86 passages · ~20 min read
Tap any verse to open it — original, meaning & audio.
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று எங்கள் மால் செங்கண் மால் சீறல் நீ தீவினையோம் எங்கள் மால் கண்டாய் இவை (2)
Sometimes we praise you sometimes we blame you, sometimes we do not praise you and sometimes we do not blame you. Som…
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம் என்னால் அடைப்பு நீக்கு ஒண்ணாது இறையவனே என்னால் செயற்பாலது என்? (3)
Even though I know which deeds are good and which are bad, I do not have the power to control myself to avoid good or…
என்னின் மிகு புகழார் யாவரே? பின்னையும் மற்று எண் இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன கருஞ் சோதிக் கண்ணன் கடல் புரையும் சீலப் பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆட்பெற்று (4)
My heart has become a slave to the dark shining ocean-colored Kaṇṇan. If I think about it, I am most fortunate and I …
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றையார் ஆவாரும் நீ பேசில் எற்றேயோ மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த நீ அம்மா காட்டும் நெறி? (5)
You are my mother who gave birth to me the father who taught me. Whatever others taught me, it is of no use. O dear M…
நெறி காட்டி நீக்குதியோ? நின்பால் கரு மா முறி மேனி காட்டுதியோ? மேல் நாள் அறியோமை என் செய்வான் எண்ணினாய்? கண்ணனே ஈது உரையாய் என் செய்தால் என் படோம் யாம்? (6)
Will you show me the right path and guide me? Will you show your tender dark body to me, your innocent devotee? Dear …
யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார் தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார் பூ மேய செம்மாதை நின் மார்வில் சேர்வித்துப் பார் இடந்த அம்மா! நின் பாதத்து அருகு (7)
I have done bad karma and am far away from you. My heart came to you to worship your feet. You embrace Lakshmi, your …
அருகும் சுவடும் தெரிவு உணரோம் அன்பே பெருகும் மிக இது என்? பேசீர் பருகலாம் பண்புடையீர் பார் அளந்தீர் பாவியெம் கண் காண்பு அரிய நுண்பு உடையீர்! நும்மை நுமக்கு (8)
O good lord! We have not seen your feet that measured the world and we yearn to see you–tell us, why can we not see y…
நுமக்கு அடியோம் என்று என்று நொந்து உரைத்து என்? மாலார் தமக்கு அவர் தாம் சார்வு அரியர் ஆனால் எமக்கு இனி யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர்திறத்தே யாதானும் சிந்தித்து இரு (9)
We said to him again and again, “We, your slaves, are suffering,” but we still can’t approach him. O heart, let whate…
இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோடு ஒரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திருமாற்கு யாம் ஆர்? வணக்கம் ஆர்? ஏ பாவம் நல் நெஞ்சே நாமா மிக உடையோம் நாழ் (10)
Only the eight Vasus, eleven Rudras, twelve suns and two Ashvins may worship him. We are not worthy to worship him. O…
நாழால் அமர் முயன்ற வல் அரக்கன் இன் உயிரை வாழாவகை வலிதல் நின் வலியே? ஆழாத பாரும் நீ வானும் நீ காலும் நீ தீயும் நீ நீரும் நீ ஆய் நின்ற நீ (11)
You are the earth, the sky, the wind, fire and the ocean. You, mighty one, fought heroically with Rāvaṇa when he oppo…
நீ அன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய் போய் ஒன்று சொல்லி என்? போ நெஞ்சே நீ என்றும் காழ்த்து உபதேசம் தரினும் கைக்கொள்ளாய் கண்ணன்தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு (12)
O heart, you immerse me in an ocean of sorrow, and if I say you shouldn’t, what is the use? Whatever I tell you, you …
வழக்கொடு மாறுகோள் அன்று அடியார் வேண்ட இழக்கவும் காண்டும் இறைவ இழப்பு உண்டே? எம் ஆட்கொண்டு ஆகிலும் யான் வேண்ட என் கண்கள் தம்மால் காட்டு உன் மேனிச் சாய் (13)
