100 passages · ~24 min read
Tap any verse to open it — original, meaning & audio.
The world is a lamp for me, wide ocean is its ghee, and the warm sun is its light. I place this garland of words on t…
என்று கடல் கடைந்தது? எவ் உலகம் நீர் ஏற்றது?- ஒன்றும் அதனை உணரேன் நான் அன்று அது- அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது-நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் (2)
I do not know when you churned the milky ocean or when the whole earth was surrounded with the seas, all I know is th…
பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே சூர் உருவின் பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன்- நீ அளவு கண்ட நெறி (3)
With one foot you measured the whole world and with the other rose to the sky and measured it. O wonderful lord! I ca…
நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து பொறி வாசல் போர்க் கதவம் சாத்தி அறிவானாம்- ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த ஆலம் அமர் கண்டத்து அரன் (4)
Our god opens the door of moksha for those who control their five senses and he himself is the path of moksha. Shiva …
அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர் கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி உருவம் எரி கார் மேனி ஒன்று (5)
The names of Thirumāl and Shiva are Nāraṇan and Haran and Garuḍa and a bull are their vehicles. They taught the Vedas…
ஒன்றும் மறந்தறியேன் ஓத நீர் வண்ணனை நான் இன்று மறப்பனோ ஏழைகாள்? அன்று கரு-அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன்- திருவரங்கம் மேயான் திசை (6)
He has the color of the ocean rolling with waves and I have never forgotten him. O, innocent ones, how could I forget…
திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து இசையும் கருமங்கள் எல்லாம்-அசைவு இல் சீர்க் கண்ணன் நெடு மால் கடல் கடைந்த கார் ஓத வண்ணன் படைத்த மயக்கு (7)
Our lord is in all the directions with all the gods and is in all the actions that they do and in their results. All …
மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து இயங்கும் எறி கதிரோன்-தன்னை முயங்கு அமருள் தேர் ஆழியால் மறைத்தது என் நீ திருமாலே!- போர் ஆழிக் கையால் பொருது? (8)
O Thirumāl, why did you put the conch in your mouth and blow it and mesmerize all when you fought in the Bharatha bat…
பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கு இடந்தாய்க்கு அன்று உன்ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே-விரி தோட்ட சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க மா வடிவின் நீ அளந்த மண் (9)
You took the form boar and on your single tusk you brought up the earth goddess from the underworld. Was that not the…
மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும் விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில் அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இவ் உலகு அளவும் உண்டோ உன் வாய்? (10)
O lord with a heroic discus! People say that you really swallowed the earth, hills, the oceans rolling with waves, th…
வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம் தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலை நஞ்சு ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்- காணா கண் கேளா செவி (11)
He measured the world with his feet and my mouth will not praise any other but him. My hands will not worship anyone …
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே- ஏனமாய் நின்றாற்கு இயல்வு (12)
The nature of the lord who took the form of a boar to bring the earth goddess from the underworld is the feelings of …
இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக நீதியால் ஓதி நியமங்களால் பரவ ஆதியாய் நின்றார் அவர் (13)
They who were born as people in ancient times, recited the sastras and the Vedas in the proper way and worshiped him …
அவர் அவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி இவர் இவர் எம் பெருமான் என்று சுவர்மிசைச் சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த மூர்த்தி உருவே முதல் (14)
People praise various gods in the ways they know, saying, “This or that god is our dear lord,” and they put their pic…
முதல் ஆவார் மூவரே அம் மூவருள்ளும் முதல் ஆவான் மூரி நீர் வண்ணன் முதல் ஆய நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப் பல்லார் அருளும் பழுது (15)
