99 passages · ~21 min read
Tap any verse to open it — original, meaning & audio.
இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் பொன் தோய் வரை மார்பில் பூந் துழாய் அன்று திருக் கண்டு கொண்ட திருமாலே உன்னை மருக்கண்டுகொண்டு என் மனம் (2)
Today I saw his ankleted feet and now I will not be born again for seven births. O Thirumāl with a mountain-like gold…
மனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் மலராள் தனத்து உள்ளான் தண் துழாய் மார்பன் சினத்துச் செருநர் உகச் செற்று உகந்த தேங்கு ஓத வண்ணன் வரு நரகம் தீர்க்கும் மருந்து (3)
The ocean-colored lord stays in my mind who, angry at his enemies on the battlefield, fought with them and killed the…
மருந்தும் பொருளும் அமுதமும் தானே திருந்திய செங் கண் மால் ஆங்கே பொருந்தியும் நின்று உலகம் உண்டு உமிழ்ந்து நீர் ஏற்று மூவடியால் அன்று உலகம் தாயோன் அடி (4)
The feet of the lovely-eyed lord who swallowed all the seven worlds and spat them out, measured the earth and the sky…
அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன் படி வண்ணம் பார்க் கடல் நீர் வண்ணம் முடி வண்ணம் ஓர் ஆழி வெய்யோன் ஒளியும் அஃது அன்றே ஆர் ஆழி கொண்டாற்கு அழகு (5)
The feet of the lord with a discus who measured the world are lotus-colored, his body has the color of the ocean that…
அழகு அன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்? அழகு அன்றே அண்டம் கடத்தல்? அழகு அன்றே அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ கங்கை நீர் கான்ற கழல்? (6)
It is lovely to see his ocean-colored body, it is lovely to see him cross the world with his feet, it is lovely to se…
கழல் தொழுதும் வா நெஞ்சே! கார்க் கடல் நீர் வேலைப் பொழில் அளந்த புள் ஊர்திச் செல்வன் எழில் அளந்து அங்கு எண்ணற்கு அரியானை எப் பொருட்கும் சேயானை நண்ணற்கு அரியானை நாம் (7)
O heart, come, let us worship the feet of the lord who measured the world surrounded with dark ocean. He rides on Gar…
நாமம் பல சொல்லி நாராயணா என்று நாம் அங்கையால் தொழுதும் நல் நெஞ்சே வா மருவி மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய் கண்ணனையே காண்க நம் கண் (8)
O good heart, let us worship him folding our hands and recite his many names, praising him and saying, “ Nārāyaṇā!” M…
கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும் மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில் கரு மா முகில் வண்ணன் கார்க் கடல் நீர் வண்ணன் திரு மா மணி வண்ணன் தேசு (9)
His eyes and hands are like lovely lotuses and he has beautiful lotus feet that measured the world. The shining body …
தேசும் திறலும் திருவும் உருவமும் மாசு இல் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில் வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேர் ஓத நலம் புரிந்து சென்று அடையும் நன்கு (10)
If people praise the brightness, strength, beauty, form, faultless family and all other things of the lord with a bea…
நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான் நறவு இரியும் பொங்கு ஓதருவிப் புனல் வண்ணன் சங்கு ஓதப் பாற்கடலான் பாம்பு அணையின் மேலான் பயின்று உரைப்பார் நூல் கடலான் நுண் அறிவினான் (11)
He is in the four Vedas that are recited by all and he has the color of a waterfall descending quickly and filled wit…
அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவு என்னும் திண் கதவம் செம்மி மறை என்றும் நன்கு ஓதி நன்கு உணர்வார் காண்பரே நாள்தோறும் பைங்கோத வண்ணன் படி (12)
Devotees who cultivate knowledge, recite the Vedas well, control and close the door to the feelings of five senses an…
படி வட்டத் தாமரை பண்டு உலகம் நீர் ஏற்று அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடி வட்டம் ஆகாயம் ஊடறுத்து அண்டம் போய் நீண்டதே மா காயமாய் நின்ற மாற்கு (13)
In ancient times when Thirumāl went to Mahābali’s sacrifice as a dwarf, took water in his hands and asked for three f…