What I am going to ask you is not strange. O lord, if some devotee of yours asks you for something that you may not w…
சாயால் கரியானை உள் அறியாராய் நெஞ்சே பேயார் முலை கொடுத்தார் பேயர் ஆய் நீ யார்? போய்த் தேம்பு ஊண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீவினை ஆம் பாம்பார் வாய்க் கைந் நீட்டல் பார்த்து (14)
O heart, the devil Putanā did not know the power of the dark god, and gave her milk to him, but he killed her. You kn…
பார்த்து ஓர் எதிரிதா நெஞ்சே படு துயரம் பேர்த்து ஓதப் பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை ஆர்த்து ஓதம் தம் மேனித் தாள் தடவ தாம் கிடந்து தம்முடைய செம்மேனிக் கண்வளர்வார் சீர் (15)
O heart, know this. The waves of the ocean roar and strike his body and feet as he rests on Adisesha. If we praise hi…
சீரால் பிறந்து சிறப்பால் வளராது பேர் வாமன் ஆகாக்கால் பேராளா மார்பு ஆரப் புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே? சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து (16)
You, the good lord came as a dwarf who was never born or raised on the earth and asked for three feet of land, measur…
சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும் வாழ்ந்திடுவர் பின்னும் தம் வாய்திறவார் சூழ்ந்து எங்கும் வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடிய தாள் வரை வில் ஏந்தினார் தாம் (17)
He carried his bow, fought with the Rakshasa Rāvaṇa and cut off his strong mountain-like heads with his sword. When d…
தாம்பால் ஆப்புண்டாலும் அத் தழும்பு தான் இளகப் பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும் சோம்பாது இப் பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா உன் தொல் உருவை யார் அறிவார்? சொல்லு (18)
You are clever. Whether you are tied up with ropes by Yashoda or you rest on the snake bed, you create all the creatu…
சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே எல்லி பகல் என்னாது எப்போதும் தொல்லைக்கண் மாத் தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறு ஆகக் காத்தானைக் காண்டும் நீ காண் (19)
O heart, you do not know any wickedness and if you praise him, who protected the five Pandavas night and day on the b…
காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம் நாணப்படும் அன்றே நாம் பேசில்! மாணி உரு ஆகிக்கொண்டு உலகம் நீர் ஏற்ற சீரான் திரு ஆகம் தீண்டிற்றுச் சென்று (20)
O intelligent good heart, As a dwarf, he went to Mahābali’s sacrifice and measured the world, and his body touched al…
சென்று அங்கு வெம் நரகில் சேராமல் காப்பதற்கு இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட அன்று அங்குப் பார் உருவும் பார் வளைத்த நீர் உருவும் கண் புதையக் கார் உருவன் தான் நிமிர்த்த கால் (21)
His body dark as a cloud, he measured the world and the ocean with one foot and raised his other foot and measured th…
காலே பொதத் திரிந்து கத்துவராம் இனநாள் மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே மேலால் தருக்கும் இடம்பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று இருக்கும் இடம் காணாது இளைத்து (22)
When Thirumāl entered my heart the karma left that ruled me and made me suffer. My bad karma shouts with sorrow as it…
இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன் இளைக்க நமன் தமர்கள் பற்றி இளைப்பு எய்த நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான் தாய் தந்தை எவ் உயிர்க்கும் தான் (23)
O heart, he is the father and mother of all creatures and will give us his grace and protect us when we are feeble an…
தானே தனித் தோன்றல் தன் அளப்பு ஒன்று இல்லாதான் தானே பிறர்கட்கும் தன் தோன்றல் தானே இளைக்கில் பார் கீழ் மேல் ஆம் மீண்டு அமைப்பான் ஆனால் அளக்கிற்பார் பாரின்மேல் ஆர்? (24)
