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர்-அமர் உலகே (10) ---------- 13. திருவல்லிக்கேணி
Kaliyan the king of Thirumangai surrounded with flourishing fields swarming with bees composed a garland of ten beaut…
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழச் செற்றவன்-தன்னை புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை சிற்றவை பணியால் முடி துறந்தானை -திருவல்லிக்கேணிக் கண்டேனே (1)
The lord fought and killed Kamsan, the wrestlers and the elephant Kuvalayabeeḍam and its mahout, removed the curse of…
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை விழுமிய முனிவரர் விழுங்கும் கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தோர் தொழுது ஏத்தும் ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை-ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும் மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே (2)
Our god, the bull-like son of Nandan, the ruler of the sky, the faultless fruit that sages enjoy, the first one on ea…
வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி வந்த பேய் அலறி மண் சேர நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட நாதனை தானவர் கூற்றை விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்ய பெண் உரு ஆகி அம் சுவை அமுதம் அன்று அளித்தானை- திருவல்லிக்கேணிக் கண்டேனே (3)
The lord, Yama for the Asurans, drank the poisonous milk from Putanā’s breasts and killed her when she came as a moth…
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடைசெய் மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திட தளர்ந்து ஆயர் எந்தம்மோடு இன ஆ-நிரை தளராமல் எம் பெருமான் அருள் என்ன அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை- திருவல்லிக்கேணிக் கண்டேனே (4)
Our lord Kaṇṇan saved the cows and the cowherds when they worshiped him saying, “O dear lord! Give us your grace and …
இன் துணைப் பதுமத்து அலர்மகள்-தனக்கும் இன்பன் நல் புவி-தனக்கு இறைவன் தன் துணை ஆயர் பாவை நப்பின்னை -தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி வாய் உரை தூது சென்று இயங்கும் என் துணை எந்தை தந்தை தம்மானை- திருவல்லிக்கேணிக் கண்டேனே (5)
Thirumāl, the king of the world, the beloved of Lakshmi, the husband of Nappinnai, the cowherd girl, and a companion …
அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு இளையவன் அணி இழையைச் சென்று எந்தமக்கு உரிமை செய் என தரியாது எம் பெருமான் அருள் என்ன சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்-தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை- திருவல்லிக்கேணிக் கண்டேனே (6)
Kaṇṇan came and helped Draupadi when Duhshasanan, the younger son of blind Dhrtarashtran and younger brother of the k…
பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும் இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை- குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்று ஆல இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே (7)
As Rama he fought with Ravaṇa, the king of Lanka, while Bharathan, Satrughnan, Lakshamanan and Sita prayed for him ni…
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிரம் நாமம் ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய் தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை -திருவல்லிக்கேணிக் கண்டேனே (8)
When Prahladan, the son of Hiraṇyan came home from school and recited god's thousand names, his father, the Asuran Hi…
மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த கான் அமர் வேழம் கைஎடுத்து அலற கரா அதன் காலினைக் கதுவ ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து சென்று நின்று ஆழிதொட்டானை- தேன் அமர் சோலை மாட மா மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே (9)
When the elephant Gajendra entered a pond where fish frolicked in the forest to pick some fresh flowers to worship th…
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும் தென்னன் தொண்டையர்-கோன் செய்த நல் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை கன்னி நல் மாட மங்கையர் தலைவன் காமரு சீர்க் கலிகன்றி சொன்ன சொல்-மாலை பத்து உடன் வல்லார் சுகம் இனிது ஆள்வர் வான்-உலகே (10) ------ 14. திருநீர்மலை
The famous poet Kaliyan, the chief of Thirumangai filled with beautiful palaces, composed a garland of ten pāsurams o…
அன்று ஆயர் குலக் கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு உறையும் இடம் ஆவது-இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடம் திகழ் கோவல்நகர் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மா மலை ஆவது-நீர்மலையே (1)
Our lord who stays with Lakshmi and the cowherd’s daughter Nappinnai, loving them, stands in Thirunaṛaiyur surrounded…
காண்டாவனம் என்பது ஓர் காடு அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க முனே மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும் முன் உலகம் பொறை தீர்த்து ஆண்டான் அவுணன்-அவன் மார்வு-அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய் நீண்டான் குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம் மா மலை ஆவது-நீர்மலையே (2)
The lord grew angry at Indra and burned Kāṇḍavanam when Indra stayed there. He fought in the Bharatha war and saved t…
அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து அடல் ஆழியினால் அணி ஆர் உருவில் புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில் பல மன்னர் பட சுடர் ஆழியினைப் பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர் நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு இடம் மா மலை ஆவது-நீர்மலையே (3)
Our god, the ruler of the world carries a curving conch and a mighty discus that destroys his enemies fought in the B…
தாங்காதது ஓர் ஆள் அரி ஆய் அவுணன்- தனை வீட முனிந்து அவனால் அமரும் பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில் பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம் மா மலை ஆவது-நீர்மலையே (4)
Our lord took the form of a man-lion and killed Hiraṇyan making all his wives enter the fire, and joined the Pandavas…
மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு அணை கட்டி வரம்பு உருவ மதி சேர் கோல மதிள் ஆய இலங்கை கெட படை தொட்டு ஒருகால் அமரில் அதிர காலம் இது என்று அயன் வாளியினால் கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும் நீல முகில் வண்ணன் எமக்கு இறைவற்கு இடம் மா மலை ஆவது-நீர்மலையே (5)
The dark cloud-colored lord built a bridge on the roaring ocean to go to Lanka with beautiful forts over which moon f…
பார் ஆர் உலகும் பனி மால் வரையும் கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு ஆராது என நின்றவன் எம் பெருமான் அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அப் பேரானை முனிந்த முனிக்கு அரையன் பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான் நீர் ஆர் பெயரான் நெடுமால்-அவனுக்கு இடம் மா மலை ஆவது-நீர்மலையே (6)
Neḍumal, the ocean-colored god, who swallowed the world, the high snow-filled mountains, the oceans, the sun and the …
புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப் புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன் நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அவுணன் பகராதவன் ஆயிரம் நாமம் அடிப் பணியாதவனை பணியால் அமரில் நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான்-அவனுக்கு இடம் மா மலை ஆவது-நீர்மலையே (7)
When the Rākshasa Hiraṇyan, conquerer of all with his sword, did not listen to his son Prahladan and refused to recit…
பிச்சச் சிறு பீலி பிடித்து உலகில் பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால் அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய் நச்சி நமனார் அடையாமை நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும்- அவற்கு இடம் மா மலை ஆவது- நீர்மலையே (8)
The Jains carry peacock feathers and like people who eat corpses they wander shamelessly and fearlessly. The devotees…
பேசும் அளவு அன்று இது வம்மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள் நாசம் அது செய்திடும் ஆதன்மையால் அதுவே நமது உய்விடம் நாள்மலர்மேல் வாசம் அணி வண்டு அறை பைம் புறவின்- மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதிஇல் நீசர்-அவர் சென்று அடையாதவனுக்கு இடம் மா மலை ஆவது-நீர்மலையே (9)
If you worship the god of Thiruneermalai whose fame surpasses words, even before Yama’s messengers know what your kar…
நெடுமால்-அவன் மேவிய நீர்மலைமேல் நிலவும் புகழ் மங்கையர்-கோன் அமரில் கட மா களி யானை வல்லான் கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு உடனே விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர் கொடு மா கடல் வையகம் ஆண்டு மதிக் குடை மன்னவர் ஆய் அடி கூடுவரே (10) -------- 15. திருக்கடல்மல்லை -1
Kaliyan, the famous chief of Thirumangai who fights with strong elephants in battle, composed ten Tamil pāsurams on t…
பார்-ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை எம்மானை தொண்டர்-தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக் கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே (1)
In Kaḍalmallai Thalasayanam I saw the lord, strong as a bull, sweet as the nectar from the milky ocean, generous as t…
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி மாண்டு அவத்தம் போகாதே வம்மின் எந்தை என் வணங்கப்படுவானை கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தை கரு முகிலை எம்மான்-தன்னை நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலைக் காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே (2)
Don’t believe in those who do tapas to other gods and serve them and don’t trust their false books as true or believe…
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய் உலகு உய்ய நின்றானை அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனை கன்று மேய்த்து விளையாட வல்லானை வரைமீ கானில் தடம் பருகு கரு முகிலை தஞ்சைக் கோயில் தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும் கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்- கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (3)
The dark cloud-colored lord, the protector of the world who drank milk from the breasts of Putanā and killed her and …
பேய்த் தாயை முலை உண்ட பிள்ளை- தன்னை பிணை மருப்பின் கருங் களிற்றை பிணை மான் நோக்கின் ஆய்த் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர்-தம் அமுதத்தை குரவை முன்னே கோத்தானை குடம் ஆடு கூத்தன்-தன்னை கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை எம்மானைக் கண்டுகொண்டேன்- கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (4)
In Kaḍalmallai Thalasayanam surrounded with thick groves I saw the god who drank milk from the breasts of Putanā and …
பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ பாலகன் ஆய் ஆல் இலையில் பள்ளி இன்பம் ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணிக் குன்று அன்ன ஈர் இரண்டு மால் வரைத் தோள் எம்மான்-தன்னை தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில் சென்று அப் பொய் அறைவாய்ப் புகப் பெய்த மல்லர் மங்கக் காய்ந்தானை எம்மானைக் கண்டுகொண்டேன் -கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (5)
In Kadalmallai Thalasayanam surrounded with thick groves I saw the sapphire-colored lord with four mountain-like arms…
கிடந்தானை தடங் கடலுள் பணங்கள் மேவி கிளர் பொறிய மறி திரிய அதனின்பின்னே படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை பார் இடத்தை எயிறு கீற இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் கடந்தானை எம்மானைக் கண்டுகொண்டேன்- கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (6)
Our lord, my father who rests on many-headed Adisesha on the ocean, broke the tusks of the elephant Kuvalayābeeḍam, t…
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரைத் தோள் இற நெரித்து அன்று அவுணர்-கோனைப் பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை ஊண் ஆகப் பேய் முலை நஞ்சு உண்டான்-தன்னை உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானைக் காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்- கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (7)
The lord who rests on the roaring ocean and rides on Garuḍa crushed the mountain-like arms of the strong undefeated R…
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை பிரை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தட வரைமேல் கிடந்தானை பணங்கள் மேவி எண்ணானை எண் இறந்த புகழினானை இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானைக் கண் ஆரக் கண்டுகொண்டேன் -கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (8)
He came as Mohini and gave nectar to the gods, cheating the Asurans when the milky ocean was churned, and he took the…
தொண்டு ஆயார்-தாம் பரவும் அடியினானை படி கடந்த தாளாளற்கு ஆள் ஆய் உய்தல் விண்டானை-தென் இலங்கை அரக்கர் வேந்தை -விலங்கு உண்ண வலங் கைவாய்ச் சரங்கள் ஆண்டு பண்டு ஆய வேதங்கள் நான்கும் ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும் கண்டானைத் தொண்டனேன் கண்டுகொண்டேன் -கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (9)
The lord whose feet his devotees praise measured the world at the sacrifice of Mahābali and he killed the king of the…
பட நாகத்து அணைக் கிடந்து அன்று அவுணர்-கோனைப் பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலித் தடம் ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத் தாமரைக்கண் துயில் அமர்ந்த தலைவன்-தன்னைக் கடம் ஆரும் கருங் களிறு வல்லான் வெல் போர்க் கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல் திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதல் அரிய வல்லார் தாமே (10) ------------ 16. திருக்கடல்மல்லை - 2
Kaliyan, a warrior in battles with strong elephants dripping with ichor, composed ten sweet musical pāsurams on the g…
நண்ணாத வாள் அவுணர் இடைப் புக்கு வானவரை பெண் ஆகி அமுது ஊட்டும் பெருமானார் மருவினிய தண் ஆர்ந்த கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே (1)
I will not spend even the time it takes to blink thinking of those who do not think of my god who took the form of Mo…
பார் வண்ண மட மங்கை பனி நல் மா மலர்க் கிழத்தி நீர் வண்ணன் மார்வத்தில் இருக்கையை முன் நினைந்து அவன் ஊர் கார்வண்ண முது முந்நீர்க் கடல்மல்லைத் தலசயனம் ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்-அவர் எம்மை ஆள்வாரே (2)
Those devotees who think in their hearts and worship the cloud-colored lord of Kaḍalmallaithalasayanam who keeps beau…
ஏனத்தின் உருவு ஆகி நில-மங்கை எழில் கொண்டான் வானத்தில்-அவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள கானத்தின் கடல்மல்லைத் தலசயனத்து உறைகின்ற ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே (3)
My chiefs and my rulers are the devotees who in their hearts worship the cloud-colored lord, the light of knowledge w…
விண்டாரை வென்று ஆவி விலங்கு உண்ண மெல் இயலார் கொண்டாடும் மல் அகலம் அழல் ஏற வெம் சமத்துக் கண்டாரை கடல்மல்லைத் தலசயனத்து உறைவாரைக் கொண்டாடும் நெஞ்சு உடையார்-அவர் எங்கள் குலதெய்வமே (4)
The devotees are our family gods who worship in their hearts the god of Kaḍalmallai Thalasayanam who heroically fough…
பிச்சச் சிறு பீலிச் சமண் குண்டர் முதலாயோர் விச்சைக்கு இறை என்னும் அவ் இறையைப் பணியாதே கச்சிக் கிடந்தவன் ஊர் கடல்மல்லைத் தலசயனம் நச்சித் தொழுவாரை நச்சு என் தன் நல் நெஞ்சே (5)
O my good heart! Praise and love the devotees who do not worship god of the Jains who carry an umbrella and a small p…
புலன் கொள் நிதிக் குவையோடு புழைக் கை மா களிற்று இனமும் நலம் கொள் நவமணிக் குவையும் சுமந்து எங்கும் நான்று ஒசிந்து கலங்கள் இயங்கும் மல்லைக் கடல்மல்லைத் தலசயனம் வலங்கொள் மனத்தார்-அவரை வலங்கொள் என் மட நெஞ்சே (6)
O ignorant heart, embrace and worship the devotees who circle the temple and worship the god of Kaḍalmallai Thalasaya…
பஞ்சிச் சிறு கூழை உரு ஆகி மருவாத வஞ்சப் பெண் நஞ்சு உண்ட அண்ணல் முன் நண்ணா கஞ்சைக் கடந்தவன் ஊர் கடல்மல்லைத் தலசயனம் நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே (7)
O my pure heart! Worship the devotees who keep in their hearts the lord of Kaḍalmallai Thalasayanam who was born on t…
செழு நீர் மலர்க் கமலம் திரை உந்து வன் பகட்டால் உழும் நீர் வயல் உழவர் உழ பின் முன் பிழைத்து எழுந்த கழு நீர் கடி கமழும் கடல்மல்லைத் தலசயனம் தொழும் நீர் மனத்தவரைத் தொழுவாய் என் தூய் நெஞ்சே (8)
O my pure heart! Worship the devotees who worship the god in their hearts of Kaḍalmallai Thalasayanam where beautiful…
பிணங்கள் இடு காடு-அதனுள் நடம் ஆடு பிஞ்ஞகனோடு இணங்கு திருச் சக்கரத்து எம் பெருமானார்க்கு இடம் விசும்பில் கணங்கள் இயங்கும் மல்லைக் கடல்மல்லைத் தலசயனம் வணங்கும் மனத்தார்-அவரை வணங்கு என்-தன் மட நெஞ்சே (9)
O my ignorant heart! Worship the devotees of him who carries a divine discus in his hands and keeps Shiva, dancer on …
கடி கமழும் நெடு மறுகின் கடல்மல்லைத் தலசயனத்து அடிகள் அடியே நினையும் அடியவர்கள்-தம் அடியான் வடி கொள் நெடு வேல் வலவன் கலிகன்றி ஒலி வல்லார் முடி கொள் நெடு மன்னவர்-தம் முதல்வர் ஆவாரே (10) -------- 17. திருவிடவெந்தை - தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் இரங்கல்
Kaliyan, the warrior with a long spear, the devotee of the devotees who always think of him, composed ten pāsurams on…
திவளும் வெண் மதிபோல் திரு முகத்து அரிவை செழுங் கடல் அமுதினில் பிறந்த அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் குவளை அம் கண்ணி கொல்லி அம் பாவை -சொல்லு நின் தாள் நயந்திருந்த இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்? -இடவெந்தை எந்தை பிரானே (1)
Her mother says, “Even though my daughter with a lovely face as beautiful as the white shining moon knows that Lakshm…
துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள் குளம் படு குவளைக் கண்-இணை எழுதாள் கோல நல் மலர் குழற்கு அணியாள் வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த மால் என்னும் மால் இன மொழியாள் இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?- இடவெந்தை எந்தை பிரானே (2)
Her mother says, “My daughter doesn’t smile at her friends with her mouth as sweet as a pomagranate fruit. Her breast…
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தட முலைக்கு அணியிலும் தழல் ஆம் போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும் மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம் வளைகளும் இறை நில்லா என்-தன் ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?- இடவெந்தை எந்தை பிரானே (3)
Her mother says, “If my daughter wears sandal paste and pearl garlands on her round breasts, they burn her. The white…
ஊழியின் பெரிதால் நாழிகை என்னும் ஒண் சுடர் துயின்றதால் என்னும் ஆழியும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிது ஆம் தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும் சொல்லுமின் என் செய்கேன்? என்னும் ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்? -இடவெந்தை எந்தை பிரானே (4)
Her mother says, “My poor daughter says that one nazihai is longer than an eon. She asks her friends, ‘When will this…
ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஓதாள் உருகும் நின் திரு உரு நினைந்து காதன்மை பெரிது கையறவு உடையள் கயல் நெடுங் கண் துயில் மறந்தாள் பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல் ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்?- இடவெந்தை எந்தை பிரானே (5)
Her mother says, “My daughter doesn’t say anything at all except your name. She melts whenever she thinks of your div…
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் தடங் கடல் நுடங்கு எயில் இலங்கை வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும் மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயந்திருந்த என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?- இடவெந்தை எந்தை பிரானே (6)
Her mother says, “My daughter doesn’t think of any of the things that she should do for her own family. When she hear…
உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கு அன்றி எனக்கு அன்பு ஒன்று இலளால் வளங் கனிப் பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே என்று வாய்வெருவும் களங் கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடு அவலம் சேர்ந்திருந்த இளங் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்?- இடவெந்தை எந்தை பிரானே (7)
Her mother says, “When my daughter thinks of you, her heart melts and she prattles on about you. She only loves you. …
அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என் உள்ளம் என்னும் புலம் கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக்கு என்னும் குலம் கெழு கொல்லிக் கோமள வல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய்? -இடவெந்தை எந்தை பிரானே (8)
Her mother says, “My daughter says, ‘He has strong arms—I long for the love of that cowherd and my heart longs to tas…
பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள் அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது இவ் அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு என்கொல் ஆம்? குறிப்பில் என் நினைந்து இருந்தாய்? -இடவெந்தை எந்தை பிரானே 9
Her mother says, “Her soft arms have become pallid and gold. Her fish-like eyes do not close and she can’t sleep. She…
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய் என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள் பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே (10) --------- 18. திருவட்டபுயகரம் - தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி தோழி-தாயர்க்குக் கூறுதல்
Kaliyan, with a strong spear, the king of Thirumangai surrounded by strong walls and beautiful palaces composed these…
திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர்மிசைமேல் அயனும் வியப்ப முரி திரை மா கடல் போல் முழங்கி மூவுலகும் முறையால் வணங்க எரி அன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா அரி உரு ஆம் இவர் ஆர்கொல்? என்ன- அட்டபுயகரத்தேன் என்றாரே (1)
She asked her neighbors, “The sound of worship of the people in the three worlds was like the roaring waves of the oc…
வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதம் உரைத்து இமையோர் வணங்கும் செந்தமிழ் பாடுவார்-தாம் வணங்கும் தேவர் இவர்கொல்? தெரிக்கமாட்டேன் வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண் அளந்த அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன- அட்டபுயகரத்தேன் என்றாரே (2)
She asked her neighbors, “Who is he? I do not know. Is he a strong heroic warrior? Do the gods in the sky recite Vedi…
செம் பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள் உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மருப்பு ஒன்று பறித்து இருண்ட அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன- அட்டபுயகரத்தேன் என்றாரே (3)
She asked her neighbors, “He carries arrows that shine like pure gold, a strong bow, a club, a conch, the shining swo…
மஞ்சு உயர் மா மணிக் குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாய ஆனை அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும் ஆயர்கொல்? மாயம் அறியமாட்டேன் வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து அம் சுடர் போன்றிவர் ஆர்கொல்? என்ன- அட்டபுயகரத்தேன் என்றாரே (4)
She asked her neighbors, “Our Mayavan carried Govardhana mountain that shone like a precious jewel covered with cloud…
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொல் பொருள்-தானும் மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள்செய்து நீண்ட மலைகளும் மா மணியும் மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற அலை கடல் போன்றிவர் ஆர்கொல்? என்ன- அட்டபுயகரத்தேன் என்றாரே (5)
She asked her neighbors, “He gave the arts, the Vedas, the books on morals, the garbhasutras, grammar, philosophy and…
எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்திழையார் சங்கும் மனமும் நிறையும் எல்லாம் தம்மன ஆகப் புகுந்து தாமும் பொங்கு கருங் கடல் பூவை காயா போது அவிழ் நீலம் புனைந்த மேகம் அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல்? என்ன- அட்டபுயகரத்தேன் என்றாரே (6)
She asked her neighbors, “I don’t know anything about him. He attracts the minds of girls and steals their chastity a…
முழுசி வண்டு ஆடிய தண் துழாயின் மொய்ம் மலர்க் கண்ணியும் மேனி அம் சாந்து இழுசிய கோலம் இருந்தவாறும் எங்ஙனம் சொல்லுகேன்? ஓவி நல்லார் எழுதிய தாமரை அன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும் அழகியதாம் இவர் ஆர்கொல்? என்ன- அட்டபுயகரத்தேன் என்றாரே (7)
She asked her neighbors, “How can I describe the beauty of the thulasi garland that adorns him, swarming with bees? H…
மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில் காவி ஒப்பார் கடலேயும் ஒப்பார் கண்ணும் வடிவும் நெடியர் ஆய் என் ஆவி ஒப்பார் இவர் ஆர்கொல்? என்ன- அட்டபுயகரத்தே என்றாரே (8)
She asked her neighbors, “He taught the Vedas to the sages while the gods, standing in all the directions, worshiped …
தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம் நான் இவர்-தம்மை அறியமாட்டேன் அஞ்சுவன் மற்று இவர் ஆர்கொல்? என்ன- அட்டபுயகரத்தேன் என்றாரே (9)
She asked her neighbors, “I belong to him and my bangles don’t stay on my hands. My heart doesn’t want to stay with m…
மன்னவன் தொண்டையர்-கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன் தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி-தன்னை கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே (10) ---------- 19. திருப்பரமேச்சுரவிண்ணகரம் 11287 சொல்லு வன் சொல் பொருள் தான் அவை ஆய் சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும் ஆய் நல் அரன் நாரணன் நான்முகனுக்கு இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் பல்லவன் மல்லையர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (1)
Kaliyan, the chief of Thirumangai surrounded by strong beautiful walls praised by all composed with sweet music a gar…
The sacred place of our god who is the meaning of all words, taste, sound, and smell and the creator of Shiva and Nān…
கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தித் தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்- தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன் பார் மன்னு பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (2)
The sacred place of lotus-eyed Kaṇṇan, the creator of the wide sky where clouds float, of the ocean, sun, moon, earth…
உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான் ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள் வரம் தரு மா மணிவண்ணன் இடம் -மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல் நெடு வாயில் உக செருவில் முன நாள் பரந்தவன் பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (3)
The beautiful sapphire god who rests on the milky ocean and gave a boon to the Asuran Kesi when he came as a horse st…
அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரொடு வான் எரி கால் முதலா உண்டவன் எந்தை பிரானது இடம் -ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி விண்டவர் இண்டைக் குழாமுடனே விரைந்தார் இரிய செருவில் முனிந்து பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (4)
My father who swallowed the earth, the eight directions, the sky, the oceans with waves, fire and wind stays in sacre…
தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள் பூம் புனல் பொய்கை புக்கான்-அவனுக்கு இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத் திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற பாம்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (5)
Our lord who saved the long-trunked elephant Gajendra from the crocodile that caught it when it went to get flowers i…
திண் படைக் கோளரியின் உரு ஆய் திறலோன் அகலம் செருவில் முன நாள் புண் படப் போழ்ந்த பிரானது இடம்- பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப விடை வெல் கொடி வேல்-படை முன் உயர்த்த பண்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (6)
Our lord who fought with Hiraṇyan in the form of a man-lion, splitting open and wounding the powerful chest of the Rā…
இலகிய நீள் முடி மாவலி-தன் பெரு வேள்வியில் மாண் உரு ஆய் முன நாள் சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி உலகு உடை மன்னவன் தென்னவனைக் கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ பல படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (7)
Our god who went as a dwarf and took the earth and the sky by tricking Mahābali, the king who wore a shining crown, s…
குடைத் திறல் மன்னவன் ஆய் ஒருகால் குரங்கைப் படையா மலையால் கடலை அடைத்தவன் எந்தை பிரானது இடம்- அணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி விடைத் திறல் வில்லவன் நென்மெலியில் வெருவ செரு வேல் வலங் கைப் பிடித்த படைத் திறல் பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (8)
Our god who, as Rama, gathered a monkey army and made a bridge on the ocean stays in sacred Paramechura Vinnagaram in…
பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து முன்னே ஒருகால் செருவில் உருமின் மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி கறை உடை வாள் மற மன்னர் கெட கடல்போல முழங்கும் குரல் கடுவாய்ப் பறை உடைப் பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (9)
Our lord who fought the strong, wicked seven bulls and conquered them for the sake of Nappinnai whose forehead shines…
பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகர்மேல் கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம் தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள்-தன் அருளால் உலகில் தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே (10) --------- 20. திருக்கோவலூர்
Kaliyan the chief of Thirumangai where fields flourish composed ten pāsurams on the god of Paramechura Vinnagaram tem…
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின்மேல் ஓர் இளந் தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை- துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூய நான்மறையாளர் சோமுச் செய்ய செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (1)
The dear lord swallowed all the mountains where clouds float, the seven oceans, the sky, the earth and all things, ke…
கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில் சந்து அணி மென் முலை மலராள் தரணி-மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையானை- வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும் சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும் செல்வத் திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (2)
He rests on Adisesha on the ocean, as the gods in the sky bring fragrant thulasi garlands, sandal paste, fragrances a…
கொழுந்து அலரும் மலர்ச் சோலைக் குழாம்கொள் பொய்கைக் கோள் முதலை வாள் எயிற்றுக் கொண்டற்கு எள்கி அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை- எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன்காட்ட செழுந் தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும் திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (3)
When the pious elephant Gajendra was caught by a terrible crocodile with sharp sword-like teeth in the pool in a grov…
தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை- கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக் குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டுத் தீங் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (4)
The lord, sweet nectar for his devotees who shed tears of devotion for him, rode on Garuḍa, fought with the Māli, str…
கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி கணை ஒன்றினால் மடிய இலங்கை-தன்னுள் பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான்-தன்னை- மறை வளர புகழ் வளர மாடம்தோறும் மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (5)
Our god who fought and killed with one arrow the Rākshasas Karan, Kavandan, Māli and the monkey king Vāli who carried…
உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க தறி ஆர்ந்த கருங் களிறே போல நின்று தடங் கண்கள் பனி மல்கும் தன்மையானை- வெறி ஆர்ந்த மலர்-மகள் நா-மங்கையோடு வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வச் செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (6)
When the cowherd mother Yashoda tied up Kaṇṇan because he stole fragrant butter from the uri and ate it, he cried and…
இருங் கை மா கரி முனிந்து பரியைக் கீறி இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை- கருங் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று காய் எல்லாம் மரகதம் ஆய் பவளம் காட்ட செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத் திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (7)
The lord grew angry at the elephant Kuvalayābeedam and killed it, fought with the Rākshasa Kesi when he came as a hor…
பார் ஏறு பெரும் பாரம் தீரப் பண்டு பாரதத்துத் தூது இயங்கி பார்த்தன் செல்வத் தேர் ஏறு சாரதி ஆய் எதிர்ந்தார் சேனை செருக்களத்துத் திறல் அழியச் செற்றான்-தன்னை- போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர்போல் சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (8)
The lord who went as a messenger to Duryodhana for the Pandavas, drove a large chariot for Arjuna in the battle and c…
தூ வடிவின் பார்-மகள் பூ-மங்கையோடு சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற காவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம் பொன் செய் திரு உருவம் ஆனான்-தன்னை- தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (9)
The lord who has beautiful hands, legs, a divine mouth and eyes, carries a shining discus and a conch in his hands an…
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான்-தன்னைச் சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வத் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் என்று வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர்-தாமே (10) --------- 21. திருவயிந்திரபுரம்
Kaliyan the king of Thirumangai, with a shining sword and the beloved of his queens, composed pāsurams on the cloud-c…
இருந் தண் மா நிலம் ஏனம்-அது ஆய் வளை மருப்பினில் அகத்து ஒடுக்கி கருந் தண் மா கடல் கண் துயின்றவன் இடம்- கமல நல் மலர்த் தேறல் அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு திருவயிந்திரபுரமே (1)
The god who rests on the dark ocean on Adisesha took the form of a boar went to the underworld and brought up the coo…
மின்னும் ஆழி அங்கையவன் செய்யவள் உறை தரு திரு மார்பன் பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய பரன் இடம்-வரைச் சாரல் பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வர பிணி அவிழ் கமலத்துத் தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு திருவயிந்திரபுரமே (2)
The highest lord, the meaning of the four Vedas, who carries a shining discus in his hand and embraces beautiful Laks…
வையம் ஏழும் உண்டு ஆல் இலை வைகிய மாயவன் அடியவர்க்கு மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்- மெய்தகு வரைச் சாரல் மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய முல்லை அம் கொடி ஆட செய்ய தாமரைச் செழும் பணை திகழ்தரு திருவயிந்திரபுரமே (3)
Māyavan, the divine lord, always true to his devotees, who swallowed all the seven worlds and lay on a banyan leaf as…
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன்-தன் மார்பு-அகம் இரு பிளவாக் கூறு கொண்டு அவன் குலமகற்கு இன் அருள் கொடுத்தவன் இடம்-மிடைந்து சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை விசும்பு உற மணி நீழல் சேறு கொண்ட தண் பழனம்-அது எழில் திகழ் திருவயிந்திரபுரமே (4)
Our god who split open the chest of his enemy the strong Asuran Hiranyan and gave his divine grace to his son Prahlad…
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் அளந்து ஆயர் பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம் -பொன் மலர் திகழ் வேங்கை கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு குரக்கினம் இரைத்து ஓடி தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு திருவயிந்திரபுரமே (5)
Our lord who went to the sacrifice of Mahabali, asked for three feet of land and measured the wide earth and the sky …
கூன் உலாவிய மடந்தை-தன் கொடுஞ் சொலின் திறத்து இளங் கொடியோடும் கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம்-கவின் ஆரும் வான் உலாவிய மதி தவழ் மால் வரை மா மதிள் புடை சூழ தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய திருவயிந்திரபுரமே (6)
The dark cloud-colored lord who went to the forest as Rama with his young vine-like wife Sita because his stepmother …
மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம் விலங்கலின்மிசை இலங்கை மன்னன் நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம்-மணி வரை நீழல் அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில் பெடையொடும் இனிது அமர செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு தண் திருவயிந்திரபுரமே (7)
Our lord who, as Rama, fought and destroyed the ten crowns of the king of Lanka to bring back his beautiful vine-like…
விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம் வில் இறுத்து அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம்-தடம் ஆர் வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு மலை வளர் அகில் உந்தித் திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே (8)
Our lord who, as Rama, broke the bow to marry Sita with soft, fragrant dark hair, and carried Govardhana mountain as …
வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்கு ஆய் மணித் தேர் கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்- குலவு தண் வரைச் சாரல் கால் கொள் கண் கொடி கைஎழ கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல் சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே (9)
Our father who drove the chariot for Arjuna in the cruel Bharatha war and killed the Kauravas with strong spears in t…
மூவர் ஆகிய ஒருவனை மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச தண் திருவயிந்திரபுரத்து மேவு சோதியை வேல் வலவன் கலி கன்றி விரித்து உரைத்த பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப் பாவங்கள் பயிலாவே (10) --------- 22. தில்லைத் திருச்சித்திரகூடம்-1
Kaliyan who carries a strong spear composed ten beautiful Tamil pāsurams praising the god of the gods in Thivayindipu…
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா- தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர் கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த் தேன் ஆட மாடக் கொடி ஆடு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (1)
O devotees, if you want to rule the world of the gods, you do not have to starve and suffer and do tapas and all of y…
காயோடு நீடு கனி உண்டு வீசு கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம் ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா -திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (2)
O devotees, if you want to reach him who embraces Lakshmi on his chest, you do not have to eat vegetables and fruits …
வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய் விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர்- கோன் பணிந்த செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (3)
O devotees, if you want to see the lord who went through the ocean to the underground world as a boar and rescued the…
அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த பெருமான் திருநாமம் பிதற்றி நும்-தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர் கரு மா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின்-அணைப் பள்ளியின்மேல் திருமால் திருமங்கையொடு ஆடு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (4)
O devotees, you say that your sorrow-filled births will go away if you recite the divine names of the lord who went a…
கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய குல மன்னர் அங்கம் மழுவில் துணிய தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர் பூ-மங்கை தங்கி புல-மங்கை மன்னி புகழ்-மங்கை எங்கும் திகழ புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (5)
O devotees, if you want to reach the lord who came as the sage Parasuraman carrying an axe and fought with many kings…
நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி நும்-தம் மனத்தே இருத்தும்படி வாழவல்லீர் அவ் வாய் இள மங்கையர் பேசவும் தான் அரு மா மறை அந்தணர் சிந்தை புக செவ் வாய்க் கிளி நான்மறை பாடு தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (6)
O devotees, if you want to live thinking only of the dark-colored lord shining like a jewel, who as Rama shot his sha…
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில் கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள் தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (7)
If you want to keep in your heart the lord who loved the soft arms of Nappinnai, the cowherd girl adorned with jasmin…
மா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முது குன்று எடுத்து ஆயர்-தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர் மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித் தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (8)
O devotees, if you want to reach the ornamented feet with sounding anklets of the Māyan who grazed the cows and carri…
செரு நீல வேல் கண் மடவார்திறத்துச் சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் அரு நீல பாவம் அகல புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (9)
O devotees, if you want to remove the karma that you have collected because of your passion for women with dark eyes …
சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய தில்லைத் திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும் கார் ஆர் புயல் கைக் கலிகன்றி குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார் பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப் பல காலம் நிற்கும்படி வாழ்வர்-தாமே (10) --------- 23. தில்லைத் திருச்சித்திரகூடம் 2
Kaliyan, the generous poet who gives like rain composed a garland of ten Tamil pāsurams on Thirumāl so the people of …
வாட மருது இடை போகி மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு ஆடல் நல் மா உடைத்து ஆயர் ஆ-நிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்- சேடு உயர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே (1)
The lord danced on a pot, went between two marudam trees and killed the Asurans, wrestled with the Mallars sent by Ka…
பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட பிள்ளை பரிசு இது என்றால் மா நில மா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டு உண் பூ-மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடித் தே மலர் தூவ வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (2)
Kaṇṇan, the lord of Thillai Chitrakuḍam who drank the poisonous milk of the devil Putanā and killed her, comes on the…
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப எண் திசையோரும் வணங்க இணை மருது ஊடு நடந்திட்டு அண்டரும் வானத்தவரும் ஆயிரம் நாமங்களோடு திண் திறல் பாட வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (3)
The lord walked between two Marudam trees and killed the wrestlers as all the people in the eight directions bowed to…
வளைக் கை நெடுங்கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத் தண் தடம் புக்கு அண்டர் காண முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாடத் திளைத்து அமர் செய்து வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (4)
When Kaṇṇan plunged into a cool pond blooming with lotuses fought and danced on the head of the sharp-toothed snake K…
பருவக் கரு முகில் ஒத்து முத்து உடை மா கடல் ஒத்து அருவித் திரள் திகழ்கின்ற ஆயிரம் பொன்மலை ஒத்து உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து இன மால் விடை செற்று தெருவில் திளைத்து வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (5)
Kaṇṇan, dark as a rain-giving cloud, wears on his chest a thousand garlands, gold ornaments and pearls that shine lik…
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான் உய்யப் பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி வையத்து எவரும் வணங்க அணங்கு எழு மா மலை போல தெய்வப் புள் ஏறி வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (6)
Victorious Kaṇṇan, the god of Thillai Chitrakuḍam, comes on the street riding the divine Garuḍa that looks like a bea…
ஆவர் இவை செய்து அறிவார்? அஞ்சன மா மலை போல மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார் கை தொழ வீதி வருவான்- தேவர் வணங்கு தண் தில்லைச் சித்திரகூடத்து உள்ளானே (7)
Kaṇṇan, the heroic god of rich Thillai Chitrakuḍam where gods come and bow to him comes on the street looking like a …
பொங்கி அமரில் ஒருகால் பொன்பெயரோனை வெருவ அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்து ஆட பைங் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ் வாய்ச் சிங்க உருவின் வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (8)
The god of Thillai Chitrakuḍam who took the form of a man-lion dancing with a thousand arms, two fire-like eyes long …
கரு முகில் போல்வது ஓர் மேனி கையன ஆழியும் சங்கும் பெரு விறல் வானவர் சூழ ஏழ் உலகும் தொழுது ஏத்த ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத் திருமகளோடும் வருவான்-சித்திரகூடத்து உள்ளானே (9)
The god of Thillai Chitrakuḍam colored like a dark cloud comes on the street victorious, holding a discus and a conch…
தேன் அமர் பூம் பொழில் தில்லைச் சித்திரகூடம் அமர்ந்த வானவர்-தங்கள் பிரானை மங்கையர்-கோன்மருவார் ஊன் அமர் வேல் கலிகன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் தான் இவை கற்று வல்லார்மேல் சாரா தீவினை-தானே (10) -------- 24. திருக்காழிச் சீராமவிண்ணகரம்
Kaliyan, the chief of Thirumangai who carries a spear and fought with his enemies composed ten beautiful Tamil pāsura…
ஒரு குறள் ஆய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும் தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள்-அவை ஆறும் இசைகள் ஏழும் தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (1)