மால்பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு நூல்பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும் பாதத்தான் பாதம் பணிந்து (14)
If devotees who have given up the desire to embrace women learn the sastras and put their minds on the lord of Thiruv…
பணிந்து உயர்ந்த பௌவப் படு திரைகள் மோத பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு அனந்தன் அணைக் கிடக்கும் அம்மான் அடியேன் மனம் தன் அணைக் கிடக்கும் வந்து (15)
Our father, resting on the ocean rolling with waves on Adisesha whose head bears jewels, came and stays in my heart a…
வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம் அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை ஒரு அல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் திருவல்லிக்கேணியான் சென்று (16)
My father shining like a beautiful lamp of red corals and precious pearls born in the ocean rolling with white waves …
சென்ற நாள் செல்லாத செங்கண் மால் எங்கள் மால் என்ற நாள் எந் நாளும் நாள் ஆகும் என்றும் இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய் மறவாது வாழ்த்துக என் வாய் (17)
All the days I have lived in the past, and the days I live in the present and the future are good days if I constantl…
வாய் மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடி மண் நீ அளந்து கொண்ட நெடுமாலே தாவிய நின் எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி அஞ்சாது இருக்க அருள் (18)
O Neḍumāl, you went to Mahābali’s sacrifice as a dwarf, asked for three feet of land, received it, and grew to the sk…
அருளாது ஒழியுமே ஆல் இலைமேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் இருளாத சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது முந்தையராய் நிற்பார்க்கு முன்? (19)
He was born as a child and slept on the banyan leaf at the end of the eon, and gave his grace to his devotees who, wi…
அருளாது ஒழியுமே ஆல் இலைமேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் இருளாத சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது ந்தையராய் நிற்பார்க்கு முன்? (20)
O Thirumāl, you, the tall god with beautiful eyes, swallowed all the worlds and spat them out in ancient times. How c…
பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே வாச மலர்த் துழாய் மாலையான் தேசு உடைய சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கு அரவ வக்கரனைக் கொன்றான் வடிவு (21)
When the Asuran Vakkaran came to fight with our lord, who is adorned with a fragrant thulasi garland and carries a sh…
வடிவு ஆர் முடி கோட்டி வானவர்கள் நாளும் கடி ஆர் மலர் தூவி காணும் படியானை செம்மையால் உள் உருகி செவ்வனே நெஞ்சமே மெய்ம்மையே காண விரும்பு (22)
O heart, the beautiful gods in the sky adorned with crowns sprinkle fragrant flowers on his feet and worship him, and…
விரும்பி விண் மண் அளந்த அஞ் சிறைய வண்டு ஆர் சுரும்பு தொளையில் சென்று ஊத அரும்பும் புனந் துழாய் மாலையான் பொன் அம் கழற்கே மனம் துழாய் மாலாய் வரும் (23)
I worship his feet ornamented with golden anklets, my mind enthralled with the lord adorned with a thulasi garland sw…
வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும் நெருங்கு தீ நீர் உருவும் ஆனான் பொருந்தும் சுடர் ஆழி ஒன்று உடையான் சூழ் கழலே நாளும் தொடர் ஆழி நெஞ்சே தொழுது (24)
O heart, worship every day the ankleted feet of the lord with a beautiful shining discus in his hand. He is the blowi…
தொழுதால் பழுது உண்டே தூ நீர் உலகம் முழுது உண்டு மொய் குழலாள் ஆய்ச்சி விழுது உண்ட வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும் சேயானை நெஞ்சே சிறந்து? (25)
O, heart, there is nothing wrong if you worship the lord who swallowed all the earth and kept it in his stomach, ate …