He is unique and there is no one equal to him. He is in everything. If he were to grow tired, the whole world would t…
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே? சீர் ஆர் மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர் இனத் தலைவன் கண்ணனால் யான் (25)
People may do whatever they wish. Who can change this wide earth? Kaṇṇan, the god of the gods in the sky gave his gra…
யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம் வல்வினையைக் கானும் மலையும் புகக் கடிவான் தான் ஓர் இருள் அன்ன மா மேனி எம் இறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து (26)
His beautiful body is like dark night. His grace is like a club that can hit and remove my bad karma. I and my heart …
அடியால் படி கடந்த முத்தோ? அது அன்றேல் முடியால் விசும்பு அளந்த முத்தோ? நெடியாய் செறி கழல் கொள் தாள் நிமிர்த்துச் சென்று உலகம் எல்லாம் அறிகிலமால் நீ அளந்த அன்று (27)
Are you, tall Thirumāl, happy because you measured the earth with your foot? Are you happy because you measured the s…
அன்றே நம் கண் காணும் ஆழியான் கார் உருவம் இன்றே நாம் காணாது இருப்பதுவும் என்றேனும் கட்கண்ணால் காணாத அவ் உருவை நெஞ்சு என்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து (28)
Our eyes cannot see the dark form of the lord with a discus, we can only feel him in our hearts, our inner eyes. We s…
உணர ஒருவர்க்கு எளியேனே செவ்வே இணரும் துழாய் அலங்கல் எந்தை? உணரத் தனக்கு எளியர் எவ் அளவர் அவ் அளவன் ஆனால் எனக்கு எளியன் எம் பெருமான் இங்கு (29)
Our father adorned with a flourishing thulasi garland is not easy to approach. He shows as much as love to his devote…
இங்கு இல்லை பண்டுபோல் வீற்றிருத்தல் என்னுடைய செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் அங்கே மடி அடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு அடி எடுப்பது அன்றோ அழகு? (30)
Lovely-eyed Thirumāl entered my small heart, and from now on bad karma cannot stay there because there is no space fo…
அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான் நிழலும் அடி தாறும் ஆனோம் சுழலக் குடங்கள் தலைமீது எடுத்துக் கொண்டு ஆடி அன்று அத் தடங் கடலை மேயார் தமக்கு (31)
He put a pot on his head, danced and then went to the wide ocean and rested on Adishesa. We have found the way to rem…
தமக்கு அடிமை வேண்டுவார் தாமோதரனார் தமக்கு அடிமை செய் என்றால் செய்யாது எமக்கு என்று தம் செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார் யாம் செய்வது இவ்விடத்து இங்கு யாது? (32)
Damodharan wishes me to serve him, but my heart would rather do evil deeds and live a wicked life. What can I do in t…
யாதானும் ஒன்று அறியில் தன் உகக்கில் என் கொலோ யாதானும் நேர்ந்து அணுகா ஆறு தான் யாதானும் தேறுமா செய்யா அசுரர்களை நேமியால் பாறுபாறு ஆக்கினான்பால்? (33)
The lord with a discus in his hand smashed the deadly Asurans to pieces. When we know him, we know it brings joy, but…
பால் ஆழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் நீல் ஆழிச் சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்பால் கடியும் நீதியாய் நின் சார்ந்து நின்று (34)
You, the ancient lord of justice, shine with the dark color of the ocean. I worship you and all my karma is destroyed…
நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும் ஒன்றும் ஓவாற்றான் என் நெஞ்சு அகலான் அன்று அம் கை வன் புடையால் பொன்பெயரோன் வாய் தகர்த்து மார்வு இடந்தான் அன்புடையன் அன்றே அவன்? (35)
He stands in Thiruvuuragam, he sits in Thiruppāḍagam and reclines in Thiruvekkaa. He wanders everywhere, yet still, h…