The lord who went to Mahabali’s sacrifice as a dwarf, took three feet of land from the king, measured the earth and t…
நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன் ஊன்முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழு சே ஓடச் சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தைத் தொல் குருகு சினை எனச் சூழ்ந்து இயங்க எங்கும் தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (2)
Our father who removed the pride of Nānmuhan with the help of the famous sage Romasa and took away the curse that had…
வை அணைந்த நுதிக் கோட்டு வராகம் ஒன்று ஆய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும் மலர்க் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள் செய் அணைந்து களை களையாது ஏறும் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (3)
The lord who took the form of a boar with sharp horns, split open the earth and brought the earth goddess from the un…
பஞ்சிய மெல் அடிப் பின்னைதிறத்து முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண் நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலைத் தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே தண் மதியின் நிலாக் காட்ட பவளம்-தன்னால் செஞ் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (4)
Our lord who conquered the seven bulls to marry Nappinnai with soft cotton-like feet. and who split open the golden o…
தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு திருக் குலத்தில் இறந்தோர்க்குத் திருத்திசெய்து வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர்-கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர் அவ் ஆய வாள் நெடுங் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல் செவ் வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (5)
The lord who was born as Parasurama on the earth, fought with his enemies and performed the final ceremonies for his …
பைங் கண் விறல் செம் முகத்து வாலி மாள படர் வனத்துக் கவந்தனொடும் படை ஆர் திண் கை வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர்-கோன் தாள் அணைவீர் வெற்புப்பாலும துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி இடையார் முகக் கமலச் சோதி-தன்னால் திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (6)
As Rama our god who shot his arrows, fought with strong, red-faced Vāli, the king of the monkeys, conquered the army …
பொரு இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும் புற்று மறிந்தன போலப் புவிமேல் சிந்த செருவில் வலம் புரி சிலைக் கை மலைத் தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர்த் தெள்கி மருவி வலம்புரி கைதைக் கழி ஊடு ஆடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (7)
Our lord who went to Lanka, fought with his arrows and made the ten heads of king Rāvaṇa fall to the earth, so the pl…
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவளச் செவ் வாய் பணை நெடுந் தோள் பிணை நெடுங் கண் பால் ஆம் இன்சொல் மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ நெட்டு இலைய கருங் கமுகின் செங் காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீனத் தெட்ட பழம் சிதைந்து மதுச் சொரியும் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (8)
Our lord brought the Parijada tree from Indra's garden when his wife Satyabama who had a beautiful waist, a red coral…
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனைத் தன் உந்தியிலே தோற்றுவித்து கறை தங்கு வேல் தடங் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழுநீர் கூடி துறை தங்கு கமலத்துத் துயின்று கைதைத் தோடு ஆரும் பொதி சோற்றுச் சுண்ணம் நண்ணி சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழிச் சீராமவிண்ணகரே சேர்மின் நீரே (9)
O devotees, go and worship the feet of Kaṇṇan who keeps on his right side Shiva wearing the crescent moon in his matt…
செங் கமலத்து அயன் அனைய மறையோர் காழிச் சீராமவிண்ணகர் என் செங் கண் மாலை அம் கமலத் தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம் கொங்கு மலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன சங்க முகத் தமிழ்-மாலை பத்தும் வல்லார் தடங் கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே (10) --------- 25. திருவாலி:1
Kaliyan the chief of Thirumangai of Thiruvāli, who conquered and gained victory and is the beloved husband of his que…
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததன்பின் வணங்கும் என் சிந்தனைக்கு இனியாய்-திருவே என் ஆர் உயிரே அம் தளிர் அணி ஆர் அசோகின் இளந் தளிர்கள் கலந்து அவை எங்கும் செந் தழல் புரையும் திருவாலி அம்மானே (1)
I am your slave and you came and entered my thoughts. You are sweet to my mind and I worship you. You are my wealth a…
நீலத் தட வரை மா மணி நிகழக் கிடந்ததுபோல் அரவு அணை வேலைத்தலைக் கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்- சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட மழை முகில் போன்று எழுந்து எங்கும் ஆலைப் புகை கமழும் அணி ஆலி அம்மானே (2)
You rest on a snake bed on the ocean like a precious blue jewel on a mountain and you are also in the mind of me, you…
நென்னல் போய் வரும் என்று என்று எண்ணி இராமை என் மனத்தே புகுந்தது இம்மைக்கு என்று இருந்தேன்-எறி நீர் வளஞ் செறுவில் செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார் முகத்து எழு வாளை போய் கரும்பு அந் நல் நாடு அணையும் அணி ஆலி அம்மானே (3)
You are not concerned that today will soon be gone like yesterday.— you have entered my heart today and you will stay…
மின்னின் மன்னும் நுடங்கு இடை மடவார்-தம் சிந்தை மறந்து வந்து நின் மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்- புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய்-அகன் பணைகள் கலந்து எங்கும் அன்னம் மன்னும் வயல் அணி ஆலி அம்மானே (4)
You made me forget the beautiful women with waists as thin as lightning and think only of your divine, eternal feet. …
நீடு பல் மலர் மாலை இட்டு நின் இணை-அடி தொழுது ஏத்தும் என் மனம் வாட நீ நினையேல்-மரம் எய்த மா முனிவா பாடல் இன் ஒலி சங்கின் ஓசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும் ஆடல் ஓசை அறா அணி ஆலி அம்மானே (5)
I have adorned you with many flower garlands and worship your feet, O lord and divine sage who destroyed the Asurans …
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கைதொழுது எழும் புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன்- சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும் அந்தணாளர் அறா அணி ஆலி அம்மானே (6)
I offered eight kinds of fragrant flowers, worshiped your beautiful divine feet and thought only of you, who have ent…
உலவு திரைக் கடல் பள்ளிகொண்டு வந்து உன் அடியேன் மனம் புகுந்த அப் புலவ புண்ணியனே புகுந்தாயைப் போகலொட்டேன்- நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின்மிசை மலி அலவன் கண்படுக்கும் அணி ஆலி அம்மானே (7)
You who rest on Adisesha on the ocean with rolling waves came and entered the mind of me, your slave, and I will not …
சங்கு தங்கு தடங் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள்புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய் இனிப் போயினால் அறையோ!- கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு போய் இளந் தெங்கின் தாது அளையும் திருவாலி அம்மானே (8)
You who rest on Adisesha on the wide ocean filled with conches on the shore in Kaḍalmallai entered my heart and gave …
ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள் வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம்-எந்தாய் நீதி ஆகிய வேத மா முனி யாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய் அணி ஆலி அம்மானே (9)
O lord, you are the king of the gods, the creator of the Vedas and you taught the Vedas to the sages when they worshi…
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென் ஆலி இருந்த மாயனை கல்லின் மன்னு திண் தோள் கலியன் ஒலிசெய்த நல்ல இன் இசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடன் வல்லர் ஆய் உரைப்பார்க்கு இடம் ஆகும்-வான் உலகே (10) ---------- 26. திருவாலி - 2
Kaliyan with strong mountain-like arms composed ten sweet poems on the god Māyan of Thiruvāli surrounded with groves …
தூ விரிய மலர் உழக்கி துணையோடும் பிரியாதே பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே தீ விரிய மறை வளர்க்கும் புகழ் ஆளர் திருவாலி ஏ வரி வெம் சிலையானுக்கு என் நிலைமை உரையாயே (1)
O little bee with dots on your body, you stay with your mate without leaving her and you enter pure open blossoms and…
பிணி அவிழு நறு நீல மலர் கிழிய பெடையோடும் அணி மலர்மேல் மது நுகரும் அறு கால சிறு வண்டே மணி கழுநீர் மருங்கு அலரும் வயல் ஆலி மணவாளன் பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே (2)
O small six-legged bee, you open lovely, fragrant neelam flowers and stay in them with your mate and drink honey from…
நீர் வானம் மண் எரி கால் ஆய்நின்ற நெடுமால்-தன் தார் ஆய நறுந் துளவம் பெறும் தகையேற்கு அருளானே சீர் ஆரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும் கூர் வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே (3)
Neḍumāl adorned with fragrant thulasi garlands is water, sky, earth, fire and wind and he gives his grace to his good…
தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர் மீன் ஆய கொடி நெடு வேள் வலி செய்ய மெலிவேனோ? தேன் வாய வரி வண்டே திருவாலி நகர் ஆளும் ஆன்-ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே (4)
Kāma, the king of love with a fish banner is shooting his powerful arrows at me and I suffer thinking of my lord who …
வாள் ஆய கண் பனிப்ப மென் முலைகள் பொன் அரும்ப நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ மண் அளந்த தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த தோளாளா என்-தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே (5)
O bee, go and tell him this: “You are the king of the rich Kuḍandai. You measured the earth with your feet and carrie…
தார் ஆய தன் துளவம் வண்டு உழுதவரை மார்பன் போர் ஆனைக் கொம்பு ஒசித்த புள் பாகன் என் அம்மான் தேர் ஆரும் நெடு வீதித் திருவாலி நகர் ஆளும் கார் ஆயன் என்னுடைய கன வளையும் கவர்வானோ? (6)
O bee, my dear father whose mountain-like chest is adorned with a cool thulasi garland swarming with bees rode on his…
கொண்டு அரவத் திரை உலவு குரை கடல்மேல் குலவரைபோல் பண்டு அரவின் அணைக் கிடந்து பார் அளந்த பண்பாளா வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயல் ஆலி மைந்தா என் கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ? (7)
You, our good-natured lord who measured the earth and the sky, who are as strong as a mountain and rest on a snake be…
குயில் ஆலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தைக் குடம் ஆடி துயிலாத கண்_இணையேன் நின் நினைந்து துயர்வேனோ? முயல் ஆலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே வயல் ஆலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே? (8)
I bathe in the cool pond in Kuḍandai surrounded with flourishing groves where cuckoo birds sing, and I suffer thinkin…
நிலை ஆளா நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என் முலை ஆள ஒருநாள் உன் அகலத்தால் ஆளாயே சிலையாளா மரம் எய்த திறல் ஆளா திருமெய்ய மலையாளா நீ ஆள வளை ஆள மாட்டோமே (9)
You, the omnipresent lord, carry a victorious bow and stay in the Thirumeyyam hills. You, mighty one, destroyed the A…
மை இலங்கு கருங் குவளை மருங்கு அலரும் வயல் ஆலி நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை நெடுமாலை கை இலங்கு வேல் கலியன் கண்டு உரைத்த தமிழ்-மாலை ஐ இரண்டும் இவை வல்லார்க்கு அரு வினைகள் அடையாவே (10) ---------- 27. திருவாலி – 3
Kaliyan, the fighter with a shining spear in his hands, composed ten Tamil pāsurams on Neḍumal, who bears a shining, …
கள்வன்கொல்? யான் அறியேன்-கரியான் ஒரு காளை வந்து வள்ளி மருங்குல் என்-தன் மட மானினைப் போத என்று வெள்ளி வளைக் கைப் பற்ற பெற்ற தாயரை விட்டு அகன்று அள்ளல் அம் பூங் கழனி அணி ஆலி புகுவர்கொலோ? (1)
Her mother says, “Is he a thief? I don’t know who he is. A dark one like a bull came to my daughter, as innocent as a…
பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள்-தன் தொண்டை அம் செங் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன்பின் கெண்டை ஒண் கண் மிளிர கிளிபோல் மிழற்றி நடந்து வண்டு அமர் கானல் மல்கும் வயல் ஆலி புகுவர்கொலோ? (2)
Her mother says, “O, friend, he is a cowherd and he is naughty . When he entered our home and kissed my daughter on h…
அஞ்சுவன் வெம் சொல் நங்காய் அரக்கர் குலப் பாவை-தன்னை வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே பஞ்சிய மெல் அடி எம் பணைத் தோளி பரக்கழிந்து வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்கொலோ? (3)
Her mother says, “O my friend, he is strong and fearless. I was afraid when I heard that he had cut off the nose of S…
ஏது அவன் தொல் பிறப்பு? இளையவன் வளை ஊதி மன்னர் தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன் மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் போது வண்டு ஆடு செம்மல் புனல் ஆலி புகுவர்கொலோ? (4)
Her mother says, “Was he ever born, that young one who went as a messenger blowing his conch to Duryodhana for the Pa…
தாய் எனை என்று இரங்காள் தடந் தோளி தனக்கு அமைந்த மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள் வேய் அன தோள் விசிறி பெடை அன்னம் என நடந்து போயின பூங் கொடியாள் புனல் ஆலி புகுவர்கொலோ? (5)
Her mother says, “My daughter with round arms and feet soft as cotton doesn’t worry about me, her mother. She fell in…
என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள் தன் துணை ஆய என்-தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் வன் துணை வானவர்க்கு ஆய் வரம் செற்று அரங்கத்து உறையும் இன் துணைவனொடும் போய் எழில் ஆலி புகுவர்கொலோ? (6)
Her mother says, “I gave birth to her and thought she would be my help, but she left me without thinking that I would…
அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள் பின்னை-தன் காதலன்-தன் பெருந் தோள் நலம் பேணினளால் மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள் நடந்து புன்னையும் அன்னமும் சூழ் புனல் ஆலி புகுவர்கொலோ? (7)
Her mother says, “She didn’t worry that we are her father and mother. She wished only to embrace the ample arms of he…
முற்றிலும் பைங் கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழுங் கோதை-தன்னைப் பெற்றிலேன் முற்று இழையை பிறப்பிலி பின்னே நடந்து மற்று எல்லாம் கைதொழப் போய் வயல் ஆலி புகுவர்கொலோ? (8)
Her mother says, “My daughter, soft as a flower garland ornamented with precious jewels, left her play house, green p…
காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய் வாவி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்கொலோ? (9)
Her mother says, “She is as lovely as Lakshmi on a fragrant lotus and her eyes are as beautiful as kāvi flowers. She …
தாய் மனம் நின்று இரங்க தனியே நெடுமால் துணையா போயின பூங் கொடியாள் புனல் ஆலி புகுவர் என்று காய் சின வேல் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை பத்தும் மேவிய நெஞ்சு உடையார் தஞ்சம் ஆவது விண் உலகே (10) -------- 28. திருநாங்கூர் மணிமாடக்கோயில்
Kaliyan who carries a spear and fights angrily with his enemies composed ten Tamil pāsurams about how a beautiful vin…
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில்போல் எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம்-எத் திசையும் கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (1)
The gods come from the sky and worship the lord saying, “You are everlasting light. No one can measure your power. Yo…
முதலைத் தனி மா முரண் தீர அன்று முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மான் இடம்-விண் அணவும் பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப் பவளக் கொழுங் கால பைங் கால் புறவம் மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (2)
Our father who took away the suffering of the trembling elephant Gajendra when a crocodile in a deep pond caught him …
கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர் இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மான் இடம்-ஆள் அரியால் அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (3)
The lord who saved the mountain-like elephant Gajendra, killing the crocodile that had caught him and wounded him on …
சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில் கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்-தான்- முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர் ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர் மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (4)
Our lord who went to Lanka surrounded with oceans riding on large-winged Garuḍa and fought and destroyed the Rākshasa…
இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம்-தான்- குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (5)
Our lord drank poisonous milk from the breasts of Putanā and killed her, threw Vatsāsuran when he came as a calf onto…
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப் பகு வாய்க் கழுதுக்கு இரங்காது அவள்-தன் உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம்-ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (6)
Our lord who did not feel sorry for Putanā when he drank the milk from her breasts and killed her while the cowherd w…
தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத் தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி-தன்மேல் அடி வைத்த அம்மான் இடம்-மா மதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று முன்றில் வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (7)
Our father who went into the pond of blooming lotuses, fought with the snake Kālingan, defeated him and danced on his…
துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர்-தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மான் இடம்-வேல் நெடுங் கண் முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல் வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (8)
Our father who stole the clothes of the cowherd girls with soft dark curly hair and played and kicked over their play…
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும் படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று இமையோர் பரவும் இடம்-பைந் தடத்துப் பெடையோடு செங் கால அன்னம் துகைப்ப தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர் மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர் மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே (9)
The lord is worshiped and praised by the gods in the sky saying, “You carry a shining discus and a conch. You fought …
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர் மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும் தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்-கோன் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை வல்லார் கண்டார் வணங்கக் களி யானை மீதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய் விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ் விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே (10) ---------- 29. திருநாங்கூர் வகுந்தவிண்ணகரம்
Kaliyan, the devotee of him who is the king of Thirumangai surrounded with flourishing fields and groves swarming wit…
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு தடங் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான் நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (1)1
The dark lord colored like a rain-giving cloud, strong as a bull, who split open the wide chest of the evil Asuran Hi…
திண்ணியது ஓர் அரி உருவாய் திசை அனைத்தும் நடுங்க தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன் நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- எண் இல் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர் மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே (2)
The lord who took the form of a strong lion and split open the chest of Hiṛanyan with his claws, terrifying the gods …
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும் முண்டம்-அது நிறைத்து அவன்கண் சாபம்-அது நீக்கும் முதல்வன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- எண் திசையும் பெருஞ் செந்நெல் இளந் தெங்கு கதலி இலைக்கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (3)
Our ancient lord swallowed the world of the divine gods, the oceans with rolling waves and all the worlds and kept th…
கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியைக் காதொடு மூக்கு உடன் அரிய கதறி அவள் ஓடி தலையில் அங் கை வைத்து மலை இலங்கை புகச் செய்த தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- சிலை இலங்கு மணி மாடத்து உச்சிமிசைச் சூலம் செழுங் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம் மலை இலங்கு மாளிகைமேல் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (4)
As Rama, our lord with his strong arms cut off the nose and ears of Surpanaha, the vine-like daughter of the Rākshasa…
மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை வேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர தன் நிகர் இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும் மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (5)
Our lord with wide arms who went to Lanka with his matchless bow, smashed it to pieces and fought with Rāvaṇa, its ki…
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் பெரிய பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும் தேவன்-அவன்மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள் உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லாப் பெரிய வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (6)
The god of the gods who drank the milk from the breasts of the devil Putanā, when she came as a beautiful woman, dest…
விளங்கனியை இளங் கன்று கொண்டு உதிர எறிந்து வேல் நெடுங் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் உளம்குளிர அமுது செய்து இவ் உலகு உண்ட காளை உகந்து இனிது நாள்தோறும் மருவி உறை கோயில்- இளம்படி நல் கமுகு குலைத் தெங்கு கொடி செந்நெல் ஈன் கரும்பு கண்வளரக் கால் தடவும் புனலால் வளம் கொண்ட பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே
The lord, strong as a bull, swallowed the worlds, the ocean and the hills, threw Vathsāsuran and Kapithāsuran on each…
ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த அடல் ஆழித் தடக் கையன் அலர்-மகட்கும் அரற்கும் கூறாகக் கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர் குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- மாறாத மலர்க் கமலம் செங்கழுநீர் ததும்பி மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப மாறாத பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (8)
The lord, the origin of the gods who keeps Shiva and Nānmuhan on his divine body killed the angry Narahāsuran with th…
வங்கம் மலி தடங் கடலுள் வானவர்களோடு மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்- செங் கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்ப சேல் உகளும் செழும் பணை சூழ் வீதிதொறும் மிடைந்து மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர் வைகுந்தவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (9)
The lord who rests on Adisesha as the gods in the sky and pious sages come and sprinkle beautiful flowers on his feet…
சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரைக் கண் நெடிய பிரான்-தான் அமரும் கோயில் வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகர்மேல் வண்டு அறையும் பொழில் சூழ் மங்கையர்-தம் தலைவன் மருவலர்-தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன சங்கம் மலி தமிழ்-மாலை பத்து-இவை வல்லார்கள் தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவாரே (10) ---------- 30. திருநாங்கூர் அரிமேயவிண்ணகரம்
Kaliyan, who kills his foes with his sword as if he were Yama, the chief of Thirumangai surrounded with groves swarmi…
திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழத் தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும் அருள் நடந்து இவ் ஏழ் உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம்-பெரும் புகழ் வேதியர் வாழ்- தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (1)
Our lord with shining Lakshmi and the earth goddess at his sides who takes away the bad karma of his devotees and giv…
வென்றி மிகு நரகன் உரம்-அது அழிய விசிறும் விறல் ஆழித் தடக் கையன் விண்ணவர்கட்கு அன்று குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும் குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில்- என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர் அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (2)
Our god, as sweet as nectar, who carries a discus in his heroic hands and shines like a diamond, who came as a man-li…
உம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம் உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்தக் கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில்-மருங்கு எங்கும் பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (3)
The highest lord who swallowed the world of the gods and the seven worlds and the seven oceans, broke the tusks of th…
ஓடாத ஆள் அரியின் உருவம்-அது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம்-மல்லிகை செங்கழுநீர் சேடு ஏறு மலர்ச் செருந்தி செழுங் கமுகம் பாளை செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே ஆடு ஏறு வயல் ஆலைப் புகை கமழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (4)
The highest lord who took the form of a strong lion that never retreats, went to Hiraṇyan who had received many boons…
கண்டவர்-தம் மனம் மகிழ மாவலி-தன் வேள்விக் களவு இல் மிகு சிறு குறள் ஆய் மூவடி என்று இரந்திட்டு அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம்-வளங் கொள் பொழில் அயலே அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும் அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (5)
Our god who took the form of a dwarf-like thief, went to the sacrifice of Mahābali, took three feet of land as a boon…
வாள் நெடுங் கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா இலங்கை மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிரத் தாள் நெடுந் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்-தன் தனிச் சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம்-தடம் ஆர் சேண் இடம் கொள் மலர்க் கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் வாள் நெடுங் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (6)
As Rama, the son of Dasaratha, the king of the gods in the sky, a refuge for his devotees, went to Lanka to bring bac…
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை-தன் ஆர் உயிரும் செகுத்தான் காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான் கருதும் இடம்-பொருது புனல் துறை துறை முத்து உந்தி நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (7)
The dark-colored lord, the father of Kāma who killed Thenuhan and Putanā, who were sent by evil-minded Kamsan and wan…
கன்று-அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான் குன்று-அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன் குலவும் இடம்-கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள் துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டித் தொழுதியொடு மிகப் பயிலும் சோலை அன்று அலர்வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (8)
The dark cloud-colored god, as strong as a bull, who killed the Asurans Vatsāsuran and Kabithāsuran when they came as…
வஞ்சனையால் வந்தவள்-தன் உயிர் உண்டு வாய்த்த தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு வலி மிக்க கஞ்சன் உயிர்-அது உண்டு இவ் உலகு உண்ட காளை கருதும் இடம்-காவிரி சந்து அகில் கனகம் உந்தி மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம்-வணங்கு மட நெஞ்சே (9)
The strong bull-like god who swallowed all the seven worlds, killed heroic Kamsan, killed Putanā when she came to che…
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில் அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழுங் குன்றை கன்றி நெடு வேல் வலவன் மங்கையர்-தம் கோமான் கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும் ஒன்றினொடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து உத்தமர்கட்கு உத்தமர் ஆய் உம்பரும் ஆவர்களே (10) ------------ 31. திருநாங்கூர்த் திருத்தேவனார்தொகை
Kaliyan, the king of Thirumangai, a fighter with a long powerful spear, composed these ten musical pāsurams on Thirum…
போது அலர்ந்த பொழில் சோலைப் புறம் எங்கும் பொரு திரைகள் தாது உதிர வந்து அலைக்கும் தட மண்ணித் தென் கரைமேல் மாதவன்-தான் உறையும் இடம் வயல் நாங்கை-வரி வண்டு தேதென என்று இசை பாடும்-திருத்தேவனார்தொகையே (1)
Our lord Madhavan stays in Thiruthevanārthohai on the southern bank of the Maṇṇai river where waves dash on the grove…
யாவரும் ஆய் யாவையும் ஆய் எழில் வேதப் பொருள்களும் ஆய் மூவரும் ஆய் முதல் ஆய மூர்த்தி அமர்ந்து உறையும் இடம் மா வரும் திண் படை மன்னை வென்றி கொள்வார் மன்னு நாங்கை- தேவரும் சென்று இறைஞ்சு பொழில்-திருத்தேவனார்தொகையே (2)
Our lord who is everyone and everything, all the three gods and the meaning of the divine Vedas stays in Thiruthevanā…
வான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும் தான் ஆய எம் பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் ஆனாத பெருஞ் செல்வத்து அரு மறையோர் நாங்கை-தன்னுள்__ தேன் ஆரும் மலர்ப் பொழில் சூழ்-திருத்தேவனார்தொகையே 3
Our lord who is the king of the sky and of the people and creatures of the earth and is within everything stays in Th…
இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த சந்த மலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும் எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை- சுந்தர நல் பொழில் புடை சூழ்-திருத்தேவனார்தொகையே (4)
The place where Indra, the gods in the sky, sages, the four-headed Nānmuhan on a beautiful fragrant lotus, the sun an…
அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் குல வரையும் உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்து அகில் கனகம் தெண் திரைகள் வரத் திரட்டும் திகழ் மண்ணித் தென் கரைமேல் திண் திறலார் பயில்-நாங்கைத் திருத்தேவனார்தொகையே (5)
Our highest lord who swallowed the sky, the oceans with rolling waves, all the seven worlds and the ancient hills sta…
ஞாலம் எல்லாம் அமுது செய்து நான்மறையும் தொடராத பாலகன் ஆய் ஆல் இலையில் பள்ளிகொள்ளும் பரமன் இடம் சாலி வளம் பெருகி வரும் தட மண்ணித் தென் கரைமேல் சேல் உகளும் வயல்-நாங்கைத் திருத்தேவனார்தொகையே (6)
Our highest lord who swallowed the whole world and lay on a banyan leaf when he was a baby and whom the Vedas could n…
ஓடாத ஆளரியின் உரு ஆகி இரணியனை வாடாத வள் உகிரால் பிளந்து அளைந்த மாலது இடம் ஏடு ஏறு பெருஞ் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள்- சேடு ஏறு பொழில் தழுவு-திருத்தேவனார்தொகையே (7)
Our Thirumāl who took the form of a shining lion that never retreats and went to Hiṛanyan and split open his chest wi…
வார் ஆரும் இளங் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் கார் ஆர் திண் சிலை இறுத்த தனிக் காளை கருதும் இடம் ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள்- சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ்-திருத்தேவனார்தொகையே (8)
Our lord, mighty as a bull, who broke the strong bow to marry Mythili whose young breasts were held with a band stays…
கும்பம் மிகு மத யானை பாகனொடும் குலைந்து வீழ கொம்பு-அதனைப் பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்து உறையும் இடம் வம்பு அவிழும் செண்பகத்து மணம் கமழும் நாங்கை-தன்னுள்- செம் பொன் மதிள் பொழில் புடைசூழ்-திருத்தேவனார்தொகையே (9)
Our god who fought the rutting elephant Kuvalayābeeḍam, killed it and its mahout and danced on a pot stays in Thiruth…
கார் ஆர்ந்த திருமேனிக் கண்ணன் அமர்ந்து உறையும் இடம் சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத் திருத்தேவனார்தொகைமேல் கூர் ஆர்ந்த வேல் கலியன் கூறு தமிழ்ப் பத்தும் வல்லார் ஏர் ஆர்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே (10) -------- 32. திருநாங்கூர் வண்புருடோத்தமம்
Kaliyan, the poet with a sharp spear, composed ten Tamil pāsurams on the dark cloud-like divine Kaṇṇan, god of Thirut…
கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி-அவை பத்தும் அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்- செம் பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ் வம்பு உலாம் கமுகு ஓங்கிய நாங்கூர ்-வண்புருடோத்தமமே (1)
Our lord as Rama, who made a bridge over the ocean, went to Lanka, fought with the Rākshasa Rāvaṇa,' cut off his ten …
பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி அக் காளியன் பண அரங்கில் ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம்செய்த உம்பர்-கோன் உறை கோயில்- நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறு அங்கம் வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் -வண்புருடோத்தமமே (2)
Our lord, the king of the gods who climbed on a blooming Kaḍamba tree with tender shoots, jumped into a pond swiftly …
அண்டர் ஆனவர் வானவர்-கோனுக்கு என்று அமைத்த சோறு-அது எல்லாம் உண்டு கோ-நிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்- கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில் குல மயில் நடம் ஆட வண்டு -தான் இசை பாடிடும் நாங்கூர் -வண்புருடோத்தமமே (3)
Our lord who ate the food that cowherds made for Indra the king of the gods in the sky, and grazed the cows and prote…
பருங் கை யானையின் கொம்பினைப் பறித்து அதன் பாகனைச் சாடிப் புக்கு ஒருங்க மல்லரைக் கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்- கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு கழனியில் மலி வாவி மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் -வண்புருடோத்தமமே (4)
Our god who broke the tusks of the long-trunked elephant Kuvalayābeedam, fought with its mahout and killed him and ki…
சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து ஈசன் தன் படையொடும் கிளையோடும் ஓட வாணனை ஆயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில்- ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப் பகலவன் ஒளி மறைக்கும் மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்- வண்புருடோத்தமமே (5)
Our god killed Sakaṭāsuran when he came as a cart and chased away Siva and his allies when they came to help Vāṇāsura…
அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த கங்கை போதரக் கால் நிமிர்த்தருளிய கண்ணன் வந்து உறை கோயில்- கொங்கை கோங்கு-அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள் மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர்- வண்புருடோத்தமமே (6)
Our dear lord, Kaṇṇan who took water from the hands of Mahābali, received three feet of land and measured it with his…
உளைய ஒண் திறல் பொன்பெயரோன்-தனது உரம் பிளந்து உதிரத்தை அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில்- இளைய மங்கையர் இணை-அடிச் சிலம்பினோடு எழில் கொள் பந்து அடிப்போர் கை வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர்- வண்புருடோத்தமமே (7)
Our father who went as an angry man-lion to the Asuran Hiṛanyan, the strong king whose name means gold, and split ope…
வாளை ஆர் தடங் கண் உமை-பங்கன் வன் சாபம் மற்று அது நீங்க மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில் வண்ணன் உறை கோயில்- பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வண் பழம் விழ வெருவிப் போய் வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர்- வண்புருடோத்தமமே (8)
Our cloud-colored god who shed his blood on the skull of Nānmuhan that was stuck to Shiva’s hand so that Shiva, who g…
இந்து வார் சடை ஈசனைப் பயந்த நான் முகனைத் தன் எழில் ஆரும் உந்தி மா மலர்மீமிசைப் படைத்தவன் உகந்து இனிது உறை கோயில்- குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து தன் குருளையைத் தழுவிப் போய் மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர்- வண்புருடோத்தமமே (9)
Our lord who created on his beautiful navel the four-headed Nānmuhan seated on a lotus and Nānmuhan created Shiva wit…
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண்புருடோத்தமத்துள் அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி மன் அருள் மாரி பண்ணுள் ஆர்தரப் பாடிய பாடல் இப் பத்தும் வல்லார் உலகில் எண் இலாத பேர் இன்பம் உற்று இமையவ ரோடும் கூடுவரே (10) ------------ 33. திருநாங்கூர்ச் செம்பொன்செய்கோயில்
Kaliyan the poet worshiped the feet of the god of Vaṇpurushothamam in Nāngur where famous Vediyars live, skilled in t…
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம் பிரானை வார் அணி முலையாள் மலர்-மகளோடு மண்-மகளும் உடன் நிற்ப சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே கார் அணி மேகம் நின்றது ஒப்பானை- கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (1)
I saw and bowed to the generous cloud-colored god who, worshiped and praised by the people of the world, stays with L…
பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன்-தன்னை பேதியா இன்ப வெள்ளத்தை இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை ஏழ் இசையின் சுவை-தன்னை சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே மறைப் பெரும் பொருளை வானவர்-கோனை- கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே (2)
The king of the gods in the sky, who is the wonderful meaning of the divine Vedas, without birth, old age, past, pres…
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும் படர் பொருள்களும் ஆய் நின்றவன்-தன்னை பங்கயத்து அயன்-அவன் அனைய திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே கடல் நிற வண்ணன்-தன்னை-நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (3)
I am a slave of the dark ocean-colored Thirumāl, who is the wide sky, fire, water, moon, the shining sun and all the …
வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி மண் அளவிட்டவன்-தன்னை அசைவு அறும் அமரர் அடி-இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே உயர் மணி மகுடம் சூடி நின்றானை- கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (4)
Our god who rests on the ocean with rolling waves as the gods of the sky worship his feet and went as a faultless dwa…
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர்-தமக்குத் தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும் தயரதன் மதலையை சயமே தே மலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே காமனைப் பயந்தான்-தன்னை-நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (5)
I saw him, the father of Kāma, the son of Dasaratha who gives his grace to his devotees like a loving mother to her c…
மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன்-தன்னை கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை- செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே அல்லி மா மலராள்-தன்னொடும் அடியேன் கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே (6)
Thirumāl who as Rama built a bridge with stones, easily made a way over the wide ocean, went to Lanka, shot his arrow…
வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டு இறுத்து அடர்த்தவன்-தன்னை கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானை கரு முகில் திரு நிறத்தவனை செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை- கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே (7)
Our dark cloud-colored lord, strong as a bull, who angrily destroyed the wresters and Kamsan with his arrows, and kil…
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல் மேவிய வேத நல் விளக்கை தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச் செம்பொன்செய்கோயிலினுள்ளே மன்று-அது பொலிய மகிழ்ந்து நின்றானை- வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே (8)
The lord, the light of the Vedas, who shines like lightning at the top of the Thriuvenkaṭam hills, and threw his disc…
களங்கனி வண்ணா கண்ணனே என்-தன் கார் முகிலே என நினைந்திட்டு உளம் கனிந்திருக்கும் அடியவர்-தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை- வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே (9)
Our god who springs like honey in the hearts of his devotees when they think of him and love him, saying, “You are da…
தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலினுள்ளே வானவர்-கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாள் கலிகன்றி ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள் மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே (10) --------- 34. திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்
Kaliyan, the chief of Thirumangai, composed ten faultless Tamil pāsurams about the god of the gods of Chemponseykoyil…
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்று அவர்-தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர்- நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளங் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின் சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (1)
See, as Kaṇṇan, the lovely-eyed Thirumāl who destroyed the shining crowns of his enemies, their strength and their fa…
பொற்றொடித் தோள் மட மகள்- தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி பெற்று எடுத்த தாய்போல மடுப்ப ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர்- நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இருஞ் சிறைய வண்டு ஒலியும் நெடுங் கணார்-தம் சிற்றடிமேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (2)
See, our lovely-eyed Neḍumal who drank poisonous milk from the devil Putanā when she came as if she were the mother w…
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும் அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர்- மடல் எடுத்த நெடுந் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர்ப் பொன்னி திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (3)
See, Thirumāl with beautiful eyes who entered the small palm-leaf huts of the sharp spear-eyed cowherd women, stole a…
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி வளை மருப்பின் கடுஞ் சினத்து வன் தாள் ஆர்ந்த கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட கரு முகில்போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர்- ஏர் ஆரும் மலர்ப் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியைக் கால் தொடர விளங்கு சோதிச் சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (4)
See, our dark cloud-colored Kaṇṇan with lovely eyes who fought the dark angry bulls with curved horns and strong legs…
கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை கதிர் முத்த வெண் நகையாள் கருங் கண் ஆய்ச்சி முலை இலங்கும் ஒளி மணிப் பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடுந் தோள் மூர்த்தி கண்டீர்- மலை இலங்கு நிரைச் சந்தி மாட வீதி ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (5)
See, he is the young Thirumāl with lovely eyes his arms as strong as mountains. Making their ornaments touch his ches…
தான்போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்திருப்பான் அரக்கர்-தங்கள் கோன்போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர்- மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார் மரகதம்போல் மடக் கிளியைக் கைமேல் கொண்டு தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (6)
See, when the Rākshasa king Ravaṇa realized that a king like himself had risen up, he thought he could defeat Rama bu…
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழப் பொல்லாத குறள் உரு ஆய் பொருந்தா வாணன் மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர்- கொங்கு அலர்ந்த மலர்க் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால் செங் கலங்கல் வெண் மணல்மேல் தவழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (7)
Our beautiful-eyed lord, as a naughty dwarf, wearing a shining divine thread on his chest and a skin dress around his…
சிலம்பின் இடைச் சிறு பரல்போல் பெரிய மேரு திருக் குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் குலுங்க நில-மடந்தை-தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர்- இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும் சிலம்பிய நல் பெருஞ் செல்வம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (8)
See, our king, the lovely-eyed Thirumāl took the form of a boar ornamented with anklets with small bells that made th…
ஏழ் உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம் மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர்- ஊழிதொறும் ஊழிதொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நான்மறை அனைத்தும் தாங்கும் நாவர் சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலே (9)
At the end of the eon, our lovely-eyed Thirumāl swallowed all the seven worlds, the seven mountains, everything in th…
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங் கண் மாலை கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர்-கோன் குறையல் ஆளி பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பாமாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி சேண் விசும்பில் வானவர் ஆய்த் திகழ்வர்-தாமே (10) --------- 35. திருநாங்கூர்த் திருமணிக்கூடம்
Kaliyan with a sharp beautiful spear, the king of Thiruvāli filled with palaces where flags fly, praised by the whole…
தூம்பு உடைப் பனைக் கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னும் காம்பு உடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை- பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரன்ற எங்கும் தேம் பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே (1)
Our father who took away the suffering of the long-trunked elephant Gajendra when he was caught by a crocodile and ca…
கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் கதிர் முலை சுவைத்து இலங்கை வவ்விய இடும்பை தீரக் கடுங் கணை துரந்த எந்தை- கொவ்வை வாய் மகளிர் கொங்கைக் குங்குமம் கழுவிப் போந்த தெய்வ நீர் கமழும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே (2)