சிறந்த என் சிந்தையும் செங்கண் அரவும் நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும் வேங்கடமும் வெஃகாவும் வேளுக்கைப்பாடியுமே தாம் கடவார் தண் துழாயார் (26)
The lord, adorned with a cool thulasi garland and resting on beautiful-eyed Adisesha, stays in my devoted heart and i…
ஆரே துயர் உழந்தார் துன்பு உற்றார் ஆண்டையார் காரே மலிந்த கருங் கடலை நேரே கடைந்தானை காரணனை நீர் அணைமேல் பள்ளி அடைந்தானை நாளும் அடைந்து? (27)
How could they have any troubles if his devotees reach and worship the dark ocean-colored lord, the origin of everyth…
அடைந்தது அரவு அணைமேல் ஐவர்க்கு ஆய் அன்று மிடைந்தது பாரத வெம் போர் உடைந்ததுவும் ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே! வாள் எயிற்றுப் பேய்ச்சி பால் உண்ட பிரான் (28)
The highest lord, our father resting on the snake bed, drank milk from the breasts of the devil Putana, fought the Bh…
பேய்ச்சி பால் உண்ட பெருமானைப் பேர்ந்து எடுத்து ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த இருள் ஆர் திருமேனி இன் பவளச் செவ்வாய்த் தெருளா மொழியானைச் சேர்ந்து (29)
Without being afraid the cowherdess Yasodha took and embraced dark-colored Kaṇṇan and fed him milk after he had drunk…
சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு வாய்ந்த மறை பாடகம் அனந்தன் வண் துழாய்க் கண்ணி இறைபாடி ஆய இவை (30)
Thirumāl adorned with a thulasi garland and resting on Adisesha on the ocean stays in Kudanthai surrounded by the sea…
இவை அவன் கோயில் இரணியனது ஆகம் அவைசெய்து அரி உருவம் ஆனான் செவி தெரியா நாகத்தான் நால் வேதத்து உள்ளான் நறவு ஏற்றான் பாகத்தான் பாற்கடல் உளான் (31)
The lord who stays on the milky ocean on the earless serpent Adisesha worshiped by all the four Vedas and took the fo…
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும் நூல் கடலும் நுண் நூல தாமரைமேல் பாற்பட்டு இருந்தார் மனமும் இடமாகக் கொண்டான் குருந்து ஒசித்த கோபாலகன் (32)
Gopalan who broke the Kurundam trees and killed the Asurans abides on Adisesha on the milky ocean, in Thiruvenkaṭam, …
பாலகனாய் ஆல் இலைமேல் பைய உலகு எல்லாம் மேல் ஒருநாள் உண்டவனே! மெய்ம்மையே மாலவனே மந்தரத்தால் மா நீர்க் கடல் கடைந்து வான் அமுதம் அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று (33)
O Thirumāl, it is true that you swallowed all the seven worlds at the end of the eon, lay on a banyan leaf as a baby,…
அன்று இவ் உலகம் அளந்த அசைவேகொல்? நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் அன்று கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சைக் கடந்தானை நெஞ்சமே! காண் (34)
O heart, see! The faultless lord who killed the Asuran Kamsan stands in Thiruvezhukkai, and recline- on Adisesha on t…
காண் காண் என விரும்பும் கண்கள் கதிர் இலகு பூண் தார் அகலத்தான் பொன் மேனி பாண்கண் தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம்பொன் கழல் பாடி யாம் தொழுதும் கை (35)
My eyes say, “I want to see him, I want to see him!” Folding our hands, we sing his praise and worship the shining go…
கைய கனல் ஆழி கார்க் கடல் வாய் வெண் சங்கம் வெய்ய கதை சார்ங்கம் வெம் சுடர் வாள் செய்ய படை பரவை பாழி பனி நீர் உலகம் அடி அளந்த மாயன் அவற்கு (36)
The dark ocean-colored Māyan who measured the world and the sky with his two feet and rests on the cool ocean carries…
அவற்கு அடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான் உவர்க்கும் கருங் கடல் நீர் உள்ளான் துவர்க்கும் பவள வாய்ப் பூமகளும் பல் மணிப் பூண் ஆரம் திகழும் திருமார்பன் தான் (37)
I became the slave of the lord colored like the rolling ocean who is inside and outside of all, with shining jewels a…
தானே தனக்கு உவமன் தன் உருவே எவ் உருவும் தானே தவ உருவும் தாரகையும் தானே எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து இரு சுடரும் ஆய இறை (38)
Even though all forms in the world are his forms, he can be compared only to himself. Our lord, the Māyan whose form …