அவன் ஆம்? இவன் ஆம்? உவன் ஆம்? மற்று உம்பர் அவன் ஆம்? அவன் என்று இராதே அவன் ஆம் அவனே எனத் தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால் அவனே எவனேலும் ஆம் (36)
Do not wonder to yourself, “Is he far away? Is he near? Is he in between? Is he the god in the sky?” If you accept Ka…
ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே? நாமே அது உடையோம் நல் நெஞ்சே பூ மேய் மதுகரம் மே தண் துழாய் மாலாரை வாழ்த்து ஆம் அது கரமே அன்பால் அமை (37)
O good heart, We do not know what our future will be, yet we may be able to know it if we worship Thirumāl adorned wi…
அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே இமைக்கும் பொழுதும்? இடைச்சி குமைத்திறங்கள் ஏசியே ஆயினும் ஈன் துழாய் மாயனையே பேசியே போக்காய் பிழை (38)
O heart, do not worry about how to spend your time. Think about the time Yashoda hit him and scolded him, and even if…
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய்? தழைக்கும் துழாய் மார்வன் தன்னை அழைத்து ஒருகால் போய் உபகாரம் பொலியக் கொள்ளாது அவன் புகழே வாய் உபகாரம் கொண்ட வாய்ப்பு (39)
O heart, if you want to survive you should do good deeds. It is not enough only to praise him with a fresh thulasi ga…
வாய்ப்போ இது ஒப்ப மற்று இல்லை வா நெஞ்சே போய்ப் போஒய் வெம் நரகில் பூவியேல் தீப் பால பேய்த் தாய் உயிர் கலாய்ப் பால் உண்டு அவள் உயிரை மாய்த்தானை வாழ்த்தே வலி (40)
O heart! There is no other opportunity for us like this one to praise his power and fame. You will not be pushed into…
வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர் வலிய முடி இடிய வாங்கி வலிய நின் பொன் ஆழிக் கையால் புடைத்திடுதி கீளாதே பல் நாளும் நிற்கும் இப் பார் (41)
The wrestlers sent by Kamsan thought they were stronger than you and opposed you, but you cut off their heads with th…
பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் இடந்தான் பார் அளந்தான் பார் இடம் முன் படைத்தான் என்பரால் பார் இடம் ஆவானும் தான் ஆனால் ஆர் இடமே? மற்றொருவர்க்கு ஆவான் புகாவால் அவை (42)
People say “He swallowed all the worlds at the end of the eon and spat them out, he split open the world and went to …
அவையம் என நினைந்து வந்த சுரர்பாலே நவையை நளிர்விப்பான் தன்னை கவை இல் மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தாதார்க்கு உண்டோ மனத் துயரை மாய்க்கும் வகை? (43)
When the gods came to him asking for refuge he took away their troubles and protected them. How can the distress in t…
வகை சேர்ந்த நல் நெஞ்சும் நா உடைய வாயும் மிக வாய்ந்து வீழா எனிலும் மிக ஆய்ந்து மாலைத் தாம் வாழ்த்தாது இருப்பர் இது அன்றே மேலைத் தாம் செய்யும் வினை? (44)
There are people who do not wish to praise him who is adorned with a thulasi garland even though their good hearts an…
வினையார் தர முயலும் வெம்மையை அஞ்சி தினையாம் சிறிதளவும் செல்ல நினையாது வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும் நாயகத்தான் பொன் அடிக்கள் நான் (45)
Afraid of the results bad karma will give me, I will not do any bad deeds. I will only praise the god of the gods and…
நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள்நாளும் தேங்கு ஓத நீர் உருவன் செங்கண் மால் நீங்காத மா கதி ஆம் வெம் நரகில் சேராமல் காப்பதற்கு நீ கதி ஆம் நெஞ்சே நினை (46)
The ocean-colored Thirumāl with beautiful eyes is our refuge and will not leave us. He protects us so we will not fal…
நினைத்து இறைஞ்சி மானிடவர் ஒன்று இரப்பர் என்றே நினைத்திடவும் வேண்டா நீ நேரே நினைத்து இறைஞ்ச எவ் அளவர்? எவ் இடத்தோர்? மாலே அது தானும் எவ் அளவும் உண்டோ எமக்கு? (47)
O Thirumāl, do not think that all people worship you only to ask for material things. You do not understand that wise…