Our father who drank milk from the breasts of Putanā whose teeth were sharp as swords, and who shot his powerful arro…
மாத் தொழில் மடங்கச் செற்று மருது இற நடந்து வன் தாள் சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணர்ந்த எந்தை- நாத் தொழில் மறை வல்லார்கள் நயந்து அறம் பயந்த வண் கைத் தீத் தொழில் பயிலும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே (3)
Our father who conquered the Asuran Kesi when he came as a horse, went between two marudu trees and destroyed the Asu…
தாங்கு-அரும் சினத்து வன் தாள் தடக் கை மா மருப்பு வாங்கி பூங் குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை- மாங்கனி நுகர்ந்த மந்தி வந்து வண்டு இரிய வாழைத் தீங் கனி நுகரும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே (4)
Our father who fought angrily with the long-trunked elephant Kuvalayābeedam and broke its tusks, killed the Asurans w…
கரு மகள் இலங்கையாட்டி பிலங் கொள் வாய் திறந்து தன்மேல் வரும்-அவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை- பெரு மகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவு இலாத திருமகள் மருவும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே (5)
Our father who cut off with a sword the nose and ears of dark Surpanaha, the princess of Lanka, when she came opening…
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எந்தை- ஒண் திறல் தென்னன் ஓட வட அரசு ஓட்டம் கண்ட திண் திறலாளர் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே (6)
Our father who is the earth, the sun, the moon and all other things and has taken the forms of a fish, a dwarf, a swa…
குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு நின்ற வெம் சுடரும் அல்லா நிலைகளும் ஆய எந்தை- மன்றமும் வயலும் காவும் மாடமும் மணங் கொண்டு எங்கும் தென்றல் வந்து உலவும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே (7)
Our father who is the mountains, the sky, the earth, cool water, the moon, the hot sun and all other things stays in …
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத் தரணி ஓம்பும் பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களும் ஆய எந்தை- பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாய செங் கயல் உகளும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே (8)
Our father who is doubt, bravery, lies and truth, the cloud that nourishes the earth and all other things stays in Th…
பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பம்-தானும் கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய எந்தை- மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர்த் திருமணிக்கூடத்தானே (9)
Our father who is sin, dharma, moksha, happiness, sorrow, anger, compassion and all good qualities stays in Thirumaṇk…
திங்கள் தோய் மாட நாங்கூர்த் திருமணிக்கூடத்தானை மங்கையர் தலைவன் வண் தார்க் கலியன் வாய் ஒலிகள் வல்லார் பொங்கு நீர் உலகம் ஆண்டு பொன்-உலகு ஆண்டு பின்னும் வெம் கதிர்ப் பரிதி வட்டத்து ஊடு போய் விளங்குவாரே (10) ---------- 36. திருநாங்கூர்க் காவளம்பாடி
Kaliyan, the chief of Thirumangai adorned with beautiful garlands composed ten pāsurams praising the god of Thirumaṇi…
தா அளந்து உலகம் முற்றும் தட மலர்ப் பொய்கை புக்கு நா வளம் நவின்று அங்கு ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் மா வளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக் காவளம்பாடி மேய கண்ணனே களைகண் நீயே (1)
O Kaṇṇā, you measured the earth and the sky with your feet at the sacrifice of king Mahabali. You came to the large b…
மண் இடந்து ஏனம் ஆகி மாவலி வலி தொலைப்பான் விண்ணவர் வேண்டச் சென்று வேள்வியில் குறை இரந்தாய் துண் என மாற்றார்-தம்மைத் தொலைத்தவர் நாங்கை மேய கண்ணனே காவளம் தண் பாடியாய் களைகண் நீயே (2)
O Kaṇṇā, as a boar, you split open the earth and brought the earth goddess from the underworld. You went to the sacri…
உருத்து எழு வாலி மார்வில் ஒரு கணை உருவ ஓட்டி கருத்து உடைத் தம்பிக்கு இன்பக் கதிர் முடி அரசு அளித்தாய் பருத்து எழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகும் நாங்கைக் கருத்தனே காவளம் தண் பாடியாய் களைகண் நீயே (3)
You shot your arrow through Vāli’s chest when he came to fight with you angrily and killed him and you gave the kingd…
முனைமுகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு அனையவற்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே சுனைகளில் கயல்கள் பாயச் சுரும்பு தேன் நுகரும் நாங்கைக் கனை கழல் காவளம் தண் பாடியாய் களைகண் நீயே (4)
You fought with the Rākshasa Rāvaṇa, cut off his ten heads and gave the kingdom of Lanka to his brother Vibhishana, g…
பட அரவு உச்சி-தன்மேல் பாய்ந்து பல் நடங்கள்செய்து மடவரல் மங்கை-தன்னை மார்வகத்து இருத்தினானே தட வரை தங்கு மாடத் தகு புகழ் நாங்கை மேய கடவுளே காவளம் தண் பாடியாய் களைகண் நீயே (5)
O lord, you climbed on the head of the snake Kālingan and danced on it and you embrace beautiful Lakshmi on your ches…
மல்லரை அட்டு மாள கஞ்சனை மலைந்து கொன்று பல் அரசு அவிந்து வீழப் பாரதப் போர் முடித்தாய் நல் அரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய கல் அரண் காவளம் தண் பாடியாய் களைகண் நீயே (6)
You killed Kamsan and fought with the wrestlers he sent and you made the kingdom of the Kauravas fall and conquered t…
மூத்தவற்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்தருளி மாத்து அமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஒசித்தாய் பூத்து அமர் சோலை ஓங்கி புனல் பரந்து ஒழுகும் நாங்கைக் காத்தனே காவளம் தண் பாடியாய் களைகண் நீயே (7)
O lord, you went to Duryodhana's assembly as a messenger and asked for a part of the kingdom for the Pandavas. You ki…
ஏவு இளங் கன்னிக்கு ஆகி இமையவர்-கோனைச் செற்று கா வளம் கடிது இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய் பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக் காவளம்பாடி மேய கண்ணனே களைகண் நீயே (8)
You went to Indra’s world, conquered Indra and brought the Karpaga tree for your young wife Rukmani. You stay in Kava…
சந்தம் ஆய் சமயம் ஆகி சமய ஐம் பூதம் ஆகி அந்தம் ஆய் ஆதி ஆகி அரு மறை-அவையும் ஆனாய் மந்தம் ஆர் பொழில்கள்தோறும் மட மயில் ஆலும் நாங்கைக் கந்தம் ஆர் காவளம் தண் பாடியாய் களைகண் நீயே (9)
O lord, you are the beginning, the end, the sky, wind, water, fire and religion, the rhythm in music and all the wond…
மா வளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கைக் காவளம்பாடி மேய கண்ணனைக் கலியன் சொன்ன பா வளம் பத்தும் வல்லார் பார்மிசை அரசர் ஆகிக் கோ இள மன்னர் தாழக் குடை நிழல் பொலிவர்-தாமே (10) --------- 37. திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்
The poet Kaliyan composed ten pāsurams on Kaṇṇan, the god of Kāvalambādi in Nāngai where Vediyars skilled in the Veda…
கண் ஆர் கடல்போல் திருமேனி கரியாய் நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த் திண் ஆர் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள் அண்ணா அடியேன் இடரைக் களையாயே (1)
You, the highest one with a divine body that is dark as the wide ocean stay in Thiruveḷḷakkuḷam temple in Nāngur surr…
கொந்து ஆர் துளவ மலர் கொண்டு அணிவானே நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச் செந்தாமரை நீர்த் திருவெள்ளக்குளத்துள் எந்தாய் அடியேன் இடரைக் களையாயே (2)
O father, adorned with a thulasi garland strung together with bunches of flowers you stay in Thiruveḷḷakkuḷam temple …
குன்றால் குளிர் மாரி தடுத்து உகந்தானே நன்று ஆய பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச் சென்றார் வணங்கும் திருவெள்ளக்குளத்துள் நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே (3)
O Thirumāl, you carried Govardhana mountain as an umbrella and protected the cows from the cold rain. You, the tall o…
கான் ஆர் கரிக் கொம்பு-அது ஒசித்த களிறே நானாவகை நல்லவர் மன்னிய நாங்கூர்த் தேன் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள் ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே (4)
Strong as an elephant, you broke the tusks of the forest elephant Kuvalayābeeḍam. You stay in Thiruveḷḷakkulam temple…
வேடு ஆர் திருவேங்கடம் மேய விளக்கே நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்ச் சேடு ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய் பாடாவருவேன் வினை ஆயின பாற்றே (5)
O lord who shine as a light on the Thiruvenkaṭam hills, you stay in the Thiruveḷḷakkuḷam temple in Nāngur surrounded …
கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய் நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர்ச் செல்வா திருவெள்ளக்குளத்து உறைவானே எல்லா இடரும் கெடுமாறு அருளாயே (6)
You who happily built a bridge of stones to go to Lanka stay in the Thiruveḷḷakkuḷam temple in Nāngur where many Vedi…
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர்-கோவே நால் ஆகிய வேதியர் மன்னிய நாங்கூர்ச் சேல் ஆர் வயல் சூழ் திருவெள்ளக்குளத்துள் மாலே என வல் வினை தீர்த்தருளாயே (7)
O Thirumāl, the king of the cowherds, who grazed the cows holding a stick, you stay in the Thiruveḷḷakkuḷam temple in…
வாராகம்-அது ஆகி இம் மண்ணை இடந்தாய் நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச் சீர் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள் ஆராஅமுதே அடியேற்கு அருளாயே (8)
You, Nārāyaṇan, who took the form of a boar and split open the earth stay in the Thiruveḷḷakkuḷam temple in Nāngur su…
பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா நா ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த் தேவா திருவெள்ளக்குளத்து உறைவானே ஆ ஆ அடியான் இவன் என்று அருளாயே (9)
You, the divine one, embracing on your chest the beautiful Lakshmi, stay in the Thiruveḷḷakkulam temple in Nāngur whe…
நல் அன்பு உடை வேதியர் மன்னிய நாங்கூர்ச் செல்வன் திருவெள்ளக்குளத்து உறைவானை கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை வல்லர் என வல்லவர் வானவர்-தாமே (10) ----------- 38. திருநாங்கூர்ப் பார்த்தன்பள்ளி
Kaliyan with arms stronger than mountains composed a garland of ten pāsurams on the dear one of the prosperous Thiruv…
கவள யானைக் கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர் குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும் தவள மாடம் நீடு நாங்கைத் தாமரையாள் கேள்வன் என்றும் பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (1)
My daughter says, “He is Kaṇṇan, the king whose body has the color of a dark cloud or a kuvalai flower, who broke the…
கஞ்சன் விட்ட வெம் சினத்த களிறு அடர்த்த காளை என்றும் வஞ்சம் மேவி வந்த பேயின் உயிரை உண்ட மாயன் என்றும் செஞ்சொலாளர் நீடு நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி பஞ்சி அன்ன மெல் அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே (2)
My daughter sings his praise and says, “Strong as a bull, he defeated the elephant Kuvalayābeeḍam sent by Kamsan, and…
அண்டர்-கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன் என்றும் நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும் வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை மன்னும் மாயன் என்று என்று ஓதி- பண்டுபோல் அன்று-என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (3)
My daughter says, “The lord of Indra, the king of the gods. the dear one, the everlasting Māyan, who is sought always…
கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்- கோல் வளையார்-தம் முகப்பே மல்லை முந்நீர் தட்டு இலங்கை கட்டு அழித்த மாயன் என்றும் செல்வம் மல்கு மறையோர் நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி பல் வளையாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (4)
My daughter’s bangles are loose and she is weak. She says, “The Māyan who destroyed the forts of Lanka surrounded by …
அரக்கர் ஆவி மாள அன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற குரக்கரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை நெருக்கும் மாடம் நீடு நாங்கை நின்மலன்-தான் என்று என்று ஓதி பரக்கழிந்தாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (5)
My daughter says, “The faultless one became the king of the monkeys, went to Lanka surrounded by the deep ocean and d…
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ் வேலை அன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து சேல் உகளும் வயல் கொள் நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி பாலின் நல்ல மென்-மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே (6)
My daughter says, “The god of the gods with the beautiful color of the dark ocean who swallowed all the worlds and sp…
நாடி என்-தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும் சிறை கொள் வண்டு சேடு உலவு பொழில் கொள் நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி பாடகம் சேர் மெல்-அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே (7)
My daughter says, “The precious god of the gods cannot be found even by the Vedas that search for him, but he came an…
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா நிலவும் ஆழிப் படையன் என்றும் நேசன் என்றும் தென் திசைக்குத் திலதம் அன்ன மறையோர் நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி பலரும் ஏச என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே (8)
My daughter says, “The matchless lord who is praised and loved by the whole world carries a shining discus and cannot…
கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும் எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழ் உலகுக்கு ஆதி என்றும் திண்ண மாடம் நீடு நாங்கைத் தேவ-தேவன் என்று என்று ஓதி பண்ணின் அன்ன மென்-மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே (9)
My daughter says, “Kaṇṇan, is the joy of the gods and the ancient one of all the seven worlds. All the gods sprinkle …
பாருள் நல்ல மறையோர் நாங்கைப் பார்த்தன்பள்ளிச் செங் கண் மாலை வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத் தாய் மொழிந்த மாற்றம் கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ்ப் பத்தும் வல்லார் ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே (10) ------------ 39. திருவிந்தளூர்
Kaliyan, the poet with a sharp spear, composed ten Tamil pāsurams describing how a mother spoke of the love of her da…
நும்மைத் தொழுதோம் நும்-தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம் இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே எம்மைக் கடிதாக் கருமம் அருளி ஆ ஆ என்று இரங்கி நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே? (1)
We, your slaves and servants, worship you, our father who stay in Indalur. We have enjoyed all the pleasures of this …
சிந்தை-தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என் எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே (2)
You, our father, the god of Indalur are a treaure that never disappears from our hearts. You are our sweet god of Thi…
பேசுகின்றது இதுவே-வையம் ஈர் அடியால் அளந்த மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர்!-உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே (3)
This is how I praise you, “You with hair adorned with garlands swarming with bees measured the world with your two fe…
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம் பெருமான் வாசி வல்லீர் இந்தளூரீர்!-வாழ்ந்தே போம் நீரே (4)
We praise you, saying we long to see you, but you do not show us your grace, and we wander through all lands as your …
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் திசையும் இரு நிலனும் ஆய் எம் பெருமான் ஆகி நின்றால் அடியோம் காணோமால் தாய் எம் பெருமான் தந்தை தந்தை ஆவீர் அடியோமுக்- கே எம் பெருமான் அல்லீரோ நீர்?-இந்தளூரீரே (5)
Even though you, the dear lord, are fire, water, all the directions and this large earth, we, your slaves, cannot see…
சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர் அடியேனை நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு-இவ் உலகத்தில் எல்லாம் அறிவீர்-ஈதே அறியீர் இந்தளூரீரே (6)
I won’t go away without telling you what I think of you. You think of me the same as you think of your other devotees…
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மைப் பணி அறியா வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே காட்டீர் ஆனீர் நும்-தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த நாட்டே வந்து தொண்டர் ஆன நாங்கள் உய்யோமே? (7)
We have caught hold of you so we can serve you, but you don’t tell us how to serve you. Should we have to tell that y…
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால்- பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே (8)
From ancient times you have had the white color of milk, and always you have the color of the dark clouds. If someone…
எந்தை தந்தை தம்மான் என்று என்று எமர் ஏழ் அளவும் வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால் சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே (9)
My father, his father, his father, and all for seven generations were your devotees and worshiped you. You try to see…
ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானைக் கார் ஆர் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலிசெய்த சீர் ஆர் இன் சொல் மாலை கற்றுத் திரிவார் உலகத்தில் ஆர் ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே (10) ---------- 40. திருவெள்ளியங்குடி
Kaliyan, the chief of Thirumangai composed a sweet garland of ten pāsurams praising our father, the god of Indalur su…
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால் ஆல் இலை வளர்ந்த எம் பெருமான் பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில்- காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்கும் ஆம் பொழில்களின் நடுவே வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால்- திருவெள்ளியங்குடி-அதுவே (1)
Our dear lord who ate the butter that the cowherd women gave him, slept on a banyan leaf at the end of the eon, drank…
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர்-தம் சிரங்களை உருட்டி கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவக் கண்ணனார் கருதிய கோயில்- பூ நிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி பொதும்பிடை வரி வண்டு மிண்டி தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும்- திருவெள்ளியங்குடி-அதுவே (2)
Our dear lord, the cloud-colored Kaṇṇan who grazed the cows, churned the milky ocean for the gods, and fought with th…
கடு விடம் உடைய காளியன் தடத்தைக் கலக்கி முன் அலக்கழித்து அவன்-தன் படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப் பல் நடம் பயின்றவன் கோயில்- பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய் அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும்- திருவெள்ளியங்குடி-அதுவே (3)
Our lord who entered the pond and danced on the head of the poisonous snake Kaliyan stirring up the water and afflict…
கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த காளமேகத் திரு உருவன் பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில்- துறைதுறைதோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென்பால் செறி மணி மாடக் கொடி கதிர் அணவும்- திருவெள்ளியங்குடி-அதுவே (4)
Our dark cloud-colored lord with an eagle banner who protected the cows, fought with Kamsan and sleeps on the milky o…
பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து பாரதம் கையெறிந்து ஒருகால் தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த செங் கண் மால் சென்று உறை கோயில்- ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற- திருவெள்ளியங்குடி-அதுவே (5)
The lovely-eyed Thirumāl who swallowed the whole earth and spat it out and fought in the Bharatha war and drove the c…
காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உற கடல் அரக்கர்-தம் சேனை கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த கோல வில் இராமன்-தன் கோயில்- ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ்- திருவெள்ளியங்குடி-அதுவே (6)
Our god Rama who shot cruel arrows from his beautiful bow at the army of the Rakshasas of Lanka surrounded with ocean…
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு திக்கு உற வளர்ந்தவன் கோயில்- அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்று அவை அழைப்ப வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான்- திருவெள்ளியங்குடி-அதுவே (7)
Our god took the form of a dwarf, went to the sacrifice of the Asuran king Mahabali who thought he could do anything …
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்- தம் பெருமானை அன்று அரி ஆய் மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்- படியிடை மாடத்து அடியிடைத் தூணில் பதித்த பல் மணிகளின் ஒளியால் விடி பகல் இரவு என்று அறிவு-அரிது ஆய- திருவெள்ளியங்குடி-அதுவே (8)
Our lord Māyan who took the form of a lion and split open the chest of Hiraṇyan, the king of the Asurans when he vexe…
குடி குடி ஆகக் கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த அடியவர்க்கு அருளி அரவு-அணைத் துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில்- கடி உடைக் கமலம் அடியிடை மலர கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும் வயல்-வெள்ளியங்குடி-அதுவே (9)
Our lord who rests on a snake bed and gives his grace to his devotees as the gods in the sky join together, chatterin…
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை வண்டு அறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர்-இக் குரை கடல் உலகே (10) ---------- 41. திருப்புள்ளம்பூதங்குடி
Kaliyan with a strong spear, the chief of Thirumangai where bees swarm in the groves, composed ten Tamil pāsurams pra…
அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான் என்னை ஆள் உடையான் குறிய மாணி உரு ஆய கூத்தன் மன்னி அமரும் இடம்- நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்- புள்ளம்பூதங்குடி-தானே (1)
The lord who is a dancer, my ruler and the ruler of the whole world, is hard for anyone to know. The lord who went to…
கள்ளக் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து பொள்ளைக் கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதன் இடம்- பள்ளச் செறுவில் கயல் உகள பழனக் கழனி-அதனுள் போய புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்- புள்ளம்பூதங்குடி-தானே (2)
Our faultless lord, the sweet thief who went as a dwarf to the king Mahabali, cheated him and took the earth and sky …
மேவா அரக்கர் தென் இலங்கை வேந்தன் வீயச் சரம் துரந்து மா வாய் பிளந்து மல் அடர்த்து மருதம் சாய்த்த மாலது இடம்- கா ஆர் தெங்கின் பழம் வீழ கயல்கள் பாய குருகு இரியும் பூ ஆர் கழனி எழில் ஆரும்- புள்ளம்பூதங்குடி-தானே (3)
Our lord Thirumāl who shot his arrows and defeated the king of southern Lanka and the Rākshasas, killed the Asuran Ke…
வெற்பால் மாரி பழுது ஆக்கி விறல் வாள் அரக்கர் தலைவன்-தன் வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும் துணித்த வல் வில் இராமன் இடம்- கற்பு ஆர் புரிசைசெய் குன்றம் கவின் ஆர் கூடம் மாளிகைகள் பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்- புள்ளம்பூதங்குடி-தானே (4)
Our dear god, who fought with the heroic Rakshasa Rāvaṇa, king of Lanka with strong arrows, and cut off his twenty mi…
மை ஆர் தடங் கண் கருங் கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர் நெய் ஆர் பாலோடு அமுது செய்த நேமி அங் கை மாயன் இடம்- செய் ஆர் ஆரல் இரை கருதிச் செங் கால் நாரை சென்று அணையும் பொய்யா நாவின் மறையாளர்- புள்ளம்பூதங்குடி-தானே (5)
Our lord Māyan with a discus in his hand who stole the yogurt, ghee and milk hidden by Yashoda, the dark-haired, larg…
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா மன்னு சினத்த மழ விடைகள் ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்- மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல் வரி வண்டு இசை பாட புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்- புள்ளம்பூதங்குடி-தானே (6)
Our lord Thirumāl who fought and killed the seven angry bulls to marry soft Nappinnai with round arms like bamboo and…
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து சடையான் ஓட அடல் வாணன் தடந் தோள் துணித்த தலைவன் இடம்- குடியா வண்டு கள் உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும புடை ஆர் கழனி எழில் ஆரும்- புள்ளம்பூதங்குடி-தானே (7)
Our chief, our lord who carried Govardhana mountain as an umbrella to protect the cows from the storm, fought with he…
கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த எந்தை இடம்- மறையால் முத்தீ-அவை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் பொறையால் மிக்க அந்தணர் வாழ்- புள்ளம்பூதங்குடி-தானே (8)
Our father who drove the chariot for Arjuna in the Bharatha war and destroyed the heroic Kauravas whose long spears w…
துன்னி மண்ணும் விண் நாடும் தோன்றாது இருள் ஆய் மூடிய நாள் அன்னம் ஆகி அரு மறைகள் அருளிச்செய்த அமலன் இடம்- மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும் பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்- புள்ளம்பூதங்குடி-தானே (9)
Our faultless lord who took the form of a fish, saved the Vedas from the flood and then, as a swan, taught them to th…
கற்றா மறித்து காளியன்-தன் சென்னி நடுங்க நடம்பயின்ற பொன் தாமரையாள்-தன் கேள்வன் புள்ளம்பூதங்குடி-தன்மேல் கற்றார் பரவும் மங்கையர்-கோன் கார் ஆர் புயல்கைக் கலிகன்றி சொல்- தான் ஈர் ஐந்து இவை பாட சோர நில்லா-துயர்-தாமே (10) --------- 42. திருக்கூடலூர்
Kaliyan, the chief of Thirumangai, as generous as a dark cloud and praised by the learned ones, composed these ten pā…
செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை பெறும் தண் கோலம் பெற்றார் ஊர்போல்- நறும் தண் தீம் தேன் உண்ட வண்டு குறிஞ்சி பாடும்-கூடலூரே (2)
Kudalur where beautiful girls with fingers as lovely as kāndal buds wear soft dresses and spread the fragrance from t…
பிள்ளை உருவாய்த் தயிர் உண்டு அடியேன் உள்ளம் புகுந்த ஒருவர் ஊர்போல்- கள்ள நாரை வயலுள் கயல்மீன் கொள்ளை கொள்ளும்-கூடலூரே (3)
Kuḍalur where bees drink sweet fragrant honey and sing kurinji songs is the place of the beautiful god who fought wit…
கூற்று ஏர் உருவின் குறள் ஆய் நிலம் நீர் ஏற்றான் எந்தை பெருமான் ஊர்போல்- சேற்று ஏர் உழவர் கோதைப் போது ஊண் கோல் தேன் முரலும்-கூடலூரே (4)
Kuḍalur where the cheating cranes steal kāyal fish in the fields is the place of the god who ate yogurt when he was a…
தொண்டர் பரவ சுடர் சென்று அணவ அண்டத்து அமரும் அடிகள் ஊர்போல்- வண்டல் அலையுள் கெண்டை மிளிர கொண்டல் அதிரும்-கூடலூரே (5)
Kuḍalur where the kol bees sing and drink honey from the flowers that adorn the hair of the farmers plowing the wet l…
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் துக்கம் துடைத்த துணைவர் ஊர்போல்- எக்கல் இடு நுண் மணல்மேல் எங்கும் கொக்கின் பழம் வீழ்-கூடலூரே (6)
Kuḍalur where the clouds thunder and kendai fish frolic and glisten in the water in the flourishing fields is the pla…
கருந் தண் கடலும் மலையும் உலகும் அருந்தும் அடிகள் அமரும் ஊர்போல-் பெருந் தண் முல்லைப்பிள்ளை ஓடிக் குருந்தம் தழுவும்-கூடலூரே (7)
Kuḍalur where mangoes fall from their trees everywhere onto mounds of sand is the place of the god who aided Shiva, t…
கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர்- மலை வாழ் எந்தை மருவும் ஊர்போல்- இலை தாழ் தெங்கின் மேல்நின்று இளநீர்க் குலை தாழ் கிடங்கின்-கூடலூரே (8)
Kuḍalur where cool tender jasmine plants grow abundantly and embrace kurundam trees is the place of him who swallowed…
பெருகு காதல் அடியேன் உள்ளம் உருகப் புகுந்த ஒருவர் ஊர் போல்- அருகு கைதை மலர கெண்டை குருகு என்று அஞ்சும்-கூடலூரே (9)
Kuḍalur where trees with tender coconuts bend down to the earth is where the god of Thiruneermalai stays and stags em…
காவிப் பெருநீர் வண்ணன் கண்ணன் மேவித் திகழும் கூடலூர்மேல் கோவைத் தமிழால் கலியன் சொன்ன பாவைப் பாட பாவம் போமே (10) ---------- 43. திருவெள்ளறை
Kuḍalur where a kendai fish goes near a thazhai flower and is frightened that it might be a crane is the place of the…
Kaiyan composed ten pāsurams in Tamil on Kuḍalur where Kaṇṇan, colored like the ocean or a kāvi flower, stays and shi…
வென்றி மா மழு ஏந்தி முன் மண்மிசை மன்னரை மூவெழுகால் கொன்ற தேவ!-நின் குரை கழல் தொழுவது ஓர் வகை எனக்கு அருள்புரியே- மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தி தென்றல் மா மணம் கமழ்தர வரு திரு வெள்ளறை நின்றானே (1)
O divine lord who came as Parasuraman carrying a mazhu and conquered many kings for twenty-seven generations, you sta…
வசை இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் இசை கொள் வேத-நூல் என்று இவை பயந்தவ னே!-எனக்கு அருள்புரியே- உயர் கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின்வாய திசை எலாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே (2)
You who, taking the form of a horse, brought the Vedas and taught them to the sages when Nānmuhan, seated on a lotus …
வெய்யன் ஆய் உலகு ஏழ் உடன் நலிந்தவன் உடலகம் இரு பிளவாக் கையில் நீள் உகிர்ப் படை-அது வாய்த்தவ னே!-எனக்கு அருள்புரியே- மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண் தடத்திடைக் கமலங்கள் தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திரு வெள்ளறை நின்றானே (3)
You who split open the chest of the cruel Hiraṇyan with your long claws when he afflicted the people of all the seven…
வாம் பரி உக மன்னர்-தம் உயிர் செக ஐவர்கட்கு அரசு அளித்த காம்பின் ஆர் திரு வேங்கடப் பொருப்ப!-நின் காதலை அருள் எனக்கு- மாம் பொழில் தளிர் கோதிய மடக் குயில் வாய்-அது துவர்ப்பு எய்த தீம் பலங்கனித் தேன்-அது நுகர் திரு வெள்ளறை நின்றானே (4)
You, the god of the Thiruvenkaṭam hills filled with bamboo, who drove the chariot for Arjuna in the Bharatha war and …
மான வேல் ஒண் கண் மடவரல் மண்-மகள் அழுங்க முந்நீர்ப் பரப்பில் ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவ னே!-எனக்கு அருள்புரியே- கான மா முல்லை கழைக் கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற தேனின் வாய் மலர் முருகு உகுக்கும் திரு வெள்ளறை நின்றானே (5)
You who as a boar split open the earth, went beneath the ocean and brought up the earth goddess with beautiful spear-…
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ அமுதினைக் கொடுத்தளிப்பான் அங்கு ஓர் ஆமை-அது ஆகிய ஆதி!-நின் அடிமையை அருள் எனக்கு- தங்கு பேடையோடு ஊடிய மதுகரம் தையலார் குழல் அணைவான் திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திரு வெள்ளறை நின்றானே (6)
You, the ancient lord took the form of a turtle and helped the gods and the Asurans churn the milky ocean to get the …
ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி அரக்கன்-தன் சிரம் எல்லாம் வேறு வேறு உக வில்-அது வளைத்தவ னே!-எனக்கு அருள்புரியே- மாறு இல் சோதிய மரகதப் பாசடைத் தாமரை மலர் வார்ந்த தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல் திரு வெள்ளறை நின்றானே (7)
You who bent your bow and cut down the ten heads of the Rākshasa Rāvaṇa adorned with long crowns stay in Thiruveḷḷaṛa…
முன் இவ் ஏழ் உலகு உணர்வு இன்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவ னே!-எனக்கு அருள்புரியே- மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடைச் சுரும்பு இனங்கள் தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திரு வெள்ளறை நின்றானே (8)
When the world grew dark and everyone became dull-witted, and the gods in the sky worshiped you asking you to give th…
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல்-இடம் முழுதினையும் பாங்கினால் கொண்ட பரம!-நின் பணிந்து எழு வேன் எனக்கு அருள்புரியே- ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி வண்டு உழிதர மா ஏறித் தீம் குயில் மிழற்றும் படப்பைத் திரு வெள்ளறை நின்றானே (9)
You, the highest one, who went to the sacrifice of king Mahabali, begged him for three feet of land and then cleverly…
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் திரு வெள்ளறை-அதன் மேய அஞ்சனம் புரையும் திரு உருவனை ஆதியை அமுதத்தை நஞ்சு உலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐஇரண்டும் எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் இமை யோர்க்கு அரசு ஆவர்களே (10) --------- 44. திருவரங்கம்: 1
Kaliyan, the poet skilled at throwing poisoned spears in battle, composed ten pāsurams on the ancient god, the nectar…
உந்திமேல் நான்முகனைப் படைத்தான் உலகு உண்டவன் எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்- சந்தினோடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ் தென் அரங்கமே (1)
Our father, the father of the gods who created Nānmuhan on his navel and swallowed all the seven worlds stays in Then…
வையம் உண்டு ஆல் இலை மேவும் மாயன் மணி நீள் முடி பை கொள் நாகத்து அணையான் பயிலும் இடம் என்பரால்- தையல் நல்லார் குழல் மாலையும் மற்று அவர் தட முலைச் செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென் அரங்கமே (2)
Our Māyan who swallowed the whole world and slept on a banyan leaf and who rests on the ocean on the snake Adisesha t…
பண்டு இவ் வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர கொண்ட ஆழித் தடக் கைக் குறளன் இடம் என்பரால்- வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே (3)
Our lord who went as a dwarf in ancient times, took water in his large hands from Mahabali and measured the world and…
விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட வளைத்த வல் வில் தடக்கை-அவனுக்கு இடம் என்பரால்- துளைக் கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன ்திளைக்கும் செல்வப் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே (4)
Our god who as Rama bent his bow and destroyed Lanka, the kingdom of the Rakshasa king Ravaṇa with a heroic sword and…
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான் புக அம்பு-தன்னால் முனிந்த அழகன் இடம் என்பரால்- உம்பர்-கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நல ்செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே (5)
The handsome Rama who grew angry, bent his bow, and fought and sent to the sky the Rakshasa Rāvaṇa, the beloved husba…
கலை உடுத்த அகல் அல்குல் வன் பேய் மகள் தாய் என முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழ் இடம் என்பரால்- குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்து உந்தி முன் அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே (6)
Kaṇṇan who drank milk from the terrible devil Putanā and killed her after she had come wearing a lovely garment aroun…
கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால் துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழ் இடம் என்பரால்- மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மா மறையோர் செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும் தென் அரங்கமே (7)
Our god who conquered Kamsan and the cruel wrestlers with his shining discus and defeated Sakaṭāsuran when he came as…
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய் தானும்ஆய தரணித் தலைவன் இடம் என்பரால்- வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி வணங்கும் நல்தேனும் பாலும் கலந்தன்னவர் சேர் தென் அரங்கமே (8)
The matchless lord of the earth who took the form of a boar, fish, turtle, man-lion and a dwarf stays in Thennarangam…
சேயன் என்றும் மிகப் பெரியன் நுண் நேர்மையன் ஆய இம் மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால்- வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து ஆர் புனல் காவிர ஆய பொன் மா மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே (9)
The god whom people praise saying, “He is the greatest god. He is far from our eyes, and he is forthright and imparti…
அல்லி மாதர் அமரும் திரு மார்வன் அரங்கத்தைக் கல்லின் மன்னு மதிள் மங்கையர்-கோன் கலிகன்றி சொல்நல் இசை மாலைகள் நால் இரண்டும் இரண்டும் உடன் வல்லவர்-தாம் உலகு ஆண்டு பின் வான் உலகு ஆள்வரே (10) ---- 45. திருவரங்கம்: 2
Kaliyan, the chief of Thirumangai surrounded by walls stronger than mountains composed ten pāsurams on the god on who…
வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால் மருவாளால் என் குடங்கால் வாள் நெடுங் கண் துயில் மறந்தாள்-வண்டு ஆர் கொண்டல் உருவாளன் வானவர்-தம் உயிராளன் ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட திருவாளன் என் மகளைச் செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே? (1)
Her mother says, “My daughter never used to worry about anything. Now she worries always and says ‘O Venkaṭam, O Venk…
கலை ஆளா அகல் அல்குல் கன வளையும் கை ஆளா-என் செய்கேன் நான்? விலை ஆளா அடியேனை வேண்டுதியோ? வேண்டாயோ? என்னும்-மெய்ய மலையாளன் வானவர்-தம் தலையாளன் மராமரம் ஏழ் எய்த வென்றிச் சிலையாளன் என் மகளைச் செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே? (2)
Her mother says, “My daughter’s dress has become loose around her waist. The bangles on her hand slide down. She says…
மான் ஆய மென் நோக்கி வாள் நெடுங் கண் நீர் மல்கும் வளையும் சோரும் தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின் திறம் பேசி உறங்காள் காண்மின்- கான்-ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற ஆன்-ஆயன் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே (3)
Her mother says, “O friends, my daughter has the soft eyes of a doe. Her long sword-like eyes are filled with tears. …
தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத் தோடு அணையாள் தட மென் கொங்கை- யே ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்- பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட பெரு வயிற்றன் பேசில் நங்காய் மா மாயன் என் மகளைச் செய்தனகள் மங்கைமீர் மதிக்கிலேனே (4)
Her mother says, “My daughter doesn’t listen to me, her mother. She doesn’t play with her friends. She doesn’t decora…
பூண் முலைமேல் சாந்து அணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள் ஏண் அறியாள் எத்தனையும் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்- நாள் மலராள் நாயகன் ஆய் நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் (5)
Her mother says, “She doesn’t decorate her breasts with sandal paste. She doesn’t put kohl on her eyes that are like …
தாது ஆடு வன மாலை தாரானோ? என்று என்றே தளர்ந்தாள் காண்மின் யாதானும் ஒன்று உரைக்கில் எம் பெருமான் திருவரங்கம் என்னும்-பூமேல் மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன் மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற தூதாளன் என் மகளைச் செய்தனகள் எங்ஙனம் நான் சொல்லுகேனே? (6)
Her mother says, “She keeps saying, ‘Won’t he give me his beautiful fresh pollen-filled garland?’ She wants it so muc…
வார் ஆளும் இளங் கொங்கை வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள் எண்ணில் பேராளன் பேர் அல்லால் பேசாள் இப் பெண் பெற்றேன் என் செய்கேன் நான்? தார் ஆளன் தண் குடந்தை நகர் ஆளன் ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த தேர் ஆளன் என் மகளைச் செய்தனகள் எங்ஙனம் நான் செப்புகேனே? (7)
Her mother says, “She doesn’t worry that her young breasts circled with a band have become pale. If she begins to say…
உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால் மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்- பிறவாத பேராளன் பெண் ஆளன் மண் ஆளன் விண்ணோர்-தங்கள் அறவாளன் என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே (8)
Her mother says, “Many people gossip about her. They say she doesn’t want to have any connection with her family. She…
பந்தோடு கழல் மருவாள் பைங் கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள் வந்தானோ திருவரங்கன்? வாரானோ? என்று என்றே வளையும் சோரும்- சந்தோகன் பௌழியன் ஐந் தழல் ஓம்பு தைத்திரியன் சாமவேதி அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள் அம்மனைமீர் அறிகிலேனே (9)
Her mother says, “She doesn’t want to play with balls and molucca beans. She doesn’t want to feed milk to her parrot.…
சேல் உகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத் தாய் மொழிந்த-அதனை நேரார் கால வேல் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார் மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய் பொன்-உலகில் வாழ்வர்-தாமே (10) ---------- 46. திருவரங்கம்: 3
Kaliyan with a sharp spear, who is Yama for his enemies, composed ten Tamil poems about how a mother worries about he…
கைம் மான மழ களிற்றை கடல் கிடந்த கருமணியை மைம் மான மரகதத்தை மறை உரைத்த திருமாலை எம்மானை எனக்கு என்றும் இனியானை பனி காத்த அம்மானை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே (1)
In Thennarangam surrounded by the beautiful ocean I saw the lord who is as strong as an elephant, a dark emerald that…
பேரானை குறுங்குடி எம் பெருமானை திருத்தண்கால் ஊரானை கரம்பனூர் உத்தமனை முத்து இலங்கு கார் ஆர் திண் கடல் ஏழும் மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு ஆராது என்று இருந்தானைக் கண்டது-தென் அரங்கத்ே்\"த (2)
In Thennarangam I saw Thirumal, the lord of Thirukkuṛunguḍi, Thiruthaṇgā and the good lord of Thirukkarampanur who wa…
ஏன் ஆகி உலகு இடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும்தான் ஆய பெருமானை தன் அடியார் மனத்து என்றும் தேன் ஆகி அமுது ஆகித் திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால் ஆன்-ஆயன் ஆனானைக் கண்டது-தென் அரங்கத்தே (3)
In Thennarangam I saw the lord, a cowherd who took the form of a boar and split open the earth to bring the earth god…
வளர்ந்தவனைத் தடங் கடலுள் வலி உருவில் திரி சகடம் தளர்ந்து உதிர உதைத்தவனை தரியாது அன்று இரணியனைப் பிளந்தவனை பெரு நிலம் ஈர் அடி நீட்டிப் பண்டு ஒருநாள் அளந்தவனை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே (4)
In Thennaragam surrounded by the beautiful ocean I saw the lord who rests on Adisesha on the large ocean, kicked the …
நீர் அழல் ஆய் நெடு நிலன் ஆய் நின்றானை அன்று அரக்கன்- ஊர் அழலால் உண்டானை கண்டார் பின் காணாமே பேர் அழல் ஆய் பெரு விசும்பு ஆய் பின் மறையோர் மந்திரத்தின் ஆர் அழலால் உண்டானைக் கண்டது-தென் அரங்கத்தே (5)
The lord who is the ocean, fire and the big earth, burned Lanka, the kingdom of the Rākshasas, and swallowed the sacr…
தம் சினத்தைத் தவிர்த்து அடைந்தார் தவ நெறியை தரியாது கஞ்சனைக் கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை வெம் சினத்த கொடுந் தொழிலோன் விசை உருவை அசைவித்த அம் சிறைப் புள் பாகனை யான் கண்டது-தென் அரங்கத்தே (6)
In Thennarangam I saw the lord who is the Karpaga tree that gives whatever one wants, and the path of tapas for those…
சிந்தனையை தவநெறியை திருமாலை பிரியாது வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர் கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த அந்தணனை யான் கண்டது-அணி நீர்த் தென் அரங்கத்தே (7)
Devotees think only of Thirumal who is the path of tapas always and he has come to me and abides in my mind. The lord…
துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லாச் சமணர்க்கும் அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம் அனைக்கும் அமரர்க்கும் பிரானாரைக் கண்டது-தென் அரங்கத்தே (8)
I saw the highest lord in Thennarangam who does not give his grace to Buddhists with their orange clothes or to dirty…
பொய் வண்ணம் மனத்து அகற்றி புலன் ஐந்தும் செல வைத்து மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந் நின்ற வித்தகனை மை வண்ணம் கரு முகில்போல் திகழ் வண்ணம் மரகதத்தின் அவ் வண்ண வண்ணனை யான் கண்டது-தென் அரங்கத்தே (9)
I saw the dark cloud-colored lord of Thennarangam, a shining emerald, who has removed my false thoughts and makes me …
ஆ மருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானைக் காமரு சீர்க் கலிகன்றி ஒலிசெய்த மலி புகழ் சேர் நா மருவு தமிழ்-மாலை நால் இரண்டோடு இரண்டினையும் தாம் மருவி வல்லார்மேல் சாரா தீவினை தாமே (10) -------- 47. திருவரங்கம்: 4
Kaliyan the famous poet composed ten musical Tamil pāsurams praising the god of beautiful Thennarangam who lovingly g…
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும் கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும் அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்- அரங்க மா நகர் அமர்ந்தானே (1)
Our dear lord who is the ancient four Vedas, the sacrifice, question, answer and the meaning of all, shining fire, ab…
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண் இல் பல் குணங்களே இயற்ற தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப் பந்தமும் பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம் அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்- அரங்க மா நகர் அமர்ந்தானே (2)
The dear lord with the countless good qualities of Indra, Nānmuhan and Shiva, our father, mother, children, relatives…
மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவர் உலகும் துன்னு மா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி தொல்லை நான்மறைகளும் மறைய பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி பிறங்கு இருள் நிறம் கெட ஒருநாள் அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான் -அரங்க மா நகர் அமர்ந்தானே (3)
When the everlasting earth, the mountains, the oceans, the sky and the world of Danavas became dark without any light…
மா இருங் குன்றம் ஒன்று மத்து ஆக மாசுணம் அதனொடும் அளவி பா இரும் பௌவம் பகடு விண்டு அலற படு திரை விசும்பிடைப் படர சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாம் உடன் திசைப்ப ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்- அரங்க மா நகர் அமர்ந்தானே (4)
Using Mandara mountain as a churning stick and Vasuki the snake as a rope, when he churned the wave-filled milky ocea…
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்? -இரணியன் இலங்கு பூண் அகலம் பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து பொழிதரும் அருவி ஒத்து இழிய வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண் உறக் கனல் விழித்து எழுந்தது அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்- அரங்க மா நகர் அமர்ந்தானே (5)
How could the Asurans survive even if they wanted to? He took the form of a man-lion, went to Hiraṇyan and split open…
ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள் ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே ஆயிரம் சுடர் வாய் அரவு-அணைத் துயின்றான்- அரங்க மா நகர் அமர்ந்தானே (6)