இறை ஆய் நிலன் ஆகி எண் திசையும் தான் ஆய் மறை ஆய் மறைப் பொருள் ஆய் வான் ஆய் பிறை வாய்ந்த வெள்ளத்து அருவி விளங்கு ஒலி நீர் வேங்கடத்தான் உள்ளத்தின் உள்ளே உளன் (39)
Our lord is in the hearts of all who is the earth, the eight directions, the Vedas, the meaning of the Vedas, the sky…
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் விண் ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான் மண் ஒடுங்க தான் அளந்த மன் (40)
O heart, the faultless lord, the king who measured the world, is in the hearts of all his devotees and in the Thiruve…
மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும் துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை உடையாகக் கொண்டு அன்று உலகு அளந்தான் குன்றம் குடையாக ஆ காத்த கோ (41)
When the lord who carried Govardhana mountain as an umbrella to protect the cows and the cowherds measured the world,…
கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்து குழல் ஊதி மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் மேவி அரி உருவம் ஆகி இரணியனது ஆகம் தெரி உகிரால் கீண்டான் சினம் (42)
The sapphire-colored Kaṇnan who grazed the cows and played the flute killed the Asuran when it came in the form of a …
சின மா மத களிற்றின் திண் மருப்பைச் சாய்த்து புனம் மேய பூமி அதனைத் தனமாக பேர் அகலத்துள் ஒடுக்கும் பேர் ஆர மார்வனார் ஓர் அகலத்து உள்ளது உலகு (43)
The lord who embraces the earth goddess on his chest and fought with the angry elephant Kuvalayaabeeḍam and broke its…
உலகமும் ஊழியும் ஆழியும் ஒண் கேழ் அலர் கதிரும் செந்தீயும் ஆவான் பல கதிர்கள் பாரித்த பைம் பொன் முடியான் அடி இணைக்கே பூரித்து என் நெஞ்சே புரி (44)
He is the world, the eon, the ocean the shining sun and moon and red fire. O heart, worship the feet of the lord happ…
புரிந்து மத வேழம் மாப் பிடியோடு ஊடி திரிந்து சினத்தால் பொருது விரிந்த சீர் வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேல் ஒரு நாள் மண் கோட்டுக் கொண்டான் மலை (45)
Thiruvenkaṭam where a strong bull elephant fights lovingly with his mate and wanders angrily, spilling pearls from it…
மலை முகடு மேல் வைத்து வாசுகியைச் சுற்றி தலை முகடு தான் ஒரு கை பற்றி அலை முகட்டு அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான் பிண்டமாய் நின்ற பிரான் (46)
When the lord churned the milky ocean using Mandara mountain as a churning stick and the snake Vasuki as the rope, pu…
நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம் சென்ற பெருமானே செங்கண்ணா அன்று துரக வாய் கீண்ட துழாய் முடியாய்! நங்கள் நரக வாய் கீண்டாயும் நீ (47)
O lord with beautiful eyes, when Mahābali promised to give you three feet of land you took it and grew tall and measu…
நீ அன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய்? நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய்? நீ அன்றே மா வாய் உரம் பிளந்து மா மருதின் ஊடு போய் தேவாசுரம் பொருதாய் செற்று? (48)
Didn’t you make Mahābali pour water on your hands and promise to give you three feet of land when you went to him as …
செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்றுப் பெற்றதுவும் மா நிலம் பின்னைக்கு ஆய் முற்றல் முரி ஏற்றின் முன் நின்று மொய்ம்பு ஒழித்தாய் மூரிச் சுரி ஏறு சங்கினாய்! சூழ்ந்து (49)
With curved conch in your hands, you fought with your enemy Hiraṇyan and killed him, you asked for three feet of land…
சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால் தாழ்ந்த அருவித் தட வரைவாய் ஆழ்ந்த மணி நீர்ச் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான் அணி நீல வண்ணத்தவன் (50)
O Thirumāl, when the elephant Gajendra was caught by a cruel crocodile in a spring filled with beautiful water, you, …
அவனே அரு வரையால் ஆ நிரைகள் காத்தான் அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே கலங்காப் பெரு நகரம் காட்டுவான் கண்டீர் இலங்காபுரம் எரித்தான் எய்து (51)