எமக்கு யாம் விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை அமைத்திருந்தோம் அஃது அன்றே ஆம் ஆறு? அமைப் பொலிந்த மென் தோளி காரணமா வெம் கோட்டு ஏறு ஏழ் உடனே கொன்றானையே மனத்துக் கொண்டு (48)
We want to reach moksha, above the world of the sky and the only way we can achieve it is to worship you who fought a…
கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூர் இருள் தான் வண்டு அறாப் பூவை தான் மற்றுத்தான் கண்ட நாள் கார் உருவம் காண்தோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார் பேர் உரு என்று எம்மைப் பிரிந்து (49)
Whenever I see clouds, a dark mountain, the dark ocean, deep darkness, puvai flowers always swarming with bees or any…
பிரிந்து ஒன்று நோக்காது தம்முடைய பின்னே திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை புரிந்து ஒருகால் ஆஆ என இரங்கார் அந்தோ வலிதேகொல் மா வாய் பிளந்தார் மனம்? (50)
My heart leaves me searching for where he is without looking for anything else and it runs behind anything with a dar…
மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர் தம்மைச் சினம் மாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து புனம் மேய தண் துழாயான் அடியைத் தாம் காணும் அஃது அன்றே வண் துழாம் சீரார்க்கு மாண்பு? (51)
The wicked five senses control the mind, eyes, nose, mouth, ears and body. The best thing for the devotees of the lor…
மாண் பாவித்து அஞ்ஞான்று மண் இரந்தான் மாயவள் நஞ்சு ஊண் பாவித்து உண்டானது ஓர் உருவம் காண்பான் நம் கண் அவா மற்று ஒன்று காண் உறா சீர் பரவாது உண்ண வாய் தான் உறுமோ ஒன்று? (52)
He took the form of a bachelor dwarf, went to Mahābali, asked for three feet of land and measured the earth and the s…
ஒன்று உண்டு செங்கண்மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான்? (53)
O lovely-eyed Thirumāl, I would tell you something. You have given everything that your devotees want and are waiting…
வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்று? கண்டிலமால் ஆன் ஈன்ற கன்று உயர தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம் வன் துயரை ஆஆ மருங்கு (54)
We worshiped him who threw a calf at the vilam tree and killed the two Asurans when they came as a calf and a tree an…
மருங்கு ஓதம் மோதும் மணி நாகணையார் மருங்கே வர அரியரேலும் ஒருங்கே எமக்கு அவரைக் காணலாம் எப்பொழுதும் உள்ளால் மனக் கவலை தீர்ப்பார் வரவு (55)
He rests on the ocean rolling with waves on Adisesha who has a jewel on his head. It is hard if you think he will com…
வரவு ஆறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே! ஒரு ஆறு ஒருவன் புகாவாறு உரு மாறும் ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம் மாயவர் தாம் காட்டும் வழி (56)
There are no troubles in the lives of his devotees after he has entered their hearts. He came to the world in many fo…
வழித் தங்கு வல்வினையை மாற்றானோ? நெஞ்சே! தழீஇக்கொண்டு போர் அவுணன் தன்னை சுழித்து எங்கும் தாழ்வு இடங்கள் பற்றி புலால் வெள்ளம் தான் உகள வாழ்வு அடங்க மார்வு இடந்த மால் (57)
O heart, Thirumāl split open the heart of Hiraṇyan and blood flowed like a flood from the Asuran’s chest and he was d…
மாலே படிச் சோதி மாற்றேல் இனி உனது பாலே போல் சீரில் பழுத்தொழிந்தேன் மேலால் பிறப்பு இன்மை பெற்று அடிக்கீழ்க் குற்றேவல் அன்று மறப்பு இன்மை யான் வேண்டும் மாடு (58)
O Thirumāl with a shining form, I am plunged into your auspicious nature that is as pure and sweet as milk. Don’t cha…
மாடே வரப்பெறுவராம் என்றே வல்வினையார் காடானும் ஆதானும் கைக்கொள்ளார் ஊடே போய்ப் பேர் ஓதம் சிந்து திரைக் கண்வளரும் பேராளன் பேர் ஓத சிந்திக்க பேர்ந்து? (59)
As soon as I recited the names of the generous lord who rests on the ocean with rolling waves I thought my karma woul…