The lord who rests in the middle of the ocean rolling with waves on the thousand-headed Adisesha as the gods praise h…
சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த கொடுமையின் கடு விசை அரக்கன் எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி வரி சிலை வளைய அடு சரம் துரந்து மறி கடல் நெறிபட மலையால் அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்- அரங்க மா நகர் அமர்ந்தானே (7)
When the Rākshasa Rāvaṇa took his wife Seetha with curling hair and a mouth sweet as a fruit, Rama suffered and angri…
ஊழி ஆய் ஓமத்து உச்சி ஆய் ஒருகால் உடைய தேர் ஒருவன் ஆய் உலகில் சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி பகலவன் ஒளி கெடப் பகலே ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்- அரங்க மா நகர் அமர்ந்தானே (8)
The god who is the eon, the lord of all the sacrifices and the lord of the sun that moves on a one-wheeled chariot, s…
பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய் ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய் மால் ஆய் ஆல் இலை வளர்ந்து மணி முடி வானவர்-தமக்குச சேயன் ஆய் அடியோர்க்கு அணியன் ஆய் வந்து என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும் ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் -அரங்க மா நகர் அமர்ந்தானே (9)
The lord who drank the milk from the devil Putana and killed her, the dark-colored god who swallowed all the worlds a…
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த அரங்க மா நகர் அமர்ந்தானை மன்னு மா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே (10) ----------- 48. திருவரங்கம்: 5
Kaliyan with a heroic spear, the chief of Thirumangai filled with beautiful, everlasting palaces, composed ten Tamil …
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட ஆழி வண்ண நின் அடி-இணை அடைந்தேன்- அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (1)
You did not consider that the boatman Guhan was poor and low-caste, or that he was not your relative, but gave your s…
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை உகந்து காதல் ஆதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று கோது இல் வாய்மையினாயொடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும ஆதல் வேண்டும் என்று அடி-இணை அடைந்தேன் -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (2)
You did not think Hanuman, the son of Vāyu, was born as a mere animal. You did not ignore him because he belonged to …
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற மற்று அது நின் சரண் நினைப்ப கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக் கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன அடியனேனும் வந்து அடி-இணை அடைந்தேன்- அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (3)
When Gajendra the elephant worshipped you with a lotus flower that bloomed in a lovely pond in a grove full of fragra…
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம் வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய் நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து வெம் சொலாளர்கள் நமன்-தமர் கடியர் கொடிய செய்வன உள அதற்கு அடியேன் அஞ்சி வந்து நின் அடி-இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (4)
When an eagle with beautiful wings, terrified of an angry poisonous snake, came to you and asked for refuge, you felt…
மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலர் அடி கண்ட மா மறையாளன் தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும ஆக வேண்டும் என்று அடி-இணை அடைந்தேன் -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (5)
A Brahmin skilled in the Vedas saw that the gods in the sky and the people of the earth could come, worship your soft…
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெம் கூற்றம்- தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய் தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் அன்னது ஆகும் என்று அடி-இணை அடைந்தேன்- அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (6)
When Markaṇḍeyan, the son of a sage and scholar of all the four Vedas, was terrified of cruel Yama and came to you as…
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன் காதல் என் மகன் புகல் இடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்- ஆதலால் வந்து உன் அடி-இணை அடைந்தேன்- அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (7)
A faultless Brahmin Sandipani who taught the Vedas to all and put the sacred thread on you lost his own son. When he …
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச் செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் ஆதலால் வந்து உன் அடி-இணை அடைந்தேன் -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (8)
A Brahmin who always recited the Vedas came to you and worshiped you, asking, “O my father, as soon as my wife gave b…
துளங்கு நீள் முடி அரசர்-தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச் செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன் -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (9)
Lovingly you gave your sweet grace to the heroic king of the Thondai country with a shining crown, staying with him f…
மாட மாளிகை சூழ் திருமங்கை -மன்னன் ஒன்னலர்-தங்களை வெல்லும் ஆடல்மா வலவன் கலிகன்றி அணி பொழில் திருவரங்கத்து அம்மானை நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த பாடல் பத்து-இவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாவே (10) ------- 49. திருப்பேர் நகர்
Kaliyan, the conquerer of many enemies, the king of Thirumangai surrounded by palaces, composed ten pāsurams on the g…
கை இலங்கு ஆழி சங்கன் கரு முகில் திரு நிறத்தன் பொய் இலன் மெய்யன்-தன் தாள் அடைவரேல் அடிமை ஆக்கும செய் அலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர் பை அரவு-அணையான் நாமம் பரவி நான் உய்ந்த ஆறே (1)
The dark colored lord who carries a shining discus and a conch in his hands, is not false but a true god and if you a…
வங்கம் ஆர் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும் அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை திங்கள் மா முகில் அணவு செறி பொழில் தென் திருப்பேர் எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்த ஆறே (2)
I have praised the names of Thirumāl, our father who swallowed the seven oceans, the mountains, the sky and all the b…
ஒருவனை உந்திப் பூமேல் ஓங்குவித்து ஆகம்-தன்னால் ஒருவனைச் சாபம் நீக்கி உம்பர் ஆள் என்று விட்டான் பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு-அணைமேல்கரு வரை வண்ணன்-தன் பேர் கருதி நான் உய்ந்த ஆறே (3)
He created Nānmuhan on a lotus on his navel, removed the curse of Shiva with blood from his body and told both of tho…
ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி உலகு எலாம் திரியும் ஈசன் ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான் தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப்பேர் வானவர்-தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்த ஆறே (4)
When Shiva, carrying the skull of Nānmuhan and wandering all over the world, asked the gods of sky to remove his curs…
வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர் புக்கு அரண் தந்தருளாய் என்ன பொன் ஆகத்தானை நக்கு அரி உருவம் ஆகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த சக்கரச் செல்வன் தென்பேர்த் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே (5)
When Hiraṇyan was afflicting the gods in the sky the gods went to Thirumāl and said to him, “You, the Māyan who split…
விலங்கலால் கடல் அடைத்து விளங்கிழை பொருட்டு வில்லால் இலங்கை மா நகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான் நலம் கொள் நான்மறை வல்லார்கள் ஓத்து ஒலி ஏத்தக் கேட்டு மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த ஆறே (6)
He built a bridge with stones to go to Lanka, shot arrows from his bow, cut off the twenty arms of Ravaṇa the king of…
வெண்ணெய்-தான் அமுதுசெய்ய வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி கண்ணி ஆர் குறுங் கயிற்றால் கட்ட வெட்டொன்று இருந்தான் திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் வேலை வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்த ஆறே (7)
When he stole butter, Yashoda the cowherdess was angry with him, hit him with her churning stick and tied him up with…
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள் கொம்பு அனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான் செம் பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும் எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்த ஆறே (8)
The lord was born in a cowherd village and raised there, and killed seven bulls to marry Nappinnai, as beautiful as a…
நால் வகை வேதம் ஐந்து வேள்வி ஆறு அங்கம் வல்லார் மேலை வானவரின் மிக்க வேதியர் ஆதி காலம் சேல் உகள் வயல் திருப்பேர்ச் செங் கண் மாலோடும் வாழ்வார் சீல மா தவத்தர் சிந்தை ஆளி என் சிந்தையானே (9)
I worship in my mind always the Vediyars of Thenthiruperur, who have done much tapas and are more skilled than the go…
வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு-அணையில் பள்ளி கொண்டு உறைகின்ற மாலைக் கொடி மதிள் மாட மங்கைத் திண் திறல் தோள் கலியன் செஞ்சொலால் மொழிந்த மாலை கொண்டு இவை பாடி ஆடக் கூடுவர்-நீள் விசும்பே (10) ---------- 50. திருநந்திபுரவிண்ணகரம்
Kaliyan with strong heroic arms, the king of Thirumangai where flags fly on the walls, composed a garland of pāsurams…
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு விசும்பும் அவை ஆய் மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை ஆய பெருமான் தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு தட மார்வர் தகைசேர் நாதன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் -நண்ணு மனமே (1)
Our lord is the faultless earth, fire, wind, water, and the high sky, our faultless mind, sleep and moksha. When he s…
உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழி யாமை முன நாள் மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன்-அவன் மேவும் நகர்-தான்- மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர் கிண்டி அதன்மேல் நைவளம் நவிற்று பொழில் நந்திபுரவிண்ணகரம் -நண்ணு மனமே (2)
O heart, there is a way you can be saved— this is what you must do. Think of Nandipuraviṇṇagaram where the lord stays…
உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும் ஒழி யாமை முன நாள் தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த தட மார்வர் தகை சேர் வம்பு மலர்கின்ற பொழில் பைம் பொன் வரு தும்பி மணி கங்குல் வயல் சூழ் நம்பன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் -நண்ணு மனமே (3)
The broad-chested god who filled his stomach, swallowing all the seven worlds, the world of the gods, the seven ocean…
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர் இறைகள்-அவை-நெறு-நெறு என வெறிய-அவர் வயிறு அழல நின்ற பெருமான் சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல அடிகொள் நெடு மா நறைசெய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம்- நண்ணு மனமே (4)
When the Asurans with shining teeth like crescent moons came to fight with the lord and said, “We will oppose him wit…
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என வந்த அசுரர் தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி ஆம் அளவு எய்தான் வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை அம்கை உடையான் நாளும் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்- நண்ணு மனமே (5)
When the Asurans thought, “We will fight with our enemies and burn all their places,” our god who carries a sword, a …
தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை ஆக முன நாள் வெம்பி எரி கானகம் உலாவும் அவர்-தாம் இனிது மேவும் நகர்-தான்- கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழில் ஆர் புறவு சேர் நம்பி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம்- நண்ணு மனமே (6)
The lord who as Rama went to the hot forest with his beloved wife and his brother Lakshmaṇa stays happily in Nandipur…
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல் நந்தன் மதலை எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர்-தான்- மந்த முழவு ஓசை மழை ஆக எழு கார் மயில்கள் ஆடு பொழில் சூழ் நந்தி பணிசெய்த நகர் நந்திபுரவிண்ணகரம்- நண்ணு மனமே (7)
Our lord Kaṇṇan was carried by Vasudevan as a baby in the dark night to a cowherd village and raised by strong Nandan…
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனி யாளர் திரு ஆர் பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு கூட எழில் ஆர் மண்ணில் இதுபோல நகர் இல்லை என வானவர்கள் தாம் மலர்கள் தூய் நண்ணி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் -நண்ணு மனமே (8)
In Nandipuraviṇṇagaram the divine sages come and worship him, sing beautiful songs and dance saying, “No matter how m…
வங்கம் மலி பௌவம்-அது மா முகடின் உச்சி புக மிக்க பெருநீர் அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல் பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால் நங்கள் பெருமான் உறையும் நந்திபுரவிண்ணகரம்- நண்ணு மனமே (9)
If devotees obey his commands they become like boats that never overturn even in a flood when the ocean water is so h…
நறை செய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம் நண்ணி உறையும் உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம்-அவை அம் கை உடை யானை ஒளி சேர் கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை-இவை ஐந்தும் ஐந்தும் முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள் முழுது அகலுமே (10) ---------- 51. திருவிண்ணகர்:1
Kaliyan, the poet with a strong shining spear smeared with blood, composed ten pāsurams on the god who carries in his…
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு பண்டை நம் வினை கெட என்று அடிமேல் தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகல்-இடம் அளந்தவனே ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (1)
O lord, you are my ruler! I came and worshiped you who measured the world at Mahābali’s sacrifice as devotees and the…
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள் கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே விண்ணவர் அமுது உண அமுதில் வரும் பெண் அமுது உண்ட எம் பெருமானே ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (2)
You are the highest lord. When the milky ocean was churned, you saw Shiva with a forehead eye when he drank the poiso…
குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம் விழ நனி மலை சிலை வளைவு செய்து அங்கு அழல் நிற அம்பு-அதுஆனவனே ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (3)
You with your dark curly hair are the brother of the fire-colored Balaraman who bent his bow that was strong as a mou…
நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும் உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால் கலை தரு குழவியின் உருவினை ஆய் அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (4)
O lord, you, my ruler, swallowed the bright moon, the sun, the world and all creatures at the end of the eon. You res…
பார் எழு கடல் எழு மலை எழும் ஆய் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம் ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (5)
O lord, you are my ruler. You swallowed all the seven worlds, seven oceans, seven mountains and the whole wonderful e…
கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய் ஏர் கெழும் உலகமும் ஆகி முத லார்களும் அறிவு-அரும் நிலையினை ஆய் சீர் கெழு நான்மறை ஆனவனே ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (6)
O lord, you, my ruler, are the dark oceans, the mountains, the beautiful worlds and the four excellent Vedas, which y…
உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில் இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய் பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும் இருக்கினில் இன் இசை ஆனவனே ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (7)
O my lord and ruler, in the evening when the Vediyars make sacrifices pouring fragrant ghee in fire and the gods come…
காதல் செய்து இளையவர் கலவி தரும் வேதனை வினை அது வெருவுதல் ஆம் ஆதலின் உனது அடி அணுகுவன் நான் போது அலர் நெடுமுடிப் புண்ணியனே ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (8)
O lord, you, my ruler, are virtuous and you are adorned with a long crown decorated with opening blossoms. I am frigh…
சாதலும் பிறத்தலும் என்று இவற்றைக் காதல் செய்யாது உன கழல் அடைந்தேன் ஓதல் செய் நான்மறை ஆகி உம்பர் ஆதல் செய் மூவுரு ஆனவனே ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனைவாழ்க்கையை-விண்ணகர் மேயவனே (9)
O my lord and ruler, I do not want to be born or die in this world again and again, and so I come to your ankleted fe…
பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல் காமரு சீர்க் கலிகன்றி சொன்ன பா மரு தமிழ்-இவை பாட வல்லார் வாமனன் அடி-இணை மருவுவரே (10) --------- 52. திருவிண்ணகர்:2
The famous Kaliyan composed Tamil pāsurams on Thiruviṇṇagar surrounded by blooming groves. If devotees learn and reci…
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும் இறுத்தேன் ஐம்புலன்கள் கடன் ஆயின வாயில் ஒட்டி அறுத்தேன் ஆர்வச் செற்றம் அவை-தம்மை மனத்து அகற்றி வெறுத்தேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (1)
Before I wanted wealth and the pleasures that the five senses gave. Even though I was hurt again and again, I did not…
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி இல் மனத்தால் இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பைக் குழியில் பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா சிறந்தேன் நின் அடிக்கே-திருவிண்ணகர் மேயவனே (2
You, the highest, embrace Lakshmi on your chest. I forgot you in all my births and until now never thought of you in …
மான் ஏய் நோக்கியர்-தம் வயிற்றுக் குழியில் உழைக்கும் ஊன் ஏய் ஆக்கை-தன்னை உதவாமை உணர்ந்து உணர்ந்து- வானே மா நிலமே வந்து வந்து என் மனத்து இருந்த தேனே!-நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (3)
You are the sky, the earth, and honey. You came to me, entered my heart and remained there. I stayed in the womb of d…
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவாது அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர எறிந்து வந்து செறிந்தேன் நின் அடிக்கே-திருவிண்ணகர் மேயவனே (4)
I left my wife and children realizing that they cannot help me attain moksha. Through your grace I threw away pleasur…
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே மாண்டார் என்று வந்தார் அந்தோ மனைவாழ்க்கை-தன்னை வேண்டேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (5)
We hear how many kings who ruled the world and were praised with “pallaṇḍu” by women with beautiful hair swarming wit…
கல்லா ஐம்புலன்கள்-அவை கண்டவாறு செய்யகில்லேன் மல்லா மல் அமருள் மல்லர் மாள மல் அடர்த்த மல்லா மல்லல் அம் சீர் மதிள் நீர் இலங்கை அழித்த வில்லா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (6)
I do not want to do the things that my five unknowing senses want. You, a fighter, battled with the strong wrestlers …
வேறா யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய் ஆறா வெம் நரகத்து அடியேனை இடக் கருதி கூற ஐவர் வந்து குமைக்கக் குடிவிட்டவரைத் தேறாது உன் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (7)
You are my father. Don’t be angry with me if I ask you for something different than what others want in this world. Y…
தீ வாய் வல் வினையார் உடன் நின்று சிறந்தவர்போல் மேவா வெம் நரகத்து இட உற்று விரைந்து வந்தார் மூவா வானவர்-தம் முதல்வா மதி கோள் விடுத்த தேவா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (8)
My bad acts, like fires, stayed with me pretending they were good friends. They came hurrying to me and thought that …
போது ஆர் தாமரையாள் புலவி குல வானவர்-தம் கோதா கோது இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த தூதா தூ மொழியாய் சுடர்போல் என் மனத்து இருந்த வேதா நின் அடைந்தேன்-திருவிண்ணகர் மேயவனே (9)
You, the king who embraces Lakshmi are worshiped by the gods in the sky. You went as a messenger to help the Pandavas…
தேன் ஆர் பூம் புறவில் திருவிண்ணகர் மேயவனை வான் ஆரும் மதிள் சூழ் வயல் மங்கையர்-கோன் மருவார் ஊன் ஆர் வேல் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை வல்லார் கோன் ஆய் வானவர்-தம் கொடி மா நகர் கூடுவரே (10) ---------- 53. திருவிண்ணகர்:3
Kaliyan with a spear smeared with flesh, the chief of Thirumangai surrounded with flourishing fields and walls that t…
துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின் உருவம் மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யான் உலகில் பிறப்பேன் ஆக எண்ணேன் பிறவாமை பெற்றது நின் திறத்தேன் ஆதன்மையால்-திருவிண்ணகரானே (1)
I will not lose the divine pleasures that I receive from you. I will not forget your beautiful form ever. I do not wa…
துறந்தேன் ஆர்வச் செற்றச் சுற்றம் துறந்தமையால் சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே அறம்-தான் ஆய்த் திரிவாய் உன்னை என் மனத்து அகத்தே திறம்பாமல் கொண்டேன்-திருவிண்ணகரானே (2)
I do not love or hate anyone. I left my family and all other relatives and friends and became a good person. I, your …
மான் ஏய் நோக்கு நல்லார் மதிபோல் முகத்து உலவும் ஊன் ஏய் கண் வாளிக்கு உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்- கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்த் தேனே வரு புனல் சூழ் திருவிண்ணகரானே (3)
I am afraid and tremble when I see beautiful women with soft glances like does, lovely faces like the moon and sharp …
சாந்து ஏந்து மென் முலையார் தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன் போந்தேன் புண்ணியனே உன்னை எய்தி என் தீவினைகள் தீர்ந்தேன் நின் அடைந்தேன்-திருவிண்ணகரானே (4)
I was plunged into a flood of joy, as I embraced the beautiful arms of women with soft breasts smeared with sandal pa…
மற்று ஓர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்துப் பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை-எம் பெருமான் வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனைச் செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே (5)
You are the highest and victorious lord and I do not think of any god but you. I will not be born again because I hav…
மை ஒண் கருங் கடலும் நிலனும் மணி வரையும் செய்ய சுடர் இரண்டும் இவை ஆய நின்னை நெஞ்சில் உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்று ஓர் தெய்வம் பிறிது அறியேன்-திருவிண்ணகரானே (6)
You are the ocean, dark as kohl, the earth, the beautiful mountains, the bright sun and the moon. I know that you are…
வேறே கூறுவது உண்டு அடியேன் விரித்து உரைக்கும் ஆறே நீ பணியாது அடை நின் திருமனத்து கூறேன் நெஞ்சு-தன்னால் குணம் கொண்டு மற்று ஓர் தெய்வம் தேறேன் உன்னை அல்லால்-திருவிண்ணகரானே (7)
People can say whatever they like, but I, your slave, will tell what I know— please keep this in your mind. I will no…
முளிந்தீந்த வெம் கடத்து மூரிப் பெருங் களிற்றால் விளிந்தீந்த மா மரம்போல் வீழ்ந்தாரை நினையாதே அளிந்து ஓர்ந்த சிந்தை நின்பால் அடியேற்கு வான்-உலகம் தெளிந்தே என்று எய்துவது? திருவிண்ணகரானே (8)
There are many who fall like trees in terrible burning deserts knocked over by wild elephants. I don’t want to think …
சொல்லாய் திரு மார்வா உனக்கு ஆகித் தொண்டு பட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு-நம்பீ மல்லா குடம் ஆடீ மதுசூதனே உலகில் செல்லா நல் இசையாய் திருவிண்ணகரானே (9)
O lord with Lakshmi on your chest, I am your slave and have done service for you. O Nambi, give me your grace so my b…
தார் ஆர் மலர்க் கமலத் தடம் சூழ்ந்த தண் புறவில் சீர் ஆர் நெடு மறுகின் திருவிண்ணகரானைக் கார் ஆர் புயல் தடக் கைக் கலியன் ஒலி மாலை ஆர் ஆர் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே (10) ------------- 54. திருநறையூர்:1
Kaliyan, the poet, as generous as a rain-giving cloud, composed a garland of ten Tamil pāsurams on the god of Thiruvi…
கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால் பண் இன் மொழியார் பைய நடமின் என்னாதமுன் விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான் நண்ணும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (1)
When you grow old you won’t be able to see and your eyes will be filled with mucus. Girls with words as sweet as musi…
கொங்கு உண் குழலார் கூடி இருந்து சிரித்து நீர் இங்கு என் இருமி எம்பால் வந்தது? என்று இகழாதமுன் திங்கள் எரி கால் செஞ் சுடர் ஆயவன் தேசு உடை நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (2)
When you grow old, women with lovely hair adorned with flowers dripping honey will join together, laugh and say mocki…
கொங்கு ஆர் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை எம் கோலம் ஐயா என் இனிக் காண்பது? என்னாதமுன் செங்கோல் வலவன் தாள் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்- நம் கோன் நறையூர்-நாம் தொழுதும் எழு நெஞ்சமே (3)
When you grow old, women with lovely hair adorned by flowers dripping honey will join together, laugh and say, “What …
கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை வம்பு உண் குழலார் வாசல் அடைத்து இகழாதமுன் செம் பொன் கமுகு-இனம்-தான் கனியும் செழும் சோலை சூழ் நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (4)
When you grow old, women with lovely hair that swarms with bees and waists that are thinner than the stalks of flower…
விலங்கும் கயலும் வேலும் ஒண் காவியும் வென்ற கண் சலம் கொண்ட சொல்லார்-தாங்கள் சிரித்து இகழாத முன் மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ்தரு நலம் கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (5)
When you become old, women with eyes even lovelier than a doe’s, a fish, a spear or a beautiful kāvi flower and with …
மின் நேர் இடையார் வேட்கையை மாற்றியிருந்து என் நீர் இருமி எம்பால் வந்தது? என்று இகழாதமுன் தொல் நீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான் நல் நீர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (6)
When you become old, women with waists as thin as lightning will not want to love you. They will only mock you and la…
வில் ஏர் நுதலார் வேட்கையை மாற்றி சிரித்து இவன் பொல்லான் திரைந்தான் என்னும் புறன் -உரை கேட்பதன்முன் சொல் ஆர் மறை நான்கு ஓதி உலகில் நிலாயவர் நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (7)
When you become old, women with foreheads as beautiful as bows will not love you. They will laugh and say, “He is a d…
வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார்-தம்மைக் கேள்மின்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாதமுன் வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர் நாளும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (8)
When you become old, women with sharp sword-like eyes who once praised you saying, “You are my Cupid!” will say, “Lis…
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட குனி சேர்ந்து உடலம் கோலில் தளர்ந்து இளையாதமுன் பனி சேர் விசும்பில் பால்மதி கோள் விடுத்தான் இடம் நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே (9)
When you become old, beautiful women with mouths as sweet as fruit will not love you anymore. Your back will be bent …
பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை இலாதமுன் நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற கறை ஆர் நெடு வேல் மங்கையர்-கோன் கலிகன்றி சொல் மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன் அரசு ஆவரே (10) --------- 55. திருநறையூர்:2
Kaliyan, the chief of Thirumangai with a long spear smeared with blood, composed ten pāsurams that describe how women…
கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர் துளங்கல் தீர நல்கு சோதிச் சுடர் ஆய வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் உடையான் ஊர்- நலம் கொள் வாய்மை அந்தணர் வாழும்-நறையூரே (1)
The lord, the divine light who carries a discus in his right hand and a conch in his left, and who churned the milky …
முனை ஆர் சீயம் ஆகி அவுணன் முரண் மார்வம் புனை வாள் உகிரால் போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்- சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக் குயில் கூவும் நனை ஆர் சோலை சூழ்ந்து அழகு ஆய-நறையூரே (2)
The faultless lord who took the form of a lion that fights fearfully, went to Hiraṇyan and with his sharp claws split…
ஆனை புரவி தேரொடு காலாள் அணிகொண்ட சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றான் ஊர்- மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமந்து நானப் புதலில் ஆமை ஒளிக்கும்-நறையூரே (3)
Our lord who destroyed Lanka, fighting with the Rākshasas and their armies of horses, elephants, chariots and warrior…
உறி ஆர் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு வெறி ஆர் கூந்தல் பின்னை-பொருட்டு ஆன் வென்றான் ஊர்- பொறி ஆர் மஞ்ஞை பூம் பொழில்தோறும் நடம் ஆட நறு நாள்மலர்மேல் வண்டு இசை பாடும்-நறையூரே (4)
When he was a baby and stole and ate butter from the uṛi, the cowherdess Yashoda caught him and tied him to a mortar.…
விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய் நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதன் ஊர்- பெடையோடு அன்னம் பெய்வளையார்-தம் பின் சென்று நடையோடு இயலி நாணி ஒளிக்கும்-நறையூரே (5)
The lord who conquered seven bulls to marry the cowherd girl Nappinnai with soft arms, and when two Asurans came as m…
பகு வாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு புகு வாய் நின்ற போதகம் வீழப் பொருதான் ஊர்- நெகு வாய் நெய்தல் பூ மது மாந்தி கமலத்தின் நகு வாய் மலர்மேல் அன்னம் உறங்கும்-நறையூரே (6)
The lord who drank milk from the breasts of the devil Putanā and killed her, and fought and killed the elephant that …
முந்து நூலும் முப்புரி நூலும் முன் ஈந்த அந்தணாளன் பிள்ளையை அஞ்ஞான்று அளித்தான் ஊர்- பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி புள் ஓடி நந்து வாரும் பைம் புனல் வாவி-நறையூரே (7)
As his guru, the Brahmin Sandipani gave him the sacred thread and taught him the Vedas, and when his son was drowning…
வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய் விறல் வியூகம் விள்ள சிந்துக்கோன் விழ ஊர்ந்த விமலன் ஊர்- கொள்ளைக் கொழு மீன் உண் குருகு ஓடி பெடையோடும் நள்ளக் கமலத் தேறல் உகுக்கும்-நறையூரே (8)
The faultless lord who drove a chariot yoked with white horses for Arjuna in the Bharatha war and conquered Jeyanthir…
பாரை ஊரும் பாரம் தீரப் பார்த்தன்-தன் தேரை ஊரும் தேவதேவன் சேறும் ஊர்- தாரை ஊரும் தண் தளிர் வேலி புடை சூழ நாரை ஊரும் நல் வயல் சூழ்ந்த-நறையூரே (9)
The god of the gods who drove the chariot in the Bharatha war for Arjuna and took away the troubles of the earth stay…
தாமத் துளப நீள் முடி மாயன்-தான் நின்ற நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர்மேல் காமக் கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை- சேமத் துணை ஆம் செப்பும்-அவர்க்கு திருமாலே (10) ----------- 56. திருநறையூர்:3
Kaliyan, the poet with a beautiful shining spear, composed a garland of ten musical pāsurams on the god of Thirunaṛai…
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல் பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர் வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும் செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (1)
O devotees, you join the divine feet of him who swallowed the sky, the vast earth, the eight directions, the wavy oce…
கொழுங் கயல் ஆய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால் எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை-அடிக்கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் உழும் செறுவில் மணி கொணர்ந்து கரைமேல் சிந்தி உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (2)
O devotees, you stay sweetly under the feet of the lord, our father who took the form of a fish and swam, jumping as …
பவ்வ நீர் உடை ஆடை ஆகச் சுற்றி பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திரு முடியா நின்றான்பால் செல்லகிற்பீர் கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற கழல் மன்னர் மணி முடிமேல் காகம் ஏறத் தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (3)
O devotees, go and worship him in Thirunaṛaiyur. The oceans are his golden clothes, the wide world is his divine feet…
பைங் கண் ஆள்-அரி உரு ஆய் வெருவ நோக்கி பரு வரத் தோள் இரணியனைப் பற்றி வாங்கி அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம் அம் குருதி பொங்குவித்தான் அடிக்கீழ் நிற்பீர் வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த செங்கணான் கோச் சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (4)
O devotees, go to Maṇimāḍam and worship the feet of him who went as a man-lion to Hiraṇyan with mountain-like arms, a…
அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உரு ஆய் இரணியனது ஆகம் கீண்டு வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து பொன் சிதறி மணி கொணர்ந்து கரைமேல் சிந்திப் புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் தென் தமிழன் வட புலக்கோன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (5)
O, devotees, you will be his guests if you worship him. In ancient times he measured the three worlds at king Mahabal…
தன்னாலே தன் உருவம் பயந்த தான் ஆய் தயங்கு ஒளி சேர் மூவுலகும் தான் ஆய் வான் ஆய் தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்று ஆய் தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர் மின் ஆடு வேல் ஏந்து விளைந்த வேளை விண் ஏறத் தனி வேல் உய்த்து உலகம் ஆண்ட தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6)
O devotees, he, the matchless one with a unique form, is the three shining worlds and the three gods, Shiva, Nānmuhan…
முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர் இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர் மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன் சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (7)
O devotees, worship the feet of the lord who drank milk from the breasts of the devil Putanā and killed her, ruled as…
முருக்கு இலங்கு கனித் துவர் வாய்ப் பின்னை கேள்வன் மன் எல்லாம் முன் அவியச் சென்று வென்றிச் செருக்களத்துத் திறல் அழியச் செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக் குலத்து வளச் சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (8)
Worship the feet of the lord, the beloved of Nappinnai whose sweet mouth is as lovely as a murukkam flower. In the Bh…
தார் ஆளன் தண் அரங்க ஆளன் பூமேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற பேர் ஆளன் ஆயிரம் பேர் உடைய ஆளன் பின்னைக்கு மணவாளன்-பெருமை கேட்பீர் பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற படை மன்னர் உடல் துணியப் பரிமா உய்த்த தேர் ஆளன் கோச் சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (9)
Hear the greatness of the generous god of rich Srirangam who wears thulasi garlands, is praised by Nānmuhan on a lotu…
செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திருநறையூர் மணிமாடச் செங் கண் மாலைப் பொய்ம் மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன் புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல் பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே (10) --------- 57. திருநறையூர்: 4
Kaliyan, the king of Thirumangai who always spoke the truth, composed ten good Tamil pāsurams on lovely-eyed Thirumāl…
ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான் விண்ட நிசாசரரைத் தோளும் தலையும் துணிவு எய்தச் சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்- வேளும் சேயும் அனையாரும் வேல்-கணாரும் பயில் வீதி நாளும் விழவின் ஒலி ஓவா நறையூர் நின்ற நம்பியே (1)
The Nambi who shot arrows from his cruel bow and cut off the arms and heads of the Rākshasas in Lanka rules me and ma…
முனி ஆய் வந்து மூவெழுகால் முடி சேர் மன்னர் உடல் துணிய தனி வாய் மழுவின் படை ஆண்ட தார் ஆர் தோளான்-வார் புறவில் பனி சேர் முல்லை பல் அரும்ப பானல் ஒருபால் கண் காட்ட நனி சேர் வயலுள் முத்து அலைக்கும் நறையூர் நின்ற நம்பியே (2)
The Nambi with a thulasi garland on his chest who took the form of Balaraman, carried a sharp mazhu weapon and killed…
தெள் ஆர் கடல்வாய் விட வாயச் சின வாள் அரவில் துயில் அமர்ந்து துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண்- புள் ஆர் புறவில் பூங் காவி பொலன் கொள் மாதர் கண் காட்ட நள் ஆர் கமலம் முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே (3)
Our lord Nambi who rests on the shining snake Adisesha on the clear milky ocean shot his arrow and killed Marisan whe…
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான்-மென் மலர்மேல் களியா வண்டு கள் உண்ண காமர் தென்றல் அலர் தூற்ற நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே (4)
When our Nambi ate the butter that Yashoda hid she was angry and tied him with a strong rope to a mortar and he sobbe…
வில் ஆர் விழவில் வட மதுரை விரும்பி விரும்பா மல் அடர்த்து கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக் காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்- சொல் ஆர் சுருதி முறை ஓதிச் சோமுச் செய்யும் தொழிலினோர் நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே (5)
Our lord who went to northern Madura, joined the festival of the bow competition, fought with the wrestlers there and…
வள்ளி கொழுநன் முதலாய மக்களோடு முக்கணான் வெள்கி ஓட விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்- பள்ளி கமலத்திடைப் பட்ட பகு வாய் அலவன் முகம் நோக்கி நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே (6)
Our Nambi fought with the heroic Vāṇāsuran and cut off his thousand strong arms when Murugan, the husband of Valli, S…
மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி குடையா வரை ஒன்று எடுத்து ஆயர் -கோ ஆய் நின்றான் கூர் ஆழிப் படையான்-வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ் நடையா வல்ல அந்தணர் வாழ் நறையூர் நின்ற நம்பியே (7)
The lord with a sharp discus who drove the chariot for Arjuna and destroyed the kings when they came to fight with sp…
பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்க பாரதத்து கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர் கலங்க சங்கம் வாய் வைத்தான்- செந்தாமரைமேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர் நந்தா வண் கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே (8)
When Panjali who plays ball with her hands had promised that she would tie her hair up until the Kauravas lost the Bh…
ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடைமேல் அணிந்து உடலம் நீறும் பூசி ஏறு ஊரும் இறையோன் சென்று குறை இரப்ப மாறு ஒன்று இல்லா வாச நீர் வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்- நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நறையூர் நின்ற நம்பியே (9)
Shiva the bull rider, with his matted hair adorned with the crescent moon and the flowing Ganges, wearing a snake as …
நன்மை உடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியைக் கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை பன்னி உலகில் பாடுவார் பாடு சாரா பழ வினைகள் மன்னி உலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே (10) ----------- 58. திருநறையூர்: 5
Kaliyan the chief of Thirumangai surrounded with fields and strong walls composed a garland of Tamil pāsurams praisin…
மான் கொண்ட தோல் மார்வின் மாணி ஆய் மாவலி மண் தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே (1)
Our Thirumāl took the form of a bachelor wearing a deerskin on his chest, went to king Mahābali, asked for three feet…
முந்நீரை முன் நாள் கடைந்தானை மூழ்த்த நாள் அந் நீரை மீன் ஆய் அமைத்த பெருமானை தென் ஆலி மேய திருமாலை எம்மானை நல் நீர் சூழ் நறையூரில் கண்டேனே (2)
Our father, Thirumal, the lord of Thennāli churned the milky ocean, and in ancient times, at the end of the eon, he t…
தூ வாய புள் ஊர்ந்து வந்து துறை வேழம் மூவாமை நல்கி முதலை துணித்தானை தேவாதிதேவனை செங் கமலக் கண்ணானை நாவாய் உளானை நறையூரில் கண்டேனே (3)
The lord came on Garuḍa, the faultless bird and killed the crocodile that had caught Gajendra the elephant on the ban…
ஓடா அரி ஆய் இரணியனை ஊன் இடந்த சேடு ஆர் பொழில் சூழ் திருநீர்மலையானை வாடா மலர்த் துழாய் மாலை முடியானை நாள்தோறும் நாடி நறையூரில் கண்டேனே (4)
The god of Thiruneermalai surrounded with groves took the form of a man-lion that never retreats, went to Hiraṇyan an…
கல் ஆர் மதிள் சூழ் கதி இலங்கைக் கார் அரக்கன் வல் ஆகம் கீள வரி வெம் சரம் துரந்த வில்லானை செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை நாடி நறையூரில் கண்டேனே (5)
He shot cruel arrows with his bow and split open the chest of the terrible Rākshasa Ravaṇa, the king of guarded Lanka…
உம்பர்-உலகோடு உயிர் எல்லாம் உந்தியில் வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை அம்பு அன்ன கண்ணாள் அசோதை-தன் சிங்கத்தை நம்பனை நாடி நறையூரில் கண்டேனே (6)
He created Nānmuhan on a lotus on his navel and Nānmuhan created all the worlds, the world of the gods and the creatu…
கட்டு ஏறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை மட்டு ஏறு கற்பகத்தை மாதர்க்கு ஆய் வண் துவரை நட்டானை நாடி நறையூரில் கண்டேனே (7)
He is the god of Meyyam who burned the forest Kāṇḍam filled with abundant groves, brought the Karpaga tree dripping w…
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் பண்ணின்மேல் வந்த படை எல்லாம் பாரதத்து விண்ணின் மீது ஏற விசயன் தேர் ஊர்ந்தானை நண்ணி நான் நாடி நறையூரில் கண்டேனே (8)
He drove the chariot for Arjuna in the Bharatha war, fought with the armies of his heroic enemies, conquered them and…
பொங்கு ஏறு நீள் சோதிப் பொன் ஆழி-தன்னோடும் சங்கு ஏறு கோலத் தடக் கைப் பெருமானை கொங்கு ஏறு சோலைக் குடந்தைக் கிடந்தானை நம் கோனை நாடி நறையூரில் கண்டேனே (9)
The lord, our king, carries a golden discus in his right hand that spreads light everywhere and in his left hand he h…
மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை நல் நறையூர் நின்ற நம்பியை வம்பு அவிழ் தார் கல் நவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார் பொன்-உலகில் வானவர்க்குப் புத்தேளிர் ஆகுவரே (10) --------- 59. திருநறையூர்: 6
Kaliyan with arms as strong as mountains and adorned with fragrant garland dripping with honey composed ten pāsurams …
பெடை அடர்த்த மட அன்னம் பிரியாது மலர்க் கமல மடல் எடுத்து மது நுகரும் வயல் உடுத்த திருநறையூர்- முடை அடர்த்த சிரம் ஏந்தி மூவுலகும் பலி திரிவோன் இடர் கெடுத்த திருவாளன் இணை-அடியே அடை நெஞ்சே (1)
O heart, go and reach the feet of the divine one who took away the trouble of Shiva when he wandered through all the …
கழி ஆரும் கன சங்கம் கலந்து எங்கும் நிறைந்து ஏறி வழி ஆர முத்து ஈன்று வளம் கொடுக்கும் திருநறையூர்- பழி ஆரும் விறல் அரக்கன் பரு முடிகள்-அவை சிதற அழல் ஆரும் சரம் துரந்தான் அடி-இணையே அடை நெஞ்சே (2)
O heart, go and reach the feet of the divine god who shot his fire-like arrows and made the ten crowns of the strong …
சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாய கதலிகளின் திளை கொண்ட பழம் கெழுமித் திகழ் சோலைத் திருநறையூர்- வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூவுலகோடு அளை வெண்ணெய் உண்டான்-தன்-அடி-இணையே அடை நெஞ்சே (3)
O heart, the younger brother of the white conch-colored Balaraman, who ate the churned butter and swallowed all the t…
துன்று ஒளித் துகில் படலம் துன்னி எங்கும் மாளிகைமேல் நின்று ஆர வான் மூடும் நீள் செல்வத் திருநறையூர்- மன்று ஆரக் குடம் ஆடி வரை எடுத்து மழை தடுத்த குன்று ஆரும் திரள் தோளன் குரை கழலே அடை நெஞ்சே (4)
O heart, let us go and worship the ankleted feet of the lord, who carried with his arms as strong as hills Govardhana…
அகில் குறடும் சந்தனமும் அம் பொன்னும் அணி முத்தும் மிகக் கொணர்ந்து திரை உந்தும் வியன் பொன்னித் திருநறையூர்- பகல் கரந்த சுடர் ஆழிப் படையான் இவ் உலகு ஏழும் புகக் கரந்த திரு வயிற்றன் பொன்-அடியே அடை நெஞ்சே (5)
O heart, let us go and worship the golden feet of Kaṇṇan who hid the sun with his shining discus in the Bharatha war,…
பொன் முத்தும் அரி உகிரும் புழைக் கை மா கரிக் கோடும் மின்னத் தண் திரை உந்தும் வியன் பொன்னித் திருநறையூர்- மின் ஒத்த நுண் மருங்குல் மெல்-இயலைத் திரு மார்வில் மன்ன தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே (6)
O heart, let us go and worship the lotus feet of the almighty who joyfully keeps gentle Lakshmi with a waist as thin …
சீர் தழைத்த கதிர்ச் செந்நெல் செங் கமலத்து இடை இடையில் பார் தழைத்துக் கரும்பு ஓங்கிப் பயன் விளைக்கும் திருநறையூர்- கார் தழைத்த திரு உருவன் கண்ண-பிரான் விண்ணவர்-கோன் தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே (7)
O heart, let us go and worship the soft feet that are as tender as shoots of the divine dark cloud-like Kaṇṇapirān, t…
குலை ஆர்ந்த பழுக் காயும் பசுங் காயும் பாளை முத்தும் தலை ஆர்ந்த இளங் கமுகின் தடஞ் சோலைத் திருநறையூர்- மலை ஆர்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி நிலை ஆர நின்றான்-தன் நீள் கழலே அடை நெஞ்சே (8)
O heart, let us go and worship the ankleted feet of the lord who stays eternally in Thirunaṛaiyur surrounded with abu…
மறை ஆரும் பெரு வேள்விக் கொழும் புகை போய் வளர்ந்து எங்கும் நிறை ஆர வான் மூடும் நீள் செல்வத் திருநறையூர்- பிறை ஆரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த இறை ஆகி நின்றான் தன் இணை-அடியே அடை நெஞ்சே (9)
O heart, let us go and worship the feet of the lord who was worshiped by Shiva with the crescent moon in his matted h…
திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை வண் களகம் நிலவு எறிக்கும் வயல் மங்கை நகராளன் பண்கள் அகம் பயின்ற சீர்ப் பாடல்-இவை பத்தும் வல்லார் விண்கள் அகத்து இமையவர் ஆய் வீற்றிருந்து வாழ்வாரே (10) ---------- 60. திருநறையூர்: 7
Kaliyan, the chief of Thirumangai surrounded by flourishing fields where the moon shines bright composed ten musical …