He protected the cows and the cowherds with Govardhana mountain when there was a big storm and broke the marudam tree…
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்கு ஆய் எய்ததுவும் தென் இலங்கைக் கோன் வீழ சென்று குறள் உரு ஆய் முன் நிலம் கைக்கொண்டான் முயன்று (52)
The lord shot his arrows and destroyed the seven marā trees, and he took the form of a dwarf, went to Mahābali and to…
முயன்று தொழு நெஞ்சே! மூரி நீர் வேலை இயன்ற மரத்து ஆல் இலையின் மேலால் பயின்று அங்கு ஓர் மண் நலம் கொள் வெள்ளத்து மாயக் குழவியாய் தண் அலங்கல் மாலையான் தாள் (53)
The lord who slept on a banyan leaf on the ocean as a magic child at the end of the eon swallowed the earth and the f…
தாளால் சகடம் உதைத்து பகடு உந்தி கீளா மருது இடை போய் கேழல் ஆய் மீளாது மண் அகலம் கீண்டு அங்கு ஓர் மாது உகந்த மார்வற்குப் பெண் அகலம் காதல் பெரிது (54)
The lord kicked Sakaṭasuran when he came as a cart, went between the Marudu trees when the Asurans came as those tree…
பெரிய வரை மார்பில் பேர் ஆரம் பூண்டு கரிய முகிலிடை மின் போல தெரியுங்கால் பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன் தன் நீள் நெடுங் கண் காட்டும் நிறம் (55)
The lord with lovely long eyes like lotuses swarming with singing bees wears many jewels on his large mountain-like c…
நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே பூ மங்கை கேள்வன்பொலிவு? (56)
We do not know whether our god’s color is white, red, green or black. If one thinks about it only Saraswathi, the god…
பொலிந்து இருண்ட கார் வானில் மின்னேபோல் தோன்றி மலிந்து திரு இருந்த மார்வன் பொலிந்த கருடன்மேல் கொண்ட கரியான் கழலே தெருள் தன்மேல் கண்டாய் தெளி 57
With beautiful Lakshmi on his chest he is like lightning shining in the dark sky. People should understand that worsh…
தெளிந்த சிலாதலத்தின்மேல் இருந்த மந்தி அளிந்த கடுவனையே நோக்கி விளங்கிய வெண் மதியம் தா என்னும் வேங்கடமே மேல் ஒரு நாள் மண் மதியில் கொண்டு உகந்தான் வாழ்வு 58
Know that the god who asked for three feet of land from Mahābali and took over the world and sky with his cleverness …
வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய்த் தாழும் அருவி போல் தார் கிடப்ப சூழும் திரு மா மணி வண்ணன் செங்கண் மால் எங்கள் பெருமான் அடி சேரப்பெற்று 59
I found the way to survive worshiping the feet of the dear lovely-eyed sapphire-colored lord adorned with long thulas…
பெற்றம் பிணை மருதம் பேய் முலை மாச் சகடம் முற்றக் காத்து ஊடு போய் உண்டு உதைத்து கற்றுக் குணிலை விளங் கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப் பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு 60
Our god blew his conch and conquered his enemies on all battlefields, protected the cows from the storm with Govardha…
பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு வளம் கிளரும் நீள் சோலை வண் பூங் கடிகை இளங் குமரன் தன் விண்ணகர் 61
Just as Thiruvenkaṭam, the milky ocean and Vaikuṇṭam are ancient temples where the lord stays, now Thirukkaḍigai surr…
விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம் மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு 62
The lord who took three feet of land from Mahābali and measured the world after receiving a promise from him with wat…
தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும் சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும் திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து 63
My father, the god of Thirumalai where waterfalls flow with abundant water has only one form that combines Shiva with…
இசைந்த அரவமும் வெற்பும் கடலும் பசைந்து அங்கு அமுது படுப்ப அசைந்து கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில் கிடந்து இருந்து நின்றதுவும் அங்கு? 64