The three gods came first, and among them the ocean-colored god was first. If we do not have his grace, the grace giv…
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் அரவு-அணைமேல் கண்டு தொழுதேன்- கடல் ஓதம் கால் அலைப்பக் கண்வளரும் செங்கண் அடல் ஓத வண்ணர் அடி (16)
When I realized that I have spent all my days in vain, I was afraid and cried, and I worshiped the feet of the ocean …
அடியும் படி கடப்ப தோள் திசைமேல் செல்ல முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால் ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறைப் புள் ஊர்ந்தான் உலகு அளந்த நான்று (17)
People praise his heroism and say, “When the lord who split open the chest of the Hiraṇyan with his sharp claws measu…
நான்ற முலைத்தலை நஞ்சு உண்டு உறி வெண்ணெய் தோன்ற உண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப் பொருது உடைவு கண்டானும் புள்வாய் கீண்டானும்- மருது இடை போய் மண் அளந்த மால் (18)
The lord drank the poisonous milk from the breasts of Putanā, fought and conquered the elephant Kuvalayaabeedam, spli…
மாலும் கருங் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு ஆலின் இலைத் துயின்ற ஆழியான் கோலக் கரு மேனிச் செங்கண் மால் கண்படையுள் என்றும் திருமேனி நீ தீண்டப்பெற்று? (19)
O dark ocean, Thirumāl has a dark body and beautiful eyes. He swallowed the earth and slept on a banyan leaf as a bab…
பெற்றார் தளை கழலப் பேர்ந்து ஓர் குறள் உருவாய் செற்றார் படி கடந்த செங்கண் மால் நல் தா- மரைமலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று (20)
The gods sprinkle fresh flowers, fold their hands and worship the beautiful divine lotus feet of the lord who cut the…
நின்று நிலம் அங்கை நீர் ஏற்று மூவடியால் சென்று திசை அளந்த செங்கண் மாற்கு என்றும் படை ஆழி புள் ஊர்தி பாம்பு-அணையான் பாதம் அடை ஆழி நெஞ்சே அறி (21)
Lovely-eyed Thirumāl with a discus who rides on the bird Garuda rests on the snake Adishesa. He took water from Mahāb…
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்- பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் வெறி கமழும் காம்பு ஏய் மென்தோளி கடை வெண்ணெய் உண்டாயைத் தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு (22)
O lord, you ride on Garuda with dotted wings! Yashoda with arms soft and round like bamboo tied you with a rope when …
தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவாம் அங்கை தழும்பு இருந்த தாள் சகடம் சாடி தழும்பு இருந்த- பூங்கோதையாள் வெருவ பொன் பெயரோன் மார்பு இடந்த வீங்கு ஓத வண்ணர் விரல் (23)
The lord with the color of the ocean rolling with waves has scars on his fingers from using his Sharngam bow, a mark …
விரலோடு வாய் தோய்ந்த வெண்ணெய் கண்டு ஆய்ச்சி உரலோடு உறப் பிணித்த நான்று குரல் ஓவாது ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே? ஓங்கு ஓத வண்ணா உரை (24)
O lord with the color of the ocean rolling with waves, when Yasodha the cowherdess saw butter on your mouth and finge…
உரை மேற்கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும் வரைமேல் மரகதமே போலத் திரைமேல் கிடந்தானை கீண்டானை கேழலாய்ப் பூமி இடந்தானை ஏத்தி எழும் (25)
My heart praises without ceasing the emerald-colored lord who stays in the hills and rests on the ocean. He split ope…
எழுவார் விடைகொள்வார் ஈன் துழாயானை வழுவாவகை நினைந்து வைகல் தொழுவார் வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே - வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை (26)
If devotees get up in the morning, go to Thiruvenkaṭam hills that brighten the mind and if every day they worship the…
மலையால் குடை கவித்து மா வாய் பிளந்து சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலை யானைப் போர்க் கோடு ஒசித்தனவும் பூங் குருந்தம் சாய்த்தனவும்- கார்க் கோடு பற்றியான் கை (27)
The hands of the lord that carry a strong bow carried Govardhana hills to save the cows and the cowherds. He split op…
கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து ஐய மலர்மகள் நின் ஆகத்தாள் செய்ய மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த இறையான் நின் ஆகத்து இறை (28)
O god with the dark color of a cloud, you carry in your hands the valampuri conch and a discus, embrace Lakshmi, the …
இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும் அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின் பைங்கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த செங்கண் மால் கண்டாய் தெளி (29)