கிடந்த நம்பி குடந்தை மேவி கேழல் ஆய் உலகை இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழியக் கடந்த நம்பி கடி ஆர் இலங்கை உலகை ஈர் அடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில்-நமோ நாராயணமே (1)
Our Nambi who rests on Adisesha on the ocean in Kuḍandai took the form of a boar and split open the earth to bring th…
விடம்-தான் உடைய அரவம் வெருவ செருவில் முன நாள் முன் தடந் தாமரை நீர்ப் பொய்கை புக்கு மிக்க தாள் ஆளன் இடந்தான் வையம் கேழல் ஆகி உலகை ஈர் அடியால் நடந்தானுடைய நாமம் சொல்லில்-நமோ நாராயணமே (2)
The lord jumped into the lotus pond, fought with the snake Kālingan and danced on his head, took the form of a boar a…
பூணாது அனலும் தறுகண் வேழம் மறுக வளை மருப்பைப் பேணான் வாங்கி அமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன் பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய் நாணாது உண்டான் நாமம் சொல்லில்-நமோ நாராயணமே (3)
He fought the mighty-eyed elephant Kuvalayābeeḍam and broke its tusks. He churned the milky ocean, took the nectar an…
கல் ஆர் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சி பாடகத்துள் எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கைக்கோன் வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு நல்லானுடைய நாமம் சொல்லில்-நமோ நாராயணமே (4)
The lord who wishes to stay in Kachi surrounded by stone walls, and in the temple in Pāḍaham where all the people of …
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத விடை-தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென் இலங்கை அடையா அரக்கர் வீயப் பொருது மேவி வெம் கூற்றம் நடையா உண்ணக் கண்டான் நாமம்-நமோ நாராயணமே (5)
The god of Thirukkovalur carried Govardhana mountain as an umbrella and protected the cows and the cowherds from the …
கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் மானம் அழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திருநாமம்- நானும் சொன்னேன் நமரும் உரைமின்-நமோ நாராயணமே (6)
Our father, always victorious, collected an army of bears, monkeys, and langurs in the forest, went to Lanka, fought …
நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும் ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார் குன்று குடையா எடுத்த அடிகளுடைய திருநாமம்- நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன்-நமோ நாராயணமே (7)
Our father is the hills, the ocean, the directions and the large earth and he guards them and makes them indestructib…
கடுங் கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சாமுன் நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி நிரையைச் சிரமத்தால் நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்-நமோ நாராயணமே (8)
When the cows and the cowherds were shivering in a storm that poured a rain of stones, terrified, the cowherds worshi…
பொங்கு புணரிக் கடல் சூழ் ஆடை நில மா மகள் மலர் மா மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகர் ஆய எங்கள் அடிகள் இமையோர் தலைவருடைய திருநாமம்- நங்கள் வினைகள் தவிர உரைமின்-நமோ நாராயணமே (9)
He, the beloved of the earth goddess surrounded by oceans that roll with waves and of lovely Lakshmi seated on the lo…
வாவித் தடம் சூழ் மணி முத்தாற்று நறையூர் நெடுமாலை நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை காவித் தடங் கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை மேவிச் சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே (10) ---------- 61. திருநறையூர்: 8
Kaliyan the poet, the beloved of his queen with large eyes like kāvi flowers, composed a garland of ten musical pāsur…
கறவா மட நாகு தன் கன்று உள்ளினால்போல் மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்- நறவு ஆர் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி பிறவாமை எனைப் பணி-எந்தை பிரானே (1)
Like a young calf that craves its mother’s milk I call you unceasingly. You, our Nambi, stay in Naṛaiyur surrounded w…
வற்றா முதுநீரொடு மால் வரை ஏழும் துற்று ஆக முன் துற்றிய தொல் புகழோனே அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன் பெற்றேன் அருள் தந்திடு-என் எந்தை பிரானே (2)
Ancient and famous, you swallowed all the oceans that never dry and the seven hills. I have no one—I am your slave. I…
தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய் ஆரேன் அதுவே பருகிக் களிக்கின்றேன்- கார் ஏய் கடலே மலையே திருக்கோட்டி ஊரே உகந்தாயை உகந்து அடியேனே (3)
You gave me your grace and I will not give it away to anyone else. I drink your grace and relish it—it is never enoug…
புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க உள்ளே நின்று என் உள்ளம் குளிரும் ஒருவா கள்வா கடல்மல்லைக் கிடந்த கரும்பே வள்ளால் உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே? (4)
When I called you and said, “O faultless one, you split open the beak of the bird,” you entered my heart and gave me …
வில் ஏர் நுதல் நெடுங் கண்ணியும் நீயும் கல் ஆர் கடுங் கானம் திரிந்த களிறே நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி சொல்லாய்-உன்னை யான் வணங்கித் தொழும் ஆறே (5)
As if you were a strong elephant, you wandered in the cruel mountainous forest with Sita, your wife with long spear-l…
பனி ஏய் பரங் குன்றின் பவளத் திரளே முனியே திருமூழிக்களத்து விளக்கே இனியாய் தொண்டரோம் பருகும் இன் அமுது ஆய கனியே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (6)
You are a treasure of coral, a sage, you are the light of Thirumuzhikkaḷam and you stay in the divine hills of Thirup…
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு நிதியே திருநீர்மலை நித்திலத் தொத்தே பதியே பரவித் தொழும் தொண்டர்-தமக்குக் கதியே உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே (7)
You are a treasure, you are a garland of pearls on Thiruneermalai and I have no other refuge but your grace. If your …
அத்தா அரியே என்று உன்னை அழைக்க பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற வித்தே உன்னை எங்ஙனம் நான் விடுகேனே (8)
If I call you saying, “You are my lord. You are Hari,” others mock me and say I am crazy. You are a pearl, a precious…
தூயாய் சுடர் மா மதிபோல் உயிர்க்கு எல்லாம் தாய் ஆய் அளிக்கின்ற தண் தாமரைக் கண்ணா ஆயா அலை நீர் உலகு ஏழும் முன் உண்ட வாயா உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே (9)
You are pure, you have cool lotus eyes, you are like the beautiful shining moon, and like a mother you give your love…
வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும் தொண்டு ஆய் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை தொண்டீர் இவை பாடுமின் பாடி நின்று ஆட உண்டே விசும்பு உம்-தமக்கு இல்லை துயரே (10) ---------- 62. திருநறையூர்: 9
Kaliyan, the devotee of the god, composed a garland of musical Tamil pāsurams on him, the god of Thirunaṛaiyur surrou…
புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால் உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளியக்கால் நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ (1)
When I praise you saying, “You took the form of a swan and a boar. You, a thief, entered my heart,” my eyes fill with…
ஓடா ஆள் அரியின் உரு ஆய் மருவி என்-தன் மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா பாடேன் தொண்டர்-தம்மைக் கவிதைப் பனுவல்கொண்டு நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ (2)
As a strong man-lion that never retreats you killed Hiraṇyan. You came to me and entered my heart. I will not sing an…
எம்மானும் எம் அனையும் என்னைப் பெற்று ஒழிந்ததற்பின் அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன் மைம் மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே (3)
My father and mother left this world after they gave birth to me. You are father and mother for me, your devotee. You…
சிறியாய் ஓர் பிள்ளையும் ஆய் உலகு உண்டு ஓர் ஆல் இலைமேல் உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது-தான் அறியாது இருந்தறியேன் அடியேன்-அணி வண்டு கிண்டும் நறை வாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ (4)
You slept as a little baby on the banyan leaf and swallowed the world. You entered my heart and stayed there, but I, …
நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்திக் காண்பு அரிதால் ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு நான் அடிமை பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன் நான்-தான் உனக்கு ஒழிந்தேன்-நறையூர் நின்ற நம்பீயோ (5)
O tall one, it is hard for the gods to know who you are and to praise you. I knew that you protect your devotees if t…
எம் தாதை தாதை அப்பால் எழுவர் பழ அடிமை வந்தார் என் நெஞ்சின் உள்ளே வந்தாயைப் போகல் ஒட்டேன் அந்தோ!-என் ஆர் உயிரே அரசே அருள் எனக்கு நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ (6)
My father, his father and our ancestors for seven generations and others before them all served you and they were you…
மன் அஞ்ச ஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனிப் போய்ப் பிறர் ஒருவர் வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன்- நல் நெஞ்ச அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ (7)
You cut off the thousand arms of Bānasuran terrifying all other kings when they saw it. You have entered my heart and…
எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள் கைப்போது கொண்டு இறைஞ்சி கழல்மேல் வணங்க நின்றாய் இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்- நல் போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ (8)
Always the gods with eyes that do not blink place golden blossoms at your feet. They carry flowers in their hands and…
ஊன் நேர் ஆக்கை-தன்னை உழந்து ஓம்பி வைத்தமையால் யான் ஆய் என்-தனக்கு ஆய் அடியேன் மனம் புகுந்த தேனே தீங் கரும்பின் தெளிவே என் சிந்தை-தன்னால் நானே எய்தப் பெற்றேன்-நறையூர் நின்ற நம்பீயோ (9)
You gave me this body made of flesh and I have suffered in this world. Now you, sweet as the clear juice of sweet sug…
நல் நீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியைக் கல் நீர மால் வரைத் தோள் கலிகன்றி மங்கையர்-கோன் சொல் நீர சொல்-மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில் நல் நீர்மையால் மகிழ்ந்து நெடுங் காலம் வாழ்வாரே (10) ---------- 63. திருநறையூர்: 10
Kaliyan, the chief of Thirumangai with arms strong as mountains composed a garland of pāsurams with beautiful words o…
சின இல் செங் கண் அரக்கர் உயிர் மாளச் செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம் மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியைக் கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண்-இணைகள் களிப்பக் களித்தேனே (1)
The learned ones praise him in their minds always saying, “He killed the cruel-eyed Rakshasas with his heroic bow.” T…
தாய் நினைந்த கன்றே ஒக்க என்னையும் தன்னையே நினைக்கச் செய்து தான் எனக்கு ஆய் நினைந்து அருள் செய்யும் அப்பனை அன்று இவ் வையகம் உண்டு உமிழ்ந்திட்ட வாயனை மகரக் குழைக் காதனை மைந்தனை மதிள் கோவல் இடைகழி ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே (2)
He, adorned with emeralds on his ears, makes me think of him like a calf that thinks of his mother, and he thinks of …
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடைச் சிந்தை ஆய் வந்து தென்புலர்க்கு என்னைச் சேர்கொடான் இது சிக்கெனப் பெற்றேன் கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தைத் தலைக் கோவினை குடம் ஆடிய கூத்தனை எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை-எத்தால் மறக்கேனே? (3)
Not entering any other heart, he came to me and entered the heart of me, his slave. I have caught him tightly and he …
உரங்களால் இயன்ற மன்னர் மாள பாரதத்து ஒரு தேர் ஐவர்க்கு ஆய்ச் சென்று இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள் செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி ஆழி சூழ் இலங்கை மலங்கச் சென்று சரங்கள் ஆண்ட தன் தாமரைக் கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே (4)
The lord drove Arjuna’s chariot in the Bharatha war and killed the strong Kaurava kings, giving his grace to the Pand…
ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை உம்பர்க்கு அணி ஆய் நின்ற வேங்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட தீங் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தை செய்யாதே (5)
The lotus-eyed lord, precious like gold, saying “Do not be afraid,” will come and help me when I, his slave, am plung…
எள் தனைப்பொழுது ஆகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ் தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின் தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம் கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை காதலால் மறை நான்கும் முன் ஓதிய பட்டனை பரவைத் துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே (6)
My famous lord will not leave my mind even for a moment. Sweet as sugar and sugarcane juice, he stays in Thirumalirun…
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலை ஆகி இங்கே புகுந்து என் கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன் உள் விண் உளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் வண்ணன் மா மணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் உரையாதே (7)
He is like pālai, the best of all the ragas, played on a yāz. He, the god of the gods in the sky, entered me and abid…
இனி எப் பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு- இம்மையே அருள்பெற்றமையால் அடும் துனியைத் தீர்த்து இன்பமே தருகின்றது ஓர் தோற்றத் தொல் நெறியை வையம் தொழப்படும் முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை பத்தர்-தாம் நுகர்கின்றது ஓர் கனியை காதல் செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை-இன்று கண்டுகொண்டேனே (8)
Tell me, how can results of any karma come to me now that I have received the grace of the lord in this birth itself?…
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ்த் தஞ்சை ஆளியை பொன்பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை தழலே புரை மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை அன்றி என் மனம் போற்றி என்னாதே (9)
Tell me, for I am his slave, what can I give back to him for everything he has done for me? The famous lord, the rule…
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திரு ஆலி நாடன் நல் நறையூர் நின்ற நம்பி-தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில் சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல்-மாலைப் பாடல் பத்து-இவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாவே (10) ------- 64. திருச்சேறை
Kaliyan, a poet and chief of Thirumangai of Thiruvāli surrounded with groves blooming with flourishing flowers that s…
கண் சோர வெம் குருதி வந்து இழிய வெம் தழல்போல் கூந்தலாளை மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர்-தம் கோவே என்று விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாடம் மல்கு செல்வத் தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார் காண்மின்-என் தலைமேலாரே (1)
Your devotees praise you saying, “O king of the gods! When you were a baby you drank poisonous milk from the breasts …
அம் புருவ வரி நெடுங் கண் அலர்-மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல் கொம்பு உருவ விளங்கனிமேல் இளங் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம் வம்பு அலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய எம் பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே (2)
On his chest he keeps Lakshmi with long and sharp eyes like arrows. He is the dancer who threw the Asuran when he cam…
மீது ஓடி வாள் எயிறு மின் இலக முன் விலகும் உருவினாளைக் காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று தாதோடு வண்டு அலம்பும் தண் சேறை எம் பெருமான் தாளை ஏத்தி போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரின் பொலிகின்றாரே (3)
In Thiruthaṇcheṛai where bees stir the pollen of the flowers and sing, devotees worship the god saying, “When Surpana…
தேர் ஆளும் வாள் அரக்கன் தென் இலங்கை வெம் சமத்துப் பொன்றி வீழ போர் ஆளும் சிலை-அதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும் தார் ஆளும் வரை மார்பன் தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும் பேராளன் பேர் ஓதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே (4)
The god in Thiruthaṇcherai, ruler of the gods in the sky, has a mountain-like chest adorned with garlands. I will nev…
வந்திக்கும் மற்றவர்க்கும் மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன் முந்திச் சென்று அரி உரு ஆய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்- சந்தப் பூ மலர்ச் சோலைத் தண் சேறை எம் பெருமான் தாளை நாளும் சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே (5)
I will not worship the Jains with their dirty bodies or the Buddhists with their incessant arguing, I will only worsh…
பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த பண்பாளா என்று நின்று தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன் வண்டு ஏந்தும் மலர்ப் புறவின் வண் சேறை எம் பெருமான் அடியார்-தம்மைக் கண்டேனுக்கு இது காணீர்-என் நெஞ்சும் கண் இணையும் களிக்கும் ஆறே (6)
I praise him saying, “You are an excellent god. In ancient times as a boar you dug up the earth, brought the earth go…
பை விரியும் வரி அரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும் மை விரியும் மணி வரைபோல் மாயவனே என்று என்றும் வண்டு ஆர் நீலம் செய் விரியும் தண் சேறை எம் பெருமான் திரு வடிவைச் சிந்தித்தேற்கு என் ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம்-என் அன்பு-தானே (7)
I worship and praise him saying, “You, the Māyavan are virtuous and rest on the deep ocean on Adisesha the snake like…
உண்ணாது வெம் கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா-மேலை விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர்போல் அடியினானை பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை அம்மான்-தன்னை கண் ஆரக் கண்டு உருகி கை ஆரத் தொழுவாரைக் கருதுங்காலே (8)
The gods in the sky and the people of the earth come and praise him whose feet are soft as tender shoots. He stays in…
கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால் போது ஒருகால் கவலை என்னும் வெள்ளத்தேற்கு என்கொலோ?-விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால் தள்ள தேன் மணம் நாறும் தண் சேறை எம் பெருமான் தாளை நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர்- என் உள்ளம் உருகும் ஆறே (9)
My heart melts for the devotees who keep his feet in their hearts and worship the lord of Thiruthaṇcheṛai where, as t…
பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம் தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான்-தன்னை வா மான் தேர்ப் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர் தூ மாண் சேர் பொன் அடிமேல் சூட்டுமின்-நும் துணைக் கையால் தொழுது நின்றே (10) ---------- 65. திருவழுந்தூர்: 1
The poet Kaliyan, Yama to his enemies, who drives swift chariots yoked with horses, composed ten musical pāsurams on …
தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள் இருட்கண் வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர்போலும்- முந்தி வானம் மழை பொழியும் மூவா உருவின் மறையாளர் அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே (1)
When his father Vasudevan was imprisoned by Kamsan, Kaṇṇan broke the chains that bound his feet and his father took h…
பாரித்து எழுந்த படை மன்னர்-தம்மை மாள பாரதத்து தேரில் பாகன் ஆய் ஊர்ந்த தேவ-தேவன் ஊர்போலும்- நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சிப் போன குருகு இனங்கள் ஆரல் கவுளோடு அருகு அணையும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே (2)
The god of gods who drove the chariot for Arjuna in the Bharatha war and destroyed the Kauravas with their mighty arm…
செம் பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐ இரண்டும் உம்பர் வாளிக்கு இலக்கு ஆக உதிர்த்த உரவோன் ஊர்போலும்- கொம்பில் ஆர்ந்த மாதவிமேல் கோதி மேய்ந்த வண்டு இனங்கள் அம்பு அராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே (3)
The strong god who with his divine arrows cut off the ten heads of the king of Lanka in the south surrounded by preci…
வெள்ளத்துள் ஓர் ஆல் இலைமேல் மேவி அடியேன் மனம் புகுந்து என் உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற ஊர்போலும்- புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடிப் போன காதல் பெடையோடும் அள்ளல் செறுவில் கயல் நாடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே (4)
Our god who lay on a banyan leaf in the flood and entered my heart so he is always in my eyes stays in Thiruvazundur …
பகலும் இரவும் தானே ஆய் பாரும் விண்ணும் தானே ஆய் நிகரில் சுடர் ஆய் இருள் ஆகி நின்றார் நின்ற ஊர்போலும்- துகிலின் கொடியும் தேர்த் துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய் அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணி ஆர் வீதி அழுந்தூரே (5)
The god who is day and night, earth and sky, matchless light and darkness stays in Thiruvazhundur filled with cloth f…
ஏடு இலங்கு தாமரைபோல் செவ்வாய் முறுவல் செய்தருளி மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர்போலும்- நீடு மாடத் தனிச் சூலம் போழக் கொண்டல் துளி தூவ ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே (6)
Smiling with his beautiful blooming lotus mouth he came near me, gave his grace and entered my heart. He stays in Thi…
மாலைப் புகுந்து மலர்-அணைமேல் வைகி அடியேன் மனம் புகுந்து என் நீலக் கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர்போலும்- வேலைக் கடல்போல் நெடு வீதி விண் தோய் சுதை வெண் மணி மாடத்து ஆலைப் புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே (7)
The lord who came in the evening, stayed on my flower-like bed and entered my heart making my eyes that are like neel…
வஞ்சி மருங்குல் இடை நோவ மணந்து நின்ற கனவகத்து என் நெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார் நின்ற ஊர்போலும்- பஞ்சி அன்ன மெல் அடி நல் பாவைமார்கள் ஆடகத்தின் அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே (8)
The lord who came in the dreams of the women with waists as thin as vines and embraced them as they folded their hand…
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி பொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர்போலும்- மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல் வரி வண்டு இசை பாட அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே (9)
That pure lord who came yesterday, stole away the feelings of my five senses and my beauty, and made my golden orname…
நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன் சொல்லில் பொலிந்த தமிழ்-மாலை சொல்ல பாவம் நில்லாவே 10 -------- 66. திருவழுந்தூர்: 2
Kaliyan, the poet who fights with his enemies like Yama, the king of Thirumangai where cuckoo birds sit on the bushes…
நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட அல்லிக் கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை வல்லிப் பொதும்பில் குயில் கூவும் மங்கை வேந்தன் பரகாலன் சொல்லில் பொலிந்த தமிழ்-மாலை சொல்ல பாவம் நில்லாவே (10)
The lord who took the form of a man-lion and split open the chest of the Asuran Hiraṇyan, carrying a conch in his lef…
சிங்கம்-அது ஆய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த சங்கம் இடத்தானை தழல் ஆழி வலத்தானை செங் கமலத்து அயன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற அம் கமலக் கண்ணனை-அடியேன் கண்டுகொண்டேனே (1)
The ocean-colored lord, the everlasting god of gods who fought and killed kings with his mazhu weapon and feels compa…
கோ ஆனார் மடியக் கொலை ஆர் மழுக் கொண்டருளும் மூவா வானவனை முழு நீர் வண்ணனை அடியார்க்கு ஆஆ என்று இரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற தேவாதிதேவனை-யான் கண்டுகொண்டு திளைத்தேனே (2)
When he, the creator of all the oceans and the worlds and owner of everything, threw his discus as he fought with Vān…
உடையானை ஒலி நீர் உலகங்கள் படைத்தானை விடையான் ஓட அன்று விறல் ஆழி விசைத்தானை அடையார் தென் இலங்கை அழித்தானை அணி அழுந்தூர் உடையானை-அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே (3)
The lord who carried Govardhana mountain, stopping the storm and saving the cows and the cowherds, saved Gajendra fro…
குன்றால் மாரி தடுத்தவனை குல வேழம் அன்று பொன்றாமை அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ட அணி அழுந்தூர் நின்றானை-அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே (4)
Our lord of Thirumangai, the everlasting dark hill, who grew angry with Kamsan and killed him, and drank milk from th…
கஞ்சனைக் காய்ந்தானை கண்ணமங்கையுள் நின்றானை வஞ்சனப் பேய் முலையூடு உயிர் வாய் மடுத்து உண்டானை செஞ்சொல் நான்மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற அஞ்சனக் குன்றம்-தன்னை-அடியேன் கண்டுகொண்டேனே (5)
The greatest one, the god of Indra the king of the gods and Brahma, is the joy of all, yet no one can know who he is.…
பெரியானை அமரர் தலைவற்கும் பிரமனுக்கும் உரி யானை உகந்தான்-அவனுக்கும் உணர்வதனுக்கு அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடிபணியும் கரியானை-அடியேன் கண்டுகொண்டு களித்தேனே (6)
The formless lord who is all the directions, the earth, oceans, fire, wind and sound, the Karpaga tree that takes awa…
திரு வாழ் மார்வன்-தன்னை திசை மண் நீர் எரி முதலா உரு ஆய் நின்றவனை ஒலி சேரும் மாருதத்தை அரு ஆய் நின்றவனை தென் அழுந்தையில் மன்னி நின்ற கரு ஆர் கற்பகத்தை-கண்டுகொண்டு களித்தேனே (7)
He, the clever one, the meaning of words, who embraces the breasts of the earth goddess stays in Thennazundai where o…
நிலை ஆள் ஆக என்னை உகந்தானை நில மகள்-தன் முலை ஆள் வித்தகனை முது நான்மறை வீதிதொறும் அலை ஆர் கடல்போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னிநின்ற கலை ஆர் சொற்பொருளை-கண்டுகொண்டு களித்தேனே (8)
The famous dark cloud-colored lord of Kuḍandai, the nectar that never loses its taste, the beloved of shining Lakshmi…
பேரானை குடந்தைப் பெருமானை இலங்கு ஒளி சேர் வார் ஆர் வனமுலையாள் மலர்-மங்கை நாயகனை ஆரா இன் அமுதை தென் அழுந்தையில் மன்னி நின்ற கார் ஆர் கரு முகிலை-கண்டுகொண்டு களித்தேனே (9) ---------- 67. திருவழுந்தூர்: 3
Kaliyan, the poet, the king of beautiful Thirumangai with a long spear, composed ten Tamil pāsurams on the god of dha…
திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற அற முதல்வன்-அவனை அணி ஆலியர்-கோன் மருவார் கறை நெடு வேல் வலவன் கலிகன்றி சொல் ஐ இரண்டும் முறை வழுவாமை வல்லார் முழுது ஆள்வர்-வான்-உலகே (10)
You, our lovely Kaṇṇan, the wealth of all wealth, carry a strong shining discus and embrace beautiful Lakshmi on your…
திருவுக்கும் திரு ஆகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா உருவச் செஞ் சுடர் ஆழி வல்லானே உலகு உண்ட ஒருவா திரு மார்பா ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை இன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (1)
You came into my heart and stay firmly there with the soft-fingered earth goddess lovely as a doll, ornamented with b…
பந்து ஆர் மெல் விரல் நல் வளைத் தோளி பாவை பூ-மகள்-தன்னொடும் உடனே வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால் வண்ணா மழைபோல் ஒளி வண்ணா சந்தோகா பௌழியா தைத்திரியா சாம வேதியனே நெடுமாலே அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன்- அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (2)
The lord who has long arms that carry a discus smeared with oil and a conch made me, his slave, be born in this evil …
நெய் ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோள் உடையாய் அடியேனைச் செய்யாத உலகத்திடைச் செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து பொய்யால் ஐவர் என் மெய் குடி ஏறிப் போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன் ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன்- அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (3)
You, the Mādhavan, the Madhusudanan the highest, the king of the gods in the sky, worshiped and praised by the five P…
பரனே பஞ்சவன் பூழியன் சோழன் பார் மன்னர் மன்னர்-தாம் பணிந்து ஏத்தும் வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் நரனே நாரணனே திருநறையூர் நம்பீ எம் பெருமான் உம்பர் ஆளும் அரனே ஆதிவராகம் முன் ஆனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (4)
You took the form of a man-lion and fought with Hiraṇyan and split open his chest, and as a cowherd you, the good, pu…
விண்டான் விண் புக வெம் சமத்து அரி ஆய் பரியோன் மார்வு-அகம் பற்றிப் பிளந்து பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை கருமம் ஆவதும் என்-தனக்கு அறிந்தேன் அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (5)
When you were given good yogurt and ghee you ate them and laughed, but then your mother Yasodha tied you to a mortar …
தோயா இன் தயிர் நெய் அமுது உண்ண சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும் சேயாய் கிரேத திரேத துவாபர கலியுகம்-இவை நான்கும் முன் ஆனாய் ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (6)
You, dark as a cloud and colored like the shining ocean, were angry at Hiranyan and went to him as a man lion and kil…
கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல்போல் ஒளி வண்ணா இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழும் முன் ஆனாய் பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே நுகர்வான் புகுந்து ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (7)
You, the tall Nambi, take away the troubles of life and I stay here thinking only of you The evil pleasures of the fi…
நெடியானே கடி ஆர்கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக் கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அக் காவலைப் பிழைத்து குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி அடியேனைப் பணி ஆண்டுகொள்-எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (8)
When the pleasures of the five senses took over my body and wanted to rule me, they exclaimed, “Give me food and clot…
கோ ஆய் ஐவர் என் மெய் குடி ஏறி கூறை சோறு இவை தா என்று குமைத்து போகார் நான் அவரைப் பொறுக்ககிலேன் புனிதா புள் கொடியாய் நெடுமாலே தீ வாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன் ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (9) ------------ 68. திருவழுந்தூர்: 4
Strong-armed Kaliyan, the king of Thirumangai in Thiruvali surrounded with forts, composed a pure garland of ten Tami…
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானைக் கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கைக் குல வேந்தன் சொன்ன இன் தமிழ் நல் மணிக் கோவை தூய மாலை இவை-பத்தும் வல்லார் மன்னி மன்னவர் ஆய் உலகு ஆண்டு மான வெண் குடைக்கீழ் மகிழ்வாரே (10)
The Māyon who rests on Adisesha on the wide ocean rolling with waves, as Lakshmi and the earth goddess stroke his div…
செங் கமலத் திருமகளும் புவியும் செம் பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த வங்கம் மலி தடங் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின்- எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (1)
When the eon ended and all the seven worlds were covered with darkness and the sages and the Asurans were terrified, …
முன் இவ் உலகு ஏழும் இருள் மண்டி உண்ண முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம் பரி முகம் ஆய் அருளிய எம் பரமன் காண்மின்- செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம் -அவை முரல செங் கமல மலரை ஏறி அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (2)
When the strong crocodile caught Gajendra, the king of elephants, he called to you loudly, saying, “You are the shini…
குலத் தலைய மத வேழம் பொய்கை புக்கு கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று நிலத் திகழும் மலர்ச் சுடர் ஏய் சோதீ என்ன நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்மின்- மலைத் திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு வந்து உந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (3)
He took the divine form of a strong-eyed boar that looked like a hill decorated with anklets and ornaments and dug up…
சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம் திகழ்ந்தது என திரு உருவம் பன்றி ஆகி இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்மின்- புலம்பு சிறை வண்டு ஒலிப்ப பூகம் தொக்க பொழில்கள்தொறும் குயில் கூவ மயில்கள் ஆல அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (4)
As a heroic man-lion he split open the strong chest of Hiraṇyan, and when the devil Putanā came in the form of a moth…
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்மின்- இனம் மேவு வரி வளைக் கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம்போல் கிளியின் இன் சொல் அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (5)
When the gods were afflicted by Māhabali, Thirumāl, my chief with an unmatched discus, went as a dwarf to Mahābali an…
வானவர்-தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உரு ஆய் மூவடி மாவலியை வேண்டி தான் அமர ஏழ் உலகும் அளந்த வென்றித் தனி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்- தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதி செழு மாட மாளிகைகள் கூடம்தோறும் ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (6)
To bring back his wife Sita who plays with a soft ball with her hands, our lord shot his killing arrows and cut off t…
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன் அந்தம் இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்மின்- செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (7)
The Māyon broke the tusks of the elephant Kuvalayābeeḍam and killed it, conquered the young seven bulls, danced the K…
கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ விடை அடர்த்து குரவை கோத்து வம்பு அவிழும் மலர்க் குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்மின்- செம் பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத் திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும் அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (8)
See, the tall wide-shouldered lord, the god of the gods, famous and victorious holding a discus in his beautiful hand…
ஊடு ஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும் ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற நீடு ஏறு பெரு வலித் தோள் உடைய வென்றி நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்மின்- சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி திருவிழவில் மணி அணிந்த திண்ணைதோறும் ஆடு ஏறு மலர்க் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (9) ---------- 69. சிறுபுலியூர்ச் சலசயனம்
He, the highest god and the king of the gods, who took the forms of a boar, a fish, and a man-lion and created, prote…
பன்றி ஆய் மீன் ஆகி அரி ஆய் பாரைப் படைத்து காத்து உண்டு உமிழ்ந்த பரமன்-தன்னை அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல் ஒன்றினொடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகு ஆளும் உம்பர்-தாமே (10)
O devotees! Think of removing evil thoughts from your mind and worship the ankleted feet of the lord who stays in you…
கள்ளம் மனம் விள்ளும் வகை கருதி கழல் தொழுவீர் வெள்ளம் முது பரவைத் திரை விரிய கரை எங்கும் தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர்ச் சலசயனத்து உள்ளும் எனது உள்ளத்துளும் உறைவாரை உள்ளீரே (1)
Do not listen to the preaching of the Jains who vow to wander on the streets and beg for rice and porridge. Come and …
தெருவில் திரி சிறு நோன்பியர் செஞ் சோற்றொடு கஞ்சி மருவிப் பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்து அடைவீர்- திருவில் பொலி மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்து உருவக் குறள் அடிகள் அடி உணர்மின்-உணர்வீரே (2)
O devotees, worship the lord and he will remove your bad karma. I think of nothing even for moment except the feet of…
பறையும் வினை தொழுது உய்ம்மின் நீர்-பணியும் சிறு தொண்டீர் அறையும் புனல் ஒருபால் வயல் ஒருபால் பொழில் ஒருபால் சிறை வண்டு இனம் அறையும் சிறுபுலியூர்ச் சலசயனத்து உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே (3)
Thirumāl, the lord of Indra the king of gods, who keeps with him the axe-carrying Shiva with the moon that floats in …
வான் ஆர் மதி பொதியும் சடை மழுவாளியொடு ஒருபால் தான் ஆகிய தலைவன்-அவன் அமரர்க்கு அதிபதி ஆம் தேன் ஆர் பொழில் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து ஆன் ஆயனது அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே (4)
The place where the gods in the sky come to pray and say, “Our father, give us your grace so we will not reach cruel …
நந்தா நெடு நரகத்திடை நணுகாவகை நாளும் எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறி நீர்ச் செந்தாமரை மலரும் சிறுபுலியூர்ச் சலசயனத்து அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே (5)
He stays in the temple Salasayanam in Chiṛupuliyur surrounded with flourishing fields where dark neelam, ambal and lo…
முழு நீலமும் மலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவிக் கழுநீரொடு மடவார்-அவர் கண் வாய் முகம் மலரும் செழு நீர் வயல் தழுவும் சிறுபுலியூர்ச் சலசயனம் தொழும் நீர்மை-அது உடையார் அடி தொழுவார் துயர் இலரே (6)
O Māyan, you stay in the cool Thirumalirunjolai hills that rise to the sky. Tell me, are you in the four Vedas? Are y…
சேய் ஓங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும் மாயா எனக்கு உரையாய் இது-மறை நான்கின் உளாயோ? தீ ஓம்புகை மறையோர் சிறுபுலியூர்ச் சலசயனத்- தாயோ? உனது அடியார் மனத்தாயோ? அறியேனே (7)
O lord, you are pure. You rest on five-headed Adishesha on the ocean and in the temple Salasayanam in Chiṛupuliyur wh…
மை ஆர் வரி நீல மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார் செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சலசயனத்து ஐ வாய் அரவு-அணைமேல் உறை அமலா அருளாயே (8)
You have the color of a lovely dark cloud, the form of fire, of cool water, of a large mountain and of all other thin…
கரு மா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா பெரு மால் வரை உருவா பிற உருவா நினது உருவா திரு மா மகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து அரு மா கடல் அமுதே உனது அடியே சரண் ஆமே (9) ------- 70. திருக்கண்ணமங்கை
Kaliyan the chief of Thirumangai surrounded with flourishing fields composed a Tamil garland of pāsurams with music, …
சீர் ஆர் நெடு மறுகின் சிறுபுலியூர்ச் சலசயனத்து ஏர் ஆர் முகில் வண்ணன்-தனை இமையோர் பெருமானை கார் ஆர் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை பாரார் இவை பரவித் தொழப் பாவம் பயிலாவே (10)
I searched for him and in Thirukaṇṇamangai I found the lord who is the large ocean, a heroic bull, female and male, t…
பெரும் புறக் கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண் இல் முனிவர்க்கு அருள் தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை பத்தர் ஆவியை நித்திலத் தொத்தினை அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதி இன் சுவைக் கரும்பினை கனியை-சென்று நாடி -கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (1)
Thirumāl who is truth and falsehood and the result of true tapas gives moksha to all. He, the dark ocean-colored one …
மெய்ந் நலத் தவத்தை திவத்தைத் தரும் மெய்யை பொய்யினை கையில் ஓர் சங்கு உடை மைந் நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆல் இலைப் பள்ளி கொள் மாயனை நென்னலை பகலை இற்றை நாளினை நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை கன்னலை கரும்பினிடைத் தேறலை- கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (2)
Our Esan with a wonderful nature gives us his grace and happily keeps on his body Shiva with the beautiful fragrant-h…
எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை வாச வார் குழலாள் மலை-மங்கை-தன் பங்கனைப் பங்கில் வைத்து உகந்தான்-தன்னை பான்மையை பனி மா மதியம் தவழ் மங்குலை சுடரை வட மா மலை உச்சியை நச்சி நாம் வணங்கப்படும் கங்குலை பகலை-சென்று நாடி -கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (3)
He, the young Māyan who drank poisonous milk from the breasts of the devil Putanā and is worshipped by sages with min…
பேய் முலைத் தலை நஞ்சு உண்ட பிள்ளையை தெள்ளியார் வணங்கப்படும் தேவனை மாயனை மதிள் கோவல் இடைகழி மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள் ஈசனை இலங்கும் சுடர்ச் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை காசினை மணியை-சென்று நாடி- கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (4)
I searched for him who is wind and water and found him in Thirukaṇṇamangai, the omnipresent lord of the Himalayas, st…
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனை கையில் ஆழி ஒன்று ஏந்திய கூற்றினை குரு மா மணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை காற்றினை புனலை-சென்று நாடி- கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (5)
The lord who carries a discus in his hand, is a bright precious coral, a pot where jewels are stored, the beloved of …
துப்பனை துரங்கம் படச் சீறிய தோன்றலை சுடர் வான் கலன் பெய்தது ஓர் செப்பினை திருமங்கை மணாளனை தேவனை திகழும் பவளத்து ஒளி ஒப்பனை உலகு ஏழினை ஊழியை ஆழி ஏந்திய கையனை அந்தணர் கற்பினை-கழுநீர் மலரும் வயல் கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (6)
The divine god of the gods, the best among the three gods, is a shining light, fire, water the sky and the earth. He …
திருத்தனை திசை நான்முகன் தந்தையை தேவ-தேவனை மூவரில் முன்னிய விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினை கண்ணுதல் கூடிய அருத்தனை அரியை பரி கீறிய அப்பனை அப்பில் ஆர் அழல் ஆய் நின்ற கருத்தனை-களி வண்டு அறையும் பொழில்- கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (7)
He is like an angry elephant threw the Asuran that came as a calf at the vilam fruit that was an Asuran and killed th…
வெம் சினக் களிற்றை விளங்காய் விழக் கன்று வீசிய ஈசனை பேய் மகள் துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலை தோன்றல் வாள் அரக்கன் கெடத் தோன்றிய நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சிமேல் நிற்கும் நம்பியை கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சனை- கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (8)
Thirumāl is music and its sweetness, the butter in milk, the sky, shining light, the brightness of a lamp and sacrifi…
பண்ணினை பண்ணில் நின்றது ஓர் பான்மையை பாலுள் நெய்யினை மால் உரு ஆய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி-தன்னை மண்ணினை மலையை அலை நீரினை மாலை மா மதியை மறையோர்-தங்கள் கண்ணினை-கண்கள் ஆரளவும் நின்று- கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (9) ---------- 71. திருக்கண்ணபுரம்: 1
Kaliyan composed ten beautiful Tamil pāsurams describing how he found the god of Thirukaṇṇamangai. If devotees recite…
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன் என்று காதலால் கலிகன்றி உரைசெய்த வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை வல்லர் ஆய் உரைப்பார் மதியம் தவழ் விண்ணில் விண்ணவர் ஆய் மகிழ்வு எய்துவர் மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய கண்ண நின்-தனக்கும் குறிப்பு ஆகில் கற்கலாம் கவியின் பொருள்-தானே (10)
My daughter’s breasts have become pale. She is in love with the ocean-colored god and she says, “A bow, a shining gol…
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால் மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால் முலை இலங்கு பூம் பயலை முன்பு ஓட அன்பு ஓடி இருக்கின்றாளால்- கலை இலங்கு மொழியாளர் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (1)
My daughter says, “Carrying a bow in his hands, he fought with his enemies and conquered them.” She says, “In one han…
செருவரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்தது? என்கின்றாளால் பொரு வரை முன் போர் தொலைத்த பொன் ஆழி மற்று ஒரு கை என்கின்றாளால் ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பு இலா என் அப்பா என்கின்றாளால்- கரு வரைபோல் நின்றானை கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (2)
My daughter says, “He wears a thulasi garland on his crown studded with precious diamonds.” She says, “He wears beaut…
துன்னு மா மணி முடிமேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால் மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால் பொன்னின் மா மணி ஆரம் அணி ஆகத்து இலங்குமால் என்கின்றாளால்- கன்னி மா மதிள் புடை சூழ் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (3)
My daughter says, “On his chest he wears a cool thulasi garland where bees swarm. My dear god who rides on an eagle b…
தார் ஆய தண் துளப வண்டு உழுத வரை மார்பன் என்கின்றாளால் போர் ஆனைக் கொம்பு ஒசித்த புள்பாகன் என் அம்மான் என்கின்றாளால் ஆரானும் காண்மின்கள் அம் பவளம் வாய் அவனுக்கு என்கின்றாளால்- கார் வானம் நின்று அதிரும் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (4)
My daughter says, “He has beautiful lotus hands and feet.” She says, “The beauty of his precious crown and his golden…
அடித்தலமும் தாமரையே அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் முடித்தலமும் பொன் பூணும் என் நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால் வடித் தடங் கண் மலரவளோ வரை ஆகத்துள் இருப்பாள்? என்கின்றாளால்- கடிக் கமலம் கள் உகுக்கும் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (5)
My daughter says, “He has a thousand names. He is generous, he is generous!” She says, “His ears are decorated with b…
பேர் ஆயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால் ஏர் ஆர் கன மகர குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால் நீர் ஆர் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்- கார் ஆர் வயல் மருவும் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (6)
My daughter says, “He is wearing a red garment tied with a belt.” She says, “His two fair beautiful feet and lovely h…
செவ் அரத்த உடை ஆடை-அதன்மேல் ஓர் சிவளிகைக் கச்சு என்கின்றாளால் அவ் அரத்த அடி-இணையும் அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் மை வளர்க்கும் மணி உருவம் மரகதமோ? மழை முகிலோ? என்கின்றாளால்- கை வளர்க்கும் அழலாளர் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (7)