Using the snake Vasuki as a rope and Mandara mountain as a churning stick he churned the milky ocean, took nectar fro…
அங்கற்கு இடர் இன்றி அந்திப் பொழுதத்து மங்க இரணியனது ஆகத்தை பொங்கி அரி உருவமாய்ப் பிளந்த அம்மான் அவனே கரி உருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து 65
Our father who broke the tusks of the elephant Kuvalayābeeḍam and killed it went as a man-lion in the evening and ang…
காய்ந்து இருளை மாற்றி கதிர் இலகு மா மணிகள் ஏய்ந்த பணக் கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப வாய்ந்த மது கைடபரும் வயிறு உருகி மாண்டார் அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு 66
The Asurans Madhu and Kaiḍava were destroyed when Adisesha with jewels on his head merely breathed on them. If anyone…
ஆங்கு மலரும் குவியுமால் உந்திவாய் ஓங்கு கமலத்தின் ஒண் போது ஆம் கைத் திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில் பகரும் மதி என்றும் பார்த்து 67
The lovely lotus on the navel of the lord thinks that the shining discus in his right hand is the sun and the white c…
பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு பேர்த்து ஓர் கடுவன் எனப் பேர்ந்து கார்த்த களங் கனிக்குக் கை நீட்டும் வேங்கடமே மேல் நாள் விளங் கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு 68
The lord who threw the calf at the Vilam tree and destroyed the Asurans stays in Thiruvenkaṭam hills where a monkey t…
வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய் கற்பு என்று சூடும் கருங் குழல்மேல் மல் பொன்ற நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீர் ஆடுவான் பூண்ட நாள் எல்லாம் புகும் 69
Her mother says, “My daughter sings the praise of Thiruvenkaṭam whenever she thinks of any hills. She wears thulasi o…
புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி உகு மதத்தால் கால் கழுவி கையால் மிகு மதத் தேன் விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே கண்டு வணங்கும் களிறு 70
The elephant in the Thiruvenkaṭam hills who washes his teeth with his ichor, washes his hands and legs with the water…
களிறு முகில் குத்த கை எடுத்து ஓடி ஒளிறு மருப்பு ஒசி கை யாளி பிளிறி விழ கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேல் நாள் குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று 71
The lord who threw a calf at the vilam tree and killed the Asurans stays in the Thiruvenkaṭam hills where an elephant…
குன்று ஒன்றின் ஆய குற மகளிர் கோல் வளைக் கை சென்று விளையாடும் தீம் கழை போய் வென்று விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை இளங் குமரர் கோமான் இடம் 72
Our young lord stays in Thiruvenkaṭam hill where the bamboo sticks that gypsy girls with round bangles throw as they …
இடம் வலம் ஏழ் பூண்ட இரவித் தேர் ஓட்டி வட முக வேங்கடத்து மன்னும் குடம் நயந்த கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே நாத்தன்னால் உள்ள நலம் 73
It is the best thing for our tongues to praise him who drove a chariot yoked to seven horses and danced on a pot. To …
நலமே வலிதுகொல் நஞ்சு ஊட்டு வன் பேய் நிலமே புரண்டு போய் வீழ சலமே தான் வெம் கொங்கை உண்டானை மீட்டு ஆய்ச்சி ஊட்டுவான் தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து? 74
He drank the milk of the breasts of cruel devil Putana and made her fall to the ground, but the cowherdess Yasodha to…
சார்ந்து அகடு தேய்ப்பத் தடாவிய கோட்டு உச்சிவாய் ஊர்ந்து இயங்கும் வெண் மதியின் ஒண் முயலைச் சேர்ந்து சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன் புன வேங்கை நாறும் பொருப்பு 75
In the divine Thiruvenkaṭam hills where the blossoms of vengai tree spread their fragrance, an angry tiger sees the r…
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா விருப்பு உடைய வெஃகாவே சேர்ந்தானை மெய்ம் மலர் தூய்க் கைதொழுதால் அஃகாவே தீவினைகள் ஆய்ந்து? 76