He is the earth, the wide sky, the wind, the roaring ocean and hot fire. Know that the lord with lovely eyes removed …
தெளிது ஆக உள்ளத்தைச் செந்நிறீஇ ஞானத்து எளிது ஆக நன்கு உணர்வார் சிந்தை எளிது ஆகத் தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே போய் நாடிக்கொள்ளும்-புரிந்து (30)
If devotees keep their hearts pure, follow the good path and understand clearly what wisdom is, their hearts will go …
புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி அரி உருவும் ஆள் உருவும் ஆகி எரி உருவ வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று எண்ணத்தான் ஆமோ இமை? (31)
Even for the time that to blink an eye I will not think of anything except the feet of Thirumāl who carries a valampu…
இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல் ஆகத்து அணைப்பார் அணைவரே-ஆயிர வாய் நாகத்து அணையான் நகர் (32)
If devotees remove all faults from their minds, meditate without blinking their eyes, avoid the pleasures of the five…
நகரம் அருள்புரிந்து நான்முகற்குப் பூமேல் பகர மறை பயந்த பண்பன் பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும் அந்தியால் ஆம் பயன் அங்கு என்? (33)
The good-natured lord, giving his grace to all, taught the Vedas to Brahma so Brahma could give them to the world. Wh…
என் ஒருவர் மெய் என்பர் ஏழ் உலகு உண்டு ஆல் இலையில் முன் ஒருவன் ஆய முகில் வண்ணா நின் உருகிப் பேய்த் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேர் அமர்க் கண் ஆய்த் தாய் முலை தந்த ஆறு? (34)
O cloud-colored one, you swallowed all the seven worlds and slept on the banyan leaf. The cowherd mother Yashoda whos…
ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால் கூறிய குற்றமாக் கொள்ளல் நீ தேறி நெடியோய் அடி அடைதற்கு அன்றே-ஈர்-ஐந்து முடியான் படைத்த முரண்? (35)
O tall one, do not think that we are blaming you— what we say is because of our love for you. Didn’t the ten-headed R…
முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே முன்னம் தரணி தனது ஆகத்தானே இரணியனைப் புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழிக் கையால் நீ மண் இரந்து கொண்ட வகை? (36)
With a golden discus in your hand you fought with Hiraṇyan and split open his chest, and you asked for three feet of …
வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும் புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசைதிசையின் வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் ஊதிய வாய் மால் உகந்த ஊர் (37)
In the Thiruvenkaṭam hills, the favorite place for Thirumāl who blows a white conch, the Vediyars recite the Vedas an…
ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை பேர எறிந்த பெரு மணியைக் கார் உடைய மின் என்று புற்று அடையும் வேங்கடமே மேல சுரர் எம் என்னும் மாலது இடம் (38)
The hill where the Asurans and the gods come and worship Thirumāl who, shining like a jewel, killed the snake and con…
இடந்தது பூமி எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனை முன் அஞ்ச கிடந்ததுவும் நீர் ஓத மா கடலே நின்றதுவும் வேங்கடமே- பேர் ஓத வண்ணர் பெரிது (39)
The lord who rests on the wide ocean split open the earth to save the earth goddess, carried Govardhana mountain to s…
It is the Thiruvenkaṭam hills where gypsies with fine bows and arrows carry hot fires in their hands and the elephant…
பெரு வில் பகழிக் குறவர் கைச் செந்தீ வெருவிப் புனம் துறந்த வேழம் இரு விசும்பில் மீன் வீழக் கண்டு அஞ்சும் வேங்கடமே மேல் அசுரர்- கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று (40)
O my heart, even if our mistakes are as large as hills, the lord with a golden discus in his hand will not be angry w…
திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால் திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல்-திருமகள்மேல் பால் ஓதம் சிந்தப் பட நாகணைக் கிடந்த மால் ஓத வண்ணர் மனம்? (42)
Even though Lakshmi, the goddess of wealth, the earth goddess and the daughter of the cowherd family love him, the he…
மன மாசு தீரும் அரு வினையும் சாரா தனம் ஆய தானே கைகூடும் புனம் மேய பூந் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி தம் தொழாநிற்பார் தமர் (43)
If devotees carry flowers and water and go to him to worship his feet, the fault in their minds and the results of th…