My daughter says, “He comes riding on a victorious eagle in the middle of a mandram in the village.” She says, “For I…
கொற்றப் புள் ஒன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால் வெற்றிப் போர் இந்திரற்கும் இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால் பெற்றக்கால் அவன் ஆகம் பெண் பிறந்தோம் உய்யோமோ? என்கின்றாளால்- கற்ற நூல் மறையாளர் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (8)
My daughter says, “His shining crown is adorned with fragrant garlands swarming with bees.” She says, “ I love him so…
வண்டு அமரும் வனமாலை மணி முடிமேல் மணம் நாறும் என்கின்றாளால் உண்டு இவர்பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால் பண்டு இவரைக் கண்டு அறிவது எவ் ஊரில்? யாம் என்றே பயில்கின்றாளால்- கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? (9) ----------- 72.திருக்கண்ணபுரம்: 2
Kaliyan the poet composed a beautiful garland of ten Tamil pāsurams on the god of Thirukkaṇṇapuram surrounded by a fr…
மா வளரும் மென் நோக்கி மாதராள் மாயவனைக் கண்டாள் என்று கா வளரும் கடி பொழில் சூழ் கண்ணபுரத்து அம்மானைக் கலியன் சொன்ன பா வளரும் தமிழ்-மாலை பன்னிய நூல் இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் பூ வளரும் கற்பகம் சேர் பொன் உலகில் மன்னவர் ஆய்ப் புகழ் தக்கோரே (10)
Her mother says, "O faultless god of the gods with the lovely color of a precious jewel who know everything, my daugh…
தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர் வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணர் ஓ துள்ளு நீர்க் கண்ணபுரம் தொழுதாள் இவள் கள்வியோ? கை வளை கொள்வது தக்கதே? (1)
“My daughter stands in the courtyard where the bright moon shines and looks around and points to Kaṇṇapuram and says,…
நீள் நிலாமுற்றத்து நின்று இவள் நோக்கினாள் காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள் பாணனார் திண்ணம் இருக்க இனி இவள் நாணுமோ? நன்று நன்று நறையூரர்க்கே (2)
“My daughter prattles and says, ‘Thiruvenkaṭam is a mountain filled with divine waterfalls that flow with abundant wa…
அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய்- வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள் பெருகு சீர்க் கண்ணபுரம் என்று பேசினாள் உருகினாள் உள்மெலிந்தாள் இது என்கொலோ? (3)
“My daughter doesn’t eat all day. She doesn’t sleep. She is innocent and young, not old enough to fall in love yet. H…
உண்ணும் நாள் இல்லை உறக்கமும்-தான் இல்லை பெண்மையும் சால நிறைந்திலள் பேதை-தான் கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் கார்க் கடல் வண்ணர்மேல் எண்ணம் இவட்கு இது என்கொலோ? (4)
“My lovely daughter worships Kaṇṇapuram where Kaṇṇan stays. When she says, ‘I am a girl and I love the god,’ she is t…
கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் காரிகை பெண்மை என்? தன்னுடை உண்மை உரைக்கின்றாள் வெண்ணெய் உண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினால் வண்ணமும் பொன் நிறம் ஆவது ஒழியுமே (5)
“My daughter says, ‘I came to Thirukaṇṇapuram from Thirumalai in the north to be with the lord.’ My beautiful daughte…
வட வரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று பேசினாள் மடவரல் மாதர் என் பேதை இவர்க்கு இவள் கடவது என்-கண் துயில் இன்று இவர் கொள்ளவே? (6)
“If my daughter hears the sound of the rolling waves of the ocean or sees the cool moon that shines bright she feels …
தரங்க நீர் பேசினும் தண் மதி காயினும் இரங்குமோ? எத்தனை நாள் இருந்து எள்கினாள் துரங்கம் வாய் கீண்டு உகந்தானது தொன்மை ஊர் அரங்கமே என்பது இவள்-தனக்கு ஆசையே (7)
“All devotees go to Thirukkaṇṇapuram to worship your feet and you protect them. My daughter sees that and wants to go…
தொண்டு எல்லாம் நின் அடியே தொழுது உய்யுமா கண்டு தான் கண்ணபுரம் தொழப் போயினாள் வண்டு உலாம் கோதை என் பேதை மணி நிறம் கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே? (8)
“My daughter does not have all her teeth yet. Her hair has not yet grown thick and you can’t say that she understands…
முள் எயிறு ஏய்ந்தில கூழை முடிகொடா தெள்ளியள் என்பது ஓர் தேசு இலள் என் செய்கேன் கள் அவிழ் சோலைக் கணபுரம் கை தொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே? (9) ---------- 73. திருக்கண்ணபுரம்: 3
Kaliyan, Yama to his enemies, praised by all the people of the world, the king of Thirumangai filled with clouds in t…
கார் மலி கண்ணபுரத்து எம் அடிகளைப் பார் மலி மங்கையர்-கோன் பரகாலன் சொல் சீர் மலி பாடல் இவை பத்தும் வல்லவர் நீர் மலி வையத்து நீடு நிற்பார்களே (10)
கார் மலி கண்ணபுரத்து எம் அடிகளைப் பார் மலி மங்கையர்-கோன் பரகாலன் சொல் சீர் மலி பாடல் இவை பத்தும் வல்லவர் நீர் மலி வைய…
கரை எடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும் திரை எடுத்து வரு புனல் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடைபெயர வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன்-என் வரி வளையே (1)
She says, “ My bangles grow loose and fall from my arms because I love him who rests on the ocean on the snake bed of…
அரி விரவு முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும் தெரிவு அரிய மணி மாடத் திருக்கண்ணபுரத்து உறையும் வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தறு கண் கரி வெருவ மருப்பு ஒசித்தாற்கு இழந்தேன்-என் கன வளையே (2)
She says, “My tight bangles grow loose and fall from my arms because I love the lovely-eyed lord who fought and kille…
துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம் திங்கள் மா முகில் துணிக்கும் திருக்கண்ணபுரத்து உறையும் பைங் கண் மால் விடை அடர்த்து பனி மதி கோள் விடுத்து உகந்த செங் கண் மால் அம்மானுக்கு இழந்தேன்-என் செறி வளையே (3)
She says, “My golden bangles grow loose and fall from my arms because I love the lord who was tied to a grinding ston…
கணம் மருவும் மயில் அகவு கடி பொழில் சூழ் நெடு மறுகின் திணம் மருவு கன மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்க போய் உரலோடும் புணர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன்-என் பொன் வளையே (4)
She says, “ My curved bangles grow loose and fall from my arms, for the lord who, as a little boy Kaṇṇan, ran around …
வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள் தீ எடுத்து மறை வளர்க்கும் திருக்கண்ணபுரத்து உறையும் தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன்-என் வரி வளையே (5)
She says, “My shining bangles grow loose and fall from my arms, because I love the dear lord who fought with Hiranyan…
மடல் எடுத்த நெடுந் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம் திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக்கண்ணபுரத்து உறையும் அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய அணி உகிரால் உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன்-என் ஒளி வளையே (6)
She says, “My shining bangles grow loose and fall from my arms because I love the dear lord who swallowed all the eig…
வண்டு அமரும் மலர்ப் புன்னை வரி நீழல் அணி முத்தம் தெண் திரைகள் வரத் திரட்டும் திருக்கண்ணபுரத்து உறையும் எண் திசையும் எழு கடலும் இரு நிலனும் பெரு விசும்பும் உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன்-என் ஒளி வளையே (7)
She says, “My tight bangles grow loose and fall from my arms because I love the lord who rests on the snake bed Adise…
கொங்கு மலி கருங் குவளை கண் ஆகத் தெண் கயங்கள் செங் கமலம் முகம் அலர்த்தும் திருக்கண்ணபுரத்து உறையும் வங்கம் மலி தடங் கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற செங்கமலநாபனுக்கு இழந்தேன்-என் செறி வளையே (8)
She says, “My bangles grow loose and fall from my arms because I love the generous lord with a thousand names who res…
வார் ஆளும் இளங் கொங்கை நெடும் பணைத் தோள் மடப் பாவை சீர் ஆளும் வரை மார்வன் திருக்கண்ணபுரத்து உறையும் பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவு-அணைமேல் பேராளர் பெருமானுக்கு இழந்தேன்-என் பெய் வளையே (9)
Thirumangai, the famous king of Thiruvāli with its flourishing fields composed ten beautiful Tamil pāsurams on Vamana…
தே மருவு பொழில் புடை சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன் காமரு சீர்க் கலிகன்றி கண்டு உரைத்த தமிழ்-மாலை நா மருவி இவை பாட வினை ஆய நண்ணாவே (10) --------- 74. திருக்கண்ணபுரம்: 4
தே மருவு பொழில் புடை சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன் காமரு சீர்க் கலிகன்றி கண்ட…
விண்ணவர்-தங்கள் பெருமான் திருமார்வன் மண்ணவர் எல்லாம் வணங்கும் மலி புகழ் சேர் கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல் வண்ண நறுந் துழாய் வந்து ஊதாய்-கோல் தும்பீ (1)
She says, “O kol bee, come and blow on the fragrant thulasi garland of the ancient god who created the Vedas, and is …
வேத முதல்வன் விளங்கு புரி நூலன் பாதம் பரவிப் பலரும் பணிந்து ஏத்தி காதன்மை செய்யும் கண்ணபுரத்து எம் பெருமான் தாது நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (2)
She says, “ O kol bee, come and blow on the fragrant thulasi garland swarming with bees of the lord who is the first …
விண்ட மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி? அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும் கண்டு வணங்கும் கண்ணபுரத்து எம் பெருமான் வண்டு நறுந் துழாய் வந்து ஊதாய்-கோல் தும்பீ (3)
She says, “ O kol bee, the dark cloud-colored lord wbo took the form of a fish, a turtle and a famed man-lion stays i…
நீர் மலிகின்றது ஓர் மீன் ஆய் ஓர் ஆமையும் ஆய் சீர் மலிகின்றது ஓர் சிங்க உரு ஆகி கார் மலி வண்ணன் கண்ணபுரத்து எம் பெருமான் தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (4)
She says, “O kol bee, what do you gain by blowing on all these beautiful flowers? Come, blow on the pollen of the coo…
ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி? பார் ஆர் உலகம் பரவ பெருங் கடலுள் கார் ஆமை ஆன கண்ணபுரத்து எம் பெருமான் தார் ஆர் நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (5)
She says, “O kol bee, the lord with a discus in his right hand, the highest light who embraces Lakshmi on his chest s…
மார்வில் திருவன் வலன் ஏந்து சக்கரத்தன் பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடிமேல் தாரில் நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (6)
She says, “O kol bee, our dear lord, the father of Kāma, Madhusudanan, Madhavan who was born as the son of Dasaratha …
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் தார் மன்னு தாசரதி ஆய தடமார்வன் காமன்-தன் தாதை கண்ணபுரத்து எம் பெருமான் தாம நறுந் துழாய் தாழ்ந்து ஊதாய்-கோல் தும்பீ (7)
She says, “ O kol bee, do not blow on the neelam flowers and other beautiful blossoms that bloom on the banks of the …
நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில் சால மலர் எல்லாம் ஊதாதே வாள் அரக்கர் காலன் கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல் கோல நறுந் துழாய் கொண்டு ஊதாய்-கோல் தும்பீ (8)
She says, “O kol bee, the ancient god of the gods in the sky who has the dark color of a fragrant kāyā flower, the be…
நந்தன் மதலை நில மங்கை நல் துணைவன் அந்தம் முதல்வன் அமரர்கள்-தம் பெருமான் கந்தம் கமழ் காயா வண்ணன் கதிர் முடிமேல் கொந்து நறுந் துழாய் கொண்டு ஊதாய்-கோல் தும்பீ (9) -------- 75. திருக்கண்ணபுரம்: 5
Kaliyan, the king of rich Vayalāli surrounded with groves swarming with bees, who conquered many lands, composed ten …
வண்டு அமரும் சோலை வயல் ஆலி நல் நாடன் கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை கொண்டல் நிற வண்ணன் கண்ணபுரத்தானைத் தொண்டரோம் பாட நினைந்து ஊதாய்-கோல் தும்பீ (10)
She says, “My heart went to the lord who removed the chains from the ankles of his father Nandagopan. I am waiting to…
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்-தன் சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப் பெறும் அளவு இருந்தேனை அந்திகாவலன் அமுது உறு பசுங் கதிர் அவை சுட அதனோடும் மந்தமாருதம் வன முலை தடவந்து வலிசெய்வது ஒழியாதே (1)
She says, “ My heart, longing for the garland on his divine chest, has gone to him who is the younger brother of whit…
மாரி மாக் கடல் வளைவணற்கு இளையவன் வரை புரை திருமார்வில் தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்தது ஓர் துணை காணேன் ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும் தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஒன்று அறியேனே (2)
She says, “The bangles on my arms have grown loose and fallen. Is this because of the magic of that cowherd who drank…
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில் வளைகளும் இறை நில்லா பேயின் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ? தூய மா மதிக் கதிர் சுட துணை இல்லை இணை முலை வேகின்றதால் ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சேல் என்பார் இலையே (3)
She says, “The young god who blew his white conch on the terrible battlefield where mighty ankleted enemy kings grew …
கயம் கொள் புண் தலைக் களிறு உந்து வெம்திறல் கழல் மன்னர் பெரும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர் தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலைமேல் இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை எனக்கு எனப் பெறலாமே (4)
She says, “The lord who shot his arrows, making holes in seven trees, carried a discus in his hand, fought with the R…
ஏழு மா மரம் துளைபட சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால் தோழி நாம் இதற்கு என் செய்தும்? துணை இல்லை சுடர் படு முதுநீரில் ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவது ஓர் அந்தி வந்து அடைகின்றதே (5)
She says, “The young lord who bent his bow and shot his fiery arrows, destroying Lanka surrounded by the ocean with i…
முரியும் வெண் திரை முது கயம் தீப்பட முழங்கு அழல் எரி அம்பின் வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன்? எரியும் வெம் கதிர் துயின்றது பாவியேன் இணை நெடுங் கண் துயிலா கரிய நாழிகை ஊழியின் பெரியன கழியும் ஆறு அறியேனே (6)
She says, “Our dear lord who built a bridge, crossed the ocean, fought with Rāvaṇa the king of Lanka in a terrible wa…
கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரை ஆகம் மலங்க வெம் சமத்து அடு சரம் துரந்த எம் அடிகளும் வாரானால் இலங்கு வெம் கதிர் இள மதி-அதனொடும் விடை மணி அடும் ஆயன் விலங்கல் வேயினது ஓசையும் ஆய் இனி விளைவது ஒன்று அறியேனே (7)
She says, “Kaṇṇan the brother of the sage Balaraman who became angry at the unjust enemy kings and killed them with h…
முழுது இவ் வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவு எய்த மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய மைந்தனும் வாரானால் ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை அடங்க அம் சிறை கோலித் தழுவும் நள் இருள் தனிமையின் கடியது ஓர் கொடு வினை அறியேனே (8)
She says, “I had a dream that the god of Thirukkaṇṇapuram surrounded with strong walls came to me and made my heart j…
கனம் செய் மா மதிள் கணபுரத்தவனொடும் கனவினில் அவன் தந்த மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக இருந்தேனை சினம் செய் மால் விடைச் சிறு மணி ஓசை என் சிந்தையைச் சிந்துவிக்கும் அனந்தல் அன்றிலின் அரி குரல் பாவியேன் ஆவியை அடுகின்றதே (9) ------------ 76. திருக்கண்ணபுரம்: 6
Kaliyan the chief of Thirumangai surrounded by beautiful cloud-covered groves composed pāsurams describing the love p…
தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன் திண் தோள் நிமிர சிலை வளைய சிறிதே முனிந்த திருமார்வன் வண்டு ஆர் கூந்தல் மலர்-மங்கை வடிக் கண் மடந்தை மா நோக்கம் கண்டான் கண்டுகொண்டு உகந்த கண்ணபுரம் நாம் தொழுதுமே. (1)
O devotees, I have found a way to be saved. Our divine strong-shouldered lord became angry, bent his bow and made the…
பொருந்தா அரக்கர் வெம் சமத்துப் பொன்ற அன்று புள் ஊர்ந்து பெருந் தோள் மாலி தலை புரள பேர்ந்த அரக்கர் தென் இலங்கை இருந்தார்-தம்மை உடன்கொண்டு அங்கு எழில் ஆர் பிலத்துப் புக்கு ஒளிப்ப கருந் தாள் சிலை கைக்கொண்டான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே 2
Our lord who carried a strong bow in his hand and shot arrows and killed all the Rākshasas in southern Lanka and who …
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார்-கோவை அல்லல் செய்து வெம் சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான் வல் ஆள் அரக்கர் குலப்பாவை வாட முனி-தன் வேள்வியைக் கல்விச் சிலையால் காத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (3)
Our lord who fought with Thādaga, the daughter of a Rākshasa family and killed her when she disturbed the sacrifices …
மல்லை முந்நீர் அதர்பட வரி வெம் சிலை கால் வளைவித்து கொல்லை விலங்கு பணிசெய்ய கொடியோன் இலங்கை புகல் உற்று தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவ கல்லால் கடலை அடைத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (4)
When Rāma went to bring back his wife Sita, and shot his arrows at the ocean making Varuṇa the god of the sea come to…
ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர்-தம் ஓமம் ஆகி ஊழி ஆகி உவரி சூழ்ந்த நெடும் புணரி சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன் காமன் பயந்தான் கருதும் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (5)
Our lord, the father of Kāma, is the eon itself. He took the forms of a turtle, a man-lion and a swan to fight with t…
வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன் திருந்தா அரக்கர் தென் இலங்கை செந் தீ உண்ண சிவந்து ஒருநாள் பெருந் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன் கருந் தாள் களிறு ஒன்று ஒசித்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (6)
O innocent heart, do not worry— the results of bad karma will not come to us. Our lord who burned up Lanka in the sou…
இலை ஆர் மலர்ப் பூம் பொய்கைவாய் முதலை-தன்னால் அடர்ப்புண்டு கொலை ஆர் வேழம் நடுக்கு உற்றுக் குலைய அதனுக்கு அருள்புரிந்தான் அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் கலை மாச் சிலையால் எய்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (7)
He killed the murderous crocodile that caught the elephant Gajendra when the elephant went to get flowers from a pond…
மால் ஆய் மனமே அருந் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க கால் ஆர் மருதும் காய் சினத்த கழுதும் கத மா கழுதையும் மால் ஆர் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து காலால் சகடம் பாய்ந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (8)
O mind, you are confused— do not be plunged in deep sorrow and suffer. The lord who destroyed the Marudu trees and ki…
குன்றால் மாரி பழுது ஆக்கி கொடி ஏர் இடையாள் பொருட்டாக வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன் சென்றான் தூது பஞ்சவர்க்கு ஆய் திரி கால் சகடம் சினம் அழித்து கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே (9)
The Māyan, the lord of the gods in the sky, carried Govardhana mountain as an umbrella and protected the cows and the…
கரு மா முகில் தோய் நெடு மாடக் கண்ணபுரத்து எம் அடிகளை திரு மா மகளால் அருள்மாரி செழுநீர் ஆலி வள நாடன் மருவு ஆர் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் இரு மா நிலத்துக்கு அரசு ஆகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே (10) --------- 77. திருக்கண்ணபுரம்: 7
Kaliyan, the generous king of Thirumangai in flourishing Thiruvāli, composed ten pāsurams on the lord of Thirukaṇṇapu…
வியம் உடை விடை இனம் உடைதர மட மகள் குயம் மிடை தட வரை அகலம்-அது உடையவர்- நயம் உடை நடை அனம் இளையவர் நடை பயில் கயம் மிடை கணபுரம்-அடிகள்-தம் இடமே (1)
He with a wide mountain-like chest who killed seven bulls to marry beautiful Nappinnai stays in Thirukkaṇṇapuram fill…
இணை மலி மருது இற எருதினொடு இகல் செய்து துணை மலி முலையவள் மணம் மிகு கலவியுள்- மணம் மலி விழவினொடு அடியவர் அளவிய கணம் மலி கணபுரம்-அடிகள்-தம் இடமே (2)
The lord who fought with seven strong bulls and married lovely-breasted Nappinnai in a lavish ceremony and embraced h…
புயல் உறு வரை-மழை பொழிதர மணி நிரை மயல் உற வரை குடை எடுவிய நெடியவர்- முயல் துளர் மிளை முயல் துள வள விளை வயல் கயல் துளு கணபுரம்-அடிகள்-தம் இடமே (3)
Our faultless Neḍumāl who carried Govardhana mountain as an umbrella and protected the cows and the cowherds from the…
ஏதலர் நகைசெய இளையவர் அளை வெணெய் போது செய்து அமரிய புனிதர்-நல் விரை மலர் கோதிய மதுகரம் குலவிய மலர்-மகள் காதல்செய் கணபுரம்-அடிகள்-தம் இடமே (4)
When Kaṇṇan stole the churned butter that was kept by the young cowherd girls they saw him and laughed at him. He, th…
தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுது எழ அண்டமொடு அகல்-இடம் அளந்தவர் அமர்செய்து விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழக் கண்டவர் கணபுரம்-அடிகள்-தம் இடமே (5)
Our lord who fought with the Rākshasas, killing them and burning Lanka surrounded with forts, and measured the earth …
மழுவு இயல் படை உடையவன் இடம் மழை முகில் தழுவிய உருவினர்-திருமகள் மருவிய கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண் எழுவிய கணபுரம்-அடிகள்-தம் இடமே (6)
The lord was born with Balaraman who carries a mazhu weapon. Embracing beautiful Lakshmi, he stays in Thirukkaṇṇapura…
பரிதியொடு அணி மதி பனி வரை திசை நிலம் எரி தியொடு என இன இயல்வினர் செலவினர்- சுருதியொடு அரு மறை முறை சொலும் அடியவர் கருதிய கணபுரம்-அடிகள்-தம் இடமே (7)
The omnipresent lord who has the nature of the sun, the beautiful moon, the mountains filled with snow, the direction…
படி புல்கும் அடி-இணை பலர் தொழ மலர் வைகு கொடி புல்கு தட வரை அகலம்-அது உடையவர்- முடி புல்கு நெடு வயல் படை செல அடி மலர் கடி புல்கு கணபுரம்-அடிகள்-தம் இடமே (8)
Embracing beautiful vine-like Lakshmi on his chest as many devotees worship his feet he stays in Thirukkaṇṇapuram whe…
புலம் மனும் மலர்மிசை மலர்-மகள் புணரிய நிலமகள் என இன மகளிர்கள் இவரொடும் வலம் மனு படையுடை மணி வணர்-நிதி குவைக் கலம் மனு கணபுரம்-அடிகள்-தம் இடமே (9)
The lord who carries a discus in his right hand and stays with Lakshmi and with the earth goddess surrounded by their…
மலி புகழ் கணபுரம் உடைய எம் அடிகளை வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கையர் கலியன தமிழ் இவை விழுமிய இசையினொடு ஒலி சொலும் அடியவர் உறு துயர் இலரே (10) --------- 78. திருக்கண்ணபுரம்: 8
Kaliyan, the chief of Thirumangai filled with flourishing fields and forts composed ten Tamil pāsurams on the famous …
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவின் மீன் ஆய் வந்து வியந்து உய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன் ஆனா உருவில் ஆன் ஆயன்-அவனை-அம் மா விளை வயலுள் கான் ஆர் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (1)
The cool lotus-eyed Kaṇṇan, the cowherd took the form of a strong fish and saved the world from the storm when the wa…
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய் விலங்கல் திரியத் தடங் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை- கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (2)
I am the devotee of the wise lord who took the form of a turtle and held Mandara mountain as a stick to churn the mil…
பார் ஆர் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பின் ஏர் ஆர் உருவத்து ஏனம் ஆய் எடுத்த ஆற்றல் அம்மானை- கூர் ஆர் ஆரல் இரை கருதி குருகு பாய கயல் இரியும் கார் ஆர் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (3)
When the ocean rose and covered the whole earth with water our mighty father took the form of a boar with bent tusks …
உளைந்த அரியும் மானிடமும் உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றோன் அகலம் வெம் சமத்துப் பிளந்து வளைந்த உகிரானை-பெருந் தண் செந்நெல் குலை தடிந்து களம் செய் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (4)
He took the form of a man-lion, angrily went to his enemy Hiranyan, fought with him and split open his chest with his…
தொழும் நீர் வடிவின் குறள் உருவு ஆய் வந்து தோன்றி மாவலிபால் முழுநீர் வையம் முன் கொண்ட மூவா உருவின் அம்மானை- உழும் நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும் கழுநீர் மலரும் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (5)
Our father took the form of a dwarf, went to the sacrifice of king Mahabali, asked him for three feet of land and mea…
வடிவாய் மழுவே படை ஆக வந்து தோன்றி மூவெழுகால் படி ஆர் அரசு களைகட்ட பாழியானை அம்மானை- குடியா வண்டு கொண்டு உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும் கடி ஆர் புறவின் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (6)
Our father took the form of Balarama carrying a mazhu weapon and he the god of Thiruppāzhi conquered twenty generatio…
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி வெய்ய சீற்றக் கடி இலங்கை குடிகொண்டு ஓட வெம் சமத்துச் செய்த வெம்போர் நம்பரனை-செழுந் தண் கானல் மணம் நாறும் கைதை வேலிக் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (7)
Our highest lord was born as the undefeated king Rama, fought a cruel war in guarded Lanka with his enemies the angry…
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒருபால் தோன்ற தான் தோன்றி வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண்பால் செல்ல வெம் சமத்துச் செற்ற கொற்றத் தொழிலானை-செந்தீ மூன்றும் இல் இருப்ப கற்ற மறையோர் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (8)
Born as Balarama with an earring shaped like a plow in one ear and a simple earring in the other, the victorious lord…
துவரிக் கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள் இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை- உவரி ஓதம் முத்து உந்த ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல் கவரி வீசும் கண்ணபுரத்து-அடியேன் கண்டுகொண்டேனே (9)
Our father who was born as Kaṇṇan on a dark midnight took away the affliction of the earth goddess whose sweet mouth …
மீனோடு ஆமை கேழல் அரி குறள் ஆய் முன்னும் இராமன் ஆய் தான் ஆய் பின்னும் இராமன் ஆய் தாமோதரன் ஆய் கற்கியும் ஆனான்-தன்னைக் கண்ணபுரத்து அடியன் கலியன் ஒலிசெய்த தேன் ஆர் இன் சொல் தமிழ்-மாலை செப்ப பாவம் நில்லாவே (10) ----- 79. திருக்கண்ணபுரம்: 9
He took the forms of a fish, a turtle, a boar, a man-lion, and a dwarf and was born on the earth as Rama, Balarama, P…
கைம் மான மத யானை இடர் தீர்த்த கரு முகிலை மைம் மான மணியை அணி கொள் மரகதத்தை எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள் அம்மானை-அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே (1)
The dark cloud-colored lord who saved the long-trunked Gajendra from the crocodile, is a precious emerald-colored jew…
தரு மான மழை முகிலை பிரியாது தன் அடைந்தார் வரும் மானம் தவிர்க்கும் மணியை அணி உருவின் திருமாலை அம்மானை அமுதத்தை கடல் கிடந்த பெருமானை-அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே (2)
Thirumāl, as generous as rain, dear as a mother to all, a lustrous jewel colored like a dark cloud that removes the t…
விடை ஏழ் அன்று அடர்த்து வெகுண்டு விலங்கல் உறப் படையால் ஆழி தட்ட பரமன் பரஞ்சோதி மடை ஆர் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ணபுரம் ஒன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ? (3)
The highest god, the light of heaven, who killed seven bulls to marry Nappinnai, became angry at the king Rāvaṇa, cro…
மிக்கானை மறை ஆய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை தக்கானை கடிகைத் தடங் குன்றின்மிசை இருந்த அக்காரக் கனியை-அடைந்து உய்ந்துபோனேனே (4)
The matchless, highest one, the bright light, sweet as a fruit, the creator of the Vedas who shines like a golden hil…
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ?- கொந்து ஆர் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்து உகந்த மைந்தா உன்னை என்றும் மறவாமை பெற்றேனே (5)
My father, you came to me, entered my heart and have not left me. This is enough for me. You are the young god of Kuḍ…
எஞ்சா வெம் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேற்கு அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை- நெஞ்சே நீ நினையாது இறைப்பொழுதும் இருத்திகண்டாய்- மஞ்சு ஆர் மாளிகை சூழ் வயல் ஆலி மைந்தனையே (6)
I do not want to go to cruel hell, I tremble even to think of it. O heart, he is the only one who can say, “Do not be…
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றான் ஆய் வளர்த்து என் உயிர் ஆகி நின்றானை முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை- எத்தால் யான் மறக்கேன்? இது சொல் என் ஏழை நெஞ்சே (7)
O lord, you removed the curse of the beautiful crescent moon and you are my life. When my father and mother gave birt…
கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெருங் கடலே பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை வற்றா நீர் வயல் சூழ் வயல் ஆலி அம்மானைப் பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே (8)
I, your devotee, was born in this world and plunged into the ocean of family life that wise people hate. Now I have r…
கண் ஆர் கண்ணபுரம் கடிகை கடி கமழும் தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்கம் மேல்திசையுள் விண்ணோர் நாள்மதியை விரிகின்ற வெம் சுடரை- கண் ஆரக் கண்டுகொண்டு களிக்கின்றது இங்கு என்றுகொலோ? (9)
He is the lord of beautiful Thirukkaṇṇapuram and Kaḍikachalam surrounded with fragrant cool lotus flowers. When will …
செரு நீர வேல் வலவன் கலிகன்றி மங்கையர்-கோன் கரு நீர் முகில் வண்ணன் கண்ணபுரத்தானை இரு நீர் இன் தமிழ் இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர் வரும் நீர் வையம் உய்ய இவை பாடி ஆடுமினே (10) -------- 80. திருக்கண்ணபுரம்: 10
Kaliyan, the chief of Thirumangai, conqueror of his enemies with a strong spear, composed ten sweet musical Tamil poe…
வண்டு ஆர் பூ மா மலர்-மங்கை மண நோக்கம் உண்டானே!-உன்னை உகந்து-உகந்து உன்-தனக்கே தொண்டு ஆனேற்கு என் செய்கின்றாய்? சொல்லு-நால்வேதம் கண்டானே கண்ணபுரத்து உறை அம்மானே (1)
You are the beloved of the beautiful Lakshmi on a lovely lotus swarming with bees. I worshiped and worshiped you happ…
பெரு நீரும் விண்ணும் மலையும் உலகு ஏழும் ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை அல்லால் வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும் கருதேன் நான்-கண்ணபுரத்து உறை அம்மானே (2)
You contain within yourself the wide oceans, the sky, the mountains and all the seven worlds. I will not even think t…
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான்-கண்ணபுரத்து உறை அம்மானே (3)
I will not make friends with those who think there are other gods. I am a slave only of your devotees. Whatever I say…
பெண் ஆனாள் பேர் இளங் கொங்கையின் ஆர் அழல்போல் உண்ணா நஞ்சு உண்டு உகந்தாயை உகந்தேன் நான்- மண் ஆளா வாள் நெடுங் கண்ணி மது மலராள் கண்ணாளா கண்ணபுரத்து உறை அம்மானே (4)
You drank the fire-like poisonous milk from the devil Putanā’s young breasts and killed her. You, the beloved of Laks…
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான் மற்று ஆரும் பற்று இலேன் ஆதலால் நின் அடைந்தேன் உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய்- கற்றார் சேர் கண்ணபுரத்து உறை அம்மானே (5)
I do not want any connection with parents and relatives. I have no affection for any other but have come to you. You …
ஏத்தி உன் சேவடி எண்ணி இருப்பாரைப் பார்த்திருந்து அங்கு நமன்-தமர் பற்றாது சோத்தம் நாம் அஞ்சுதும் என்று தொடாமை நீ காத்திபோல்-கண்ணபுரத்து உறை அம்மானே (6)
I found and stayed with your devotees who praise your divine feet and think of you alone. I worship you. I am afraid …
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவு-அணைமேல் துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன்தமர் கள்ளர்போல்-கண்ணபுரத்து உறை அம்மானே (7)
You rest on the snake Adisesha, your bed floating on the flood of white water with roaring waves. O generous lord, we…
மாண் ஆகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன் பூண் ஆகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன் பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும் காணேன் நான்-கண்ணபுரத்து உறை அம்மானே (8)
I think constantly of your heroic deeds, how you took the form of a dwarf and measured the world at Mahabali’s sacrif…
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டு ஆக மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையை பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய்-கண்ணபுரத்து உறை அம்மானே (9)
You have made me your devotee and all my bad karma has left me. You showed me how I can praise you with songs and kee…
கண்ட சீர்க் கண்ணபுரத்து உறை அம்மானை கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும் அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே (10) ------------ 81. திருக்கண்ணங்குடி
Kaliyan, the famous poet, the devotee of the dear lord, composed ten pāsurams on the god of Thirukaṇṇapuram praised b…
வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவி சங்கம் ஆர் அம் கை தட மலர் உந்தி சாம மா மேனி என் தலைவன்- அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம் அருங் கலை பயின்று எரி மூன்றும் செங் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (1)
The dark ocean-colored god with a conch in his hand and rests on shining Adisesha on the wide ocean rolling with wave…
கவள மா கதத்த கரி உய்ய-பொய்கைக் கராம் கொளக் கலங்கி உள் நினைந்து துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட-சுடு படை துரந்தோன்- குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர் கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (2)
When Gajendra, the elephant went to get flowers for the god, a crocodile caught his feet in the pond and he worshiped…
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன்- போது அலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து சீத ஒண் தென்றல் திசைதொறும் கமழும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (3)
The almighty god who took the form of a fish and saved the world from the storm at the end of the eon when darkness c…
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண் பன்றி ஆய் அன்று பார்-மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன்- ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து உயர் கொடி ஒளி வளர் மதியம் சென்று சேர் சென்னிச் சிகர நல் மாடத் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (4)
The lord who took the form of a boar with strong eyes, sharp white teeth and a body as large as a mountain, brought t…
மன்னவன் பெரிய வேள்வியில் குறள் ஆய் மூவடி நீரொடும் கொண்டு பின்னும் ஏழ் உலகும் ஈர் அடி ஆக பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்- அன்னம் மென் கமலத்து அணி மலர்ப் பீடத்து அலை புனல் இலைக் குடை நீழல் செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (5)
The lord who went to the king Mahabali’s sacrifice as a dwarf, asked for three feet of land and as the king gave the …
மழுவினால் அவனி அரசை மூவெழுகால் மணி முடி பொடிபடுத்து உதிரக் குழுவு வார் புனலுள் குளித்து வெம் கோபம் தவிர்ந்தவன்-குலை மலி கதலிக் குழுவும் வார் கமுகும் குரவும் நல் பலவும் குளிர் தரு சூதம் மாதவியும் செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாடத் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (6)
The lord who took the form of Balaraman, and conquered many kings with his mazu weapon, crushed their crowns, made th…
வான் உளார்-அவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார்-கோனை பானு நேர் சரத்தால் பனங்கனிபோலப் பரு முடி உதிர வில் வளைத்தோன்- கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆட கண முகில் முரசம் நின்று அதிர தேன் உலாம் வரி வண்டு இன் இசை முரலும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (7)
When Rāvaṇa, the king of Lanka surrounded with oceans with rolling waves, afflicted the gods in the sky with his valo…
அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்கு பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்- வரையின் மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிர் உதிர் முத்தும் திரை கொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (8)
Our lord who grew high in the sky and measured the world went to the Kauravas’ assembly as a messenger, and made hims…
பன்னிய பாரம் பார்-மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய மணி நெடுந் திண் தேர் மைத்துனற்கு உய்த்த மா மாயன்- துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும் சூழ்ந்து எழு செண்பக மலர்வாய் தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (9)
The lord Māyan who drove the strong shining chariot for his in-laws in the Bharatha battle and destroyed their enemie…
கலை உலா அல்குல் காரிகைதிறத்து கடல் பெரும் படையொடும் சென்று சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக்கண்ணங்குடியுள் நின்றானை மலை குலாம் மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் உலவு சொல்-மாலை ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை-நல்குரவே (10) ------- 82. திருநாகை: அச்சோப்பதிகம்
Kaliyan, the poet with a strong spear, the king of Thirumangai surrounded with mountain-like palaces, composed a garl…
பொன் இவர் மேனி மரகதத்தின் பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம் மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவர் ஆவர் தோழீ என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி ஏந்து இளங் கொங்கையும் நோககுகின்றார் அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்- அச்சோ ஒருவர் அழகியவா (1)
She says, “O friend, he, the god of the gods who taught the Vedas to the sages with a shining golden body and a chest…
தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன் செஞ் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி பாடக மெல் அடியார் வணங்க பல் மணி முத்தொடு இலங்கு சோதி ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்- அச்சோ ஒருவர் அழகியவா (2)
She says, “He rests on the ocean in Kuḍandai surrounded with water where blooming neelam flowers spread fragrance. Is…
வேய் இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம் தாயின நாயகர் ஆவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்த ஆறு சேய் இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச் செவ்விய ஆகி மலர்ந்த சோதி ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்- அச்சோ ஒருவர் அழகியவா (3)
She says, “O friend, he is magnificent and bright, like a tall hill with beautiful lotus eyes and a thousand arms ado…
வம்பு அவிழும் துழாய் மாலை தோள்மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார் நாகரிகர் பெரிதும் இளையர் செம் பவளம் இவர் வாயின் வண்ணம் தேவர் இவரது உருவம் சொலலில் அம் பவளத் திரளேயும் ஒப்பர்- அச்சோ ஒருவர் அழகியவா (4)
She says, “O friend, he, the young one with a fragrant thulasi garland swarming with bees on his chest and a coral mo…
கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர் பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம் வாழியரோ இவர் வண்ணம் எண்ணில் மா கடல் போன்று உளர் கையில் வெய்ய ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி- அச்சோ ஒருவர் அழகியவா (5)
She says, “He, the cowherd with four mighty mountain-like arms looks like the god of the temples in Uṛaiyur and Kuḍal…
வெம் சின வேழ மருப்பு ஒசித்த வேந்தர்கொல்? ஏந்திழையார் மனத்தைத் தஞ்சு உடையாளர்கொல்? யான் அறியேன் தாமரைக் கண்கள் இருந்த ஆறு கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த காளையர் ஆவர் கண்டார் வணங்கும் அஞ்சன மா மலையேயும் ஒப்பர்- அச்சோ ஒருவர் அழகியவா (6)
She says, “Did he, the king with lovely lotus eyes break the tusks of the angry elephant Kuvalayabeedam? Did he take …
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்கொல்? யான் அறியேன் பணியும் என் நெஞ்சம் இது என்கொல்? தோழீ பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம் அணி கெழு தாமரை அன்ன கண்ணும் அம் கையும் பங்கயம் மேனி வானத்து அணி கெழு மா முகிலேயும் ஒப்பர்- அச்சோ ஒருவர் அழகியவா (7)
She says, “O friend, with eyes and hands as beautiful as lotuses and a dark cloud like body, he is generous and gives…
மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ்சோலை மணாளர் வந்து என் நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன் மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த மா முகில் போன்று உளர் வந்து காணீர் அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்- அச்சோ ஒருவர் அழகியவா (8)
She says, "He, my beloved, the god of Thirumalirunjolai where tall trees in the groves of Thirumalirunjolai touch the…
எண் திசையும் எறி நீர்க் கடலும் ஏழ் உலகும் உடனே விழுங்கி மண்டி ஓர் ஆல் இலைப் பள்ளிகொள்ளும் மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன் கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர் கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும் அண்டத்து அமரர் பணிய நின்றார்- அச்சோ ஒருவர் அழகியவா (9)
She says, “He swallowed everything in the eight directions, all the roaring oceans and the seven worlds and he lay on…
அன்னமும் கேழலும் மீனும் ஆய ஆதியை நாகை அழகியாரை கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார் மன்னவர் ஆய் உலகு ஆண்டு மீண்டும் வானவர் ஆய் மகிழ்வு எய்துவரே (10) ------- 83. திருப்புல்லாணி: 1
The poet Kaliyan, handsome chief of Thirumangai surrounded with strong new walls, composed a garland of ten musical p…
தன்னை நைவிக்கிலேன் வல் வினையேன் தொழுதும் எழு- பொன்னை நைவிக்கும் அப் பூஞ் செருந்தி மண நீழல்வாய் என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே (1)
She says, “O heart, you suffer with your love \ for him. How can I control it? Is it because of my bad karma? In the …
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என்? தொழுதும் எழு- முருகு வண்டு உன் மலர்க் கைதையின் நீழலில் முன் ஒருநாள் பெருகு காதன்மை என் உள்ளம் எய்தப் பிரிந்தான் இடம் பொருது முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே (2)
She says, “O heart! You melt with love. What is the use of staying here thinking of him? Once, one day, he loved me u…
ஏது செய்தால் மறக்கேன்? மனமே தொழுதும் எழு- தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின் பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம் போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே (3)
She says, “I am innocent. What can I do to forget him? Come, get up and let us worship him. He followed me into the g…
கொங்கு உண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன் நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன் மங்கை நல்லாய் தொழுதும் எழு-போய் அவன் மன்னும் ஊர் பொங்கு முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே (4)
She says, “O friend, you are beautiful among women! Carrying a Garuda flag he came to me, loved me and promised that …
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு- துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின் தணரில் ஆவி தளரும் என அன்பு தந்தான் இடம் புணரி ஓதம் பணில மணி உந்து புல்லாணியே (5)
She says, “When I think of what happened to me my heart burns. Surely I have done bad karma. He decorated my hair wit…
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என்? தொழுதும் எழு- வள்ளல் மாயன் மணிவண்ணன் எம்மான் மருவும் இடம் கள் அவிழும் மலர்க் காவியும் தூ மடல் கைதையும் புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே (6)
She says, “O heart, what is the use of worrying and staying here thinking of Māyan, our generous, sapphire-colored lo…
பரவி நெஞ்சே தொழுதும் எழு-போய் அவன் பாலம் ஆய் இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன்? விரவி முத்தம் நெடு வெண் மணல் மேல் கொண்டு வெண் திரை புரவி என்னப் புதம்செய்து வந்து உந்து புல்லாணியே (7)
She says, “O pitiful heart, what is the use of staying here thinking of his love, unable to sleep night and day? He s…
அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பர் ஆய் சலம்-அது ஆகி தகவு ஒன்று இலர் நாம் தொழுதும் எழு- உலவு கால் நல் கழி ஓங்கு தண் பைம் பொழிலூடு இசை புலவு கானல் களி வண்டு இனம் பாடு புல்லாணியே (8)
She says, “He with a conch and a discus loved me and left me, leaving me to suffer. He cheated me and I shouldn’t lov…
ஓதி நாமம் குளித்து உச்சி-தன்னால் ஒளி மா மலர்ப் பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலின் ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பர் ஆய்ப் போதும் மாதே தொழுதும்-அவன் மன்னு புல்லாணியே (9)
She says, “O dear friend, let us fold our hands and praise his names, placing beautiful bright flowers on his feet an…
இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப் புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த அழகு ஆய புல்லாணிமேல் கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலிமாலைகள் வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது-பாடு இல் வைகுந்தமே (10) ------------- 84. திருப்புல்லாணி: 2
Kaliyan, the poet of faultless fame, composed a garland of pāsurams on beautiful Thirupullaṇi surrounded with groves …
கா ஆர் மடல் பெண்ணை அன்றில் அரிகுரலும் ஏ வாயினூடு இயங்கும் எஃகின் கொடிதாலோ பூ ஆர் மணம் கமழும் புல்லாணி கைதொழுதேன் பாவாய் இது நமக்கு ஓர் பான்மையே ஆகாதே? (1)
She says, “ The sorrowful calling of the andril bird that stays on the long branch of the palm tree in the grove is m…
முன்னம் குறள் உரு ஆய் மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மால் ஆகி பொன் பயந்தேன் பொன்னம் கழிக் கானல் புள் இனங்காள் புல்லாணி அன்னம் ஆய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனைச் செப்புமினே (2)
She says, “As a dwarf, he, the king, measured the whole world, and as a swan he taught the Vedas to the sages. I fell…
வவ்வி துழாய்-அதன்மேல் சென்ற தனி நெஞ்சம் செவ்வி அறியாது நிற்கும்கொல்? நித்திலங்கள் பவ்வத் திரை உலவு புல்லாணி கைதொழுதேன் தெய்வச் சிலையாற்கு என் சிந்தை-நோய் செப்புமினே (3)
She says, “My lonely heart went everywhere searching for him who is adorned with a thulasi garland. Has it lost its w…
பரிய இரணியனது ஆகம் அணி உகிரால் அரி உரு ஆய்க் கீண்டான் அருள் தந்தவா நமக்கு பொரு திரைகள் போந்து உலவு புல்லாணி கைதொழுதேன் அரி மலர்க் கண் நீர் ததும்ப அம் துகிலும் நில்லாவே (4)