பேர்ந்து ஒன்று நோக்காது பின் நிற்பாய் நில்லாப்பாய் ஈர்ந் துழாய் மாயனையே என் நெஞ்சே பேர்ந்து எங்கும் தொல்லை மா வெம் நரகில் சேராமல் காப்பதற்கு இல்லை காண் மற்றோர் இறை (60)
O my heart, whether you think always of Māyan adorned with a divine thulasi garland and stay with him or not, it is u…
இறை முறையான் சேவடிமேல் மண் அளந்த அந் நாள் மறை முறையால் வான் நாடர் கூடி முறைமுறையின் தாது இலகு பூத் தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின் மீது இலகித் தான் கிடக்கும் மீன்? (61)
When we see the shining stars in the sky, they look like flowers filled with pollen strewn by the gods in the sky as …
மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய் வான் என்னும் கேடு இலா வான் குடைக்குத் தான் ஓர் மணிக் காம்பு போல் நிமிர்ந்து மண் அளந்தான் நங்கள் பிணிக்கு ஆம் பெரு மருந்து பின் (62)
The faultless sky is an umbrella that protects the earth, the stars are like its shining decorations, and the moon is…
பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய் வன் திரைக்கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று திருச் செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும் பருச் செவியும் ஈர்ந்த பரன் (63)
The highest lord with a divine discus in his hand, cut off the nose and the ears of the evil Raksasi Surpanaha in the…
பரன் ஆம் அவன் ஆதல் பாவிப்பர் ஆகில் உரனால் ஒரு மூன்று போதும் மரம் ஏழ் அன்று எய்தானை புள்ளின் வாய் கீண்டானையே அமரர் கைதான் தொழாவே கலந்து? (64)
He shot arrows and destroyed the seven marā trees and he split open the mouth of Bāhasuran when he came as a bird. If…
கலந்து நலியும் கடுந் துயரை நெஞ்சே மலங்க அடித்து மடிப்பான் விலங்கல் போல் தொல்மாலை கேசவனை நாரணனை மாதவனை சொல் மாலை எப்பொழுதும் சூட்டு (65)
O heart, he will remove all the troubles that make you suffer. Worship always with a garland of pasurams Kesavan, Nār…
சூட்டாய நேமியான் தொல் அரக்கன் இன் உயிரை மாட்டே துயர் இழைத்த மாயவனை ஈட்ட வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே அறி கண்டாய் சொன்னேன் அது (66)
O heart, he is adorned with a cool fragrant thulasi garland and he is the Vedas. Know and worship Thirumāl, the Māyav…
அதுவோ நன்று என்று அங்கு அமர் உலகோ வேண்டில் அதுவோ பொருள் இல்லை அன்றே? அது ஒழிந்து மண் நின்று ஆள்வேன் எனிலும் கூடும் மட நெஞ்சே கண்ணன் தாள் வாழ்த்துவதே கல் (67)
O ignorant heart, if you think you do not want to stay in this world and want to go to the world of the gods, he will…
கல்லும் கனை கடலும் வைகுந்த வான் நாடும் புல் என்று ஒழிந்தனகொல்? ஏ பாவம் வெல்ல நெடியான் நிறம் கரியான் உள்புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்து அகம் (68)
Does he wish to stay in the Thiruvenkaṭam hills, on the roaring ocean, in Vaikuṇṭam, or the world in the sky? Or does…
அகம் சிவந்த கண்ணினர் ஆய் வல்வினையர் ஆவார் முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திருமால் சீர்க் கடலை உள் பொதிந்த சிந்தனையேன் தன்னை ஆர்க்கு அடல் ஆம் செவ்வே அடர்த்து? (69)
I praised the highest ocean-colored Thirumāl and he gave me his grace and entered my heart. The bad karma that was in…
அடர் பொன் முடியானை ஆயிரம் பேரானை சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும் மாதா பிதாவாக வைத்தேன் எனது உள்ளே யாது ஆகில் யாதே இனி? (70)
He wears a precious golden crown, carries a shining discus in his hand and has a thousand divine names. He is my fath…
இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே? தனி நின்ற சார்வு இலா மூர்த்தி பனி நீர் அகத்து உலவு செஞ்சடையான் ஆகத்தான் நான்கு முகத்தான் நின் உந்தி முதல் (71)
How can I describe your power? Shiva with beautiful jaṭa stays in the left part of your body and Brahma stays on a lo…