தமர் உகந்தது எவ் உருவம் அவ் உருவம் தானே தமர் உகந்தது எப் பேர் மற்று அப் பேர் தமர் உகந்து எவ் வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே அவ் வண்ணம்-ஆழியான் ஆம் (44)
In whatever form the devotees wish to see him, he will appear to them in that form. Whatever name the devotees want t…
ஆமே அமரர்க்கு அறிய? அது நிற்க நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய மா தவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை பாதம்-அத்தால் எண்ணினான் பண்பு (45)
The gods in the sky may not know him, but let that be. O good heart, we know his heroic nature. When Ravana disguised…
பண் புரிந்த நான்மறையோன் சென்னிப் பலி ஏற்ற வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர்-அமரர்-தம் போகத்தால் பூமி ஆள்வார் (46)
When the skull of Nānmuhan, the giver of the Vedas to the world, was stuck to the palm of Shiva when he wandered as a…
வாரி சுருக்கி மதக் களிறு ஐந்தினையும் சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேல் ஒருநாள ்கைந் நாகம் காத்தான் கழல் (47)
If devotees control their five senses that are as mighty as rutting elephants, not allowing them to wander and keepin…
கழல் ஒன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கைமேல் சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் செரு ஆழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல மருவு ஆழி நெஞ்சே மகிழ் (48)
He carries a conch in one hand and in the other a fiery discus that he threw at the Asuras as the gods and the Asuran…
மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த சோதிபோல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் ஆதி காண்பார்க்கும் அரிது (49)
It is not possible for devotees to see the ancient cloud-colored god adorned with a shining golden crown, unless they…
அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் புரிய பரிசினால் புல்கில் பெரியனாய் மாற்றாது வீற்றிருந்த மாவலிபால் வண் கை நீர் ஏற்றானைக் காண்பது எளிது (50)
The lord received three feet of land from generous Mahābali after taking water from his hands and grew tall to measur…
எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என் உள்ளம் தெளிய தெளிந்தொழியும் செவ்வே களியில் பொருந்தாதவனைப் பொரல் உற்று அரியாய் இருந்தான் திருநாமம் எண் (51)
The lord came in the form of a man-lion and fought fiercely with the matchless Hiraṇyan and killed him. If you wish t…
எண்மர் பதினொருவர் ஈர்-அறுவர் ஓர் இருவர் வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும் திருமாலைக் கைதொழுவர் சென்று (52)
The eight Vasus, eleven Rudras, twelve suns and two Asvins carry beautiful flowers and go to Thirumāl everyday to ado…
சென்றால் குடை ஆம் இருந்தால் சிங்காசனம் ஆம் நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் என்றும் புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும் அணை ஆம் திருமாற்கு அரவு (53)
When Thirumāl walks the snake Ādisesha is his umbrella, when he sits he is a throne for him and he is his sandals whe…
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் குரவை குடம் முலை மல் குன்றம் கரவு இன்றி விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு அட்டு எடுத்த செங்கண் அவன் (54)
He is the lovely-eyed lord who conquered the snake Kālingan, fought with the elephant Kuvalayābeeḍam, killed the Asur…
அவன் தமர் எவ் வினையர் ஆகிலும் எம் கோன் அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால் ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு அணைமேல் பேர் ஆயற்கு ஆட்பட்டார் பேர் (55)
The devotees of the god of the gods who rests on the ocean will not have any troubles no matter what bad or good acts…
பேரே வரப் பிதற்றல் அல்லால் என் பெம்மானை ஆரே அறிவார்? அது நிற்க நேரே கடிக் கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் (56)
Who could see the wonderful lord? People can only prattle his names. Even though he was sitting on the lotus on his c…
அயல் நின்ற வல் வினையை அஞ்சினேன் அஞ்சி உய நின் திருவடியே சேர்வான் நயம் நின்ற நல் மாலை கொண்டு நமோ நாரணா என்னும் சொல் மாலை கற்றேன் தொழுது (57)
When I was afraid that I would experience the results of my bad karma, I came to the divine feet of you with your bea…
தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி எழுதும் எழு வாழி நெஞ்சே பழுது இன்றி மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கைதொழுவான் அந்தரம் ஒன்று இல்லை அடை (58)