She says, “He came as a man-lion and split open the chest of the strong Hiranyan with his claws. Will he give his gra…
வில்லால் இலங்கை மலங்க சரம் துரந்த வல்லாளன் பின் போன நெஞ்சம் வரும் அளவும் எல்லாரும் என்-தன்னை ஏசிலும் பேசிடினும் புல்லாணி எம் பெருமான் பொய் கேட்டு இருந்தேனே (5)
She says, “ My heart has gone to the strong archer Rama who shot his arrows in battle in Lanka and killed the Rākshas…
சுழன்று இலங்கு வெம் கதிரோன் தேரோடும் போய் மறைந்தான் அழன்று கொடிது ஆகி அம் சுடரோன் தான் அடுமால் செழுந் தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கைதொழுதேன் இழந்திருந்தேன்-என்-தன் எழில் நிறமும் சங்குமே (6)
She says, “The hot shining sun goes on his chariot, wanders all day and sets in the evening. My heart burns cruelly, …
கனை ஆர் இடி-குரலின் கார் மணியின் நா ஆடல் தினையேனும் நில்லாது தீயில் கொடிதாலோ புனை ஆர் மணி மாடப் புல்லாணி கைதொழுதேன் வினையேன்மேல் வேலையும் வெம் தழலே வீசுமே (7)
She says, “The sound of thunder and the ringing of the cowbells never cease, burning me even more than fire. I fold m…
தூம்பு உடைக் கை வேழம் வெருவ மருப்பு ஒசித்த பாம்பின் அணையான் அருள்தந்தவா நமக்கு பூஞ் செருந்தி பொன் சொரியும் புல்லாணி கைதொழுதேன் தேம்பல் இளம் பிறையும் என்-தனக்கு ஓர் வெம் தழலே (8)
She says, “He broke the tusks of the hollow-trunked elephant and rests on Adisesha on a snake bed and gives his grace…
வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் ஆதியும் ஆனான் அருள்தந்தவா நமக்கு போது அலரும் புன்னை சூழ் புல்லாணி கைதொழுதேன் ஓதமும் நானும் உறங்காது இருந்தேனே (9)
She says, “He, the ancient god who is the Vedas, the sky, the sun and the moon gives his grace to us. I fold my hands…
பொன் அலரும் புன்னை சூழ் புல்லாணி அம்மானை மின் இடையார் வேட்கை நோய் கூர இருந்ததனை கல் நவிலும் திண் தோள் கலியன் ஒலிவல்லார் மன்னவர் ஆய் மண் ஆண்டு வான் நாடும் முன்னுவரே (10) ------------- 85. திருக்குறுங்குடி: 1
Kaliyan, the poet with strong mountain-like arms, composed pāsurams describing how a girl with a waist like lightning…
தவள இளம் பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றி துவள என் நெஞ்சகம் சோர ஈரும் சூழ் பனி நாள் துயிலாதிருப்பேன் இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன குவளை மலர் நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (1)
She says, “The white crescent moon, the rolling waves of the ocean, the breeze that blows with the fragrance of flowe…
தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இள வாடை இன்னே ஊதை திரிதந்து உழறி உண்ண ஓர் இரவும் உறங்கேன் உறங்கும் பேதையர் பேதைமையால் இருந்து பேசிலும் பேசுக பெய்வளையார் கோதை நறு மலர் மங்கை மார்வன் குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (2)
She says, “The cool wind that blows from the jasmine flowers dripping with pollen and the cool crescent moon together…
காலையும் மாலை ஒத்துண்டு கங்குல் நாழிகை ஊழியில் நீண்டு உலாவும் போல்வது ஓர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கு அழலே ஒக்கும் வாடை சொல்லில் மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றும் உள அவை வந்திடாமுன் கோல மயில் பயிலும் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (3)
She says, “The morning brings me the pain of love just like the evening, and the night only makes it greater, lasting…
கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும் ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காதிருப்பேன்- பெரு மணி வானவர் உச்சி வைத்த பேர் அருளாளன் பெருமை பேசி குரு மணி நீர் கொழிக்கும் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (4)
She says, “The sound of the bells on the dark necks of the bulls that wander with their white cows hurts my heart and…
திண் திமில் ஏற்றின் மணியும் ஆயன் தீம் குழல் ஒசையும் தென்றலோடு கொண்டது ஓர் மாலையும் அந்தி ஈன்ற கோல இளம்பிறையோடு கூடி பண்டைய அல்ல இவை நமக்கு பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும் கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (5)
She says, “In the evening I hear the bells on the necks of the bulls and the sweet music of the flute of the cowherds…
எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக ஏந்திழையார் நல்லர் அவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி வண்ணரை நாம் மறவோம் கொல்லை வளர் இள முல்லை புல்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (6)
She says, “Girls ornamented with beautiful jewels gossip about me night and day. Let them do what they want. I am not…
செங் கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என் அங்கம் மெலிய வளை கழல ஆதுகொலோ? என்று சொன்ன பின்னை ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு ஆடும்-அதனை அறியமாட்டேன் கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (7)
She says, “A tall dark god with beautiful eyes entered here. He made my body weak and my bangles loose. I wonder, ‘Wh…
கேவலம் அன்று கடலின் ஓசை கேள்மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என் ஆவி அளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு ஏ வலம் காட்டி இவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடாமுன் கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (8)
She says, “Listen, it is not only the sound of the ocean that hurts me, or the hands that are like ambal flowers of t…
சோத்து என நின்று தொழ இரங்கான் தொல் நலம் கொண்டு எனக்கு இன்றுதாறும் போர்ப்பது ஓர் பொன்-படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை மூத்திடுகின்றன மற்று அவன்-தன் மொய் அகலம் அணையாது வாளா கூத்தன் இமையவர்-கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (9)
She says, “Even though I praised him and worshiped him, he doesn’t take pity on me. He took my chastity, gave me gold…
செற்றவன் தென் இலங்கை மலங்க தேவர் பிரான் திரு மா மகளைப் பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர்-அருளாளன் பெருமை பேசக் கற்றவன் காமரு சீர்க் கலியன் கண் அகத்தும் மனத்தும் அகலாக் கொற்றவன் முற்று உலகு ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (10) -------------- 86. திருக்குறுங்குடி: 2
She says, “The god of the gods who keeps the goddess Lakshmi with him, the generous lord who destroyed southern Lanka…
அக்கும் புலியின் அதளும் உடையார்-அவர் ஒருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும்- தக்க மரத்தின் தாழ் சினை ஏறி தாய் வாயில் கொக்கின் பிள்ளை வெள் இறவு உண்ணும் குறுங்குடியே 1
The good-natured god who has with him Shiva wearing a garland of skulls and a tiger skin around his waist stays in Th…
துங்க ஆர் அரவத் திரை வந்து உலவ தொடு கடலுள் பொங்கு ஆர் அரவில் துயிலும் புனிதர் ஊர்போலும்- செங் கால் அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும் கொங்கு ஆர் கமலத்து அலரில் சேரும் குறுங்குடியே 2
Our pure lord resting on Adisesha on the ocean where the waves never cease rolling stays in Thirukkuṛunguḍi where mal…
வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்!- கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவும் ஊர்- ஏழைச் செங்கால் இன் துணை நாரைக்கு இரை தேடி கூழைப் பார்வைக் கார் வயல் மேயும் குறுங்குடியே 3
We have found the way to be saved. THIRUMAL O devotees, come and see! Our lord with a dark cloud-color and beautiful …
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரமும் கரமும் துணித்த உரவோன் ஊர்போலும்- இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம் குரவின் பூவே-தான் மணம் நாறும் குறுங்குடியே 4
The heroic god who went to Lanka fought and pierced the chest of the ten-headed Rakshasa Rāvaṇa and cut off his hands…
கவ்வைக் களிற்று மன்னர் மாள கலி மாத் தேர் ஐவர்க்கு ஆய் அன்று அமரில் உய்த்தான் ஊர்போலும்- மை வைத்து இலங்கு கண்ணார்-தங்கள் மொழி ஒப்பான் கொவ்வைக் கனி வாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே 5
The lord who drove the chariot in Bharatha war for the five Pandavas and destroyed the heroic Kaurava kings fighting …
தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள்!- மா நீர் வண்ணர் மருவி உறையும் இடம் வானில் கூன் நீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே 6
O devotees, come, take lamps, water, beautiful flowers and fragrances, sprinkle pure water and worship the lord. The …
வல்லிச் சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள்!- சொல்லில் திருவே அனையார் கனி வாய் எயிறு ஒப்பான் கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குறுங்குடியே 7
O devotees, if you want to remove the desires that you have for women with vine-like waists, go to Thirukkuṛunguḍi an…
நார் ஆர் இண்டை நாள் மலர் கொண்டு நம் தமர்காள் ஆரா அன்போடு எம்பெருமான் ஊர்-அடைமின்கள்- தாரா ஆரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும் கூர் வாய் நாரை பேடையொடு ஆடும் குறுங்குடியே 8
O friends, take fresh flowers strung together into garlands and go lovingly to Thirukkuṛungudi and worship the highes…
நின்ற வினையும் துயரும் கெட மா மலர் ஏந்தி சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள் என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே 9
O devotees, if you want to be rid of the results of your bad karma and the troubles of your lives, carry fresh flower…
சிலையால் இலங்கை செற்றான் மற்று ஓர் சின வேழம் கொலை ஆர் கொம்பு கொண்டான் மேய குறுங்குடிமேல் கலை ஆர் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை நிலை ஆர் பாடல் பாடப் பாவம் நில்லாவே 10 -------------- 87. திருவல்லவாழ்
The good poet Kaliyan composed a musical garland of beautiful pāsurams on the lord of Thirukkuṛunguḍi who shot arrows…
தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல் அந்தம் ஆய் ஆதி ஆய் ஆதிக்கும் ஆதி ஆய் ஆயன் ஆய மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 1
O heart, if you are suffering with your family, your father, mother, children and others, and if you feel you should …
மின்னும் மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண் இடை நுடங்கும் அன்ன மென் நடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல் துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்கு ஆகி முன் தூது சென்ற மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 2
O heart, if you are afraid and disgusted with the life you lead loving women whose thin waists are more beautiful tha…
பூண் உலாம் மென் முலைப் பாவைமார் பொய்யினை மெய் இது என்று பேணுவார் பேசும் அப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல் நீள் நிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண் இரந்த மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 3
O heart, if you think it is wrong to believe the lies that statue-like women with ornamented breasts tell lovingly an…
பண் உலாம் மென் மொழிப் பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று எண்ணுவார் எண்ணம்-அது ஒழித்து நீ பிழைத்து உயக் கருதினாயேல் விண் உளார் விண்ணின் மீது இயன்ற வேங்கடத்து உளார் வளங்கொள் முந்நீர் வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 4
O heart, if you want to survive and get away from the thought that you want to embrace the round breasts of statue-li…
மஞ்சு தோய் வெண் குடை மன்னர் ஆய் வாரணம் சூழ வாழ்ந்தார் துஞ்சினார் என்பது ஓர் சொல்லை நீ துயர் எனக் கருதினாயேல் நஞ்சு தோய் கொங்கைமேல் அம் கை வாய் வைத்து அவள் நாளை உண்ட மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 5
O, heart, you know that the kings with white umbrellas that touched the clouds, rulers surrounded by many elephants, …
உருவின் ஆர் பிறவி சேர் ஊன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு அருவி நோய் செய்து நின்று ஐவர்-தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல் திருவின் ஆர் வேதம் நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கம் ஆறும் மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 6
O heart, are you afraid that the pleasures of the five senses will enter your body made of nerves, skin and flesh and…
நோய் எலாம் பெய்தது ஓர் ஆக்கையை மெய் எனக் கொண்டு வாளா பேயர்-தாம் பேசும் அப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல் தீ உலாம் வெம் கதிர் திங்கள் ஆய் மங்குல் வான் ஆகி நின்ற மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 7
O heart, do you think it is a mistake to listen to the words of evil people who believe in the reality of the body th…
மஞ்சு சேர் வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற அஞ்சு சேர் ஆக்கையை அரணம் அன்று என்று உயக் கருதினாயேல் சந்து சேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும் வந்து சேர் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 8
O heart, do you realize that the body made of sky where clouds float, and of fire, water, earth and air is not a fort…
வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற கள்ளநூல்-தன்னையும் கருமம் அன்று என்று உயக் கருதினாயேல் தெள்ளியார் கைதொழும் தேவனார் மா முநீர் அமுது தந்த வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லை ஆய் மருவு நெஞ்சே 9
O heart, if you do not think that it is your duty to follow the false teachings of the Pasupathars, the Jains and the…
மறைவலார் குறைவு இலார் உறையும் ஊர் வல்லவாழ் அடிகள்-தம்மைச் சிறை குலாம் வண்டு அறை சோலை சூழ் கோல நீள் ஆலி நாடன் கறை உலாம் வேல்வல கலியன் வாய் ஒலி இவை கற்று வல்லார் இறைவர் ஆய் இரு நிலம் காவல் பூண்டு இன்பம் நன்கு எய்துவாரே 10 ----------------- 88. திருமாலிருஞ்சோலை: 1
Kaliyan, the chief of flourishing Thiruvāli, who fights his enemies valiantly with his blood-smeared spear, composed …
முந்துற உரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடு தடுமாறல் அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும் ஆய எம் அடிகள்-தம் கோயில்- சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்து அருவிகள் நிரந்து வந்து இழி சாரல் மாலிருஞ்சோலை- வணங்குதும் வா மட நெஞ்சே (1)
O ignorant heart, I would tell you something wonderful. If you would be rid of the infatuation you feel for beautiful…
இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர் அண்டரும் பரவ அரவணைத் துயின்ற சுடர் முடிக் கடவுள்-தம் கோயில்- விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர் குறிஞ்சியின் நறுந் தேன் வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை- வணங்குதும் வா மட நெஞ்சே (2)
Thirumālirunjolai is the temple where the gods worship, telling all in the sky, “Come and let us go and worship the l…
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த பெரு நிலம் அருளின் முன் அருளி அணி வளர் குறள் ஆய் அகல்-இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில்- கணி வளர் வேங்கை நெடு நிலம்-அதனில் குறவர்-தம் கவணிடைத் துரந்த மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை- வணங்குதும் வா மட நெஞ்சே (3)
Our dear lord who removes the sickness of his devotees if they worship him and who gives his grace to all went to Mah…
சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்து சுடு சரம் அடு சிலைத் துரந்து நீர்மை இலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில்- கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில் கடி மலர்க் குறிஞ்சியின் நறுந் தேன் வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை- வணங்குதும் வா மட நெஞ்சே (4)
The lord who drank milk from the breasts of Putanā, and shot fearful arrows at the evil Thādagai and killed her stays…
வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒருபதும் புரள அணங்கு எழுந்து அவன்-தன் கவந்தம் நின்று ஆட அமர்செய்த அடிகள்-தம் கோயில்- பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்ப பிரசம் வந்து இழிதர பெருந் தேன் மணங் கமழ் சாரல் மாலிருஞ்சோலை- வணங்குதும் வா மட நெஞ்சே (5)
Our dear god who fought and destroyed the pride of his enemy, the Rakshasa Rāvaṇa, making his ten heads fall to the g…
விடம் கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று விளங்கனிக்கு இளங் கன்று விசிறி குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த கூத்த எம் அடிகள்-தம் கோயில்- தடங் கடல் முகந்து விசும்பிடைப் பிளிற தடவரைக் களிறு என்று முனிந்து மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை- வணங்குதும் வா மட நெஞ்சே (6)
Our divine lord who rests on the snake bed of Adisesha killed the two Asurans, throwing one who had come as a calf at…
தேனுகன் ஆவி போய் உக அங்கு ஓர் செழுந் திரள் பனங்கனி உதிர தான் உகந்து எறிந்த தடங் கடல் வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்- வானகச் சோலை மரகதச் சாயல் மா மணிக் கல் அதர் நுழைந்து மான் நுகர் சாரல் மாலிருஞ்சோலை- வணங்குதும் வா மட நெஞ்சே (7)
The dark ocean-colored one who threw ripe palm fruits at the Asuran Thenugasuran and killed him stays in the temple i…
புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல் அரவணைத் துயின்று பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த பனி முகில் வண்ணர்-தம் கோயில்- கதம் மிகு சினத்த கட தடக் களிற்றின் கவுள் வழி களி வண்டு பருக மதம் மிகு சாரல் மாலிருஞ்சோலை- வணங்குதும் வா மட நெஞ்சே (8)
Our cloud-colored lord who rests on the bed of the snake Adisesha on the roaring ocean where waves rise up to the sky…
புந்தி இல் சமணர் புத்தர் என்று இவர்கள் ஒத்தன பேசவும் உவந்திட்டு எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்- சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல் தாழ்வரை மகளிர்கள் நாளும் மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ்சோலை- வணங்குதும் வா மட நெஞ்சே (9)
He, our highest lord, our father, who loves even the ignorant Jains and Buddhists and others of other religions that …
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி வண்ணரை வணங்கும் தொண்டரைப் பரவும் சுடர் ஒளி நெடு வேல் சூழ் வயல் ஆலி நல் நாடன் கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன் கலியன் வாய் ஒலிசெய்த பனுவல் கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர்-இக் குரை கடல் உலகே (10) ------------- 89. திருமாலிருஞ்சோலை: 2
Kaliyan with a long shining spear, the chief of Thirumangai in Thiruvāli country surrounded with good fences of thaza…
மூவரில் முன் முதல்வன் முழங்கு ஆர் கடலுள் கிடந்து பூ வளர் உந்தி-தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த தேவர்கள் நாயகனை திருமாலிருஞ்சோலை நின்ற கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்கொலோ? (1)
Her mother says, “He, the highest of the three gods who rests on Adisesha on the roaring ocean, swallowed the earth a…
புனை வளர் பூம் பொழில் ஆர் பொன்னி சூழ் அரங்க நகருள் முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி-தன்னை சினை வளர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்றான் கனை கழல் காணும்கொலோ-கயல் கண்ணி எம் காரிகையே? (2)
Her mother says, “He, the ancient one,, the god of Srirangam encircled by blooming punnai trees and the Kaviri river,…
உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகன் ஆல் இலைமேல் கண்துயில் கொண்டு உகந்த கரு மாணிக்க மா மலையை திண் திறல் மா கரி சேர் திருமாலிருஞ்சோலை நின்ற அண்டர்-தம் கோவினை இன்று அணுகும்கொல்-என் ஆய்-இழையே? (3)
Her mother says, “He, the king of the gods in the sky, shining like a dark diamond hill, swallowed all the seven worl…
சிங்கம்-அது ஆய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த பங்கய மா மலர்க் கண் பரனை எம் பரம் சுடரை திங்கள் நல் மா முகில் சேர் திருமாலிருஞ்சோலை நின்ற நங்கள் பிரானை இன்று நணுகும்கொல்-என் நல் நுதலே? (4)
Her mother says, “The highest god with beautiful lotus eyes wbo shines like a divine light took the form of a man-lio…
தானவன் வேள்வி-தன்னில் தனியே குறள் ஆய் நிமிர்ந்து வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன் தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற வானவர்-கோனை இன்று வணங்கித் தொழ வல்லள்கொலோ? (5)
Her mother says, “Will my daughter go today to Thirumālirunjolai surrounded with blooming groves that drip with honey…
நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான் வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான் தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற கேசவ நம்பி-தன்னைக் கெண்டை ஒண் கண்ணி காணும்கொலோ? (6)
Her mother says, “The dear god Kesava Nambi born in Madura surrounded with fragrant blooming flowers is hard for peop…
புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பு ஒசித்து கள்ளச் சகடு உதைத்த கரு மாணிக்க மா மலையை தெள் அருவி கொழிக்கும் திருமாலிருஞ்சோலை நின்ற வள்ளலை வாள் நுதலாள் வணங்கித் தொழ வல்லள்கொலோ? (7)
Her mother says, “The dark god who is like a diamond mountain split open the beak of Bakasuram when he came as of a b…
பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று காத்தவன்-தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை தீர்த்தனை பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற மூர்த்தியைக் கைதொழவும் முடியும் கொல்-என் மொய் குழற்கே? (8)
Her mother says, “The god of the gods, shining like a dark diamond hill, drove the chariot in the Bharatha war, gave …
வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன்-தன்னை புலம் புரி நூலவனை பொழில் வேங்கட வேதியனை சிலம்பு இயல் ஆறு உடைய திருமாலிருஞ்சோலை நின்ற நலம் திகழ் நாரணனை நணுகும் கொல்-என் நல் நுதலே? (9)
Her mother says, “The god of Thiruvenkaṭam surrounded with groves, the scholar of the Vedas, wears a divine thread on…
தேடற்கு அரியவனை திருமாலிருஞ்சோலை நின்ற ஆடல் பறவையனை அணி ஆய்-இழை காணும் என்று மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை-பாவங்களே (10) -------------- 90. திருக்கோட்டியூர்
He is hard to search out and find. He rides on Garuḍa and stays in Thirumalirunjolai. Kaliyan, the chief of Thirumang…
எங்கள் எம் இறை எம் பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர்- தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்- பொங்கு தண் அருவி புதம் செய்ய பொன்களே சிதற இலங்கு ஒளி செங்கமலம் மலரும்-திருக்கோட்டியூரானே (1)
Our dear god, our king, chief of the gods in the sky, who stays in the minds of the devotees who praise him and gives…
எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன் நகைத் துவர் வாய் நில-மகள் செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்- மௌவல் மாலை வண்டு ஆடும் மல்லிகை மாலையொடும் அணைந்த மாருதம் தெய்வம் நாற வரும்-திருக்கோட்டியூரானே (2)
He, our king is the sweet lord of beautiful Lakshmi and the beloved of the sweetly-smiling earth goddess with a coral…
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர்-தமக்கு இறை எமக்கு ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்- துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை சந்தனம் உந்தி வந்து அசை தெள்ளு நீர்ப் புறவில்-திருக்கோட்டியூரானே (3)
The faultless sapphire-colored lord, the god of gods in the sky, the light of our lives, who swallowed all the seven …
ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பில் ஓர் கூறு-தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான்- நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு நல் நறும் தேறல் வாய்மடுக்கும்-திருக்கோட்டியூரானே (4)
He, the beloved of Lakshmi, the goddess who nurtures good families, gave a part of himself to Shiva who carries a sha…
வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன் விண்ணவர்-கோன் மதுமலர்த் தொங்கல் நீள் முடியான் நெடியான் படி கடந்தான்- மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகம்மீது உயர்ந்து ஏறி வான் உயர் திங்கள்-தான் அணவும்-திருக்கோட்டியூரானே (5)
The ocean-colored Neḍumāl, the king of the gods in the sky, beautiful as a precious sapphire, whose crown is adorned …
காவலன் இலங்கைக்கு இறை கலங்க சரம் செல உய்த்து மற்று அவன் ஏவலம் தவிர்த்தான் என்னை ஆளுடை எம் பிரான்- நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மால் உறைகின்றது இங்கு என தேவர் வந்து இறைஞ்சும்-திருக்கோட்டியூரானே (6)
The dear god, my ruler, who shot his arrows at the king of Lanka, destroyed his valor and defeated him stays in Thiru…
கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆ-நிரைக்கு அழிவு என்று மா மழை நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்- குன்றின் முல்லையின் வாசமும் குளிர் மல்லிகை மணமும் அளைந்து இளம் தென்றல் வந்து உலவும்-திருக்கோட்டியூரானே (7)
Our god, the beloved of the earth goddess, threw a vilam fruit at a calf and killed the two Asurans when they came as…
பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மாச் செகுத்து அடியேனை ஆள் உகந்து ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள்-தம் பெருமான்- தூங்கு தண் பலவின் கனி தொகு வாழையின் கனியொடு மாங்கனி தேங்கு தண் புனல் சூழ்-திருக்கோட்டியூரானே (8)
The god of the gods who broke the kurundu trees when the Asurans came in the form of those trees, killed the elephant…
கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார் தட மா மலர்மிசை மேவும் நான்முகனில் விளங்கு புரி நூலர் மேவும் நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறு அங்கம் வல்லவர் தொழும் தேவ-தேவபிரான்-திருக்கோட்டியூரானே (9)
The Vediyars in Thirukkottiyur who wear shining threads and are as divine as Nānmuhan seated on a beautiful lotus sin…
ஆலும் மா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில் சேல்கள் பாய் கழனித் திருக்கோட்டியூரானை நீல மா முகில் வண்ணனை நெடுமாலை இன் தமிழால் நினைந்த இந் நாலும் ஆறும் வல்லார்க்கு இடம் ஆகும்-வான் உலகே (10) ------------ 91. பதினென் திருப்பதிகள்
The poet Kaliyan, the mighty chief of Thirumangai who rides a horse, composed a garland of sweet Tamil pāsurams on th…
ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள் வரும் நல் தொல் கதி ஆகிய மைந்தனை நெருநல் கண்டது நீர்மலை இன்று போய் கரு நெல் சூழ் கண்ணமங்கையுள் காண்டுமே (1)
He is my relative and my dear life, my precious wealth and the lord who gives me moksha. I saw him yesterday in Thiru…
He is gold and a shining diamond, the beautiful lightning that stays on the top of the Venkaṭam hills. He is my dear …
வேலை ஆல் இலைப் பள்ளி விரும்பிய பாலை ஆர் அமுதத்தினை பைந் துழாய் மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் ஞாலம் உன்னியைக் காண்டும்-நாங்கூரிலே (3)
Thirumal who is sweet as milk and nectar, and lies on a banyan leaf as a baby on the ocean is adorned with green thul…
துளக்கம் இல் சுடரை அவுணன் உடல் பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய் அளப்பு இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள் விளக்கினைச் சென்று வெள்ளறைக் காண்டுமே (4)
He, undiminished light, split open the body of the Rākshasa Hiraṇyan. I will worship him in Thirupperur and I will go…
சுடலையில் சுடு நீறன் அமர்ந்தது ஓர் நடலை தீர்த்தவனை நறையூர்க் கண்டு என் உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி உண் விடலையைச் சென்று காண்டும்-மெய்யத்துள்ளே (5)
I saw the god of Thirunaṛaiyur. who removed the curse of Shiva who wears vibhuti and dances in the burning ground. He…
வானை ஆர் அமுதம் தந்த வள்ளலை தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய் ஆனை வாட்டி அருளும் அமரர்-தம் கோனை யாம் குடந்தைச் சென்று காண்டுமே (6)
He is the sky and the generous god who gave the divine nectar to the gods and killed the elephant Kuvalayābeeḍam. I w…
கூந்தலார் மகிழ் கோவலன் ஆய் வெண்ணெய் மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய் பாந்தள்-பாழியில் பள்ளி விரும்பிய வேந்தனைச் சென்று காண்டும்-வெஃகாவுளே (7)
I will find happiness in Veṇṇai-Thiruvazhundur seeing the cowherd who is loved by women with beautiful hair. I will g…
பத்தர் ஆவியை பால் மதியை அணித் தொத்தை மாலிருஞ்சோலைத் தொழுது போய் முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினைச் சென்று விண்ணகர்க் காண்டுமே (8)
He, life for all his devotees, shines like the white moon. I will go and worship the god of Thirumalirunjolai, the se…
கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க ஓர் கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனை கொம்பு உலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய் நம்பனைச் சென்று காண்டும்-நாவாயுளே (9)
The dancing one with sounding anklets on his feet frightened the strong elephant and broke its tusks. I will go and s…
பெற்ற மாளிகைப் பேரில் மணாளனை கற்ற நூல் கலிகன்றி உரைசெய்த சொல் திறம்-இவை சொல்லிய தொண்டர்கட்கு அற்றம் இல்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே (10) ---------- 92. பொங்கத்தம் பொங்கோ
Kaliyan, learned in many sastras, composed ten pāsurams on the god Manāḷan, the cowherd who protected the cows and st…
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர் பரக்க யாம் இன்று உரைத்து என்? இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்? குரக்கு-நாயகர்காள் இளங்கோவே கோல வல் வில் இராமபிரானே அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (1)
“Our king was not compassionate and did evil things. Now the result of those evil deeds gives us pain, but what is th…
பத்து நீள் முடியும் அவற்று இரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம் சித்தம் மங்கையர்பால் வைத்துக் கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள் ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர்-தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம் அத்த எம் பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (2)
“Ravaṇan our king with ten heads and twenty mighty arms lost his life and kingdom because he was attracted to Sita. W…
தண்டகாரணியம் புகுந்து அன்று தையலை தகவிலி எம் கோமான் கொண்டுபோந்து கெட்டான் எமக்கு இங்கு ஓர் குற்றம் இல்லை கொல்லேல் குல வேந்தே பெண்டிரால் கெடும் இக் குடி-தன்னைப் பேசுகின்றது என்? தாசரதீ உன் அண்டவாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (3)
“Our king Ravaṇan with evil intentions entered the forest of Daṇḍakāraṇyam, kidnapped Sita and destroyed himself. We …
எஞ்சல் இல் இலங்கைக்கு இறை எம் கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே நஞ்சு-தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரி வார் பொழில் மா மயில் அன்ன அஞ்சு அல் ஓதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (4)
“The faultless Vibhisaṇan, Rāvaṇaṇ’s brother, bowed to our king of Lanka and told him, ‘You are our brother. If you k…
செம்பொன் நீள் முடி எங்கள் இராவணன் சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து வம்பு உலாம் கடி காவில் சிறையா வைத்ததே குற்றம் ஆயிற்றுக் காணீர் கும்பனோடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (5)
“Our king Ravaṇan adorned with golden crowns kidnapped the goddess Sita and imprisoned her in a fragrant garden swarm…
ஓத மா கடலைக் கடந்து ஏறி உயர்கொள் மாக் கடி காவை இறுத்து காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (6)
“The monkey Hanuman, your messenger, crossed the roaring ocean and destroyed beautiful Lanka and our dear families an…
தாழம் இன்றி முந்நீரை அஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல் மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதி இல் மனத்தானை ஏழையை இலங்கைக்கு இறை-தன்னை எங்களை ஒழியக் கொலையவனை சூழுமா நினை மா மணி வண்ணா சொல்லினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (7)
“You have the color of a precious jewel! Our poor Rāvaṇa, king of Lanka, could not forget the beautiful thin-waisted …
மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா அம் கயல் கண்ணினார்கள் இருப்ப தனம்கொள் மென் முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று புனம்கொள் மென் மயிலைச் சிறைவைத்த புன்மையாளன் நெஞ்சில் புக எய்த அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (8)
“Rāvaṇa had many fish-eyed soft-breasted wives in Lanka. Among them was Mandodari who loved him but he was not attrac…
புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரைப் போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பின் சரங்களே கொடிது ஆய் அடுகின்ற சாம்பவான் உடன் நிறகத் தொழுதோம் இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெம் கதிரோன்-தன் சிறுவா குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல் கூறினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (9)
“Shiva shot his arrows and burned the three forts in the blink of an eye. Like Shiva, Sambhavan shot cruel arrows and…
அங்கு அவ் வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன்-தன்னை பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இவ் உலகினில் எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் இம்மையே இடர் இல்லை இறந்தால் தங்கும் ஊர் அண்டமே கண்டு கொள்மின் சாற்றினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (10) -------------- 93. குழமணிதூரம்
Kaliyan the strong one, composed pāsurams on Rama who destroyed beautiful Lanka to relieve the affliction of the gods…
ஏத்துகின்றோம் நாத் தழும்ப இராமன் திருநாமம் சோத்தம் நம்பீ சுக்கிரீவா உம்மைத் தொழுகின்றோம் வார்த்தை பேசீர் எம்மை உங்கள் வானரம் கொல்லாமே கூத்தர் போல ஆடுகின்றோம்-குழமணிதூரமே (1)
“We praise the divine name of Rama. O Nampi, we bow to you, O Sugriva, we worship you. Protect us, tell your monkey a…
எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலற்றாதே அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான் நம்பி அநுமா சுக்கிரீவா அங்கதனே நளனே கும்பகர்ணன் பட்டுப்போனான்_-குழமணிதூரமே (2)
“Indrajit did not praise the name of the god. He said, ‘Our dear king, take care me.’ He could not fight with Rama an…
ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்குக் காலன் ஆகி வந்தவா கண்டு அஞ்சி கரு முகில்போல் நீலன் வாழ்க சுடேணன் வாழ்க அங்கதன் வாழ்க என்று கோலம் ஆக ஆடுகின்றோம்-குழமணிதூரமே (3)
“O Rama! You came to the earth as a Yama for our king Ravaṇa, the ruler of Lanka. May the dark cloud-like Neelan live…
மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தைப் புணர்ந்த சிந்தைப் புன்மையாளன் பொன்ற வரி சிலையால் கணங்கள் உண்ண வாளி ஆண்ட காவலனுக்கு இளையோன் குணங்கள் பாடி ஆடுகின்றோம்-குழமணிதூரமே (4)
“Evil-minded Ravaṇa desired fragrant-haired Sita and Rama killed him. We praise the younger brother of Rama, Lakshmaṇ…
வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்கு ஆக இன்று தம்மின் எங்கள் வாழ்நாள் எம் பெருமான்-தமர்காள் நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மைக் கொல்லாதே குன்று போல ஆடுகின்றோம்-குழமணிதூரமே (5)
“We lost the war and do not need any honor. Give us your grace today and our lives. You are our lords and relatives. …
கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து வெல்லகில்லாது அஞ்சினோம்காண் வெம் கதிரோன் சிறுவா கொல்லவேண்டா ஆடுகின்றோம்-குழமணிதூரமே (6)
“Your king constructed a bridge of stones across the ocean, went past all our guards and came to Lanka, afflicting us…
மாற்றம் ஆவது இத்தனையே வம்மின் அரக்கர் உள்ளீர் சீற்றம் நும்மேல் தீர வேண்டின் சேவகம் பேசாதே ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று கூற்றம் அன்னார் காண ஆடீர்-குழமணிதூரமே (7)
“O Rākshasas, come, give up your thoughts of fighting with the monkeys. If you want Rama and the others not to be ang…
கவள யானை பாய் புரவி தேரொடு அரக்கர் எல்லாம் துவள வென்ற வென்றியாளன்-தன் தமர் கொல்லாமே தவள மாடம் நீடு அயோத்தி காவலன்-தன் சிறுவன் குவளை வண்ணன் காண ஆடீர்-குழமணிதூரமே (8)
“The monkey army of Rama, after wearing us down and conquering us, should not kill our elephants that eat so well or …
ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலை வேல் எங்கள் இராவணனார் ஓடிப்போனார் நாங்கள் எய்த்தோம் உய்வது ஓர் காரணத்தால் சூடிப் போந்தோம் உங்கள் கோமான் ஆணை தொடரேல்மின் கூடிக் கூடி ஆடுகின்றோம்-குழமணிதூரமே (9)
“Our king Ravaṇa carried a long spear with a leaf-shaped blade and ran from the battlefield. We wanted to survive and…
வென்ற தொல் சீர்த் தென் இலங்கை வெம் சமத்து அன்று அரக்கர் குன்றம் அன்னார் ஆடி உய்ந்த குழமணிதூரத்தைக் கன்றி நெய்ந் நீர் நின்ற வேல் கைக் கலியன் ஒலிமாலை ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடிநின்று ஆடுமினே (10) ----------- 94. கண்ணனை அம்மம் உண்ண அழைத்தல்
Kaliyan with a spear smeared with oil composed a garland of ten musical pāsurams in which the mountain-like Rakshasas…
சந்த மலர்க் குழல் தாழ தான் உகந்து ஓடி தனியே வந்து என் முலைத்தடம்-தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து நந்தன் பெறப் பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே (1)
Run and come happily as fragrant flowers fall from your beautiful hair and put your mouth on my breasts, hold them an…
வங்க மறி கடல் வண்ணா மா முகிலே ஒக்கும் நம்பீ செங்கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா கொங்கை சுரந்திட உன்னைக் கூவியும் காணாதிருந்தேன் எங்கு இருந்து ஆயர்களோடும் என் விளையாடுகின்றாயே? (2)
O Nambi, colored like the ocean with rolling waves and like a dark cloud, you are tall and precious, with lovely eyes…
திருவில் பொலிந்த எழில் ஆர் ஆயர்-தம் பிள்ளைகளோடு தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற மருவிக் குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய் (3)
O Nambi, as you play happily on the street with the rich, handsome cowherd children my heart melts seeing your naught…
மக்கள் பெறு தவம் போலும்-வையத்து வாழும் மடவார் மக்கள் பிறர் கண்ணுக்கு-ஒக்கும் முதல்வா மதக் களிறு அன்னாய் செக்கர் இளம் பிறை-தன்னை வாங்கி நின் கையில் தருவன் ஒக்கலைமேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் (4)
When people look at you they think that you are the result of the tapas that all women have ever done. You, the first…
மைத்த கருங் குஞ்சி மைந்தா மா மருது ஊடு நடந்தாய் வித்தகனே விரையாதே வெண்ணெய் விழுங்கும் விகிர்தா இத்தனை போது அன்றி என்-தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா உத்தமனே அம்மம் உண்ணாய் உலகு அளந்தாய் அம்மம் உண்ணாய் (5)
My son with hair dark as kohl, you walked between the marudu trees and destroyed the Asuras. O clever one, you steal …
பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை கள்ளம் மனத்தில் உடையை காணவே தீமைகள் செய்தி உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற பள்ளிக் குறிப்புச் செய்யாதே பால் அமுது உண்ண நீ வாராய் (6)
You are not a good child if you do what other naughty children do. You speak more cleverly than others and like a thi…
தன் மகன் ஆக வன் பேய்ச்சி தான் முலை உண்ணக் கொடுக்க வன் மகன் ஆய் அவள் ஆவி வாங்கி முலை உண்ட நம்பீ நன் மகள் ஆய்மகளோடு நானில-மங்கை மணாளா என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே (7)
When Putana, the devil woman, came as a mother and fed you the milk from her breasts, O Nambi, you drank her poisonou…
உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால் நொந்திட மோதவும் கில்லேன் நுங்கள்-தம் ஆ-நிரை எல்லாம் வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண அந்தி அம் போது அங்கு நில்லேல் ஆழி அம் கையனே வாராய் (8)
If I hit you with the stick I’m holding, your relatives will be angry with me. I am worried but I won’t hurt you. Whe…
பெற்றத் தலைவன் எம் கோமான் பேர் அருளாளன் மதலாய் சுற்றக் குழாத்து இளங் கோவே தோன்றிய தொல் புகழாளா கற்று இனம் தோறும் மறித்து கானம் திரிந்த களிறே எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம் பெருமான் இருந்தாயே (9)
You, great as an elephant, the son of the generous Nandan, the chief of the cowherds, are a prince among your relativ…
இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி செம்மைப் பனுவல் நூல்கொண்டு செங்கண் நெடியவன்-தன்னை அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும் மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலும் ஆமே (10) -------------- 95. சப்பாணி கொட்ட வேண்டுதல்
Kaliyan, the poet with handsome heroic arms composed ten divine pāsurams on the lovely-eyed Neḍumal. If devotees lear…
பூங் கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண ஆங்கு அவள் ஆர்த்துப் புடைக்க புடையுண்டு ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் ஓங்கு ஓத வண்ணனே சப்பாணி ஒளி மணி வண்ணனே சப்பாணி (1)
When you ate the butter that Yashoda the cowherdess with hair adorned with beautiful flowers churned and kept, she wa…
தாயர் மனங்கள் தடிப்ப தயிர் நெய் உண்டு ஏய் எம் பிராக்கள் இரு நிலத்து எங்கள்-தம் ஆயர் அழக அடிகள் அரவிந்த வாயவனே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி 2
You, the most handsome cowherd in the whole world, stole the yogurt and butter and made the cowherd mothers upset. Yo…
தாம் மோர் உருட்டி தயிர் நெய் விழுங்கிட்டு தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால் தாம் மோதரக் கையால் ஆர்க்க தழும்பு இருந்த தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரைக் கண்ணனே சப்பாணி (3)
When you rolled away the pots and swallowed the yogurt and the ghee, the cowherd women thought that you had eaten it …
பெற்றார் தளை கழலப் பேர்ந்து அங்கு அயல் இடத்து உற்றார் ஒருவரும் இன்றி உலகினில் மற்றாரும் அஞ்சப் போய் வஞ்சப் பெண் நஞ்சு உண்ட கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார் வண்ணனே கொட்டாய் சப்பாணி (4)
Born in a prison, you removed the chains on your parents’ feet and released them, and your father Vasudeva took you t…
சோத்து என நின்னைத் தொழுவன் வரம் தர பேய்ச்சி முலை உண்ட பிள்ளாய் பெரியன ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச் சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடங் கைகளால் கொட்டாய் சப்பாணி (5)
I worship you, the god, and ask for boons. When you were a baby you drank the milk of the devil Putana. The cowherd w…
கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு நான் அவல் அப்பம் தருவன் கருவிளைப் பூ அலர் நீள் முடி நந்தன்-தன் போர் ஏறே கோவலனே கொட்டாய் சப்பாணி குடம் ஆடீ கொட்டாய் சப்பாணி (6)
It is not hard to feed you. I will give you enough snacks, aval and appams to fill your stomach. You who wear a dark …
புள்ளினை வாய் பிளந்து பூங் குருந்தம் சாய்த்து துள்ளி விளையாடி தூங்கு உறி வெண்ணெயை அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும் பிள்ளைப் பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி (7)
When Bakāsuran came as a bird you split open his beak, and you knocked down the blooming kuṛundam tree. You jumped ar…
யாயும் பிறரும் அறியாத யாமத்து மாய வலவைப் பெண் வந்து முலை தர பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட வாயவனே கொட்டாய் சப்பாணி மால்வண்ணனே கொட்டாய் சப்பாணி (8)
The devious devil Putana came in the middle of the night when your mother and others were sleeping and gave her milk …
கள்ளக் குழவி ஆய் காலால் சகடத்தைத் தள்ளி உதைத்திட்டு தாய் ஆய் வருவாளை மெள்ளத் தொடர்ந்து பிடித்து ஆர் உயிர் உண்ட வள்ளலே கொட்டாய் சப்பாணி மால் வண்ணனே கொட்டாய் சப்பாணி (9)
You were a naughty child and stole butter. You kicked Sakaṭāsuran when he came as a cart and when devil Putanā came a…
கார் ஆர் புயல் கைக் கலிகன்றி மங்கையர்-கோன் பேராளன் நெஞ்சில் பிரியாது இடம்கொண்ட சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த் தார் ஆளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி (10) ------------ 96. மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கிருஷ்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்தல்
Kaliyan, the chief of Thirumangai, is generous as a rain-giving cloud. O dear lord, you stay in the poet’s mind alway…
எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே? -நர நாரணன் ஆய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன் எம் பெருமான் அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும் பொங்கு ஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புக பொன் மிடறு அத்தனைபோது அங்காந்தவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (1)
Is there a māyam like this? The lord Nārāyaṇan came to the earth as a man and taught the Vedas to the sages so that t…
குன்று ஒன்று மத்தா அரவம் அளவி குரை மா கடலைக் கடைந்திட்டு ஒருகால் நின்று உண்டை கொண்டு ஓட்டி வன் கூன் நிமிர நினைந்த பெருமான் அது அன்றியும் முன் நன்று உண்ட தொல் சீர் மகரக் கடல் ஏழ் மலை ஏழ் உலகு ஏழ் ஒழியாமை நம்பி அன்று உண்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (2)
The lord who churned the sounding milky ocean using Mandara mountain for a churning stick shot with a sling at the Ku…
உளைந்திட்டு எழுந்த மது-கைடவர்கள் உலப்பு இல் வலியார்-அவர்பால் வயிரம் விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள் வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள் உகிரால் அளைந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (3)
When the gods in the sky were worried that the Asuran Madhukaiṭabha had become a terrible enemy and that he would fig…
தளர்ந்திட்டு இமையோர் சரண் தா என தான் சரண் ஆய் முரண் ஆயவனை உகிரால் பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த பெருமான் திருமால் விரி நீர் உலகை வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறள் ஆய் அளந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (4)
When the gods in the sky grew tired fighting with their enemy Hiraṇyan and went to the god and asked him for refuge, …
நீண்டான் குறள் ஆய் நெடு வான் அளவும் அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம் தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது அன்றியும் முன் வேண்டாமை நமன்-தமர் என் தமரை வினவப் பெறுவார் அலர் என்று உலகு ஏழ் ஆண்டான்-அவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (5)
Wishing to remove the troubles of the gods, he went as a dwarf to Mahābali’s sacrifice, grew tall and measured the ea…
பழித்திட்ட இன்பப் பயன் பற்று அறுத்துப் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் ஒழித்திட்டு அவரைத் தனக்கு ஆக்கவல்ல பெருமான் திருமால் அது அன்றியும் முன் தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத்தோள்-அவை ஆயிரமும் மழுவால் அழித்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (6)
Our divine lord Thirumāl, who protects his devotees and removes the desires of evil passions for them if they worship…
படைத்திட்டு அது இவ் வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் துடைத்திட்டு அவரைத் தனக்கு ஆக்க என்னத் தெளியா அரக்கர் திறல் போய் அவிய மிடைத்திட்டு எழுந்த குரங்கைப் படையா விலங்கல் புகப் பாய்ச்சி விம்ம கடலை அடைத்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (7)