முதல் ஆம் திரு உருவம் மூன்று அன்பர் ஒன்றே முதல் ஆகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா நிகர் இலகு கார் உருவா நின் அகத்தது அன்றே புகர் இலகு தாமரையின் பூ? (72)
Some say that you have three divine forms and some say all three are one. You have a matchless dark color, you are th…
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர் என்றும் காண்தோறும் பாவியேன் மெல் ஆவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான் உருவே என்று (73)
Whenever I see something with the color of the lord, a puvai bird, a kayām flower, a neelam flower or a kāvi blossom,…
என்றும் ஒருநாள் ஒழியாமை யான் இரந்தால் ஒன்றும் இரங்கார் உருக் காட்டார் குன்று குடை ஆக ஆ காத்த கோவலனார் நெஞ்சே புடை தான் பெரிதே புவி (74)
O heart, he, the cowherd, carried Govardhana mountain as an umbrella and protected the cows and the cowherds. Even th…
புவியும் இரு விசும்பும் நின் அகத்த நீ என் செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவு இன்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்? ஊன் பருகு நேமியாய் உள்ளு (75)
You have swallowed the earth and the wide sky and kept them in your stomach. Through my ears, you entered my heart an…
உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினைப் படலம் விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள உலகு அளவும் யானும் உளன் ஆவன் என்கொல்? உலகு அளந்த மூர்த்தி உரை (76)
You have measured the world. When I think of you my heart throbs. If your grace touches my body, I will be happy and …
உரைக்கில் ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே? இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பு எல்லாம் நின் அன்றி மற்று இலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர் சொல் நன்றி ஆகும் துணை (77)
O father resting on the roaring ocean, my relatives say they are very close to me, but see, there is no one for me bu…
துணை நாள் பெருங் கிளையும் தொல் குலமும் சுற்றத்து இணை நாளும் இன்பு உடைத்தாமேலும் கணை நாணில் ஓவாத் தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே ஓவாத ஊணாக உண் (78)
O good heart, you feel happy that you have a large family, an ancient lineage and other friends, but none are permane…
உள் நாட்டுத் தேசு அன்றே? ஊழ்வினையை அஞ்சுமே? விண் நாட்டை ஒன்று ஆக மெச்சுமே? மண் நாட்டில் ஆர் ஆகி எவ் இழிவிற்று ஆனாலும் ஆழி அங்கைப் பேர் ஆயற்கு ஆள் ஆம் பிறப்பு (79)
Even those of low birth, whose occupations are despised, if they become the devotees of the god with a discus in his …
பிறப்பு இறப்பு மூப்புப் பிணி துறந்து பின்னும் இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் மறப்பு எல்லாம் ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண் அளந்தான் பாதமே ஏத்தாப் பகல்? (80)
Even if I have no births, no old age and sickness, even if I am happy on this earth, I will not want any of those thi…
பகல் இரா என்பதுவும் பாவியாது எம்மை இகல் செய்து இரு பொழுதும் ஆள்வர் தகவாத் தொழும்பர் இவர் சீர்க்கும் துணை இலர் என்று ஓரார் செழும் பரவை மேயார் தெரிந்து (81)
Whenever troubles come to me he will take care of me whether it is night or day. He does not think that I am bad and …
தெரிந்துணர்வு ஒன்று இன்மையால் தீவினையேன் வாளா இருந்தொழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்துருவின் அம் மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி அங்கை அம்மானை ஏத்தாது அயர்த்து (82)
I have done bad karma and not knowing him I have passed all my days in vain. I did not follow and praise him who carr…
அயர்ப்பாய் அயராப்பாய் நெஞ்சமே சொன்னேன் உயப்போம் நெறி இதுவே கண்டாய் செயற்பால அல்லவே செய்கிறுதி நெஞ்சமே அஞ்சினேன் மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து (83)