O heart, rise and come, let us carry lamps and flowers and worship him. All the mantras and any sastras that you have…
அடைந்த அரு வினையோடு அல்லல் நோய் பாவம் மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கு இடையை முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள் தன் வில் அங்கை வைத்தான் சரண் (59)
If you want to remove the results of your bad karma, other troubles in your life, sickness and sin, your only refuge …
சரணா மறை பயந்த தாமரையானோடு மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது ஓர் ஆழி சூழ்ந்த உலகு (60)
Nānmuhan seated on a lotus on the navel of Thirumāl gave the Vedas to all the creatures of the world surrounded by th…
உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ் விலகு கருங் கடலும் வெற்பும் உலகினில் செந்தீயும் மாருதமும் வானும் திருமால் தன் புந்தியில் ஆய புணர்ப்பு (61)
The world, the end of the eon that destroys the world, , the matchless dark oceans, the hills, fire in the world, , t…
புணர் மருதின் ஊடு போய் பூங் குருந்தம் சாய்த்து மணம் மருவ மால் விடை ஏழ் செற்று கணம் வெருவ ஏழ் உலகும் தாயினவும் எண் திசையும் போயினவும் சூழ் அரவப் பொங்கு அணையான் தோள் (62)
The arms of the god resting on the snake Adisesha hold the discus that killed the Asurans when he went through the tw…
தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும் கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் நா நாளும் கோள் நாகணையான் குரை கழலே கூறுவதே நாணாமை நள்ளேன் நயம் (63)
My hands worship nothing but him. My ears hear only his sweet words . I will not think of any pleasure except praisin…
நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன் திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் வரும் ஆறு என் என்மேல் வினை? (64)
I do not desire the wealth of others or join with mean people. I make friends only with good people. I do not feel am…
வினையால் அடர்ப்படார் வெம் நரகில் சேரார் தினையேனும் தீக்கதிக்கண் செல்லார் நினைதற்கு அரியானை சேயானை ஆயிரம் பேர்ச் செங்கண் கரியானைக் கைதொழுதக்கால் (65)
The lord stays far away and is hard for anyone to know. If devotees worship the feet of the dark-colored lord with be…
காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த மேலைத் தலை மறையோர் வேட்பனவும் வேலைக்கண் ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஓர்ப்பனவும் பேர் ஆழி கொண்டான் பெயர் (66)
The songs that the world learns when it wakes up, the pāsurams of the Vedas that the Vediyars recite, all things that…
பெயரும் கருங் கடலே நோக்கும் ஆறு ஒண் பூ உயரும் கதிரவனே நோக்கும் உயிரும் தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு (67)
Wise devotees look only towards him, the beloved of Lakshmi seated on a beautiful lotus, just as the rivers go toward…
உணர்வார் ஆர் உன்பெருமை ஊழிதோறு ஊழி? உணர்வார் ஆர் உன் உருவம் தன்னை? உணர்வார் ஆர் விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்வேதப் பண்ணகத்தாய் நீ கிடந்த பால்? (68)
O lord, you stay in the sky, you are on the earth, you abide in the Thiruvenkaṭam hills and you are in the recitation…
பாலன் தனது உருவாய் ஏழ் உலகு உண்டு ஆல் இலையின் மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று வேலை நீர் உள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ? சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு (69)
People say it is true that when you were a baby you swallowed all the seven worlds and lay on a banyan leaf. Where wa…
சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு செல்லும் தனையும் திருமாலை நல் இதழ்த் தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் நாமத்தால் ஏத்துதிரேல் நன்று (70)
Praise Thirumāl for as long as you can speak. Worship him until your body leaves the world. It is good if you worship…
நன்று பிணி மூப்புக் கையகற்றி நான்கு ஊழி நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும் விடல் ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய் அடல் ஆழி கொண்டான்மாட்டு அன்பு (71)
O strong heart, even if I remain healthy without any sickness and old age and rule the whole world for all the four e…
அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன் தன் பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் முன்பு ஊழி காணானைக் காண் என்னும் கண் செவி கேள் என்னும் பூண் ஆரம் பூண்டான் புகழ் (72)