Our lord, the creator of the world who removes the sorrows of his devotees if they worship him gathered a monkey army…
நெறித்திட்ட மென் கூழை நல் நேர்-இழையோடு உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு இளங் கொற்றவன் ஆய் துளங்காத முந்நீர் செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன் செழு நீள் முடி தோளொடு தாள் துணிய அறுத்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (8)
As Rama, the lord broke the bow that was born with Sita, and he married her who had precious ornaments and curly soft…
சுரிந்திட்ட செங் கேழ் உளைப் பொங்கு அரிமா தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காததன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள் வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலைபோல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு அரிந்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (9)
When the Asuran Kesi came as a tawny horse, he split open his mouth and killed him, he broke the seven marā trees wit…
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறிப் பால் தயிர் நெய் அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல் நன்று ஆய தொல் சீர் வயல் மங்கையர்-கோன் கலியன் ஒலிசெய்த தமிழ்-மாலை வல்லார் என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே (10) ---------- 97. கண்ணனது செய்தியைக் குறித்து யசோதை பணித்தலும் ஆய்ச்சியர் முறையிடுதலும்
Kaliyan, the chief of ancient Thirumangai surrounded with flourishing fields, composed a garland of Tamil pāsurams wo…
மானம் உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால் பிறர் மக்கள்-தம்மை ஊனம் உடையன செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன்? தானும் ஓர் கன்னியும் கீழை அகத்துத் தயிர் கடைகின்றான் போலும் (1)
Yashoda says, “Our cowherd clan is respected by all. If my son does something wrong, I can only upbraid him gently, s…
காலை எழுந்து கடைந்த இம் மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன் மாலை நறுங் குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை மேலை அகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே அன்று இருந்த பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன்? என் செய்கேனோ? (2)
A cowherdess says, “O dear Yashoda! I got up early and went to sell the churned buttermilk, looking for people to buy…
தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள் உறிமேலைத் தடா நிறைந்த வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கியிட்டு கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள் கை எல்லாம் நெய் வயிறு பிள்ளை பரம் அன்று இவ் ஏழ் உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ? (3)
A cowherd woman says, “O lovely Yashoda, he is a little boy and he smiles sweetly. I keep a pot full of butter in the…
மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற வளை வண்ண நல் மா மேனி தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவன் இவை செய்தறியான் பொய்ந் நம்பி புள்ளுவன் கள்வம் பொதி அறை போகின்றவா தவழ்ந்திட்டு இந் நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை என் செய்கேன்? என் செய்கேனோ? (4)
A cowherd woman says, “Balaraman was born to a mother with spear-like eyes that were darkened with kohl. He and his b…
தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை சந்த மலர்க் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி பந்து பறித்து துகில் பற்றிக் கீறி படிறன் படிறுசெய்யும் நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம்? நங்காய் என் செய்கேன்? என் செய்கேனோ? (5)
A cowherd woman says, “One day before his father had returned, when I wasn’t at home and my friends weren’t around, h…
மண்மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை அண்ணல் இலைக் குழல் ஊதி நம் சேரிக்கே அல்லில்-தான் வந்த பின்னை கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மி கமலச் செவ்வாய் வெளுப்ப என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன்? என் செய்கேனோ? (6)
A cowherdess says, “ O Yashoda, our lord who was carried to our cowherd village by his father Nandan at night when he…
ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு அன்று ஆயர் விழவு எடுப்ப பாசனம் நல்லன பண்டிகளால் புகப் பெய்த அதனை எல்லாம் போயிருந்து அங்கு ஒரு பூத வடிவுகொண்டு உன் மகன் இன்று நங்காய் மாயன் அதனை எல்லாம் முற்ற வாரி வளைத்து உண்டு இருந்தான் போலும் (7)
A cowherd woman says, “The cowherds celebrated a festival and offered many kinds of food for the thousand-eyed Indra.…
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஓர் ஓர் குடம் துற்றிடும் என்று ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு எள்கி இவனை நங்காய் சோத்தம் பிரான் இவை செய்யப் பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் பேய்ச்சி முலை உண்ட பின்னை இப் பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே (8)
Yashoda says, “The cowherd women got together and called me. They said, ‘See, we kept the fermented yogurt, fragrant …
ஈடும் வலியும் உடைய இந் நம்பி பிறந்த எழு திங்களில் ஏடு அலர் கண்ணியினானை வளர்த்தி யமுனை நீராடப் போனேன் சேடன் திரு மறு மார்வன் கிடந்து திருவடியால் மலைபோல் ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை உரப்புவது அஞ்சுவனே (9)
Yashoda says, “Seven months after my dear son was born, when I had put my strong, matchless child to sleep on a bed s…
அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள் ஆயிரம் நாழி நெய்யை பஞ்சிய மெல் அடிப் பிள்ளைகள் உண்கின்று பாகம்-தான் வையார்களே கஞ்சன் கடியன் கறவு எட்டு நாளில் என் கைவலத்து ஆதும் இல்லை நெஞ்சத்து இருப்பன செய்துவைத்தாய் நம்பீ என் செய்கேன்? என் செய்கேனோ? (10)
Yashoda says, “O beautiful friends, I am afraid even of calling him by name. Even if the young children with soft, co…
அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ- நம்பீ ஆயர் மட மக்களை? பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள் பின்னே சென்று ஒளித்திருந்து அங்கு அவர் பூந் துகில் வாரிக்கொண்டிட்டு அரவு ஏர் இடையார் இரப்ப மங்கை நல்லீர் வந்து கொள்மின் என்று மரம் ஏறி இருந்தாய் போலும் (11)
Yashoda says to Kaṇṇan, “ O lovely one! How could you do these naughty things? O Nambi, you hid and went behind the b…
அச்சம் தினைத்தனை இல்லை இப் பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும் உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய் பச்சிலைப் பூங் கடம்பு ஏறி விசைகொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய் நச்சு அழல் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் (12)
Yashoda says, “This child has no fear, even to the extent of a tiny millet seed. I raised him with manliness and brav…
தம்பரம் அல்லன ஆண்மைகளைத் தனியே நின்று தாம் செய்வரோ? எம் பெருமான் உன்னைப் பெற்ற வயிறு உடையேன் இனி யான் என் செய்கேன்? அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல் அங்கு அனல் செங் கண் உடை வம்பு அவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் (13)
Yashoda says, “O my lord, do great people do things that are not suitable? I gave birth to you. What can I do? You fo…
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அரு வரைபோல் மன்னு கருங் களிற்று ஆர் உயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ் கன்னி நல் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர்க் கலிகன்றி இன் இசை மாலைகள் ஈர் ஏழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே (14) ------------- 98. ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடி உரைத்தல்
Kaliyan the chief of rich lovely Thirumangai surrounded with strong walls and the wide ocean composed fourteen sweet …
காதில் கடிப்பு இட்டு கலிங்கம் உடுத்து தாது நல்ல தண் அம் துழாய்கொடு அணிந்து போது மறுத்து புறமே வந்து நின்றீர்- ஏதுக்கு? இது என்? இது என்? இது என்னோ? (1)
A cowherd girl says to Kaṇṇan, “You didn’t come on the day you said you would to see me, but wearing earrings in your…
துவர் ஆடை உடுத்து ஒரு செண்டு சிலுப்பி கவர் ஆக முடித்து கலிக் கச்சுக் கட்டி சுவர் ஆர் கதவின் புறமே வந்து நின்றீர்- இவர் ஆர்? இது என்? இது என்? இது என்னோ? (2)
A cowherd girl says to Kaṇṇan, “You wear an orange dress, your hair is tied up in a knot and you have tied a kachu ar…
கருளக் கொடி ஒன்று உடையீர் தனிப் பாகீர் உருளச் சகடம்-அது உறுக்கி நிமிர்த்தீர் மருளைக்கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர் இருளத்து இது என்? இது என்? இது என்னோ? (3)
A cowherd girl says to Kaṇṇan, “You, matchless, carry an eagle banner and you killed Sakāṭāsuran when he came as a ca…
நாமம் பலவும் உடை நாரண நம்பீ தாமத் துளவம் மிக நாறிடுகின்றீர் காமன் எனப் பாடி வந்து இல்லம் புகுந்தீர் ஏமத்து-இது என்? இது என்? இது என்னோ? (4)
A cowherd girl says to Kaṇṇan, “You are the sweet Nāraṇan with many names adorned with thulasi garlands. You come lik…
சுற்றும் குழல் தாழ சுரிகை அணைத்து மற்று பல மா மணி பொன் கொடு அணிந்து முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்- எற்றுக்கு? இது என்? இது என்? இது என்னோ? (5)
A cowherd girl says to Kaṇṇan. “Your hair is long and curly, you carry a small sword and you are adorned with many go…
ஆன்-ஆயரும் ஆ-நிரையும் அங்கு ஒழிய கூன் ஆயது ஓர் கொற்ற வில் ஒன்று கை ஏந்தி போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர்- ஏனோர்கள் முன் என்? இது என்? இது என்னோ? 6
A cowherd girl says to Kaṇṇan. “You left the cowherds and their cows, carrying a curved victorious bow, and now you l…
மல்லே பொருத திரள் தோள் மணவாளீர் அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை சொல்லாது ஒழியீர் சொன்னபோதினால் வாரீர்- எல்லே இது என்? இது என்? இது என்னோ? (7)
A cowherd girl says to Kaṇṇan, “You, our beloved, fought the wrestlers with your strong arms. Last night we already k…
புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர் இக் காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம் தக்கார் பலர் தேவிமார் சால உடையீர்- எக்கே இது என்? இது என்? இது என்னோ? (8)
A cowherd says to Kaṇṇan “You are faultless. You entered a pond, caught the snake Kālingan and danced on his heads. Y…
ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய்க் கூடிக் குரவை பிணை கோமளப் பிள்ளாய் தேடி திரு மா மகள் மண்மகள் நிற்ப- ஏடி இது என்? இது என்? இது என்னோ? (9)
A cowherd girl says to Kaṇṇan. “You are a handsome young man. The goddess of wealth Lakshmi and the earth goddess sta…
அல்லிக் கமலக் கண்ணனை அங்கு ஓர் ஆய்ச்சி எல்லிப் பொழுது ஊடிய ஊடல் திறத்தைக் கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை சொல்லித் துதிப்பார்-அவர் துக்கம் இலரே (10) ---------- 99. பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு
Kaliyan who has strong mountain-like arms composed a garland of pāsurams describing how the cowherd girls, quarrel du…
புள் உரு ஆகி நள் இருள் வந்த பூதனை மாள இலங்கை ஒள் எரி மண்டி உண்ணப் பணித்த ஊக்கம்-அதனை நினைந்தோ- கள் அவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும் பிள்ளை-தன் கையில் கிண்ணமே ஒக்கப் பேசுவது? எந்தை பிரானே (1)
Her mother says, “You, the heroic lord, burnt Lanka and you drank the milk of the devil Putana when she came in the m…
மன்றில் மலிந்து கூத்து உவந்து ஆடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர் அன்று நடுங்க ஆ-நிரை காத்த ஆண்மை கொலோ? அறியேன் நான்- நின்ற பிரானே நீள் கடல் வண்ணா நீ இவள்-தன்னை நின் கோயில் முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே (2)
Her mother says, “You, the ocean-colored lord of Thirumalai, danced the kuthu dance in the middle of the village, you…
ஆர் மலி ஆழி சங்கொடு பற்றி ஆற்றலை ஆற்றல் மிகுத்து கார் முகில் வண்ணா கஞ்சனை முன்னம் கடந்த நின் கடுந் திறல் தானோ- நேர் இழை மாதை நித்திலத் தொத்தை நெடுங் கடல் அமுது அனையாளை ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம் இவள் எனக் கருதுகின்றாயே? (3)
Her mother says, “ O lovely god, you have the color of a dark cloud, and the mighty discus and conch you carry in you…
மல்கிய தோளும் மான் உரி அதளும் உடையவர்-தமக்கும் ஓர் பாகம் நல்கிய நலமோ? நரகனைத் தொலைத்த கரதலத்து அமைதியின் கருத்தோ? அல்லி அம் கோதை அணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் சொல்லி என்-நம்பி இவளை நீ உங்கள் தொண்டர் கைத் தண்டு என்ற ஆறே? (4)
Her mother says, “You gave part of your body to Shiva who has round arms and wears a deer skin. Your strong hands kil…
செரு அழியாத மன்னர்கள் மாள தேர் வலம் கொண்டு அவர் செல்லும் அரு வழி வானம் அதர்படக் கண்ட ஆண்மை கொலோ? அறியேன் நான்- திருமொழி எங்கள் தே மலர்க் கோதை சீர்மையை நினைந்திலை அந்தோ பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் எனப் பேசுகின்றாயே (5)
Her mother says, “Alas, you don’t think of the beauty of my daughter who speaks sweetly and whose hair is decorated w…
அரக்கியர் ஆகம் புல் என வில்லால் அணி மதிள் இலங்கையார்-கோனைச் செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற சேவகமோ செய்தது இன்று?- முருக்கு இதழ் வாய்ச்சி முன் கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய் எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் என் செய்வது? எந்தை பிரானே (6)
Her mother says, “What is this you are doing now? You made the white conch bangles of my daughter grow loose whose mo…
ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடல் உலகம் முன் ஆண்ட பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழ படை மழுப் பற்றிய வலியோ- மாழை மென் நோக்கி மணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய்? கோழி வெண் முட்டைக்கு என் செய்வது-எந்தாய்!- குறுந்தடி? நெடுங் கடல் வண்ணா (7)
Her mother says, “O lord, you are our father with the color of the large ocean. You stole the shining color of my dau…
பொருந்தலன் ஆகம் புள் உவந்து ஏற வள் உகிரால் பிளந்து அன்று பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமைகொலோ செய்தது இன்று?- பெருந் தடங் கண்ணி சுரும்பு உறு கோதை பெருமையை நினைந்திலை பேசில் கருங் கடல் வண்ணா கவுள் கொண்ட நீர் ஆம் இவள் எனக் கருதுகின்றாயே (8)
Her mother says, “You, colored like the dark ocean, have not thought of the pride of my daughter whose eyes are beaut…
நீர் அழல் வான் ஆய் நெடு நிலம் கால் ஆய் நின்ற நின் நீர்மையை நினைந்தோ- சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னது ஓர் தேற்றன்மை தானோ- பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய பாவையைப் பாவம் செய்தேனுக்கு ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாயே? (9)
Her mother says, “Are you proud because you are water, fire, sky, the large world and wind? Or do you think that my d…
வேட்டத்தைக் கருதாது அடி-இணை வணங்கி மெய்ம்மையே நின்று எம் பெருமானை வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் தோட்டு அலர் பைந்தார்ச் சுடர் முடியானைப் பழமொழியால் பணிந்து உரைத்த பாட்டு இவை பாட பத்திமை பெருகிச் சித்தமும் திருவொடு மிகுமே (10) ---------------- 100. தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாமை மீதிட்டுக் கூறுதல்
Kaliyan the chief of Thirumangai with a spear in his hand overcame his desires for the world and worshiped the feet o…
திருத்தாய் செம்போத்தே திரு மா மகள்-தன் கணவன் மருத் தார் தொல் புகழ் மாதவனை வர- திருத்தாய் செம்போத்தே (1)
She says, “O red pothu bird! He, the husband of the goddess of wealth, Lakshmi, is Madhavan adorned with a thulasi ga…
கரையாய் காக்கைப் பிள்ளாய் கரு மா முகில் போல் நிறத்தன் உரை ஆர் தொல் புகழ் உத்தமனை வர- கரையாய் காக்கைப் பிள்ளாய் (2)
She says, “O baby crow! Call him who has the color of a lovely dark cloud. He is Uthaman, praised by all from ancient…
கூவாய் பூங் குயிலே குளிர் மாரி தடுத்து உகந்த மா வாய் கீண்ட மணி வண்ணனை வர- கூவாய் பூங் குயிலே (3)
She says, “O beautiful cuckoo bird, sing and call him who has the color of a blue sapphire. He stopped the storm by c…
கொட்டாய் பல்லிக் குட்டி குடம் ஆடி உலகு அளந்த மட்டு ஆர் பூங் குழல் மாதவனை வர- கொட்டாய் பல்லிக் குட்டி (4)
She says, “O lizard, call him, the Madhavan who danced on a pot and measured the world at king Mahābali’s sacrifice. …
சொல்லாய் பைங் கிளியே சுடர் ஆழி வலன் உயர்த்த மல் ஆர் தோள் வட வேங்கடவனை வர- சொல்லாய் பைங் கிளியே (5)
She says, “O green parrot, say, ‘He carries a discus with his strong handsome arms and he is the lord of the Venkaṭam…
கோழி கூ என்னுமால் தோழி நான் என் செய்கேன்? ஆழி வண்ணர் வரும் பொழுது ஆயிற்று- கோழி கூ என்னுமால் (6)
She says, “The rooster crows and the sun rises. O friend, what can I do? It is the morning and the lord who has the c…
காமற்கு என் கடவேன்? கரு மா முகில் வண்ணற்கு அல்லால் பூ மேல் ஐங்கணை கோத்துப் புகுந்து எய்ய- காமற்கு என் கடவேன்? (7)
She says, “What can I do to stop Kāma, who has shot five flower arrows into my heart and hurt me? I was already suffe…
இங்கே போதும்கொலோ- இன வேல் நெடுங் கண் களிப்ப? கொங்கு ஆர் சோலைக் குடந்தைக் கிடந்த மால் இங்கே போதும்கொலோ? (8)
She says, “Will the god Māl who lies on Adisesha in Thirukkudanthai surrounded with groves dripping with honey come h…
இன்னார் என்று அறியேன் அன்னே ஆழியொடும் பொன் ஆர் சார்ங்கம் உடைய அடிகளை- இன்னார் என்று அறியேன் (9)
She says, “O mother, I don’t know who he is. He carries a discus and a beautiful golden bow. I don’t know who he is.”
தொண்டீர் பாடுமினோ சுரும்பு ஆர் பொழில் மங்கையர்-கோன் ஒண் தார் வேல் கலியன் ஒலி மாலைகள் தொண்டீர் பாடுமினோ (10) --------------- 101. பிரிவு ஆற்றாத தலைவி இரங்கிக் கூறுதல்
O devotees, sing. Sing the Tamil garland of pāsurams that Kaliyan, the chief of Thirumangai surrounded with groves sw…
குன்றம் ஒன்று எடுத்து ஏந்தி மா மழை அன்று காத்த அம்மான் அரக்கரை வென்ற வில்லியார் வீரமே கொலோ- தென்றல் வந்து தீ வீசும்? என் செய்கேன் 1
She says, “Our divine god protected the cows and cowherds from the storm by carrying Govardhana mountain. Heroic, he …
காரும் வார் பனிக் கடலும் அன்னவன் தாரும் மார்வமும் கண்ட தண்டமோ- சோரும் மா முகில் துளியினூடு வந்து ஈர வாடை-தான் ஈரும் என்னையே? 2
She says, “The cold wind hurts me as the dark clouds pour down drops of rain. Am I being punished because I long to s…
சங்கும் மாமையும் தளரும் மேனிமேல் திங்கள் வெம் கதிர் சீறும்-என் செய்கேன்?- பொங்கு வெண் திரைப் புணரி வண்ணனார் கொங்கு அலர்ந்த தார் கூவும் என்னையே 3
She says, “With its rays the moon is angry with me and makes my pale body weak. My conch bangles become loose. What c…
அங்கு ஓர் ஆய்க்குலத்துள் வளர்ந்து சென்று அங்கு ஓர் தாய் உரு ஆகி வந்தவள் கொங்கை நஞ்சு உண்ட கோயின்மை கொலோ- திங்கள் வெம் கதிர் சீறுகின்றதே? 4
She says, “He were taken to the clan of the cowherd village and raised there. When Putana came as a mother he drank m…
அங்கு ஓர் ஆள் அரி ஆய் அவுணனை பங்கமா இரு கூறு செய்தவன் மங்குல் மா மதி வாங்கவே கொலோ- பொங்கு மா கடல் புலம்புகின்றதே? 5
She says, “He took the form of a man-lion and split the chest of Hiraṇyan in two. Does the ocean cry in its lonelines…
சென்று வார் சிலை வளைத்து இலங்கையை வென்ற வில்லியார் வீரமே கொலோ- முன்றில் பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து அன்றிலின் குரல் அடரும் என்னையே? 6
She says, “He went to Lanka, bent his victorious bow and fought with the Rākshasas. On the palm tree, the andril bird…
பூவை வண்ணனார் புள்ளின்மேல் வர மேவி நின்று நான் கண்ட தண்டமோ- வீவு இல் ஐங்கணை வில்லி அம்பு கோத்து ஆவியே இலக்கு ஆக எய்வதே? 7
She says, “Kāma comes carrying five flower arrows, shoots them at me without stopping and makes me suffer. Am I being…
மால் இனம் துழாய் வரும் என் நெஞ்சகம் மாலின் அம் துழாய் வந்து என் உள்புக கோல வாடையும் கொண்டு வந்தது ஓர் ஆலி வந்ததால்-அரிது காவலே 8
She says, “When the thought of the thulasi garland that adorns him entered my heart, it came along with the lovely, c…
கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம் பண்டு பண்டு போல் ஒக்கும்-மிக்க சீர்த் தொண்டர் இட்ட பூந் துளவின் வாசமே வண்டு கொண்டுவந்து ஊதுமாகிலே 9
She says, “If bees bring and spread the fragrance of the beautiful fresh thulasi garland that devotees use to decorat…
அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச் சென்ற மாயனை செங் கண் மாலினை மன்றில் ஆர் புகழ் மங்கை வாள் கலி- கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே 10 ------------ 102. தலைவி பிரிவு ஆற்றாது வருந்திக் கூறுதல்
Kaliyan, the famous chief who carries a sword and is praised by all in Thirumangai composed pāsurams on our beautiful…
குன்றம் எடுத்து மழை தடுத்து இளையாரொடும் மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால்செய்தான் முன்றில் தனி நின்ற பெண்ணைமேல் கிடந்து ஈர்கின்ற அன்றிலின் கூட்டைப் பிரிக்ககிற்பவர் ஆர்கொலோ? 1
She says, “The lord who carried Govardhana mountain as an umbrella and blocked the storm, saving the cows and the cow…
பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மாச் செகுத்து ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை வாங்கி உண்ட அவ் வாயன் நிற்க இவ் ஆயன் வாய் ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும் இளமையே 2
She says, “The heroic Kaṇṇan who shattered the blooming Kurundam trees, and broke the tusks of the elephant Kuvalayāb…
மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணிவண்ணன் அல்லி மலர்த் தண் துழாய் நினைந்திருந்தேனையே எல்லியில் மாருதம் வந்து அடும் அது அன்றியும் கொல்லை வல் ஏற்றின் மணியும் கோயின்மை செய்யுமே 3
She says, “The dark sapphire-colored lord fought the wrestlers sent by Kamsan and conquered Kamsan and killed him. I …
பொருந்து மா மரம் ஏழும் எய்த புனிதனார் திருந்து சேவடி என் மனத்து நினைதொறும் கருந் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அது அன்றியும் வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன்? 4
She says, “The faultless lord shot his arrows and destroyed the seven marā trees. Whenever I think of his divine feet…
அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும் மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும்- பொன் அம் கலை அல்குல் அன்ன மென் நடை பூங் குழல்- பின்னை மணாளர்திறத்தம் ஆயின பின்னையே 5
She says, “My mother scolds me. The calling of the andril bird makes me sick with love. The waves of the ocean roar a…
ஆழியும் சங்கும் உடைய நங்கள் அடிகள்-தாம் பாழிமையான கனவில் நம்மைப் பகர்வித்தார் தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே 6
She says, “The lord who carries a discus and a conch came to me in a dream and made me love him. Except me and my fri…
காமன்-தனக்கு முறை அல்லேன் கடல் வண்ணனார் மா மணவாளர் எனக்குத் தானும் மகன் சொல்லில் யாமங்கள் தோறு எரி வீசும் என் இளங் கொங்கைகள் மா மணி வண்ணர்திறத்தவாய் வளர்கின்றவே 7
She says, “It is not fair that Kāma who is no relative of mine causes me pain, yet the ocean-colored god is my belove…
மஞ்சு உறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார் நெஞ்சம் நிறைகொண்டு போயினார் நினைகின்றிலர் வெம் சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ? நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே 8
She says, “The beloved god of Thirumalirunjolai where the clouds float high took my chastity and my heart and went aw…
காமன் கணைக்கு ஓர் இலக்கம் ஆய் நலத்தின் மிகு பூ மரு கோலம் நம் பெண்மை சிந்தித்து இராது போய் தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால் கார் முகில் வண்ணரைக் கண்களால் காணல் ஆம்கொலோ? 9
She says, “O friend, Kāma shoots his arrows and makes us suffer. We shouldn’t think that we are just women and that w…
வென்றி விடை உடன் ஏழ் அடர்த்த அடிகளை மன்றில் மலி புகழ் மங்கை மன் கலிகன்றி சொல் ஒன்று நின்ற ஒன்பதும் உரைப்பவர்-தங்கள்மேல் என்றும் நில்லா வினை ஒன்றும் சொல்லில் உலகிலே 10 --------- 103. தலைவி இரங்கிக் கூறல்
Kaliyan, the chief of Thirumangai praised by all, composed ten pāsurams on the victorious lord who fought and killed …
மன் இலங்கு பாரதத்துத் தேர் ஊர்ந்து மாவலியைப் பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து பொரு கடல் சூழ் தென் இலங்கை ஈடு அழித்த தேவர்க்கு-இது காணீர்- என் இலங்கு சங்கோடு எழில் தோற்றிருந்தேனே 1
She says, “He drove a shining chariot in the Bharatha war and he measured the world in three footsteps at Mahābali’s …
இருந்தான் என் உள்ளத்து இறைவன் கறை சேர் பருந் தாள் களிற்றுக்கு அருள் செய்த செங் கண் பெருந் தோள் நெடுமாலைப் பேர் பாடி ஆட வருந்தாது என் கொங்கை ஒளி மன்னும் அன்னே 2
She says, “He stays in my heart. When the elephant Gajendra with huge legs was caught by a crocodile, he came and sav…
அன்னே இவரை அறிவன் மறை நான்கும் முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து பொன் ஏய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து என்னே-இவர் எண்ணும் எண்ணம்? அறியோமே 3
She says, “He saved all the four Vedas and taught them to the sages. He came to me, made my precious golden bangles l…
அறியோமே என்று உரைக்கல் ஆமே எமக்கு- வெறி ஆர் பொழில் சூழ் வியன் குடந்தை மேவி சிறியான் ஓர் பிள்ளை ஆய் மெள்ள நடந்திட்டு உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்தார்-தம்மையே? 4
The lord who was born as a little child and toddled stole fragrant ghee from the uṛi and ate it happily. He stays in …
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஒக்க அருள் செய்வர் ஆதலால் தம்மையே நாளும் வணங்கித் தொழுது இறைஞ்சி தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே 5
If devotees bow to him and worship him every day he gives his grace to them and so we also bow and worship the lord a…
வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் உய்த்தார்-ஒளி விசும்பில் ஓர் அடி வைத்து ஓர் அடிக்கும் எய்த்தாது மண் என்று இமையோர் தொழுது ஏத்தி கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே 6
Kaṇṇan measured the world with one foot and the sky with the other and his devotees keep his feet in their hearts. Th…
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள் என்னோ கழன்ற? இவை என்ன மாயங்கள்? பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க அவன் மேய அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே? 7
Kaṇṇan is in my mind. Is it his māyam that makes the bangles on my arms grow loose? Is this because we are women and …
பாடோமே-எந்தை பெருமானை? பாடிநின்று ஆடோமே-ஆயிரம் பேரானை? பேர் நினைந்து சூடோமே-சூடும் துழாய் அலங்கல்? சூடி நாம் கூடோமே-கூடக் குறிப்பு ஆகில்? நல் நெஞ்சே 8
O good heart, we want go join him. Let us dance and sing the praise of our dear lord. Let us think of the thousand-na…
நல் நெஞ்சே நம் பெருமான் நாளும் இனிது அமரும் அன்னம் சேர் கானல் அணி ஆலி கைதொழுது முன்னம் சேர் வல்வினைகள் போக முகில் வண்ணன் பொன்னம் சேர் சேவடிமேல் போது அணியப்பெற்றோமே 9
O good heart! Let us fold our hands and worship him who stays happily in Thiruvāli where swans wander on the seashore…
பெற்று ஆரார்-ஆயிரம் பேரானைப் பேர் பாட பெற்றான் கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை கற்றார் ஓ முற்று உலகு ஆள்வர் இவை கேட்கல் உற்றார்க்கு உறு துயர் இல்லை உலகத்தே 10 ------------ 104. திருமாலின் திருஅவதாரங்களில் ஈடுபடுதல்
Kaliyan the poet composed ten Tamil musical pāsurams on the lord who has a thousand names. If devotees learn these na…
நிலை இடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வள நாடு மூட இமையோர் தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால் அலை கடல் நீர் குழம்ப அகடு ஆட ஓடி அகல் வான் உரிஞ்ச முதுகில் மலைகளை மீதுகொண்டு வரும் மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே 1
When the world was inundated by a terrible flood and the waves of the ocean rose and the water flowed everywhere and …
செரு மிகு வாள் எயிற்ற அரவு ஒன்று சுற்றி திசை மண்ணும் விண்ணும் உடனே வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய பரு வரை ஒன்று நின்று முதுகில் பரந்து சுழலக் கிடந்து துயிலும் அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன திருமால் நமக்கு ஓர் அரணே 2
As a turtle he supported Mandara mountain on his back and using it as a churning stick and the snake Vasuki as a rope…
தீது அறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உம்பர்-உலகு ஏழினோடும் உடனே மாதிரம் மண் சுமந்த வட குன்றும் நின்ற மலை ஆறும் ஏழு கடலும் பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின் ஒருபால் ஒடுங்க வளர் சேர் ஆதி முன் ஏனம் ஆகி அரண் ஆய மூர்த்தி அது நம்மை ஆளும் அரசே 3
He is the ancient god who, at the end of the eon, became a boar and saved everything from the flood— the worlds of th…
தளை அவிழ் கோதை மாலை இருபால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண் அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று பரியோன் சினங்கள் அவிழ வளை உகிர்-ஆளி மொய்ம்பின் மறவோனது ஆகம் மதியாது சென்று ஓர் உகிரால் பிளவு எழ விட்ட குட்டம்-அது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே 4
As a man-lion he went to Hiraṇyan and with heroic fiery eyes and his garland hanging down by his arms, he angrily spl…
வெந் திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கு ஓர் குறள் ஆகி மெய்ம்மை உணர செந் தொழில் வேத நாவின் முனி ஆகி வையம் அடி மூன்று இரந்து பெறினும் மந்தரமீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர் அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம்- அது நம்மை ஆளும் அரசே 5
He took the form of a dwarf-sage and went to the heroic king Mahābali’s sacrifice, reciting the Vedas as one who know…
இரு நில மன்னர்-தம்மை இரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே செரு நுதலூடு போகி அவர் ஆவி மங்க மழுவாளில் வென்ற திறலோன் பெரு நில-மங்கை மன்னர் மலர்-மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ் சேர் பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயர் ஆகி யவர் நம்மை ஆள்வர் பெரிதே 6
As heroic Parasuraman, he fought with his axe and defeated the twice eight and four kings of the world. The lord who …
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனம் ஆய மான் பின் எழில் சேர் அலை மலி வேல்கணாளை அகல்விப்பதற்கு ஓர் உரு ஆய மானை அமையா கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை பொடி ஆக வென்றி அமருள் சிலை மலி செஞ் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே 7
As Rama in the forest, he chased the Rākshasa Marisan who came as a golden deer to delight Sita whose sharp eyes were…
முன் உலகங்கள் ஏழும் இருள்மண்டி உண்ண முதலோடு வீடும் அறியாது என் இது வந்தது? என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ அன்னம்-அது ஆய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை ஆளும் அரசே 8
The world grew dark at the end of the eon in ancient times. The divine Vedas disappeared and the gods were shocked an…
துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது தொழுமின்கள் தொண்டர் தொலைய உண முலை முன் கொடுத்த உரவோளது ஆவி உக உண்டு வெண்ணெய் மருவி பணை முலை ஆயர் மாதர் உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர் இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் வினைப் பற்று அறுக்கும் விதியே 9
O devotees, do not think there are other ways you can be helped and that you do not need him. Worship the lord who dr…
கொலை கெழு செம் முகத்த களிறு ஒன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா சிலை கெழு செஞ் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ் கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலிகன்றி சொன்ன பனுவல் ஒலி கெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர் அவர் ஆள்வர் உம்பர் உலகே 10 ------------ 105. திருச்சாழல்
He killed the murderous, angry-faced elephant and he destroyed Lanka ruled by the cruel Rākshasa king, shooting might…
மான் அமரும் மென் நோக்கி வைதேவி இன் துணையா கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்தான் காண் ஏடீ!- கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்த பொன் அடிக்கள் வானவர்-தம் சென்னி மலர் கண்டாய் சாழலே 1
O friend, see, he went on a path filled with stones and lived in the forest with his wife Vaidehi with soft doe like …
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காண் ஏடீ!- நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான்முகற்குத் தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே 2
O friend, see! After he was born he released his father Vasudeva from the chains that bound his ankles and Nandan, th…
ஆழ் கடல் சூழ் வையகத்தார் ஏசப் போய் ஆய்ப்பாடித் தாழ் குழலார் வைத்த தயிர் உண்டான் காண் ஏடீ தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு இவ் ஏழ் உலகும் உண்டும் இடம் உடைத்தால் சாழலே 3
O friend, see! He was raised as a cowherd among people who did not know he was the lord. He ate happily all the fragr…
அறியாதார்க்கு ஆன் ஆயன் ஆகிப் போய் ஆய்ப்பாடி உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்தான் காண் ஏடீ!- உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்த பொன் வயிற்றுக்கு எறி நீர் உலகு அனைத்தும் எய்தாதால் சாழலே 4
O friend, see! He was raised as a cowherd among the innocent cowherds of the village and ate and relished the fragran…
வண்ணக் கருங் குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டான் காண் ஏடீ- கண்ணிக் குறுங் கயிற்றால் கட்டுண்டான் ஆகிலும் எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே (5)
O friend, see! The beautiful dark-haired cowherd women hit him with a churning stick and tied him up with a small rop…
கன்றப் பறை கறங்க கண்டவர்-தம் கண் களிப்ப மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் காண் ஏடீ!- மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் ஆகிலும் என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே (6)
O friend, see! He danced the marakkāl kuuthu in the mandram as the drums beat and his devotees saw his enthusiastic d…
கோதை வேல் ஐவர்க்கு ஆய் மண் அகலம் கூறு இடுவான் தூதன் ஆய் மன்னவனால் சொல்லுண்டான் காண் ஏடீ!- தூதன் ஆய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும் ஓத நீர் வையகம் முன் உண்டு உமிழ்ந்தான் சாழலே (7)
O friend, see! When the Kauravas disgraced Draupadi, the Pandavas’ wife, he went as a messenger to the Kauravas and a…
பார் மன்னர் மங்கப் படைதொட்டு வெம் சமத்துத் தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான் காண் ஏடீ!- தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான் ஆகிலும் தார் மன்னர்-தங்கள் தலைமேலான் சாழலே (8)
O friends, see. He drove the chariot of the Pandavas in the terrible Bharatha war and destroyed their enemies, the Ka…
கண்டார் இரங்க கழியக் குறள் உரு ஆய் வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் காண் ஏடீ வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும் விண்டு ஏழ் உலகுக்கும் மிக்கான் காண் சாழலே (9)
O friend, see! He went to the sacrifice of Mahābali, the king adorned with cool garlands, and begged for three feet o…
கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான் வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காண் ஏடீ!- வெள்ளத்தான் வேங்கடத்தானேலும் கலிகன்றி உள்ளத்தின் உள்ளே உளன் கண்டாய் சாழலே (10) ----------- 106. உலகத்தைப் பிரளயத்திலிருந்து எம் பெருமான் உய்வித்தமை கூறி உலகிற்கு உபதேசித்தல்
O friend, see! He went as a dwarf to king Mahabali’s sacrifice, asked for three feet of land, tricked the king, grew …
மைந் நின்ற கருங் கடல்வாய் உலகு இன்றி வானவரும் யாமும் எல்லாம் நெய்ந் நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் நெடுங் காலம் கிடந்தது ஓரீர் எந் நன்றி செய்தாரா ஏதிலோர் தெய்வத்தை ஏத்துகின்றீர்? செய்ந்நன்றி குன்றேல்மின் தொண்டர்காள் அண்டனைய ஏத்தீர்களே (1)
At the end of the eon, he swallowed all the gods’ worlds and the people of the seven worlds surrounded with dark ocea…
நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீது ஓடி நிமிர்ந்த காலம் மல் ஆண்ட தடக் கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்து அன்று எல்லாரும் அறியாரோ? எம் பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் அல்லாதார் தாம் உளரே? அவன் அருளே உலகு ஆவது அறியீர்களே? (2)
When the abundant flood came at the end of the eon and rose to the sky, the lord with his strong hands took all ocean…
நெற்றிமேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால் வாய் ஒற்றைக் கை வெண் பகட்டின் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும் வெற்றிப் போர்க் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட கொற்றப்போர் ஆழியான் குணம் பரவாச் சிறுதொண்டர் கொடிய ஆறே (3)
He swallowed and kept in his stomach Shiva with an eye in his forehead, Nānmuhan, the god of the Vedas, Indra who rid…
பனிப் பரவைத் திரை ததும்ப பார் எல்லாம் நெடுங் கடலே ஆன காலம் இனிக் களைகண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி முனித் தலைவன் முழங்கு ஒளி சேர் திரு வயிற்றில் வைத்து உம்மை உய்யக்கொண்ட கனிக் களவத் திரு உருவத்து ஒருவனையே கழல் தொழுமா கல்லீர்களே (4)
At the end of the eon, the waves of the ocean spread everywhere in the world and the whole earth became a large ocean…
பார் ஆரும் காணாமே பரவை மா நெடுங் கடலே ஆன காலம் ஆரானும் அவனுடைய திரு வயிற்றில் நெடுங்காலம் கிடந்தது உள்ளத்து ஓராத உணர்விலீர் உணருதிரேல் உலகு அளந்த உம்பர் கோமான் பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே (5)
At the end of the eon, the whole world was filled with water and no one was going to survive. He swallowed everyone a…
பேய் இருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின்-மீது ஓடிப் பெருகு காலம் தாய் இருக்கும் வண்ணமே உம்மைத் தன் வயிற்று இருத்தி உய்யக்கொண்டான் போய் இருக்க மற்று இங்கு ஓர் புதுத் தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ- மாட்டாத தகவு அற்றீரே? 6
At the end of the eon when the large flood rose to the sky, he swallowed all the worlds and the oceans and protected …
மண் நாடும் விண் நாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம் உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி அவனை உள்ளத்து எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனிய ஆறே 7
He is our dear lord of Thirukaṇṇamangai who protected all, swallowing all the people of the worlds, the gods in the s…
மறம் கிளர்ந்த கருங் கடல் நீர் உரம் துரந்து பரந்து ஏறி அண்டத்து அப்பால் புறம் கிளர்ந்த காலத்து பொன் உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி அறம் கிளந்த திரு வயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட நிறம் கிளர்ந்த கருஞ் சோதி நெடுந்தகையை நினையாதார் நீசர்-தாமே 8
At the end of the eon, the worlds were covered with thick darkness and the oceans rose in a flood that spread over al…
அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர்த் திரை ததும்ப ஆஆ என்று தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும் தான் அருளி உலகம் ஏழும் உண்டு ஒத்த திருவயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட கொண்டல் கை மணி வண்ணன் தண் குடந்தை நகர் பாடி ஆடீர்களே 9
At the end of the eon when the waves of the ocean rose and touched the sky, he felt pity for his devotees, the gods a…
தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் யாவரையும் ஒழியாமே எம் பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன கா வளரும் பொழில் மங்கைக் கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார் பூ வளரும் திருமகளால் அருள்பெற்றுப் பொன்-உலகில் பொலிவர்-தாமே 10 ------------- 107. எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்
Kaliyan of Thirumangai surrounded by flourishing groves composed a garland of musical pāsurams describing how the lor…
நீள் நாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலைப் பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை பூண் ஆர மார்வனை புள் ஊரும் பொன் மலையை- காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே 1
The dear lord whose chest is adorned with jewels shines like a golden hill and rides on the bird Garuḍa. He used Mand…
நீள்வான் குறள் உரு ஆய் நின்று இரந்து மாவலி மண் தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை தோளாத மா மணியை தொண்டர்க்கு இனியானை- கேளாச் செவிகள் செவி அல்ல கேட்டாமே 2
The highest lord who is sweet to his devotees shines as a precious jewel that never loses its luster. He, the highest…
தூயானை தூய மறையானை தென் ஆலி மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட வாயானை மாலை-வணங்கி அவன் பெருமை பேசாதார் பேச்சு என்றும் பேச்சு அல்ல கேட்டாமே 3
The faultless god of Thennāli who is the divine Vedas drank the milk of Putana and killed her. If devotees have not w…
கூடா இரணியனைக் கூர் உகிரால் மார்வு இடந்த ஓடா அடல் அரியை உம்பரார் கோமானை தோடு ஆர் நறுந் துழாய் மார்வனை-ஆர்வத்தால் பாடாதார் பாட்டு என்றும் பாட்டு அல்ல கேட்டாமே 4
The god of the gods with a chest adorned with a fragrant fresh thulasi garland took the form of a man-lion and split …
மை ஆர் கடலும் மணி வரையும் மா முகிலும் கொய் ஆர் குவளையும் காயாவும் போன்று இருண்ட மெய்யானை மெய்ய மலையானை சங்கு ஏந்தும் கையானை-கை தொழா கை அல்ல கண்டாமே 5
The lord who stays in the Thirumeyyam hills. and carries a conch in his hand has the color of the dark ocean, of a sh…
கள் ஆர் துழாயும் கணவலரும் கூவிளையும் முள் ஆர் முளரியும் ஆம்பலும் முன் கண்டக்கால் புள் ஆய் ஓர் ஏனம் ஆய்ப் புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று- உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக் கொள்ளோமே 6
When devotees see thulasi dripping with honey, fresh alari flowers, kuvilai flowers, thorny muḷari blossoms and ambal…
கனை ஆர் கடலும் கருவிளையும் காயாவும் அனையானை-அன்பினால் ஆர்வத்தால் என்றும் சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சு அல்ல கண்டாமே 7
If devotees do not bring flowers and worship with love and devotion the lord who has the color of the sounding ocean,…
வெறி ஆர் கருங் கூந்தல் ஆய்ச்சியர் வைத்த உறி ஆர் நறு வெண்ணெய் தான் உகந்து உண்ட சிறியானை செங் கண் நெடியானை-சிந்தித்து அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே 8
When he was a little child he stole and happily ate the fragrant butter that was kept in the uri by the cowherdesses …
தேனொடு வண்டு ஆலும் திருமாலிருஞ்சோலை தான் இடமாக் கொண்டான் தட மலர்க் கண்ணிக்காய் ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தாற்கு-ஆள் ஆனார் அல்லாதார் மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே 9
The god of Thirumalirunjolai where bees drink honey and sing fought with seven bulls to marry Nappinnai whose eyes ar…
மெய்ந் நின்ற பாவம் அகல திருமாலைக் கைந் நின்ற ஆழியான் சூழும் கழல் சூடிக் கைந் நின்ற வேல் கைக் கலியன் ஒலி மாலை ஐயொன்றும் ஐந்தும் இவை-பாடி ஆடுமினே 10 ---------- 108. பிறப்பைப் போக்கி அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல்
Kaliyan who carries a spear in his hands composed ten musical pāsurams worshiping the feet of the lord who carries a …
மாற்றம் உள ஆகிலும் சொல்லுவன் மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய்கொல் என்று இன்னம்- ஆற்றங்கரை வாழ் மரம்போல்-அஞ்சுகின்றேன் நாற்றம் சுவை ஊறு ஒலி ஆகிய நம்பீ (1)
O Nambi, you are smell, taste, touch and sound. When I complain that you have not given me your grace, you may say th…
சீற்றம் உள ஆகிலும் செப்புவன் மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய்கொல் என்று அஞ்சி- காற்றத்திடைப்பட்ட கலவர் மனம்போல்- ஆற்றத் துளங்கா நிற்பன் ஆழி வலவா (2)
Even though I am angry at you who carry a victorious discus, I would tell you this. I do not want you to put me in a …
தூங்கு ஆர் பிறவிக்கண் இன்னம் புகப் பெய்து வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சி- பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால்போல்- தாங்காது உள்ளம் தள்ளும் என் தமரைக்கண்ணா (3)
O my lotus-eyed Kaṇṇan, I have suffered, born in many births and I am worried and afraid that you will make me be bor…
உரு ஆர் பிறவிக்கண் இன்னம் புகப் பெய்து திரிவாய் என்று சிந்தித்தி என்று அதற்கு அஞ்சி- இரு பாடு எரி கொள்ளியினுள்-எறும்பேபோல்- உருகாநிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா (4)
I am afraid that you, the lord of the eon, will make me be born in many more births and suffer. My mind is in pain li…
கொள்ளக் குறையாத இடும்பைக் குழியில் தள்ளிப் புகப் பெய்திகொல் என்று அதற்கு அஞ்சி- வெள்ளத்திடைப்பட்ட நரி இனம்போலே- உள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா (5)
I have suffered, born in many births and I am afraid you, the ancient god of the eon, will make me fall into the hole…
படை நின்ற பைந்தாமரையோடு அணி நீலம் மடை நின்று அலரும் வயல் ஆலி மணாளா இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே- அடைய அருளாய் எனக்கு உன்-தன் அருளே (6)
You are the Maṇāḷan of Vayalāli where beautiful neelam flowers bloom near the water filled with lovely blossoming lot…
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது-அடியேன் நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் தேம்பல் இளந் திங்கள் சிறைவிடுத்து ஐவாய்ப் பாம்பின் அணைப் பள்ளிகொண்டாய் பரஞ்சோதீ (7)
Like the worm that lives in a margosa tree and will not eat anything except its leaves, I do not want to be anywhere …
அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா!- துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு மணியே மணி மாணிக்கமே மதுசூதா!- பணியாய் எனக்கு உய்யும் வகை-பரஞ்சோதீ (8)
I want nothing but your grace. You are the god of Srirangam surrounded with beautiful groves, a jewel and a shining d…
நந்தா நரகத்து அழுந்தாவகை நாளும்- எந்தாய் தொண்டர் ஆனவர்க்கு இன் அருள் செய்வாய் சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா!- அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே (9)
O my father, show me a path so I will not be plunged into indestructible hell. Give us, your devotees, your sweet gra…
குன்றம் எடுத்து ஆ-நிரை காத்தவன்-தன்னை மன்றில் புகழ் மங்கை மன் கலிகன்றி சொல் ஒன்று நின்ற ஒன்பதும் வல்லவர்-தம்மேல் என்றும் வினை ஆயின சாரகில்லாவே (10) --------- திருமங்கை ஆழ்வார் - திருக்குறுந் தாண்டகம் (2032 – 2051)
Kaliyan, king of famous Thirumangai, composed ten pāsurams praising the cowherd, the god who protected the cows from …