O heart, you do not want to do good things and you are tired of the results of your karma. See, I told you this. Find…
வாழ்த்தி அவன் அடியைப் பூப் புனைந்து நின் தலையைத் தாழ்த்து இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே தங்கத்தான் ஆமேலும் தங்கு (84)
O my heart, I told you to bow your head, to strew flowers at his feet folding your hands, worshiping him and praising…
தங்கா முயற்றிய ஆய் தாழ் விசும்பின் மீது பாய்ந்து எங்கே புக்கு எத் தவம் செய்திட்டனகொல் பொங்கு ஓதத் தண் அம் பால் வேலைவாய்க் கண்வளரும் என்னுடைய கண்ணன்பால் நல் நிறம் கொள் கார்? (85)
The dark clouds take water from the ocean and float in the sky. Where did they go and what tapas they perform to have…
கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு அணையான் சீர் கலந்த சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ் துயரை என் நினைந்து போக்குவர் இப்போது? (86)
The lord with a body dark as a cloud with a discus in his hand swallowed the worlds and kept them in his stomach. If …
இப்போதும் இன்னும் இனிச் சிறிது நின்றாலும் எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே எப்போதும் கை கழலா நேமியான் நம்மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் (87) -------------- 20. திருமங்கை ஆழ்வார் - திரு எழு கூற்றிருக்கை (2672) 2672 ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில் ஒருமுறை அயனை ஈன்றனை ஒரு முறை இரு சுடர் மீதினில் இயங்கா மும் மதிள் இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் (5) அட்டனை மூவடி நானிலம் வேண்டி முப்புரி நூலொடு மான் உரி இலங்கு மார்வினில் இரு பிறப்பு ஒரு மாண் ஆகி ஒரு முறை ஈர் அடி மூவுலகு அளந்தனை நால் திசை நடுங்க அம் சிறைப் பறவை (10) ஏறி நால் வாய் மும் மதத்து இரு செவி ஒரு தனி வேழத்து அரந்தையை ஒருநாள் இரு நீர் மடுவுள் தீர்த்தனை முத் தீ நான்மறை ஐ வகை வேள்வி அறு தொழில் அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் (15) அகத்தினுள் செறித்து நான்கு உடன் அடக்கி முக் குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் அறியும் தன்மையை முக் கண் நால் தோள் ஐ வாய் அரவோடு ஆறு பொதி சடையோன் (20) அறிவு அரும் தன்மைப் பெருமையுள் நின்றனை ஏழ் உலகு எயிற்றினில் கொண்டனை கூறிய அறு சுவைப் பயனும் ஆயினை சுடர்விடும் ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர நால் தோள் முந்நீர் வண்ண நின் ஈர் அடி (25) ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து மங்கையர் இருவரும் மலர் அன அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே (30) அறுபதம் முரலும் கூந்தல் காரணம் ஏழ் விடை அடங்கச் செற்றனை அறு வகைச் சமயமும் அறிவு அரு நிலையினை ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை அறம் முதல் நான்கு அவை ஆய் (35) மூர்த்தி மூன்று ஆய் இரு வகைப் பயன் ஆய் ஒன்று ஆய் விரிந்து நின்றனை குன்றா மது மலர்ச் சோலை வண் கொடிப் படப்பை வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும் செந்நெல் ஒண் கழனித் திகழ் வனம் உடுத்த (40) கற்போர் புரிசைக் கனக மாளிகை நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும் செல்வம் மல்கு தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த பரம நின் அடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே (45) ------------- 21. திருமங்கை ஆழ்வார் -- சிறிய திருமடல் (2673 -2712) 2673 கார் ஆர் வரைக் கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை சீர் ஆர் சுடர்ச் சுட்டி செங்கலுழிப் பேர் ஆற்றுப் பேர் ஆர மார்வில் பெரு மா மழைக் கூந்தல் நீர் ஆர வேலி நிலமங்கை என்னும் இப் பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அம் மூன்றும் (1)
O my heart, whether it is now or another time, if you always praise him who carries a discus he will remove our karma…