My heart says, “Love the lord with a discus in his hands,” my tongue says, “Praise and worship his divine arms,” my e…
புகழ்வாய் பழிப்பாய் நீ பூந் துழாயானை இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே! திகழ் நீர்க் கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும் உடலும் உயிரும் ஏற்றான் (73)
O heart!. You may praise or blame him who is adorned with thulasi garlands, you may admire him or scold him. He is th…
ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான் நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் கூற்று ஒருபால் மங்கையான் பூமகளான் வார் சடையான் நீள் முடியான் கங்கையான் நீள் கழலான் காப்பு (74)
Shiva rides a bull and Thirumāl rides Garuḍa, Shiva burned the three forts and Māl split open the chest of Hiraṇyan, …
காப்பு உன்னை உன்னக் கழியும் அரு வினைகள் ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்தொழியும் மூப்பு உன்னைச் சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின் அடியை வந்திப்பார் காண்பர் வழி (75)
If devotees worship him they will not experience the results of their karma and any troubles that come to them will g…
வழி நின்று நின்னைத் தொழுவார் வழுவா மொழி நின்ற மூர்த்தியரே ஆவர் பழுது ஒன்றும் வாராதவண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த சீரான் திருவேங்கடம் (76)
If devotees follow good paths and worship the lord they will be like the three faultless gods in the sky and Thiruven…
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவும் அஃகாத பூங் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே என்றால் கெடுமாம் இடர் (77)
All your troubles will go away if you praise him saying, “You stand in Thiruvenkaṭam, you are seated in Vaikuṇtam, yo…
இடர் ஆர் படுவார் எழு நெஞ்சே வேழம் தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த படம் உடைய பைந் நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும் கொய்ந் நாகப் பூம் போது கொண்டு (78)
O heart, rise. We will take fresh flowers from a punnai tree, sprinkle them on his feet, fold our hands and worship h…
கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்? மண் தா என இரந்து மாவலியை ஒண் தாரை நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில் ஆரம் கை தோய அடுத்து? (79)
Who will blame the one who gives and not the one who receives? Did you not ask for three feet of land and receive the…
அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை வல்லாளன் கைக்கொடுத்த மா மேனி மாயவனுக்கு அல்லாதும் ஆவரோ ஆள்? (80)
A snake terrified of an eagle, his enemy, ran to the ocean where you rest and asked for refuge, and you, the dark col…
ஆள் அமர் வென்றி அடு களத்துள் அந்நான்று வாள் அமர் வேண்டி வரை நட்டு நீள் அரவைச் சுற்றிக் கடைந்தான் பெயர் அன்றே தொல் நரகைப் பற்றிக் கடத்தும் படை (81)
When the gods fought with the Asuras and asked your help, he churned the milky ocean with them using Mandara mountain…
படை ஆரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூந் தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில் மீன் மாய மாசூணும் வேங்கடமே மேல் ஒரு நாள் மான் மாய எய்தான் வரை (82)
O Venkaṭam, you are the hill where lord stays who shot his arrow and killed Mārisan when he came as a golden deer. Wo…
வரை குடை தோள் காம்பு ஆக ஆ நிரை காத்து ஆயர் நிரை விடை ஏழ் செற்ற ஆறு என்னே? உரவு உடைய நீர் ஆழியுள் கிடந்து நேர் ஆம் நிசாசரர்மேல் பேர் ஆழி கொண்ட பிரான் (83)
You rest on the ocean and you hurl your strong discus at your Asuran enemies, killing them, but you were born as Kaṇṇ…
பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்? உராஅய் உலகு அளந்த நான்று வராகத்து எயிற்று அளவு போதா ஆறு என்கொலோ எந்தை அடிக்கு அளவு போந்த படி? (84)
O lord, who knows your power? You measured the world with your feet, yet you found that same world so small that you …
படி கண்டு அறிதியே? பாம்பு அணையினான் புள் கொடி கண்டு அறிதியே? கூறாய் வடிவில் பொறி ஐந்தும் உள் அடக்கி போதொடு நீர் ஏந்தி நெறி நின்ற நெஞ்சமே நீ (85)
O heart, controlling your five senses, you carry water and worship him in the proper way, but do you know the place w…
நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்துப் பாயும் பனி மறுத்த பண்பாளா! வாசல் கடை கழியா உள் புகா காமர் பூங் கோவல் இடைகழியே பற்றி இனி (86)
O lord, you, the generous one, carried Govardhana hills to save the cows and the cowherds from the storm. As you stay…