You do not need to stand on a hill, plunge into water or stand near five sacrificial fires to reach him. If you sprin…
ஆய்ந்த அரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ஏய்ந்த முடிப் போது மூன்று ஏழ் என்று எண்ணினான் ஆர்ந்த அடிப் போது நங்கட்கு அரண் 77
ஆய்ந்த அரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ஏய்ந்த முடிப் போது மூன்று ஏழ் என்று எண்…
அரண் ஆம் நமக்கு என்றும் ஆழி வலவன் முரன் நாள் வலம் சுழிந்த மொய்ம்பன் சரண் ஆமேல் ஏது கதி? ஏது நிலை? ஏது பிறப்பு? என்னாதே ஓது கதி மாயனையே ஓர்த்து 78
We should not think, “Where is our refuge? Where can we go? Are we going to be born again and again?” Praise and wors…
ஓர்த்த மனத்தராய் ஐந்து அடக்கி ஆராய்ந்து பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் கார்த்த விரை ஆர் நறும் துழாய் வீங்கு ஓத மேனி நிரை ஆர மார்வனையே நின்று 79
If devotees control their five senses and keep in their minds only the dark ocean-colored lord with a fragrant thulas…
நின்று எதிராய நிரை மணித் தேர் வாணன் தோள் ஒன்றிய ஈர் ஐஞ்ஞூறு உடன் துணிய வென்று இலங்கும் ஆர் படு வான் நேமி அரவு அணையான் சேவடிக்கே நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு 80
My heart tries to approach the divine feet of the lord resting on the snake Adisesha with a shining discus that conqu…
நெஞ்சால் நினைப்பு அரியனேலும் நிலைப்பெற்று என் நெஞ்சமே பேசாய் நினைக்குங்கால் நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை என்கொலோ ஓராது நிற்பது உணர்வு? 81
O my firm heart, even though it is difficult to think of him, think and praise him without worrying. He is in you and…
உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து புணரிலும் காண்பு அரியன் உண்மை இணர் அணைய கொங்கு அணைந்து வண்டு அறையும் தண் துழாய்க் கோமானை எங்கு அணைந்து காண்டும் இனி? 82
If you want to be aware of him it is hard and it is impossible for you to see him even if he enters your heart. Where…
இனி அவன் மாயன் என உரைப்பரேலும் இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன் கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைங் கழலான் உள்ளத்தின் உள்ளே உளன் 83
Even though people praise Māyan saying that he is sweet, no one can see him, yet the sweet ankleted lord, stays insid…
உளனாய நான்மறையின் உட்பொருளை உள்ளத்து உளனாகத் தேர்ந்து உணர்வரேலும் உளனாய வண் தாமரை நெடுங் கண் மாயவனை யாவரே கண்டார்? உகப்பர் கவி 84
People think of him and say, “He is the meaning of the four Vedas and he is in our hearts and we feel him,” but who h…
கவியினார் கை புனைந்து கண் ஆர் கழல் போய் செவியின் ஆர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார் போற்றி உரைக்க பொலியுமே பின்னைக்கு ஆய் ஏற்று உயிரை அட்டான் எழில்? 85
In their poetry, poets worship the lord, describing the beauty of his form, and the devotees hear them and come to wo…
எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத் தொழில்கொண்டு தான் முழங்கித் தோன்றும் எழில்கொண்ட நீர் மேகம் அன்ன நெடு மால் நிறம் போல கார் வானம் காட்டும் கலந்து 86
Beautiful clouds that flash with lightning, roaring with thunder, show the color of dear Neḍumāl, and the dark sky wh…
கலந்து மணி இமைக்கும் கண்ணா நின் மேனி மலர்ந்து மரகதமே காட்டும் நலம் திகழும் கொந்தின்வாய் வண்டு அறையும் தண் துழாய்க் கோமானை அந்தி வான் காட்டும் அது 87
O lord ornamented with shining jewels and a cool thulasi garland strung with bunches of flowers that swarm with bees,…
அது நன்று இது தீது என்று ஐயப்படாதே மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற பொன் அம் கழலே தொழுமின் முழுவினைகள் முன்னம் கழலும் முடிந்து 88
Worship the golden ankleted feet of the lord who is adorned with a cool thulasi garland dripping with honey. If you d…