இனி யார் புகுவார் எழு நரக வாசல்? முனியாது மூரித் தாள் கோமின் கனி சாயக் கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு (87)
All countries worship him, knowing how he threw the calf at the vilam tree and killed the Asuras. Lock the doors of h…
நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்தோறும் பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும் பொன் ஆழி ஏந்தினான் பொன் அடியே சூடுவேற்கு என் ஆகில் என்னே எனக்கு? (88)
I look only for your divine feet, I only sing your fame and I worship only the golden feet of you with a shining disc…
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம் பெருமான் தனக்கு ஆவான் தானே மற்று அல்லால்? புனக் காயாம் பூ மேனி காணப் பொதி அவிழும் பூவைப் பூ மா மேனி காட்டும் வரம் (89)
There is no one who can match my dear lord. Since I have his grace how could anyone be equal to me? The blooming dark…
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால் ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை ஓர் அரியாய் நீ இடந்தது ஊன்? (90)
O Mādhava, Hiraṇyan thought that he had the boon of not being killed by a man and he did not want to worship your fee…
ஊனக் குரம்பையின் உள் புக்கு இருள் நீக்கி ஞானச் சுடர் கொளீஇ நாள்தோறும் ஏனத்து உருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம் மருவாதார்க்கு உண்டாமோ வான்? (91)
He took the form of a boar and split open the earth. If devotees do not remove the darkness in their hearts and insid…
வான் ஆகி தீ ஆய் மறி கடல் ஆய் மாருதம் ஆய் தேன் ஆகி பால் ஆம் திருமாலே ஆன் ஆய்ச்சி வெண்ணெய் விழுங்க நிறையுமே முன் ஒரு நாள் மண்ணை உமிழ்ந்த வயிறு? (92)
O Thirumāl! You are the sky, fire, the rolling ocean, the wind, honey, and milk. Was your stomach that contained the …
வயிறு அழல வாள் உருவி வந்தானை அஞ்ச எயிறு இலக வாய் மடுத்தது என் நீ பொறி உகிரால் பூ வடிவை ஈடு அழித்த பொன் ஆழிக் கையா நின் சேவடிமேல் ஈடு அழிய செற்று? (93)
Carrying in your handsome flower-like hand a golden discus, you split open the stomach of Hiraṇyan when he came to fi…
செற்று எழுந்து தீவிழித்து சென்ற இந்த ஏழுலகும் மற்று இவை ஆ என்று வாய் அங்காந்து முற்றும் மறையவற்குக் காட்டிய மாயவனை அல்லால் இறையேனும் ஏத்தாது என் நா (94)
Māyavan showed the sages all the worlds he had swallowed, opening his mouth wide and his eyes like fire. My tongue wi…
நா வாயில் உண்டே நமோ நாரணா என்று ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத மாக் கதிக்கண் செல்லும் வகை உண்டே என் ஒருவர் தீக் கதிக்கண் செல்லும் திறம்? (95)
The words “Namō Nārāyaṇā” that you say with your tongue without stopping are the way to attain everlasting moksha. Wh…
திறம்பாது என் நெஞ்சமே செங்கண் மால் கண்டாய் அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இம் மண் தான் மறிகடல் தான் மாருதம் தான் வான் தானே கண்டாய் கடைக்கண் பிடி (96)
O heart, know and understand this well. The beautiful eyed- Thirumāl is both dharma and sin. He is the earth, the oce…
பிடி சேர் களிறு அளித்த பேராளா உன் தன் அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே பொடி சேர் அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடைமேல் பாய்ந்த புனல் கங்கை என்னும் பேர்ப் பொன்? (97)
Compassionate, you saved the elephant Gajendra so he could live with his mate. Didn’t the golden Ganges receive Thiru…
பொன் திகழும் மேனிப் புரி சடை அம் புண்ணியனும் நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும் இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன் ஒருவன் அங்கத்து என்றும் உளன் (98)
Even though both the divine Shiva with a body that shines like gold and thick matted hair and Neḍumāl who measured th…
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் (99)
O good heart, if the devotees meditate on the faultless eternal lord of Thiruvenkaṭam, he enters their hearts. Unders…
ஓர் அடியும் சாடு உதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே! ஓர் அடியில் தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை (100) ------------- 14. பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி (2182 – 2281) 2182 அன்பே தகளியா ஆர்வமே நெய் ஆக இன்பு உருகு சிந்தை இடு திரியா நன்பு உருகி ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் (1)
O my heart, if you keep in your mind the Māyavan, Kesavan adorned with cool thulasi garland, who kicked Sakaṭāsuran w…