முடிந்த பொழுதில் குற வாணர் ஏனம் படிந்து உழு சால் பைந் தினைகள் வித்த தடிந்து எழுந்த வேய்ங் கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேல் ஒரு நாள் தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு 89
The lord who plays sweet music on his flute is the god of Thiruvenkaṭam where gypsies plant millet seeds in the field…
சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண் ஆறு அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள் எண் திசையும் சூழ இடம் போதாது என்கொலோ வண் துழாய் மால் அளந்த மண்? 90
When Thirumāl, adorned with a beautiful thulasi garland, grew tall and touched the rivers in the sky with his divine …
மண் உண்டும் பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக் கயிற்றினால் கட்ட தான் கட்டுண்டிருந்தான் வயிற்றினோடு ஆற்றா மகன் 91
The young lord swallowed the earth at the end of the eon, drank poisonous milk from the breasts of the devil Putanā, …
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனைச் சிறைசெய்த வாணன் தோள் செற்றான் கழலே நிறைசெய்து என் நெஞ்சே நினை 92
O heart, worship the ankleted feet of the dark-colored Māyan, the unborn, divine one who was raised by Nandan, the ch…
நினைத்து உலகில் ஆர் தெளிவார் நீண்ட திருமால்? அனைத்து உலகும் உள் ஒடுக்கி ஆல்மேல் கனைத்து உலவு வெள்ளத்து ஓர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை உள்ளத்தே வை நெஞ்சமே உய்த்து 93
Thirumāl swallowed all the worlds, kept them in his stomach at the end of the eon and slept on a banyan leaf as a bab…
உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் மெத்தெனவே நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து பொன்றாமை மாயன் புகுந்து (94)
I light the lamp of knowing and feel him in my heart and keep him there. The Māyan, standing, sitting and lying in di…
புகுந்து இலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய் இகழ்ந்த இரணியனது ஆகம் சுகிர்ந்து எங்கும் சிந்தப் பிளந்த திருமால் திருவடியே வந்தித்து என் நெஞ்சமே வாழ்த்து (95)
O heart, worship his divine feet and praise Thirumāl who went to Hiraṇyan in the evening as a man-lion and split open…
வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம் தாழ்த்தி வணங்கத் தழும்பாமே கேழ்த்த அடித் தாமரை மலர்மேல் மங்கை மணாளன் அடித் தாமரை ஆம் அலர் (96)
As the gods in the sky bow to him their jewel-studded crowns mark the lotus feet of the beloved of Lakshmi.
அலர் எடுத்த உந்தியான் ஆங்கு எழில் ஆய மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு எண்ணத்தான் ஆமோ இமை? (97)
Could the gods Nānmuhan who stays on a lotus on his navel, Shiva with long matted hair, and Indra, colored like a kān…
இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும் அமம் சூழ்ந்து அற விளங்கித் தோன்றும் நமன் சூழ் நரகத்து நம்மை நணுகாமல் காப்பான் துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு (98)
The lord who is the snow-covered mountains, the wide sky, the wind and light killed the Asuran Kesi when he came as a…
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் அட்டபுயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக் கோள் முதலை துஞ்ச குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு (99)
Our refuge is the feet of the god of Aṭṭapuyaharam who fought and conquered all his enemies and killed the murderous …
சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த் தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடுங் கண் தேன் அமரும் பூமேல் திரு (100) ------------- 16. திருமழிசை ஆழ்வார் - நான்முகன் திருவந்தாதி (2382 -2477) 2382 நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் யான் முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை சிந்தாமல் கொள்மின் நீர் தேர்ந்து (1)
The dark cloud-colored lord with a discus is always our refuge. Our lord with a tulasi garland on his mountain-like c…